Google+ Followers

Pages

Sunday, February 27, 2011

மிஸ்டர் ” எக்ஸ்” ஜோக்ஸ்.

இன்னிக்கு என்கிட்ட மாட்டினவங்க மிஸ்டர் எக்ஸ்.
(ஐயோ பாவம்.!!!!!!!!!!!).

 மிஸ்டர் எக்ஸுக்கு டீ குடிக்க ரொம்பவே பிடிக்கும் ஆனா எப்படி டீ போடனும்னு
தெரியாது, ஒரு ஹோட்டலில் டீ குடிக்கப்போனார்.கிச்சன் வரை போயி டீ
எப்படி போடராங்கன்னு நல்லா கவனிச்சுப்பார்த்து மனதில் பதிய வைத்துக்கொண்டார். சரி, இப்ப நாமே வீட்ல நாமே டீ போட்டுக்கலாம் என்று
கடையில்போயி ஜீனி,டீத்தூள்,பால், ஸ்டவ் எல்லாம் வாங்கிண்டு வீடு வந்தார்.
ரொம்ப குஷியாக அடுப்பை பததவைத்தார். அப்பரம்தான் அவருக்கு நினைவுக்கு
 வந்தது டீ போட பாத்திரமே வாங்கலைனு. சரின்னு ஜீனி, டீத்தூள் பால் எல்லாவற்றையும் ஆ.....ன்னு வாயைத்திறந்துண்டு வாயில் போட்டுக்கொண்டு
ஸ்டவ்வில் உக்காந்துட்டார். டீ கொதிக்கவேண்டாமா?  :))))))))))))))))))))


 மிஸ்டர் எக்ஸின் நண்பர்கள். மூன்றுபேருரொம்பவும் ஏழைகள். ஒரு நாள் கோவில் போயி அவங்க சாமியிடம்சொல்லிட்டு ஏ சாமி
இன்னிக்கு எங்களுக்கு சாப்பிட ஒன்னுமே கிடைக்கலை.   நீங்கதான் ஒரு வழி
காட்டனும் என்று கண் மூடி பிரார்த்தனை செய்தார்கள்.அப்போது ஒரு பெரியவர்
வந்து சாமிக்கு முன்பு பெரிய பேப்பர் ப்ளேட் வைத்து அது நிறைய தின் பண்டங்கள் வைத்து சாமிக்கு கைகாட்டிட்டு போனார்.
 கோவிலுக்குபோனால் யாரானும் அன்னதானம் ஏதானும் பண்ணுவாங்க
என்றுதான் அந்தபையன்கள் இங்கு வந்து கண்மூடி தியானித்தார்கள்.
அவர்கள் நம்பிககை வீண்போகலை யாரோவந்து படையல் செய்து விட்டு போனார், அ ந் த பசங்க கண்முழித்துப்பார்க்கும்போது அவர்கள் எதிரில் நிறைய
தின்பண்டங்கள் நிரம்பிய ப்ளேட்  பார்த்ததும் அவர்களுக்கு ஒரே குஷி ஆச்சு.ஏய் நம்ம சாமி எவ்வளவு நல்லவர். நாம பசிக்குதுன்னு கேட்டோட்னே நமக்கு
கொடுத்திட்டார். நாம இதை மூணு பங்காக்கி மூனுபேரும் சாப்பிடலாம்னுஒரு
பையன் சொன்னதும், அடுத்தவன், ஏய் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?
 நாம கேட்டதும் சாமி கொடுத்து இல்லியா அப்ப நாம மூணு பேருமே அவங்கவங்க பங்கிலேந்து சாமிக்கு கொஞ்சம் கொடுக்கனும்டா. என்ரான்.
 ஆமாடா நீ சொல்ரது சரிதான்னு  முதல்பையன் தரையில் சாக்பீசால் ஒரு பெரிய வட்டம் வரைந்தான். இப்போ நான் என்பங்கு சாப்பாட்டை மேலதூக்கி
 வீசுவேன் கீழவிழும்போது வட்டத்துக்குள்ள விழுரது நான் சாப்பிடுவேன், வட்டத்து வெளில விழுரதெல்லாம் சாமிக்கு, என்ரான். அடுத்தவனும், ஓ, கே, இப்பாவன் ஒரு சின்ன வட்டம் வரைந்து நானும் என்பங்கு சாப்பாட்டை மேல வீசுவேன் இந்த வட்டதுக்குள்ள விழுரது சாமிக்கு வட்டத்துக்கு வெளில விழுரது
எனக்கு என்ரான். மூணாம் பையன் எந்த வட்டமும்வரையலை. அவன் சொல்ரான் இப்ப என் பங்கை மேல வீசுவேன். மேலதங்கரது எல்லாமே சாமிக்கு கீழ விழுரதெல்லாம்
 எனக்கு என்ரான். எல்லா பசங்களும் நல்லா விவரமானவங்கதான்போல.

39 comments:

எல் கே said...

நம் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு விஷயம் சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன். சர்தார்கள் பொதுவாக தேசப்பற்று மிக்கவர்கள் . அவர்களை மட்டம் தட்டி முட்டாள்களாக காட்ட ஆங்கிலேயன் ஆரம்பித்தது இந்த சர்தார் ஜோக்குகள். இவை இன்னும் தேவையா ?? சிந்தியுங்கள்

Lakshmi said...

sorry karthi யாரையும் முட்டாலாக்கும் எண்ணம் இல்லை. என்பசங்க ஸ்கூல் படிக்கும் சமயம் அவர்களுக்குள் சொல்லி சிரித்த ஜோக் இதெல்லாம் நான் தூசி தட்டினேன்.
ஆனால் கூட இனி தவிர்த்து விடுவேன்.
யோசனைக்கு நன்றி.

எல் கே said...

தவறாக ஏதாவது சொல்லி இருந்தால் மன்னித்துக் கொள்ளவும் :)

asiya omar said...

மூன்றாவது பையன் ரொம்ப விபரம் லஷ்மிம்மா.

சி.கருணாகரசு said...

நகைச்சுவை நல்லாதான் இருக்குங்க...

கார்த்திக் சொல்வதையும் கேட்டுகொள்வோம்....

அந்த நபர்களை சர்தார்ஜீ யாக காட்டாமல் ஒரு வெள்ளைக்காரனாகவோ பாகிஸ்தானியாகவோ மாற்றிவிடலாம்...
இது சரியா?

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா எலி வேட்டை தொடங்கி விட்டது போல… எலியை வெற்றி கொண்ட புலி ஆனாரா கோவிந்தன்? பார்க்கலாம் அடுத்த பகிர்வில் :)

Lakshmi said...

தவரே இல்லை கார்த்தி, எல்லாருக்குமே எல்லா விஷயங்களும் தெரியும்னு சொல்ல முடியாது. சுட்டிக்காட்டும்போதுதானே தெரிய வருது, நா, தப்பாவே எடுத்துக்கலை. ஓ, கே, வா? நா ரொம்ப வருஷமாவே
நார்த்பக்கம் இருப்பதால அவங்க நம்மை எப்படியெல்லாம் கேலி பேசுவாங்கன்னும் நன்கு அறிவேன்.சீரியசா எடுத்துக்காம டேக் இட் ஈசி யாதான் பாக்கனும்.

Lakshmi said...

ஆசியா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

சி.கருணாகரசு, ஆமாங்க நீங்க சொல்வதுபோல அவங்களை மிஸ்டர் எக்ஸா சொல்லியிருந்தா பிரச்சினையே இல்லைதான்.

Lakshmi said...

வெங்கட் நீங்க சொல்வது ஏதுமே புரியலை. வேர எங்கியானும் போட வேண்டிய கமெண்ட் இங்க போட்டீங்களா?!!!!!!!!!!!!!

வெங்கட் நாகராஜ் said...

Copy Paste செய்ததில் ஏதோ பிரச்சனை. முதலில் திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்களின் பதிவில் போட்ட கமெண்டே வந்துடுத்து :)
இது தான் உங்கள் பகிர்விற்கான கருத்து!

கார்த்திக் சொன்னது போல எல்லோரும் சர்தார்ஜிகளை முட்டாளாகவே சித்தரிக்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. அவர்கள் திறமைசாலிகள், உழைப்பாளிகள் – சர்தார்ஜிகளில் ஒரு பிச்சைக்காரரைக் கூட பார்க்க முடியாது. அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம் அதனால் தான் அவர்கள் இவை எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கின்றனர் :)

இராஜராஜேஸ்வரி said...

ஜோக்கென்றால் நன்றாகத்தான் இருக்கிறது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜோக்ஸ் நல்லாருக்கு. சர்தார்ஜின்னு போடுறதுல என்ன இருக்கு? சும்மா நகைச்சுவைக்காகத்தானே? அவங்க மதராசி ஜோக்ஸ் சொல்றது இல்லையா? எல்லா ஊர்கள்லேயும் இருக்கறதுதானே இது.......!

ஸாதிகா said...

முதல் ஜோக் வாய் விட்டு சிரித்தேன்.சர்தார்களை மட்டம் தட்டி வரும் ஜோக்குகளை பார்த்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நான் யோசித்த்துண்டு.சகோ எல் கே சொன்னதைப்போல் இனி பின்[பற்றலாம்

நெல்லி. மூர்த்தி said...

பிரபல நகைச்சுவை எழுத்தாளரும், பத்திரிக்கை ஆசிரியருமான திரு. குஷ்வந்த் சிங் ஒரு சீக்கியரே! அவர் சீக்கியர்களை நக்கலடித்தது போல் இப்போதுள்ளவர்கள் எவரேனும் செய்ய இயலுமா என்பது கேள்விக்குறியே! இருப்பினும், திரு. எல்.கே கூறியது போல வரும் காலத்தில் தாங்கள் பின்னூட்டத்தில் பதிலளித்தது போல "மிஸ்டர். எக்ஸ்" குறிப்பிடலாம். இத்தவறினை நானும் ஒருமுறை புரிந்துள்ளேன் (சர்தார்ஜி பில்கேட்ஸுக்கு எழுதிய கடிதம் - http://nellimoorthy.blogspot.com/2010/12/blog-post_11.html ) சர்தார்ஜி என்றாலே சிரிப்பு என்ற பொருள் கொண்டு வாசர்கர்கள் அணுகுவதாலே என்னவோ நம்மவர்களும் அப்பெயரினை பாடாய் படுத்துகின்றோம்.

ஜெய்லானி said...

ஏற்கனவே படிச்ச ஜோக்குகள் இருந்தாலும் பழைய நினைவுகளை மீட்டி விட்டது உங்கள் இந்த பதிவு :-)

கோவை2தில்லி said...

நல்லாயிருக்கும்மா.

Lakshmi said...

வெங்கட், நீங்கஎல்லாருமே சொல்வதால பதிவில் சிறு மாற்றம் செய்துவிடலாம்னு நினைக்கிரேன்.

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

பன்னிக்குட்டி ராமசாமி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நானும் யாரையும்
நக்கல் பண்ணனும்னு நினைச்சு எழுதலை. அவங்க நம்ம சௌத் இண்டியன்சை என்னமாதிரி கேலி செய்வார்கள் என்று நானே பாத்திருக்கேன். ஏன் எனக்கே சர்தார்ஜி ஃப்ரெண்ட் 5 பேரு இருக்காங்க. அவங்க
நம்மை சாம்பார்னு சொல்வாங்க, நாங்க அவங்களை சப்பாத்தின்னு கேலி செய்வோம். இருவருமே சீரியசா எடுத்துக்கவே மாட்டோம்.ஆனா பொதுவா ஜோக்குன்னா,பின்னாடி சர்தார்ஜின்னு
ஒட்டிக்குதே.

Lakshmi said...

ஸாதிகா எல்லார் எண்ணங்களுக்கும் மதிப்புகொடுக்கனும் இல்லியா. கொஞ்சமா மாத்திட்டேன். பதிவு எழுதும்போது நாகரீகம் கடைப்பிடிக்கனும். நான் ஃபுல் சரண்டர்.

Lakshmi said...

நெல்லி மூர்த்தி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. குஷ்வந்த்ஜோக் புக்கே கைவசம் இருக்கு. அவரைப்போல யாருமே அவங்களைப்பற்றி ஜோக் அடிக்கவே முடியாது. அவங்க ஒன்னுக்குள்ள ஒன்னு. அதனால வித்யாசமா எடுக்க மாட்டாங்கதான்.

Lakshmi said...

ஜெய்லானி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

கார்த்தி, கொஞ்சம் மாறுதல் பண்ணீட்டேன். இப்ப ஓ, கே, வா?
நன்றி.

அந்நியன் 2 said...

நாட்டின் பிரதமர்,முதல்வர்,அரசியல்வாதிகள்,நீதியரசர்கள்,மருத்துவர்கள்,வக்கீல்கள்,மற்றும் போலீஸ் சார் இவர்களையெல்லாம் வைத்து நகைச் சுவை எழுதும்போது இந்த சர்தார் ஜீக்களைப் பற்றி எழுதுவதனால் தப்பு இல்லை என்றே தோன்றுகிறது.

சும்மா கொஞ்சம் டயம் பாஸ் அவ்வளவுதான்.

எல்லாமே நன்றாக இருந்ததுமா வாழ்த்துக்கள்

Lakshmi said...

அந்நியன்2 வருகைக்கும்கருத்துக்கும் நன்றிங்க. எதுக்கு வம்புனு கொஞ்சம் மாத்தம் செய்து போட்டுட்டேன்

shabi said...

sami joke UNNIDATTHIL ENNAI KODUTTHEN PADATHI KARTHIKUM /RAMESH KANNAVUM SEYVARGAL KOVILIL

Lakshmi said...

shabi வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. நான் தமிழ் படம் பார்க்கவே
சந்தர்ப்பம் அமைவதில்லை. நீங்க சொன்ன இந்தபடமும் பாக்கலை.

Nagasubramanian said...

நல்லா இருந்ததுங்க

தவறு said...

வெரிகுட்...

Lakshmi said...

நாகசுப்ரமனியம், வருகைக்கு நன்றி.

Lakshmi said...

நாகசுப்ரமனியம், வருகைக்கு நன்றி.

Lakshmi said...

தவறு, வருகைக்கு நன்றி. ஆமா, எதுக்கு வெரி குட் சொன்னீங்க?

விக்கி உலகம் said...

ஜோக்ஸ் நல்லாருக்கு

Lakshmi said...

விக்கி உலகம் வருகைக்கு நன்றி.

அன்னு said...

//மிஸ்டர் எக்ஸுக்கு டீ குடிக்க ரொம்பவே பிடிக்கும் ஆனா எப்படி டீ போடனும்னு
தெரியாது, ஒரு ஹோட்டலில் டீ குடிக்கப்போனார்.கிச்சன் வரை போயி டீ
எப்படி போடராங்கன்னு நல்லா கவனிச்சுப்பார்த்து மனதில் பதிய வைத்துக்கொண்டார். சரி, இப்ப நாமே வீட்ல நாமே டீ போட்டுக்கலாம் என்று
கடையில்போயி ஜீனி,டீத்தூள்,பால், ஸ்டவ் எல்லாம் வாங்கிண்டு வீடு வந்தார்.
ரொம்ப குஷியாக அடுப்பை பததவைத்தார். அப்பரம்தான் அவருக்கு நினைவுக்கு
வந்தது டீ போட பாத்திரமே வாங்கலைனு. சரின்னு ஜீனி, டீத்தூள் பால் எல்லாவற்றையும் ஆ.....ன்னு வாயைத்திறந்துண்டு வாயில் போட்டுக்கொண்டு
ஸ்டவ்வில் உக்காந்துட்டார். டீ கொதிக்கவேண்டாமா?//

காமெடின்னாலும் பாவமம்மா அவரு :(

டக்கால்டி said...

வணக்கம் அம்மா ..சற்று தாமத வருகை...நகைச்சுவை அருமை...சிங்கார வேலன் படத்துல கவுண்டமணி "என்னாங்கடா உங்க பைவ் ஸ்டார் ஹோட்டலு" என்ற வசனம் ஞாபகத்துக்கு வருகிறது...

Lakshmi said...

அன்னு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

Lakshmi said...

டக்கல்டி, வருகைக்கு நன்றி.

என்னை ஆதரிப்பவர்கள் . .