Google+ Followers

Pages

Monday, December 3, 2012

சிங்கப்பூர் 4

இங்கெல்லாம் சனி ஞாயிறு ரெண்டு நாளும் வாராந்திர விடுமுறை தினம்.
மறு நாள் காலை குளித்து வெளியே கிளம்பினோம்.இங்க ஒரு மூத்த பதிவர் இருக்காங்க. www.rajalashmi.blogspot.com என்னும் தலைப்பில் சமையல் குறிப்பு
மட்டுமே எழுதுராங்க.வயதில் மூத்தவங்களை நாம போயி பாக்குரதுதானே
முறை. அன்னிக்கு அவங்களுக்கு பர்த்டெவா இருந்தது. அவங்களுக்கு ஐஸ்க்ரீம் ரொம்ப பிடிக்கும்னு சொன்னாங்க. ஸோ, ஐஸ்க்ரீம் வாங்கிண்டு
அவங்க வீடு போனோம். மகன் வீட்டுகிட்டயெ   பஸ்  ஸ்டாப், ரயில்வே
                                             
ஸ்டேஷன் எல்லாமெ இருந்தது.இங்கேந்து 8-வதுஸ்டேஷனில் ஃபெரர்பார்க்
என்னும் இடத்தில் அவங்க வீடு இருந்தது. நாங்க ட்ரைன்லயேபோனோம்.
ரயில்வேஸ்டேஷன், ரயில் ,பஸ், டாக்சி எல்லாத்திலயும் ஏ.சி. மயம். வீட்லயும் எல்லா ரூமிலும் ஏ.சி.தான். சீலிங்க் ஃபேன் ஒரு ரூமிலும் இல்லே. பெடஸ்டல் ஃபேன் ஐயோ பாவமா சுத்திண்டு இருக்கும்.எனக்கு ஆர்த்தரடீஸ் ப்ராப்லம் இருப்பதால ஏ.சி. கொஞ்சம் கூட ஒத்துக்கொள்ளாது. இதுக்கு பயந்தே ஒரு இடமும் வரல்லேன்னு சொல்லிடுவேன். ஆனா இவ்வளவு பஸ் டாக்சில்லாம் ஓடரதே துளிகூட தூசியோ பெட்ரோல் வாடையோ ஹார்ன் சத்தம்னோ எதுவுமே கிடையாது. ஒரே சமயத்ல 7, 8 பஸ் ஓடலாம் போல ரோடெல்லாம் அவ்வளவு விஸ்தாரமா சுத்தமாஇருக்கு. நடக்கரவாளுக்கு,
சைக்கில் ஓட்டுரவாளுக்கு தனி நடை பாதை இருக்கு.ரோடுல ஆள் நடமாட்டமே இல்லேன்னா கூட கார் பஸ் ரோட் சிக்னலை ஃபாலோ பன்ராங்க. நடக்கரவா ரோடை க்ராஸ் செய்ய ஒர் கம்பத்தில் தனி ஸ்விட்ச் இருக்கு அதை
                                           
ப்ரஸ் பண்ணினா நடக்கரவாளுக்கு எல்லா வாகனங்களும் நின்னு வழி                விடரது. இதெல்லாம் அழகு  எல்லா இடங்களிலும் ஆங்கில சைனீஸ்மொழிகளுடன் தமிழிலும் அறிவிப்பு
இருக்கு. தமிழ் இங்க மூனாவது மொழியாம். கேக்கவும் பாக்கவும் சந்தோஷமா
                                       

                                     
                                         
இருக்கு.பஸ், ட்ரெயின் எங்குமே கண்டக்டரோ சில்லரை கொடும்மாங்கர பேச்சே கிடையாது. எல்லாரிடமும் தனித்தனியா ஏ.டி.எம். கார்ட் போல ஒரு கார்ட் வச்சிருக்கா.அதுக்கு உண்டான மிஷினில் அந்தகார்டை ப்ரஸ் பண்ணினா தான் ஸ்டேஷன்குள்ள போகவே வழி விடுது எங்க வண்டி
                                     

                             
ஏறுரோம்னு அதுல பதிவாகிடும். அதுபோல இறக்ங்கும் இடத்திலும் வெளியே வரும்போது கார்ட் ப்ரஸ் பண்ணனும் அப்போ செலவாகியுள்ள பணம் , கார்ட்ல பாலன்ஸ் எவ்வளவு பண ம் இருக்குன்னெல்லாம் விவரங்கள் தெரியுது. எவ்வளவு நல்ல சிஸ்டம் இல்லியா? ஸ்டேஷனும் அவ்வளவு சுத்தமா இருக்கு இண்டிகேட்டர்ல இத்தர மணிக்கு வண்டி வரும்னு போடரா கொஞ்சம் கூட முன்ன, பின்ன இல்லாம சொன்ன டயத்துல வண்டி வந்துடரது.
ஆட்டோ டோர் ஓபென்,லாக் சிஸ்டம்.வண்டிக்குள்ளயும் நல்ல தாராள இடவசதி. சுத்தம். பயணம் செய்வது அவ்வளவு சுகமான அனுபவமா இருக்கு

அடுத்துஎன்ன ஸ்டேஷன் வருதுன்னு வண்டிக்குள்ளயும் இண்டிகேட்டரிலும் ஸ்பீக்கரிலும் தெரியப்படுத்துராங்க. எல்லா இடங்களிலு ம் மேப்பும் வச்சிருக்காங்க.அது ரொம்ப சவுகரியம்.வேர்வை கச கசப்போ கூட்ட நெரிசலோ தள்ளு முள்ளோ ஏதுமே கிடையாது. சைனீஸ் சின்ன வயசு  பொண்ணு, பையன்கள் கையில் மொபைலில் கேம். இல்லேனா பாட்டு இலேனா மெசேஜ் அனுபிட்டெ இருக்காங்க.காதுல எப்பவும் இயர் போன் இருந்துகிட்டே இருக்கு. உடை அணிவதிலும் நல்ல சிக்கனம் கடைப்பிடிக்கிராங்க.:))))))))))))).பெரியவங்களோ சின்னவங்களோ ஓவர் வெயிட்
போடாம ஸ்லிம்மா கலர்ஃபுல்லா இருக்காங்க.  வீட்டில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு போரவங்களாகத்தான் பெரும்பாலும் இருக்காங்க வீட்டோடயே ஒரு மெயிட் வச்சிருக்காங்க.அந்த மெயிட் களும் சின்னவயசு பொண்ணுகளாதான் இருக்காங்க.வீட்டோடயே இருப்பதால எல்லா வேலைகளும் செய்யுராங்க. பொதுவாக இது போல மெயிட் நேபாலி, சைனீஸ்
ஜப்பானீஸ் பொண்ணுகளா இருக்காங்க.

இங்க வீட்டு வேலைக்கு ஆள்கிடைப்பதே இல்லே. நாமே தான் எல்லா வேலைகளும் செய்துக்கணும். வீடு பெரிசா இருப்பதால பெருக்கி தொடைப்பது தூசி அடிப்பது எல்லாம் கஷ்டமா இருக்கு. அதுக்குமட்டும் மொரு வேலைக்காரி வாரம் ஒரு முறை வரா. பாத்தா காலேஜ் படிக்கர பொண்ணுமாதிரிதான் இருக்கா.ஒருமணி நேரத்துக்கு 10-டாலர் அவ சம்பளம். (சிங்கப்பூர் டாலர்1=இண்டியன்பணம் 45 ரூவா.) அவ வந்தா 3 லேந்து 4  மணி நேரம் வேலை பன்ரா ஃபுல் ஃபுல்லா க்ளீனிங்க் பண்ணிடராஅவசம்பளம் வாரத்துக்கு நம்ம கணக்குப்படி 1800 ரூவா ஆகுது. நமக்கு கட்டுப்படி ஆகுமா?
வேர வழி?வெளி நாட்டு வேலைன்னு பெருமைக்கு சொல்லிக்கரோம் ஆனா அவங்க படுர சின்ன சின்ன கஷ்டங்களும் சொல்லி புரிய வைக்கவே முடியாது

46 comments:

துளசி கோபால் said...

ஃபெரர்பார்க் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் ஜஸ்ட் ஒரு நிமிச நடை தூரத்தில் நம்ம சீனு இருக்கார்.

சிங்கை போனால் தினமும் அவரைப்பார்த்துப் 'பேசிட்டு'த்தான் வருவேன்:-)

சனாதனன் said...

very nice
my all time favourite country :)

கோவை2தில்லி said...

சிங்கப்பூர் பயணம் ஜோரா இருக்கு. நாங்களும் வருகிற மாதிரி...

நீங்க சொல்வது மாதிரி தான் தில்லியில் மெட்ரோ ரயில் சேவை இருக்கும்...

தமிழை சிங்கப்பூரில் பார்ப்பது சந்தோஷமாக உள்ளது.

அர அல said...

Nice article

கே. பி. ஜனா... said...

சுவையான கட்டுரை...

Semmalai Akash! said...

உங்களது அனுபவம் எங்களையும் சிங்கபூர் அழைத்துச் சென்றது, நீங்க சொன்ன அனைத்தும், அனைத்து வசதிகளும் அமீரகத்தில்(துபையில்) உள்ளது, ஆனால் ஒன்று மட்டும் இல்லை, தமிழ் மொழி, ம்ம்ம்ம் என்ன செய்ய இருந்தாலும் அமீரகத்தில் எல்லோருக்கும் நல்ல மரியாதை இருக்கிறது. உங்களது சுற்றுபயணத்தில் நாங்களும் கலந்துகொண்டதுபோல் உள்ளது.

அருமையான பகிர்வுக்கு நன்றி அம்மா.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான சிங்கப்பூர் பயணப் பகிர்வுக்கு நன்றி அம்மா

ராமலக்ஷ்மி said...

நிறையும் குறையும் அலசி இருப்பது அருமை. தொடருங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

எங்களையும் கூடவே அழைத்துச் செல்கிறது உங்கள் பகிர்வு...

மிக்க நன்றிம்மா.

Priya ram said...

லக்ஷ்மி அம்மா, உங்களோட சிங்கப்பூர் பத்தின பதிவுகள் அருமை... நாங்க 2 வருஷம் முன்னாடி,ரெண்டு வருஷம் சிங்கப்பூர் ல - அங் மோ கியோ ல இருந்தோம்.. (ரெட் லைன் ல )... பழைய நினைவுகள் நியாபகத்துக்கு வருது.... நான் சிங்கப்பூர் ரொம்ப மிஸ் பண்ணறேன்... உங்க பதிவு படிப்பது மூலம் ஒரு சந்தோஷம் வருது... பகிர்வுக்கு நன்றி... நிறைய பகிர்ந்து கொள்ளுங்கள்...டைம் கிடைத்தால் என்னோட ப்ளாக் பக்கம் வாங்க.....

M. Shanmugam said...

மிகவும் பயனுள்ள பதிவு
மிக்க நன்றி.

Sri Lanka Tamil News

Lakshmi said...

துளாசி கோபால் நான் ஃபெரர்பார்க்பொரெனே யாரு சீனு? பதிவரா?முடிந்தவரை சில பதிவர்களையாவது சந்திக்க நினைச்சிருக்கேன். சில் காண்டாக்ட் நம்பர் கிடைச்சு பேசியும் ஆச்சு. மினின் பதிவர் மீட்டிங்க நடத்திடுவோம்ல? ஹ ஹ

Lakshmi said...

சனாதனன் முதல் முறையா என் பக்கம் வரீங்களா? வாங்க வாங்க நன்றி. சிங்கப்பூரை யாருக்குத்தான் பிடிக்காது இல்லியா?

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றிம்மா

Lakshmi said...

அர அல என்னபேருங்க இது? முதல்முறையா என்பக்கம் வரீங்களா நன்றி வாங்க அடிக்கடி

Lakshmi said...

கே.பி. ஜனா நன்றி

Lakshmi said...

செம்மலை ஆகாஷ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

இராஜராஜேச்வரி வருகைக்கு நன்ரி

Lakshmi said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றீ

Lakshmi said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றீ

Lakshmi said...

வெங்கட் நன்றி

Lakshmi said...

பிரியா ராம் சந்தோஷம்ம்மா. சிங்கப்பூரை யாராலயும் மறக்கவே முடியாதுதான்.. நானும் உன் பக்கம் வரேன்மா

Lakshmi said...

எம்.ஷன்முகம் வருகைக்கு நன்றி

துளசி கோபால் said...

சீனு ரொம்பப்பெரிய பதிவர் லக்ஷ்மிம்மா.லோகத்தில் எல்லோர் தலையெழுத்தையும் எழுதிய பெரிய ஆள்! எல்லாம் நம்ம சிங்கை சீனிவாசன்தான். சுருக்கமாச் சொன்னால் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப்பெருமாள்.

அழகான அமைதியான கோவில். ஜருகு ஜருகு இல்லாம நிம்மதியா எத்தனை நேரம் வேணுமுன்னாலும் சேவிக்கலாம். நமக்கே போரடிச்சு திரும்பினால் உண்டு.

நேரம் இருந்தால் இந்தச் சுட்டியில் பாருங்க.

http://thulasidhalam.blogspot.co.nz/2007/04/blog-post_20.html

துளசி கோபால் said...

சீனு ரொம்பப்பெரிய பதிவர் லக்ஷ்மிம்மா.லோகத்தில் எல்லோர் தலையெழுத்தையும் எழுதிய பெரிய ஆள்! எல்லாம் நம்ம சிங்கை சீனிவாசன்தான். சுருக்கமாச் சொன்னால் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப்பெருமாள்.

அழகான அமைதியான கோவில். ஜருகு ஜருகு இல்லாம நிம்மதியா எத்தனை நேரம் வேணுமுன்னாலும் சேவிக்கலாம். நமக்கே போரடிச்சு திரும்பினால் உண்டு.

நேரம் இருந்தால் இந்தச் சுட்டியில் பாருங்க.

http://thulasidhalam.blogspot.co.nz/2007/04/blog-post_20.html

Lakshmi said...

ஹா ஹா ஹா துளசி கோபால் உடனே
உடனே வந்து சீனுவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி உடனே போயி சேவிச்சுடரேன் நன்றி

வடுவூர் குமார் said...

13 வருட வாசம் சிங்கையில்....அணு அணுவாக அவர்கள் திட்டத்தை ரசிக்க கிடைத்த காலங்கள் அது.
சில வருடங்கள் அங்கிருந்து பாருங்கள் திரும்ப வர மனதே இருக்காது ஆனால் என்ன வேலையில்லாவிட்டால் கொஞ்சம் கஷ்டம் தான்.

ஸாதிகா said...

லக்ஷ்மிம்மா சிஙை போயாச்சா?வெர் குட்.உங்கள் அனுபவப்பகிர்வு வழக்கம் போல் அருமை.நேரில் பார்த்ததைப்போன்ற உணர்வு.தொடருங்களம்மா.

rajalakshmi paramasivam said...

லஷ்மி அம்மா,
உங்கள் சிங்கப்பூர் ரயில் அனுபவங்கள்
சுவையாக இருந்தன.
நம் டெல்லி மெட்ரொ ரயில் பயணமும்
இதைப் போலவே இருக்கும் என்று தான் தோன்றுகிறது.

ராஜி.

Lakshmi said...

வடுவூர் குமார் வாங்க இப்ப எங்க இருக்கீங்க. உண்மையிலே சிங்கபூர் லைஃப்ஸ்டைல் நல்லாதான் இருக்கு. நாமல்லாம் வழிப்போக்கர்கள் போல வந்து போயிட்டுதானே இருக்க முடியும் இல்லியா

Lakshmi said...

ஸாதிகா வா வா வா ஆமா சிங்கை வந்திருக்கேன்

Lakshmi said...

ராஜலஷ்மி பரமசிவம் நான் டில்லி மெட்ரோ பாத்ததில்லேம்மா.வருவேன் நீ டில்லில இருக்கியா?

வடுவூர் குமார் said...

இப்ப சிங்கார சென்னையில் தான் இனிமேலும் இங்கு தான் என்று நினைக்கிறேன்.

athira said...

ஆஆஆஆ லக்ஸ்மி அக்கா.. சிங்கப்பூரைக் கலக்குறீங்க.. கமெராவும் கையுமாத்தான் திரிகிறீங்கபோல... சூப்பர்ர்.. போகுமிடமெல்லாம் படமெடுங்கோ.

Lakshmi said...

வடுவூர் குமார் வருகைக்கு நன்றி அப்போ சென்னையில் நடந்த பதிவர் சந்திப்புக்கு வந்தீங்களா?பாத்த நினைவு இல்லே அதான் கேட்டேன்

Lakshmi said...

அதிரா படத்தோட பதிவு போட்டாதானே நீ நான் சிங்கப்பூர் வந்திருக்கேன்னு நம்புவே அதான் போட்டோ+கேமரா கை.

மாதேவி said...

தமிழுக்கும் ஓர் இடம் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

உங்கள் பார்வையில் சிங்கப்பூர் தொடர்கின்றேன்....

அமைதிச்சாரல் said...

ஆஹா.. சிங்கை நகர்வலம் ஆரம்பிச்சாச்சா.. கலக்குங்க லக்ஷ்மிம்மா :-)

Lakshmi said...

ஆமா மாதேவி ஒரு வெளி நாட்டுல நம்ம மொழி பாக்க படிக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.

Lakshmi said...

சாந்தி வருகைக்கு நன்றி

Asiya Omar said...

//வெளி நாட்டு வேலைன்னு பெருமைக்கு சொல்லிக்கரோம் ஆனா அவங்க படுர சின்ன சின்ன கஷ்டங்களும் சொல்லி புரிய வைக்கவே முடியாது//
அருமையான கருத்து..லஷ்மிமா.

Geetha Sambasivam said...

அருமையான சிங்கை அனுபவங்கள். எனக்கு நண்பர்கள் உண்டு. எல்லாரும் வரச் சொல்லிக் கூப்பிடறங்க. நீங்க மலேஷியாவுக்கும் சேர்த்துத் தானே விசா வாங்கி இருக்கீங்க? அங்கேயும் போயிட்டு வாங்க.

Lakshmi said...

கீதா நான் இங்க வந்திருக்கேன்னு தெரிஞ்சதுமே நிறைய பேரு போன் பண்ணிட்டாங்க. எல்லாரையும் ஒரே நாள் ஒரே இடத்துல சந்திக்கலாம்னு இருக்கேன்

JAYANTHI RAMANI said...

//வெளி நாட்டு வேலைன்னு பெருமைக்கு சொல்லிக்கரோம் ஆனா அவங்க படுர சின்ன சின்ன கஷ்டங்களும் சொல்லி புரிய வைக்கவே முடியாது//

உண்மைதான். ஒவ்வொரு இடத்துல ஒவ்வொரு மாதிரியான கஷ்டம்.

படிக்கப் படிக்க சுவாரசியமா இருக்கு.

JAYANTHI RAMANI said...

//வெளி நாட்டு வேலைன்னு பெருமைக்கு சொல்லிக்கரோம் ஆனா அவங்க படுர சின்ன சின்ன கஷ்டங்களும் சொல்லி புரிய வைக்கவே முடியாது//

உண்மைதான். ஒவ்வொரு இடத்துல ஒவ்வொரு மாதிரியான கஷ்டம்.

படிக்கப் படிக்க சுவாரசியமா இருக்கு.

Lakshmi said...

ஜெயந்தி ரமணி வருகைக்கும் கருத்துக்கும் நன்ரிம்மா.

என்னை ஆதரிப்பவர்கள் . .