Pages

Tuesday, November 23, 2010

ஆன்மீகப்( பிக்னிக்)பயணம்.1

தீபாவளி முடிந்து நாங்க மூன்று ஃபேமிலிகள் மூன்று கார்களில் கிளம்பினோம்.

மும்பையில் தாணா என்னும் பகுதியில் இருந்து ஷீரடி( சாய்பாபா) சுமாராக

250 கிலோ மீட்டரில் இருந்தது. முதலில் பாபா தரிசனம். மதியம் சாப்பாடு

முடிந்து ஒர்மணி சுமாருக்கு கிளம்பினோம். பெரியவர்கள் 9 பேர்கள், குழந்தைகள்

6 பேர்கள். வண்டியில் பழைய ஹிந்தி பாட்டுக்கள் கேட்டுக்கொண்டே உல்லாசமாக

பயணம் துவங்கியது. கையில் நிரையவே டிட்பிட்டுகள்( சாப்பிட நொறுக்ஸ்தான்)

எடுத்துக்கொண்டோம். வழிபூராவும் சூப்பர், சூப்பர் சீனரிகள்.

முதலில் நாசிக் என்னும் இடம் போனோம். அதற்கே 3மணி நேரங்கள் ஆனது.

அங்கு மானசா ரிசார்ட் என்னும் ரெஸ்டாரெண்டில் ஃப்ரெஷப் பண்ணிண்டு காபி

ஸ்னேக்ஸ் சாப்பிட்டு திரும்ப பயணம்.வழியில் நிரைய பேர்கள் கால் நடையாக

ஷீர்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். பாம்பே டு ஷீரடி கால் நடையாகப்போக

ஒரு வாரம் ஆகுமாம். சிலர் நடந்து வருவதாக பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்.



இடை, இடையில் எங்காவ்து தங்கி சிரம பரிகாரம் செய்துவிட்டு திரும்பவும் தங்கள்

நடைப்பயணத்தை தொடர்கிறார்கள்.

வழியில் நிரைய விண்ட் மில்கள் நிறுவி யிருந்தார்கள். இரண்டுபுரமும் நிரையவே

பொட்டல் வெளிகள்தான். க்ளைமேட் ரொம்ப கூலா சூப்பரா இருந்தது. ஷீரடி போயிச்

சேர இரவு 7 மணி ஆச்சு. முதலில் ஒரு 5ஸ்டார் ஹோட்டல் போயி சாமான்களை

வைத்துவிட்டு கை,கால்கள் அலம்பி திரும்ப ஒரு ச்சாய் குடிச்சுட்டு, கோவில் போனோம்.

வெளியிலே நிறையகடைகள்,பூ, பழம், பூஜா சாமான்கள் எல்லாம் விற்றுக்கொண்டிருந்தார்கள்.

பூ,பழங்கள். சால்வை என்று எல்லா வாங்கினார்கள். கோவில் வாசலைத்தாண்டியும் பெரிய

க்யூ வரிசை. நாங்களும் க்யூவில் நின்றோம். திரும்பிய பக்கமெல்லாம் பெரிய டி.வி. வைத்து

சன்னிதியில் நடந்துகொண்டிருக்கும் பூஜைகளை லைவ் வாக ரிலே செய்து கொண்டிருந்தார்கள்.

அதைப்பார்த்துக்கொண்டே க்யூவில் நின்றுகொண்டோம். எவ்வளவு விதமான மனிதர்கள்

கூட்டத்தில் நெருக்கியபடி, பாபாவைத்தரிசிக்க கால் கடுக்க நின்று கொண்டிருக்கிறார்கள்.

அப்படி ஒரு பக்தி.

நாங்களும் 3 மணினேரம் க்யூவில் நடந்து சன்னிதியை அடைந்தோம். நேருக்கு நேரா பாபா விக்ரகம்

பாக்கும்போது மனசெல்லாம் என்னமோ பன்ணத்தான் செய்கிறது. இவ்வளவு நேரம் க்யூவில் நின்ற

கஷ்டமெல்லாம் மறந்தே போயிடரது. அந்தக்காந்தக்கண்கள் நாம எங்க நின்னு பாத்தாலும் நம்மையே

பார்ப்பதுபோல தோணுது. கண்களிலும், உதட்டுப்புன்னகையிலும் என்ன ஒரு சாந்தம், என்ன ஒரு

கருணை. ஒவ்வொருவரும் இந்த அனுபவத்தை உணர்ந்து பார்த்தால்தான் புரியும். 2,3 நிமிடங்கள்

கூட நிக்க விடாம சலா, சலா ந்னு துரத்தி அடிக்கரா. இவ்வளவு தூரம் வந்து இப்படி பாக்க விடாம

துரத்துராளேன்னு கோவமா வரது. நமக்கும் பின்னால இருக்கு கூட்டத்தைப்பாத்தா அவங்களுக்கும்

தரிசனம் கிடைக்கணுமேன்னும் தோணுது. இதுமட்டுமில்லை. நாம கொடுக்கும் பூ,ப்ழம் மாலைகளை

பாபா பாதத்தில் வைத்துவிட்டு அப்படியே கூட்டத்தை நோக்கி வீசி எறிகிறார்கள். மனசுக்கு ரொம்பவே

கஷ்டமாரது. எதுவுமே வாங்கிப்போகாமல் உண்டிய்லில் காசைப்போட்டுடரதுதான் பெஸ்ட். இல்லியா

அங்கே இருக்கும் ஏழைகளுக்கு சாப்பாடோ, துணிமணியோ வாங்கி கொடொப்பது இன்னமும் நல்லது.

இரவு 10 மணி திரும்பவும் ஹோட்டல்.

நான் என் வீட்டுக்காரருடன் ஒரு 30 வருடங்கள் முன் இங்க வந்திருக்கேன். அப்ப இவ்வளவு

கூட்டமும், தள்ளு,முள்ளுகளும் கிடையவே கிடையாது. ஆனந்தமாக கிட்ட நின்னு தரிசனம் பன்ண முடிந்தது.

இவ்வளவு ஹோட்டல் வசதிகளோ, வேறு வியாபார உத்திகளோ கிடையாது. 70, 80. களில்

ம்னோஜ் குமார்னு ஒரு ஹிந்தி ஹீரோ ரொம்ப பிரபலமாக இருந்தார். அவர் இங்கு வரும் அனைத்து

பக்தர்களுக்கும் இலவச அன்னதான ஏற்பாடுகள் செய்திருந்தார்.( இப்பவும் நடந்துகொண்டுதான் இருக்கு)

அங்கு தான் அனை வரும் சாப்பிடுவோம்.




பாபா, நட்டுவைத்த வேப்பமரம், அவர் உபயோகப்படுத்திய அடுப்பு, இன்னும் என்னம்மோ இருந்தது.

சாவகாசமாக எல்லாம் சுற்றிப்பார்க்கவும் முடிந்தது.

இப்ப எல்லாவற்றையும் வியாபார நோக்கோடுதான் பார்க்கிறார்கள். திரும்பின பக்கமெல்லாம்

ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், விதவிதமான சாப்பாடுகள், ரூமில் ஏ. சி.ஃபோம்மெத்தை வென்னீர்

தண்ணீர் குழாய்கள், ரூம்சர்வீஸ் என்று ஏக அமர்க்களமாக இருக்கு. அதுதான் தலைப்பில் பிக்னிக்

என்று சேத்தே சொன்னேன்.

கீழே டைனிங்கில் டின்னர் முடிந்து ரூம். குழந்தைகள் டி.வி. பார்த்தார்கள். பெரியவர்கள் நாளைய

ப்ரோக்ராம் பற்றி மும்முரமாக டிஸ்கஷனில்.

நம்மபக்கம் சனீச்வர பகவானுக்கு திரு நள்ளாருன்னு ஒரு இடம் உண்டு இல்லியா? அதுபோல

இங்கேந்து80 கிலோ மீட்டரில் சனீஸ்வர பகவானுக்கு சனி சிங்க்கனாபூர் என்னுமிடத்தில் ஒரு

கோவில் இருக்கு. அங்கு போவதாக முடிவு பண்ணினார்கள்.

15 comments:

THOPPITHOPPI said...

கையில் நிரையவே டிட்பிட்டுகள்( சாப்பிட நொறுக்ஸ்தான்)//////

அம்மா, உங்க புகைப்படம் முதுமையா இருக்கு ஆனால் உங்கள் எழுத்து இளமையா இருக்கு!

Mahi said...

உங்களுடன் பயணித்த உணர்வு வருகிறது.:) சீக்கிரம் அடுத்த பகுதியை எழுதுங்க.

உங்களுடன் முன்பே பேசியிருக்கேன்னு நினைக்கிறேன்,கரெக்ட்டா லஷ்மி அம்மா?

குறையொன்றுமில்லை. said...

என்னங்க பேரு, தொப்பி, தொப்பி!!!!!!!!!!!!!!!!!
என் உருவத்துத்தான் வய்சு ஆச்சு. மனசளவில்
என்றும் இளமைதான்.ஹா, ஹா, ஹா,

குறையொன்றுமில்லை. said...

மஹி வருகைக்கு நன்றி. ஆமா நாம ஏற்கனவே பேசி
இருக்கோம். உங்க ப்ளாக்ல கமெண்ட்போட ஆப்ஷ்னே இல்லியே?!!!!!!!!!!!!!!!

ஸாதிகா said...

புதிய வலைப்பூவிற்கு என் வாழ்த்துக்கள்.நிறைய எழுதுங்கள் மேடம்.//
என் உருவத்துத்தான் வய்சு ஆச்சு. மனசளவில்
என்றும் இளமைதான்.ஹா, ஹா, ஹா,//உங்கள் நகைச்சுவை உணர்வை மிகவும் ரசித்தேன் லக்ஷ்மி அம்மா.

ஸாதிகா said...

வேர்ட் வெரிபிகேஷனை நீக்கி விடுங்களேன்.

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா வருகைக்கு நன்றி. வேர்ட் வெரிபிகேஷனை எப்படி நீக்கனும். அதனால என்ன ஆகும்?????

santhanakrishnan said...

ஆன்மிகப் பயணம் தொடர
என் வாழ்த்துக்கள்.
நிறைய எழுதுங்கள்.

ஸாதிகா said...

வேர்ட் வெர்பிகேஷனை நீக்கினால் உங்கள் பதிவுகளுக்கு ஆங்கில எழுத்துக்களை எழுதி கமெண்டை அனுப்பும் சிரமம் குறையும்.அதனை நீக்குவதற்கு கீழ் கண்ட முறையில் ஃபாலோ பண்ணுங்கள்.

டாஸ் போர்ட் ஓப்பன் செய்யவும்.அதன் பின்னர்

செட்டிங்

கமெண்ட்ஸ்

சென்றால்

Show word verification for comments? என்ற ஆஃப்ஷனில் NO ஐ கிளிக் செய்தால் வேர்ட்வெரிபிகேஷன் நீங்கி விடும்.கமெண்ட் போடுபவர்களும் சிரமம் இல்லாமல் கமெண்டை போஸ்ட் செய்யவசதியாக இருக்கும்.புரிந்து இருக்குமென நினைக்கின்றேன்.

ஸாதிகா said...

அட ஏற்கனவே வேர்ட் வெரிபிகேஷனை நீக்கி இருக்கின்றீர்கள்!!

குறையொன்றுமில்லை. said...

சந்தான கிருஷ்ணன் வருகைக்கு நன்றி. நீங்கல்லாம் இப்படி சப்போர்ட் பண்ணும்போது இன்னமும் நிரைய,
நிரைய எழுத ஆர்வம் ஏற்படுகிரது.

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா நீங்க சொன்னபடியே செய்துட்டேன். நன்றிம்மா. இதுபோல இன்னமும் நிரைய சொல்லித்தாருங்க.

குறையொன்றுமில்லை. said...

வேர்ட் வெரிபிகேஷன் நீக்கினது உங்களுக்கு எப்படி தெரிய வருகிரது????!!!!!!!!!!!!!!!

cheena (சீனா) said...

நல்லதொரு பிக்னிக் - ஆன்மீகப் பயணம் என்றாலும் இக்காலத்தில் நாம் பக்தி பூர்வமாக மட்டும் செல்ல இயலாது - நல்லதொரு பயணக்கட்டுரை -வாழ்க வளமுடன்

குறையொன்றுமில்லை. said...

நன்றி, சீனா சார், வருகைக்கும் கருத்துக்கும்.

என்னை ஆதரிப்பவர்கள் . .