போன வருஷம் ஒரு எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், பிரெஸ்டிஜ் ஸோடது வாங்கினேன். எனக்கு வேண்டியபடி சின்னதாக அரை லிட்டர் குக்கர்
வாங்கினேன். எந்தப்பொருள் வாங்கினாலும் அடுத்த நாளே உபயோகப்
படுத்திப்பார்ப்பது என் வழக்கம். ஏதானும் ப்ராப்லம் இருந்தா உடனே போயி
சொல்லிடலாம் இல்லியா? அதுபோல அந்தக்குக்கரையும் மறு நாளே யூஸ்
பண்ணினேன். சின்னதா, அடக்கமா நல்லா இருந்தது. டைம் அட்ஜெஸ் மெண்ட்
எல்லாமே ஆட்டோமேடிக்.அரை டம்ளர் அரிசி அலம்பி அதில் சொன்னபடி
அரை மணி நேரம் ஊறவச்சு குக்கரில் போட்டு வேண்டியதண்ணீரையும்விட்டு
குக்கரை மூடி ஸ்விட்ஸ் ஆன் பண்ணினேன். அதுவே டைம் செட்பண்ணிக்கும்.
நமக்கு ஒரு வேலையும் இல்லே. நாம வேர வேலையை பாக்கப்போயிடலாம்.
Tweet | |||||