Pages

Wednesday, December 7, 2011

படாடோபம்.

 டிங்க், டாங்க்,  டிங்க், டாங்க்,  காலிங்க் பெல்லில் குருவி அழைத்தது. காவேரி கதவைத்திறந்ததும் அவள் முகத்தில் சந்தோஷ ஆச்சரியம். ஹாய் லல்லி வாடி வா, நிஜம்ம நீதானா நான் சொப்பனம் கானுரேனா? நீயும் லீவுக்கு வந்திருக்கியா? என்று மிகவும் அன்புடன்  தன் தோழி லலிதாவை வீட்டுக்குள் அழைத்துப் போனாள் காவேரி.இருவரும் சிறுவயது தோழிகள் ஒரே ஊரைச்சேர்ந்தவர்கள் .திருமணம் முடிந்து வேறு, வேறு ஊர்களில் செட்டில் ஆனவர்கள். 6, 7-வருடங்களுக்குப்பிறகு இருவரின் சந்திப்பு. உள்ள வாடி என்று கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு நடு கூடத்தில் இருந்த மர ஊஞ்சலில் போய் உக்கார வைத்தாள் அவளும் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டாள்.உள்ளே பார்த்து சித்தி இங்க வாயேன் யாரு வந்திருக்கா பாரேன்னு கூப்பிட்டாள் சித்தியும் வந்து அடடே லலிதாவா வாம்மா எவ்வ்ளவு வருஷம் ஆச்சு உன்னப்பார்த்து இப்ப எந்தௌஉர்ல இருக்கே? எத்தனை குழந்தைகள். ஆத்ல அம்மா அப்பா நன்னா இருக்காளான்னு கேள்விகளை
 அடுக்கிக்கொண்டே போனாள்.உடனே காவேரி சித்தி முதல்ல அவளுக்கு  சாப்பிட ஏதானும் கொண்டுவாங்க என்றாள்.



சித்தியும் வேகமாக அடுக்களைக்குள் சென்று ஒரு தட்டு நிறைய லட்டு,மைசூர்பாகு, முறுக்கு அதிரசம் என்று கொண்டுவந்தாள். இரு காபி போட்டுண்டு வரேன் என்று திரும்பவும் உள்ளே சென்றாள் சித்தி.சூடாக நுரைக்க நுரைக்க வாசனையுடன் பில்டர்காபி கொண்டு தந்துவிட்டு லலிதா எடுத்துக்கோ உன் ஃப்ரெண்ட்  ரெண்டு நாள் முன்னாடிதான் தன் பிள்ளைக்கு அமர்க்களமா பூணூல் கல்யானம் பண்ணினா அதுதான் இவ்வளவு பட்சனம் சாப்பிடு என்றாள்.லலிதாவும் பட்சணங்களை சாப்பிட்டவாறே சித்தி எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு காபி சூப்பர் என்றாள் சித்திக்கு வாய் நிறைய சிரிப்பு.

ஏய் லல்லி என்னடி ஒன்னுமே பேசமாட்ரே. எவ்வளவு வருஷ விஷயங்கள் இருக்கு பேச. சொல்லுடி எப்படி இருக்கே. குழந்தைகளையும் கூட்டிண்டு வந்திருக்கலாமில்லியா? என்றாள். நீயும் சித்தியுமே மாறி, மாறி பேசிண்டு இருந்தீங்க என்னைப்பேசவே விடல்லியே என்று லலிதா சிரித்தவாரே சொன்னாள்.அதுக்கும் மேல தட்டு நிறையா பட்சணங்களைத்தந்து என்வாயை அடைச்சுட்டீங்க. சரி பூணூல் எல்லாம் நல்லா நடந்ததா/ நான் வந்து இறங்கினதுமே அம்மா சொன்னா. அதான் விசாரிச்சுட்டுப்போலாம்னு வந்தேன். என்றாள். ஆமா லல்லி நல்லா க்ராண்டாவே பண்ணினோம். எங்களுக்கு இருப்பதோ ஒரு பையன் ஒருபொண்ணு அவங்களுக்கு பண்ணாம யாருக்கு பண்ணப்போரோம் இல்லியா. செலவு தாராளமா செஞ்சு  நம்மஊரே மூக்கில் விரல் வைத்து பாராட்டும்படி கொண்டாடினோம்.தங்கப்பூணூல், வெள்ளிப்பூணூல்,பட்டுவேட்டி அங்கவஸ்திரம், வாத்யார்களுக்கெல்லாம் நாந்தி அன்று வெள்ளி பஞ்சபாத்திரன் வேட்டி  சோமன் கொடுத்தோம். பிக்‌ஷரிசிபாத்திரத்தில் போட்டு ஊர்க்காராலுக்கு கொடுக்கதேங்காய் அளவுக்குலட்டு, 9-சுத்துமுறுக்கு  தேங்காய் வெத்லபாக்கு பழம் எல்லாம் கொடுத்தோம்.ஊர்க்காராள்ளாம் அச்ந்துட்டா. இப்ப குளிக்க ஆத்தங்கரைக்கு போகும்போதுகூட அமர்க்களமா பூனூல் கல்யாணம் பண்ணினாளே அந்தமாமிதான் இவன்னு அடையாளம் காட்டரா.ரொம்ப பெருமையா இருந்தது.போட்டோ ஆல்பம் இன்னும்ரெடியாகி வல்லே. வந்ததும் உன் வீட்லயே வந்து காட்ரேனென்றாள் , லலிதாவும் மிக பிரமிப்புடன் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாள்.பூணல் குழந்தைக்கு பணம் கொடுத்துவிட்டு கிளம்பி தன் வீடு சென்றாள்.

அம்மாவிடம் பூராவிபரமும் சொன்னாள். லலிதாவும் தன் ஒரே பையனுக்கு பூணூல் போடும் யோசனையில்தான் வந்திருந்தாள். இப்போ காவேரி வீட்டு பூணூல் விபரங்கள் கேட்டதும் அவளுக்கும் விமரிசையாக செய்யணும் என்றேதோன்றியது.அம்மாவிடமும் தன் விருப்பத்தச்சொன்னாள். அவள் அம்மாவோஇங்கபாரும்மா ஊர்க்காராமெச்சனும்னு இப்படில்லாம் செலவு செய்து அமர்க்களமால்லாம் பண்ணனும்னு அவசியமே இல்லை.இப்பல்லாம் கல்யாணத்தையே எவ்வளவு சுருக்கமாகப்ப்ண்ணமுடியுமோ அவ்வளவு சுருக்கிட்டா. அதுவாவது ரெண்டுகுடும்பத்தவா சம்மந்தப்பட்டவிஷயம் பூணூல் என்பது ஒரெகுடும்ப விஷயம்தான்.அதுவும் இதில் முக்கியமான விஷயம் என்னன்னா பிரம்மோபதேசம்தான் அதுக்கு ஆச்சாரியாள் மடத்துல போயி சமஷ்டியா போட்டுடலாம். வைதீக காரியம்தான் முக்கியம்,அங்க இருக்கும் வேதம் கத்துக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவை அன்னதானமாபோட்டுடலாம். வைதீகர்களுக்கும் முறைப்படி மறியாதை செய்துடலாம். காசு இருக்குன்னு படாடோபமாகல்லாம் செய்யனுனு அவசியமில்லே. அந்தக்காசை குழந்தை பேர்ல பேங்க்ல போட்டா அவனுக்கு மேல் படிப்புக்கு உதவியா இருக்கும். இது என் அபிப்ராயம் தான். மாப்பிள்ளைகிட்ட பேசி நீங்க இருவரும் என்ன செய்யனும்னு தீர்மானம் செய்யுங்க்கன்னு அம்மா சொன்னா.

 இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டே உள்ளே வந்த லலிதாவின் கணவர் லல்லி உன் அம்மா சொல்வது ஹண்ட்ரட் பிரசண்ட் கரெக்ட். அப்படித்தான் நாம செய்யனும் பெரியவங்க என்னிக்கும் பெரியவங்கதான் என்று பாரட்டாய் சொல்லவும் லலிதாவின் அம்மா முகத்தில் சந்தோஷ சிரிப்பு.

38 comments:

Mahi said...

அருமையான கதை லஷ்மிம்மா! பந்தாவுக்காக பணத்தை செலவு செய்வதுக்கு பதில் உருப்படியாக செலவழிக்கலாம்.

ராமலக்ஷ்மி said...

ஊரார் மெச்ச வேண்டுமென்றே ஒவ்வொன்றையும் செய்யாது, அவரவருக்கு எது சரியோ அதன்படி வாழ்தல் நலம். நல்ல கதை லக்ஷ்மிம்மா.

radhakrishnan said...

கதை முடிந்துவிட்டதென்று நினைக்கிறேன். தறகாலத்தவர்களின்
எண்ணத்தையே பிரதிபலிக்கிறாரே ல்லிதாவின் அம்மா மிக நல்லதுதான்
ஆனால் வசதியிருந்தால் ,உபரியாகவும்
இருந்தால் நன்கு செலவழித்துச் செய்யலாம், இந்தமாதிரி நிகழ்ச்சிகள்,
பலபேருக்கு நம் பணம் பிரயோசனப் படவும், உறவினர் ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன் ஒன்றிரண்டு நாட்களைக் கழிக்கவும் பயன் படும், சென்னைக்கு இம்மாதிரி சுப நிகழ்ச்சிக்கு சென்று வந்து சந்தோஷத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்களே , நல்ல கதைக்கு நன்றி அம்மா .

தமிழ்வாசி பிரகாஷ் said...

கதை அருமை....நன்றி....

Asiya Omar said...

.வீண் ஆடம்பரம் எதுக்கு? நல்ல கதை.

பால கணேஷ் said...

உண்மைதானே... வீண் ஆடம்பரத்தால் நாம் பெருமை பீற்றிக் கொள்வதைத் தவிர வேறு என்ன பயன்? கசப்பு மாத்திரையை கேப்ஸ்யூலில் வைத்துத் தருவது போல அழகான கருத்தை சிறுகதையில் வைத்துக் கொடுத்திருக்கீங்க. ரொம்பவே ரசிச்சேன்மா...

ADHI VENKAT said...

நல்ல கதையாக இருந்ததும்மா.
லலிதாவின் அம்மா சொல்வது தான் சரி. அந்த காசை ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்யலாம். ஊர்க்காரர்களுக்கு எவ்வளவு செய்தாலும் குறை ஏதாவது கண்டு பிடித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

Yaathoramani.blogspot.com said...

தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை
பெருமிதத்திற்காகச் செய்துவிட்டு பின்
அவதிப்படும் பலரைப் பார்த்திருக்கிறேன்
சரியான சிந்தனையை விதைத்துப் போகும்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 5

RAMA RAVI (RAMVI) said...

வைதீகம்தான் முக்கியம்.படாடோபம் தேவையே இல்லை.

இந்த விஷயத்தை ஒரு அழகான கதையில் சொல்லி அசத்திடீங்கம்மா.

ம.தி.சுதா said...

///லலிதாவும் தன் ஒரே பையனுக்கு பூணூல் போடும் யோசனையில்தான் வந்திருந்தாள். ////

அம்மா அங்காங்கே தொனிக்கும் எம் பாரம்பரியம் வியக்க வைக்கிறது நன்றி..

ஹேமா said...

இந்தக் கதையிலமாதிரி நேரிலேயே நிறையப்பேரைப் பார்க்கிறோமே.அவங்க பறக்கிறாங்க.நாங்களும் பறக்கணும்ல்ல !

வெங்கட் நாகராஜ் said...

அருமையான விஷயம் அம்மா.. நல்ல கருத்துள்ள கதையா சொன்னது நல்லா இருக்கும்மா...

குறையொன்றுமில்லை. said...

மஹி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராம ல்ஷ்மி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

நண்டு நொவ்ரண்டு அருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராதாகிருஷ்னன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

பிரகாஷ் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆஸியா ஓமர் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமணி சார் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ம. தி. சுதா, வருகைக்கு நன்றி

மாதேவி said...

நல்ல கருத்துள்ள கதை.

arasan said...

சிறப்பா சொல்லி இருக்கீங்க அம்மா ..
உணரனும் நிறைய பேர்கள் ///

குறையொன்றுமில்லை. said...

மாதேவி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அரசன் வருகைக்கு நன்றி

கே. பி. ஜனா... said...

பெரியவங்க பெரியவங்கதான் என்பதை அழகாகச் சொல்லிய கதை!

குறையொன்றுமில்லை. said...

கே.பி. ஜனா வருகைக்கு நன்றி

அம்பலத்தார் said...

வழமைபோல சுவாரசியமான கதைமூலம் நல்லதொரு கருத்தையும் சொல்லியிருக்கிறிங்க. வாழ்த்துக்கள் லட்சுமியம்மா.

குறையொன்றுமில்லை. said...

அம்பலத்தார் வருகைக்கு நன்ரி

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான கதை.
விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும் என்பதை அழகாக சொல்லி விட்டீர்கள் அம்மா!

ஸ்ரீராம். said...

நூறு சதவிகிதம் ஒத்துக் கொள்ள வேண்டிய கருத்து.

குறையொன்றுமில்லை. said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கு நன்றி

ரசிகன் said...

இன்னும் கொஞ்சம் அழுத்தமாவே சொல்லுங்க. முன்னயெல்லாம் வயித்துக்கு சாப்பாடு போடுவாங்க. இப்போ அவங்க பெருமைக்கு போடறாங்க. ஒரு வேளை சாப்பாடு கிடைக்காத கோடி கணக்கான பேர் இந்தியாவிலேயே இருக்காங்க. அப்படி இருக்கும் போது ஆடம்பரம் அவசியமா????????

நல்லா சொன்னீங்கம்மா.

குறையொன்றுமில்லை. said...

ரசிகன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

M.R said...

அருமையான பதிவு ,பகிர்வுக்கு மிக்க நன்றி

குறையொன்றுமில்லை. said...

M.R. வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .