Google+ Followers

Pages

Friday, April 13, 2012

ரவா லட்டு

 அனைவருக்கும்  நந்தன வருட தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
ஸ்வீட் எடுங்க. கொண்டாடுங்க.
 ரவாலட்டு இன்றைய ஸ்வீட்.

                                                       
  தேவையான பொருட்கள்.
 பாம்பே ரவா-----------------  250-கிராம்.
ஜீனி  --------------------------- 250-கிராம்
 நெய் -------------------------- 150, அல்லது 200- கிராம்.
 முந்திரிபருப்பு ------------   10, அல்லது 15
 ஏலக்காய் ----------------   5
                                                          செய் முறை
 வெறும் கடாயில் ரவயை நன்கு வாசனைவரும் வரை (கோல்டன்ப்ரௌன்)
வறுக்கவும். ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.
 நன்கு ஆறியதும் ரவையை தனியாக மிக்சியில் பொடிக்கவும்

 அடுத்து ஜீனியையும் பொடிக்கவும்
 பொடித்தரவை, ஜீனியை நன்கு கலந்துவைக்கவும்.
        ஏலக்காயை பொடிசெய்து மேலாக போடவும். முந்திரியை சிறிதளவு
                                     
 நெய்யில் சிவக்க வறுத்து அதையும் சேர்க்கவும். நெய்யை நன்கு சூடுபண்ணி  ரவை, ஜீனிக்கலவையில்  பரவலாக சுழற்றி ஊற்றவும். எல்லாவற்றையும் கரண்டி
      காம்பால் நன்கு கலந்து விடவும். பிறகு கை பொறுக்கும் சூட்டில்  நிதான அளவில் உருண்டைகளாக பிடிக்கவும். நெய்குறைவாக இருந்தால் உருண்டை பிடிக்கவராமல் உதிர்ந்துபோகும். கரெக்டான அளவில் நெய் சேர்த்தால்தான் சுலபமாக உருண்டைகள் பிடிக்கவரும். அதில் மட்டும் கொஞ்சம் கவனம்
                                                                                                                                                                          தேவை. இதில் பாகுபக்குவம் சரியாக வரனுமே என்கிர கவனம் ஏதும் கிடையாது. இந்த ரவா லட்டு மைசூர் பாகு இதெல்லாம் நல்ல காற்றுபுகாத டப்பாக்களில் போட்டு வைத்தால் ஒருமாதம் வரையில் சுவையும் மணமும் மாறாமல் அப்படியே ப்ரெஷாக இருக்கும்.இந்த அளவுக்கு நிதான அளவில் 40-முதல் 50- லட்டுக்கள் வரை வரும்

44 comments:

நம்பள்கி said...

பார்த்தாலே ஜிவ்வுன்னு இருக்கு. எதுக்கும், நான் தயிர் வடை செய்வது எப்படி என்று எழுதி இருக்கிறேன். அதைப் பற்றி, உங்கள் மதிப்பீடு!

Ramani said...

பார்க்கவே நாவில் நீர் ஊறுகிறது
பகிர்வுக்கு நன்றி

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Ramani said...

Tha.ma 2

Madhavan Srinivasagopalan said...

என்னோட அட்ரஸ் தேறேன்.. குரியர்ல அனுப்புறீங்களா.. ப்ளீஸ்..?

அமைதிச்சாரல் said...

பார்க்கவே அருமையாயிருக்கு.. இங்கே ரவையிலும் மிக சன்னமான ரகம் ஒண்ணு கிடைக்குமே. அது போட்டுச் செஞ்சா மிக்ஸியில் பொடிக்கத் தேவையில்லை இல்லையா?..

மகேந்திரன் said...

பார்க்கும் போதே உமிழ்நீர் ஊறுகிறது...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

ரவா லட்டு பிரமாதம்.

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

படத்தில் பார்க்கும் போதே நாக்கில் ஜலம் ஊறுகிறது. நல்ல பதிவு. அருமையான செய்முறை விளக்கம்.

பாராட்டுக்கள்.

Avargal Unmaigal said...

புத்தாண்டுக்கு லட்டு தந்த அம்மாவிற்கு எனது இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்

ராஜி said...

ரவா லட்டு என் மகளுக்கு ரொம்ப பிடிக்கும் செஞ்சு குடுத்து அசத்திடுறேன். மிக்க நன்றி அம்மா

ராஜி said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
எனது இனிய தமிழ் புதுவருட நல் வாழ்த்துக்கள் அம்மா.

கணேஷ் said...

எங்க வூட்ல ஒரு தடவை ரவா லட்டு செய்யறேன்னு ‌சொல்லி ஸ்வீட் ரவைத் தூள் தான் சாப்பிட்டோம். இந்த செய்முறைப் படி செய்யச் சொல்லிப் பாக்கறேன். உங்ளுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Mahi said...

ரவாலட்டு அருமையா இருக்கும்மா! உங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

yathan Raj said...

Valthukkal

வெங்கட் நாகராஜ் said...

செய்வது சுலபம்.....

சாப்பிடுவது அதைவிட சுலபம்... :)

எனக்கு மிகவும் பிடித்த ரவாலாடு பகிர்வுக்கு மிக்க நன்றிம்மா.

Lakshmi said...

நம்பள்கி வாங்க வருகைக்கு நன்றி. உங்க பக்கமும் வந்து தயிர்வடை ருசிச்சு பின்னூட்டமும் போட்டேன் பாத்தீங்களா?

Lakshmi said...

ரமணி சார் தொடர் வருகைக்கும் தொடர் ஓட்டுக்கும் நன்றி

Lakshmi said...

மாதவன் கூரியர்லதானே அனுப்பிட்டா போச்சு. பில் பே பண்ணி டெலிவரி எடுத்துக்கோங்க ஓகேவா?

Lakshmi said...

சாந்தி ஜாடா ரவா ஆனாலும், பாரிக் ரவா ஆனாலும் மிக்சில ஒரு சுத்து சுத்தினாதான் உருண்டை பிடிக்க வரும். பாரிக் ரவா ஒரே ஒரு சுத்து சுத்தினா போதும். ரவை ரவையா இருந்தா உருட்ட வராது கொஞ்ச மாவாக இருந்தா தான் பிடிக்கவரும். நானும் பாரிக் ரவாதான் யூஸ் பண்ணி இருக்கேன்.

Lakshmi said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோமதி அரசு வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

அவர்கள் உண்மைகள் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராஜி வருகைக்கு நன்றி அவசியம் செய்து பாருங்க.

Lakshmi said...

கணேஷ் நீங்கதானே உங்க வீட்டு கிச்சன் இன் சார்ஜ் நீங்க ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப நல்லா வரும். வருகைக்கு நன்றி

Lakshmi said...

மஹி வருகைக்கு நன்றி

Lakshmi said...

யதன்ராஜ் நன்றி

Lakshmi said...

வெங்கட் உங்களுக்கும் பிடிக்குமா ஆதியை செய்யச்சொல்லி சாப்பிட்டு பாருங்க நல்லா இருக்கும்.

மனோ சாமிநாதன் said...

எல்லோரும் மறந்து போன பழ‌மையான பலகாரத்தை நினைவூட்டியிருக்கிறீர்கள்!
உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Lakshmi said...

ம்னோ மேடம் வருகைக்கு நன்றி

ஸாதிகா said...

பார்த்ததுமே எடுத்து சாப்படித்தூண்டும் லாடு..!உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் லக்‌ஷ்மிம்மா

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

மாதேவி said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி

Asiya Omar said...

பார்க்கவே சூப்பர் லஷ்மீமா.

Lakshmi said...

ஆஸியா ஓமர் வாங்க. வருகைக்கு நன்றி

துரைடேனியல் said...

ஆஹா...பேஷ்...பேஷ்.... ரொம்ப நன்னாயிருக்கு.

Lakshmi said...

துரை டேனியல் ஹா ஹா தேங்க்யூ

கோவை2தில்லி said...

பார்க்கவே சூப்பரா இருக்கும்மா. எனக்கும் பிடிக்கும். செய்துட்டா போச்சு.

புத்தாண்டு வாழ்த்துகள்.

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

பாச மலர் / Paasa Malar said...

இனிப்புக்கு நன்றி...புத்தாண்டு வாழ்த்துகள்

Lakshmi said...

பாசமலர் வருகைக்கு நன்றி

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

லஷ்மி அக்கா சூப்பரான ரவா லட்டு

அருமை

ஜலீலா

Lakshmi said...

ஜலீலா வாங்க லட்டு நல்லா இருந்துச்சா? நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .