Pages

Wednesday, January 18, 2012

கிலிபி 8(ஆப்ரிக்கா)

இன்ன்னிக்கு, பதிவும் படங்களும் கொஞ்சம் நிரையா போட்டிருக்கேன். ஒரு பத்து நாட்களுக்கு வெளியூர் பயணம் போரேன். ஸோ ஆப்ரிக்க பயணத்துக்கு 10- நாட்கள் லீவு விடரேன். பிப்ரவரி 2-ம் தேதி மறுபடியும் பயணம் கண்டின்யூ பன்ரேன். மறக்காம எல்லாரும் வந்து ஜாயின் பண்ணிக்குங்க.



 5- நிமிஷ ட்ரைவிங்க்லயே ஆபீஸ் வந்தது. மெயின் முந்திரிபருப்பு ஏற்றுமதி   செய்து வருகிரார்கள்.. மாப்பிள்ளை அங்கே ஜெனரல்மேனேஜராக இருந்தார். அவரின் பி.ஏ. ஒருமலையாளிப்பையன். இன்னொருவர் ஒரு சர்தார்ஜி. இவா மூவர்மட்டுமே இண்டியன்ஸ். பாக்கி ஒர்க்கர்ஸ், போர்மென்,சூப்பர்வைசர்ஸ் செக்யூரிட்டி எல்லாம் ஆப்ரிக்கர்கள்தான். முந்திரி விளைச்சல் அமோகமா இருக்கு அதைக்கொண்டுவந்து சுத்தம் செய்து தோல் நீக்கி பெரிய பெரிய பாய்லர்மாதிரி கண்டெய்னர்களில் பொன்கலரில் ஃப்ரை பண்ணி அரைக்கிலோ, ஒருகிலோ பாக்கெட்டுகள் பண்ணி பேக் பண்ணி வெளி நாடுகளுக்கு அனுப்புகிரார்கள். ஒவ்வொருபகுதியாக சுற்றிப்பார்த்தோம். நாம சாப்பிடும் ரோஸ்டெட் கேஷு நட் படிப்படியா எப்படி தயாராகிரதுன்னு படிப்படியாக பார்த்தோம்.

Monday, January 16, 2012

கிலிபி 7 (ஆப்ரிக்கா)

மாப்பிள்ளை 2-மணிக்கு லஞ்சுக்குவந்தார். ஆபீஸ்போக தனி கார், வீட்டு உபயோகத்துக்கு தனி கார் என்று ஷெட்டில் இரண்டு கார் இருந்தது. சூடாக சுவையாக லஞ்ச். மூவரும் சேர்ந்து உக்காந்து பேசிக்கொண்டே சாப்பிட்டோம். மாப்பிள்ளை 3- மணிக்கு கிளம்பி திரும்பவும் ஆபீஸ்போனார். என் ரூம் போய் பெட்டிலேந்து துணிமணில்லாம் எடுத்து பீரோவில் அடுக்கி வைத்தேன். ஃப்ளைட் ட்ராவலில் இவ்வள்வு கிலோதான் லக்கேஜ் கொண்டுபோலாம்னு ஒரு கட்டுப்பாடு இருக்கே. எந்துணிமணி கொஞ்சமாதான் எடுத்து வெந்தேன் பாக்கி பூரா தமிழ் புக்ஸ்தான். இங்க தமிழ் புக்ஸ் கிடைக்காதுன்னு தெரியும் 2, 3  மாசத்துக்கு படிக்க தேவையான மாசாந்திர, வாராந்திர புக்ஸ் நாவல்ஸ் என்று15- கிலோவுக்குமேல கொண்டு வந்தேன். சாப்பிடாமகூட 4- நாள் இருந்துடுவேன். புக் படிக்காம ஒரு நாள் கூட இருக்க முடியாது. மாப்பிள்ளையும் நிரையா புக் படிக்கும் பழக்கம் உள்;ளவர்தான் ஆனா எல்லாம் இங்லீஷ் புக்ஸ்.  எனக்கு தமிழ் புக் படிக்கும்போது கிடைக்கும் ஆனந்த அனுபவம் வேர பாஷை புக் படிக்கும் போது கிடைக்காது.ஆனாலும் எல்லாமும் படிப்பேன் அவா வீட்லயும் டைனிங்க் ரூமில் பெரிய ஷெல்ப் நிறைய லைப்ரரி போல நிறைய இங்க்லீஷ் புக்ஸ் இருந்தது, நான் கொண்டு வந்த புக்ஸையும் அங்கே அடுக்கி வைத்தேன்.

Friday, January 13, 2012

கிலிபி 6( ஆப்ரிக்கா)

 காலேல வெளிச்சம் முகத்துல விழுந்ததும் முழிப்பு வந்தது. டைம் பாத்தா 8- மணி. ஏ அப்பாடி இவ்வளவு நேரமா தூங்கி இருக்கேன் அவ்வளவு அலுப்பு இருந்திருக்கு. அப்பத்தான் என் ரூமையே வெளிச்சத்தில் நல்லா பார்த்தேன். நல்ல விசாலமான ரூம். சுத்தம்னா சுத்தம் படு சுத்தம். பெரிய ஜன்னல் அதில் அழிக்கம்பி வலைக்கம்பி எல்லாம் அடிது கண்ணாடிகதவும் இருந்தது. நல்ல பாதுகாப்பான ரூம். கண்ணாடி ஜன்னல் வழியேதான் வெளிச்சம் உள்ளே வந்தது. கனத்த ஸ்க்ரீன் துணியும் போட்டிருந்தா. வெளில வந்தேன் பெரிசு பெரிசா 4- பெட்ரூம் வரிசையா, வெளில நீள்மான காரிடார். காரிடாரில் பெரிய

Wednesday, January 11, 2012

கி ல்பி 5 (ஆப்ரிக்கா)

என் பெண் இருக்கும் இடம் ‘கிலிஃபி’ என்ற ஒரு மாவட்ட தலை  நகரம். அது கென்யாவில் கோஸ்டல் ஏரியாவில் இருக்கிறது. அங்கு போய்சேர ‘மொம்பாஸா’ என்ற இடத்துக்கு ‘லோக்கல் ஃப்ளைட்டில்’ போகணும். ‘மொம்பாஸா’விலுருந்து கிலிஃபி ரோடு வழியாக போக வேண்டும். 


Monday, January 9, 2012

கில்பி 4 ( ஆப்ரிக்கா)

 எல்லாருக்கும் ஒரு பெரிய பௌச் கொடுத்தா. அதுக்குள்ள குட்டி குட்டி ப்ளாஸ்டிக் டப்பாக்களில் விதவிதமாக பெர்ஃப்யூம், வாஸ்லின் பேஸ்ட், பிரெஷ் சீப்பு கண்ணாடி, ட்ரெசில்தூசிதட்ட ஒரு பிரெஷ் என்று என்னல்லாமோ இருந்தது.  திரும்ப புக் படிச்சு பாட்டுக்கேட்டுண்டு டைம் பாஸ். 1.30-க்கு லஞ்ச். முதல்ல மெனு கார்ட் தந்தா, வெஜ், நான் வெஜ் எல்லாம் லிஸ்ட்ல இருந்தது.


Friday, January 6, 2012

கில்பி 3(ஆப்ரிக்கா)

 எகானமிக் க்ளாஸ்லேந்து எக்சிக்யூடிவ் க்ளாஸ் கூட்டிண்டுபோனான். அங்க மொத்தமே 18- ஸீட்
 தான் இருந்தது. விண்டோபக்கம் ரெண்டு, ரெண்டு, நடுவிலயும் ரெண்டு சீட் தான். ஒரு சீட்டுக்
 கும் அடுத்தசீட்டுக்கும் நல்ல இடை வெளியும் இருந்தது. நடுவில் இருந்த சீட்களில் ரெண்டு
 சீட் காலியா இருந்தது. என்னை அங்கே உக்காரச்சொன்னான். எனக்கு ஒன்னுமே புரியல்லே.
  ஏன் என்னை இங்க உக்காரச்சொல்ரேன்னு  கேட்டேன். எங்களுக்கு மேலிடத்திலேந்து ஆர்டர்
 இப்பதான் வந்தது. உங்க பேரு, அடையாளம், உங்க சீட் நம்பர் எல்லாம் சொல்லி உங்களை
 எக்சிக்யூடிவ் க்ளாசில் உக்காரவைத்து நல்லா கவனிக்க சொன்னாங்க. நீங்க பெரிய வி. ஐ. பி. யா
  இருக்கணும்னு நினைக்கிரோம். நல்லா ரெண்டு சீட்டிலும் காலை நீட்டிண்டு சவுரியமா உக்காருங்க.
  வேணும்னா படுத்துண்டே கூட வரலாம்னுல்லாம் சொன்னான். அப்பவும் எனக்கு நம்ப முடியல்லே.


Wednesday, January 4, 2012

கில்பி (ஆப்ரிக்கா) 2

காபில்லாம் குடிச்சு இன்னும் சில ஃப்ரெண்ட்ஸ்களை மீட் பண்ணினோம். அதில் ஒருவர் என்னிடம் ஆண்டி ஆப்ரிக்கா ல நீங்க இறங்கினதுமே என்ஃப்ரெண்ட் வந்து உங்களை எந்தபிரச்சனையும் இல்லாம வெளில கூட்டிண்டுபோவான்  நான் போன்பண்ணி அவனுக்கு விவரம் சொல்லிட்டேன். வேர யாரு கூப்பிட்டாலும் அவங்க கூட போகாதீங்கன்னு சொன்னான்.அவன் பேரு ராஜேஷ். ட்ராவல் எஞ்சாய் பண்ணுங்க ஹேப்பி ஜர்னி சொன்னான்.







 அவன் கேபின் உள்ளே கூட்டிண்டு போய் எல்லாம் சுற்றிக்காட்டினான். என் பெண் அம்மா டயம் ஆச்சு செக்யூரிட்டி செக்கின்னுக்கு போலாம் வான்னு. உள்ளே கூட்டிப்போனா. நம்மை நம் ஹேன்ட் பேக்கை எல்லாம் செக் பண்ணி உள்ளே அனுப்பினா. பெண்ணும் கூடவே இருந்ததால நான் எந்தவித டென்ஷனும் இல்லாம ஏர் போர்ட்டை ரசனை யுடன் சுத்திப்பார்த்தேன்.அண்டர் க்ரௌண்ட் ஃப்ளோரில் 11-ம் நம்பர்கேட்டில் ஏர் இண்டியா ஃப்ளைட் ரெடியாக இருந்தது. என் பெண் அதுவரையும் கூடவே இருந்தா. நான்ஃப்ளைட்டுக்குள் போனதும் அவள் கிளம்பி போனா.

Monday, January 2, 2012

கிலிபி (ஆப்பிரிக்கா.) 1

சில வருடங்கள் முன்பு ஆப்பிரிக்கா போய்வந்தேன். அப்போ நான் ப்ளாக் எழுதுவேன் என்றோ அந்த அனுபவங்களை எல்லாருடனும் பகிர்ந்து கொள்வேன் என்றோ நினைத்ததே இல்லே.ஈஸ்ட் ஆப்ப்ரிக்காவில் உள்ள கிலிபி என்கிர இடத்தில் என் பெரிய பெண்ணும் மாப்பிள்ளையும் வசித்து வந்தார்கள். நான் பாஸ்போர்ட் வாங்கியதுமே (அது ஒரு பெரிய புராணம்). முதல்ல இங்க வந்துடுன்னு மாப்பிள்ளை டிக்கட்டே எடுத்து அனுப்பிட்டார். பொண் போன் பண்ணீ முதல்ல போயி எல்லோஃபீவர் இஞ்செக்‌ஷன் போட்டுண்டுடுஅதுக்கு அடையாளமா ஒரு மஞ்ச கார்ட் தருவா, நீகொடுத்தபணத்துக்கும் ரசீது தருவா. அதெல்லாம் பத்திரமா பாஸ்போர்ட்கூடவே வச்சுக்கோ. ஆனாதான் ஆப்ப்ரிக்கா உள்ளயே அலவ் பண்ணுவான்னு சொன்னா.மும்பயில் இருக்கும் பையனிடம் விவரம் கேட்டுண்டு  கிளம்பறதுக்கு10- நாட்கள் முன்பே ஏர்போர்ட் வெளியே இருக்கும் அந்த இடத்துக்குபோனேன்.அங்க சின்ன ஒரு ரூம்ல ஒரு ஆம்பிளை டாக்டர்!!!!!!!!! ????  இருந்தான். 7, 8, பேர் ஊசி போட்டுக்க காத்துண்டு இருந்தா.

என்னை ஆதரிப்பவர்கள் . .