Pages

Tuesday, August 31, 2010

பக்தி.

வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்தார்.உடனே அது ,யாருக்கு சொந்தம்

என்ற கேள்வி எழுந்தது. எங்களுடையது, உங்களுடையது, என்று தேவர், அசுரர்,

மானிடர் அடித்துக்கொண்டார்கள். கடைசியில் வழக்கைத் தீர்க்க சிவ பெருமானைக் கூப்பிட்டார்கள். அவர் பாகப்பிரிவினை செய்யலானார். கோடிஸ்லோகத்தில் தேவருக்கு33 லட்சம், அசுரருக்கு 33 லட்சம், மனிதருக்கு

33 லட்சம், பாக்கி ஒரு லட்சம், அதையும் மும்மூன்று கூறுகளிட்டுக் கொண்டே வரும்போது இறுதியாக ஒரு ஸ்லோகம் மிஞ்சிற்று. ஒருஸ்லோகத்திற்கு 32

எழுத்துக்கள். அதையும் 10, 10, ஆக பிரித்துக்கொடுத்தார். 2 எழுத்துக்கள் மிஞ்சின.ரா............ம.............. அவற்றை என்ன செய்வது? வழக்கைத்தீர்த்ததற்கு

ஊதியம் வேண்டாமா? எனக்கு என்று சொல்லி எடுத்துக்கொண்டார். கோடி

ஸ்லோகங்களின் சாரம் அந்த 2 எழுத்துக்களில் இருந்தது.




அவற்றைப்பெற்றதால், ஞானத்தில் எந்த தேவனோ, அசுரனோ, எந்த மனிதனோ சிவபெருமானுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியாமல் போயிற்று.

பழமொழிகள்.

அழகு அழிவுள் அடக்கம்
அறிவு புகழுள் அடக்கம்.
விழிகள் இமையுள் அடக்கம்.
மோகம் தோலுள் அடக்கம்.
முலைகள் பாலுள் அடக்கம்.
உணர்வு நெஞ்சுள் அடக்கம்.
ஒன்று இரண்டுள் அடக்கம்.
ஆணோ பெண்ணுள் அடக்கம்.
பெண்ணோ ஆணுள் அடக்கம்.
உடல்தான் மண்ணுள் அடக்கம்.
உயிர்தான் எதனுள் அடக்கம்?

பக்திப்பாடல்

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா.தேவி




பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நி நிறைந்த உயர் சிங்கார

கோவில் கொண்ட( கற்பகவல்லி)




நீ இந்த வேளை தன்னில் சேயன் எனை மறந்தால் நானிந்த நானிலத்தில்

நாடுதல் யாரிடமோ ஏனிந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள

ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா(கற்பகவல்லி0




எல்லோர்க்கும் இன்பங்கள் எளிதாய் இறங்கி அருள் நல்லாட்சி வைத்திடும்

நாயகியே கல்யாணியே கபாலிகாதல் புரியும் இன்ப உல்லாசியே உமா

உனை நம்பினேன் அம்மா (கற்பகவல்லி)




நாகேஸ் வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய் வாகேஸ்வரி மாயே வாராய்

இது தருணம் பாகேஸ்ஸ்ரீ தாயே பார்வதியே இந்த லோகேஸ்வரி உலகினில்

துணையம்மா(கற்பகவல்லி)




அஞ்சன மையிடும் அம்பிகையே எம்பிரான் கொஞ்சி குலாவிடும் வஞ்சியே உன்னிடம் தஞ்சம் என் அடைந்தேன் தாயே உன் சேய் நான் ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிரேன் அம்மா.(கற்பகவல்லி)

பிடித்த பாடல்





குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா. குறை ஒன்றும் இல்லை கண்ணா.

குறை ஒன்றும் இல்லை கண்ணா............ ஆ............ஆ..

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா..............அ...................அ( குறை)




கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா,

கண்ணுக்குத்தெரியாமல் நிறாலும் எனக்கு

குறை யொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா.




வேண்டியதைத் தந்திட வெங்கடேசன் நின்றிருக்க

வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா.

மணீவண்ணா மலையப்பா கோவிந்தா, கோவிந்தா.




திறையின் பின் நிற்கின்றாய் கண்ணா (2)

உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்

என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா.




குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா(2)

குறை யொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா.

“ “ “ “ “

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா, கோவிந்தா.




கலி நாளுக்கிறங்கி கல்லிலே இரங்கி

சிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா(2)

குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா.

யாதும் மறுக்காத மலையப்பா ...ஆ..............ஆ.........ஆ...(2)

உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக்கடல்

அன்னை என்றும் இருந்திட ஏது குறை எனக்கு.

ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கன்ணா,

மணிவண்ணா, மலையப்பா, கோவிந்தா, கோவிந்தா, கோஓஓ விந்தாஆஅ.

என்னை ஆதரிப்பவர்கள் . .