நான் சக்கோ புகழ் அத்தைபயன் பேசரேங்க. என் அக்கா சைக்கோன்னு ஒருபதிவுபோட்டு என்னை உங்ககிட்டல்லாம் ரொம்ப பிரபலப்படுத்திட்டாங்க:). ஹி, ஹி, ஹி.
ஒருசண்டே அங்கிள் என்னை டிபன் சாப்பிட ஹோட்டல் கூட்டிட்டுப்போனாங்க.(முதல் தடவையா ஹோட்டல் போரேன்). சந்தோஷமாகவும் இருக்கு. பயம்மாவும்இருந்தது. நல்ல பெரிய ஹோட்டலா கூட்டிட்டு போனாங்க. என்னிடம், மணி என்னசாப்பிடரே, என்றார். நீங்களே ஏதானும் சொல்லுங்கன்னுட்டேன். ரெண்டுபேருக்கும்மசால்தோசா, காபி ஆர்டர் பண்ணினாங்க. அரைமணி நேரத்தில் சூடு,சூடாகதோசை
வந்தது. நம்ம ஊர் பக்கம் போல இலை எல்லாம்போடலை. பெரியஸ்டீல் ப்ளேட்டில் பெரியதோசை நல்லா முறுகலா கொண்டு தந்தாங்க. கூடவே குட்டியூண்டு கிண்ணங்களில்சட்னி, சம்பாரும் தந்தாங்க. நான் சாம்பார்கிண்ணம் எடுத்து மோந்து பாத்தேன். ஏதானும்
கரம் மசாலா வாடை வருதோன்னு. எனக்கு, இன்னமும் இந்த ம்சாலாவாசனை எல்லாம்பழக்கமாகலை. பூனா வந்து ஒருமாசம் ஆகுது. நான் நினைச்ச மாதிரியே சாம்பாரில் கரம்மசாலா வாடை வந்தது. நம் ஊர்லலாம், எவ்வளவுசூப்பரா,. சின்ன வெங்காய சாம்பார் வாசனையா தருவாங்க. இந்த சாம்பார் பிடிக்கலை, ஒதுக்கிவச்சுட்டேன். அடுத்து சட்னி கிண்ணம் பாத்தேன்
தண்ணியும் சக்கையுமா ஓடுது. இதுவும் நம்ம ஊரு சட்டினியை ஞாபகப்படுதித்து. நல்லா,தேங்கா,பொட்டுக்கடலை, மிளகா போட்டு நல்ல கலரில் ஒரு சட்னி தருவாங்க பாருங்க. அதை சாப்பிட்டவாயால இந்தசட்னியை எப்படி சாப்பிட? அதையும் ஒதுக்கி வச்சுட்டேன். நல்ல வேளையா உருளைவெங்காய மசாலா நிறைய வச்சிருந்தாங்க. டேஸ்டும் நல்லாவே இர்ந்தது,பொழைச்சேன் நான் ரசிச்சு கொஞ்சம், கொஞ்சமா, மெதுவாத்தான் எப்பவுமே சாப்பிடுவேன்.
அங்கிள் கொஞ்சம் வேகமா சாப்பிடுவாங்க. நான் ஓரமா இருந்த முறுகலான தோசையைசாபிடும் போதே அங்கிள் சாப்பிட்டு முடிச்சுட்டாங்க. 4 டேபிள் தள்ளி இருந்த அங்கிளோடஃப்ரெண்ட் அங்கிளைக்கூப்பிட்டாங்க. மணி நீ மெதுவா சாப்பிடு, காபி குடிச்சு.ட்டுவா, நான்அந்த ஃப்ரெண்ட் கூட பேசீடிருக்கேன். கவுண்டர்ல நான் பணம் கொடுத்துடரேன். நீ ஒன்னும்
பணம் கொடுக்கவேண்டாம் என்றார்.( என்கிட்ட ஏது பணம்)? நானும் சரி என்று மெதுவாகச்சாப்பிட்டு காபி கப்பைக்கையில் எடுத்தேன். வெயிட்டர் என்னிடம் வந்து நின்ரான். நானும்பந்தாவாக எனக்குத்தெரிந்த ஒரே ஹிந்தியில் ”க்யா” என்ரேன். அவன் சார் பில் என்றுதலையைச் சொறிந்தான்.( பணம் கேக்குரவங்க எல்லாருமே ஏன் இப்படி அசட்டுத்த்தனமாதலையைச் சொறியராங்க?) அவனுக்கு என்னபதில் சொல்ல.பணம் இப்பதான் கொடுதாச்சு.
இதுக்கு என்ன சொல்வாங்க?,,,,, அபி அபி, தேகா.(abi,,abi dhega) அப்படின்னேன்.
அவனும் கொஞ்சம் ஒதுங்கி நின்னான். நான் காபி குடிச்சு முடிந்ததும் மறுபடியும் என்னிடம்வந்து, சார், பில் என்ரான். எனக்கா கோவம், ஏய், அபி, அபி தேகா நா? கத்திட்டேன்.இப்படியே அவன் பில்லுனு கேக்க, நானு பதிலுக்கு கத்த,கல்லா வில்லேந்து முதலாளியேஓடி வந்துட்டார். சர்வரிடம் ஏம்பா என்னாச்சு, கஸ்டமரிடம் கோபமா பேசக்கூடாதுன்னு
சொல்லியிருக்கேன் இல்லியா?. என்றார். அவனும் அவரிடம்,சார் நானு பில்கேட்டேன் அவருஅபி, அபி, தேகான்னு சொன்னாரு.சரின்னு இங்கியே நின்னேன். சார் உங்களுக்கு என்ன ப்ராப்லம் என்றார். சார் நா பில் கொடுத்த்ச்சின்னு சொல்லிக்கூட என் டேபிள் கிட்டயே முறைச்சுகிட்டு
நிக்கராரு என்ரேன். ஓ, நீங்க ஊருக்கு புதுசா,ஹிந்தி தெரியாதா, ஓ,கே, நீங்க என்ன சொன்னீங்க?அபி, அபி தேகான்னேன். முதலாளியும் ஜோரா சிரிச்சுட்டார். சார் நீங்க சொன்னதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா/ இதோ,பணம் த்ரேன்னு அர்த்தம். அபி, அபி தியா சொல்லனும்.என்ரார்.ஆளை விடுங்கப்பானு போயி அங்கிள்கிட்ட சொன்னேன் அவரும் ப்ஃரெண்டும் சத்தமா சிரிச்சாங்க
வீட்லபோயி அக்காகிட்டயும் அங்கிள் சொன்னாங்க. அக்கா என்கிட்ட மணி நீபாஷை கத்துகரியோஇல்லியோ, வாரம் ஒரு காமெடி பீசா ஆயிட்ரே . அவபங்குக்கு அவளும் காலை வாரினா.
Tweet | |||||
25 comments:
நல்ல நகைச்சுவை..... பகிர்வுக்கு நன்றி.
தேங்க்யூ. கருணாகரசு.
ஷுறு மெ ஐசெஹி ஹோத்தாஹை..
பாத் மெ டீக் ஹோஜாத்தாஹை..
மே பீ ஐசெஹி சீக்லியா..
ஓ, தோ ஸஹி பாத் ஹை. தோடா டைம் லஹேகா.கோயி பாத் நை.
படிக்கவே காமெடியாக இருந்தது.
ஸாதிகா நல்லா சிரிச்சீங்களா.
ஹஹா . நான்கு வருடத்திற்கு முன்பு எனக்கும் ஹிந்தி நஹி மாலும். இன்னிக்கு நல்லாவே பேசுவேன்.. ஆரம்பத்தில் இதெல்லாம் சகஜம்
காமெடில கலக்குறீங்க
நகைச்சுவையான பகிர்வு. உங்க அத்தை பையன் பாவம்! அபி ஹிந்தி சீக்லியா க்யா?
கார்த்திக் எல்லா பாஷைகளுமே கத்துக்கும்வரை காமெடிதான்.ஒவ்வொருவர்கிட்ட ஒவ்வொரு கதை இருக்கும்.
ஆமி ரசிசீங்களா?
வெங்கட் ஓ, அபி ஹிந்தி அச்சே ஸே
சீக்லியா, லேகின் ஓ அபி சென்னை மே
காம் கர்த்தாஹை. ஹிந்தின்னு சொன்னாலே கம்பு எடுப்பாங்கசென்னைல.
நகைச்சுவையான பகிர்வு.
ஆமா ஆயிஷா.
உங்க புண்ணியத்துல ரெண்டு வார்த்தை ஹிந்தில கத்துக்கிட்டேன்.
முதல் விஜயம் இங்கே...!
அத்த பையனுக்கு ஹிந்தி வரல, கோபம் மட்டும் நல்லா வருதே...!
போஸ்ட் பஹுத் அச்ச ஹை ஜி...!
இங்கயும் வந்துட்டு போங்க...!
http://vinmukil.blogspot.com/
http://microscopicalview.blogspot.com/
பிரபு ரெண்டு வார்த்தை தெரிஞ்சுகிட்டா போதுமா, வரீங்களா க்ளாசே எடுக்கரேன். நீங்க எக்ஸ்பர்ட்டா ஆயிடுவீங்க.:)
சதீஷ் முதல் வருகைக்கு நன்றிப்பா. அவசியம் உங்க பக்கமும்வரேன்.
உங்க பக்கத்துல உட்கார்ந்து பேச்சு கொடுத்த மாதிரி இருக்கு, நீங்க எழுதும்விதம்... தொடருங்கள்..
எனக்கு தெரிஞ்ச ஒரே ஹிந்தி வாக்கியம் இது தானுங்க "ஏக் காவுமே ஏக் கிஸ்ஸான் ரகு (ரகு இல்லப்பா ரக ரக ரக ..) தாத்தா :(
நாகசுப்ரமணியன் உங்க ஹிந்தி அனுபவங்களையும் சொல்லவேண்டியதுதானே.
அருமையான காமடி அம்மா .இப்படித்தான் இங்க ஒருமுறை வேலைத்தளத்தில் வேலை செய்யும் சக நண்பர்களிடம் ஒரு அப்பாவி வெள்ளைக்காரர் வணக்கம் எப்படி சொல்வது என்று கற்றுக்கொண்டுபோய் பெண்களைப் பார்த்து பலமுறை
சொல்லியுள்ளார் பதிலுக்கு நமது நாட்டுப் பெண்கள் அவரை முறாய்த்துப் பார்த்துள்ளனர் .இது என்னடா வணக்கம் சொன்னதுக்கு இந்த நாட்டுப் பெண்கள் இவ்வளவு கோவப்படுகின்றனாரே
என்று தன் மனக்கவலையை வேறொரு தமிழனிடம்
சொன்னபோதுதான் தெரிய வந்தது
அவர் இதுவரைச் சொன்னது வணக்கம் அல்ல. பெண்களின் பிறப்புறுப்பை என்று தெரியவந்து மிகவும் வேதனைப்பட்டுள்ளார் .ஒரு காமடிமூலம் மொழியின் புரிதலை விளக்கிய உங்களுக்கு மிக்க நன்றி அம்மா .மொழி கற்கும் ஆவல் உள்ளவர்கள் கட்டாயம் இந்த ஆக்கத்தைப் பார்க்கவேண்டும் .
நன்றி அம்மா பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் .என் தளத்தில் கவிதை காத்திருக்கின்றது .
அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இவ்வளவு மாதங்கள் ஆகியும் கூட என் பதிவு ரசிக்கப்படுவதே ரொம்ப சந்தோஷமான விஷயம்.
nice lesson with comedy
அருள் சர்ப்ப்ரைஸ் இவ்வளவு நாள் ஆகியும்கூட இந்தப்பதிவெல்லாம் படிச்சு ரசிக்க வந்தீங்களே? ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி
Post a Comment