Google+ Followers

Pages

Monday, April 9, 2012

மைசூர் பாக்

ஒரு வருடத்துக்கும் மேலேயே பதிவு எழுதிண்டு இருக்கேன். இதுவரை சமையல் குறிப்புன்னு எதுவுமே போட்டதில்லே. சில பேரு அம்மா உங்க வயசுக்கு நிறையா சமையல் அனுபவம் இருக்குமே. பாரம்பரிய சமையல், பழங்கால சமையல் முறைகள் இந்தக்கால தலை முறையினருக்கும் சொல்லுங்கன்னு  மெயில்ல  கேட்டிருக்காங்க. இந்தக்கால குழந்தைகளோ பீஸா, பர்கர் நூடுல்ஸ் சுவைக்கே பழகி இருக்காங்க. எதனை பேருக்கு இதில் ஆர்வம் இருக்கும்னு தெரியல்லே. கேட்ட அன்பு உள்ளங்களுக்காக நம்ம எல்லாருக்க்ம் தெரிந்த ஒர்   ஸ்வீட்டில் ஆரம்பிச்சிருக்கேன். எததனை பேருக்கு பிடிக்கும்னும் தெரியல்லே. வீட்டுக்கு ஒரு ஷுகர் பேஷண்ட் இருக்காங்களே.//?
 வரும் தமிழ் வருடப்பிறப்பன்று இந்தஸ்வீட் பண்ணி பாருங்க.
 தேவையான  பொருட்கள்.

கடலைமாவு ------- 200 கிராம்
ஜீனி-----------              600கிராம்
   நெய்------------- 600 கிராம்
 பால்----------- ஒரு கரண்டி
 கடலை மாவு ஒரு அளவுக்கு 3- அளவு ஜீனியும் நெய்யும் சேர்க்கனும்.
வாயகன்ற கடாயை அடுப்பில் வைத்து ஒருஸ்பூன் நெய் விட்டு கடலை மாவைப்போட்டு மிதமான தீயில் வாசனை வரும்படி வறுக்கவும். சிவக்கவேனாம்.
                                 
 அதை ஒரு தாம்பாளத்தில் கொட்டி நன்கு ஆறியதும் நைஸ் சல்லடையில் சலிக்கவும். வறுக்கும்போது சிறுது கட்டி தட்டி இருக்கும் அதனால சலிக்கனம்.
அந்தக்கடாயை நன்கு அலம்பி அதில் ஜீனியைப்போட்டு இரண்டு பங்கு தண்ணீர்
                                                
 ஊற்றி பாகு தயார் செய்யவும். கைவி டாம கிளறவும்.அப்போதான் ஜீனி அடிப்பிடிக்காம இருக்கும் .ஜீனி நன்கு கரைந்ததும் ஒரு கரண்டி பால் ஊற்றி கொதிக்க விடவும். இப்போ ஜீனியில் உள்ள அழுக்கு மேலாக நுரைத்து வரும்.
இந்த அழுக்கை ஒரு கரண்டியால் எடுத்துவிடவும். 
ஒரு கம்பி பாகு பதம் வந்ததும், அதாவது பாகை கட்டை விரலிலும் ஆள்காட்டி விரலிலும் தொட்டு விரலை மெல்ல விலக்கினால் மெல்லிசாக நூல் போல ஒரு கம்பி போல வரும்.  இது ஒருகம்பி பாகு பதம்னு சொல்வா.
 இந்த பக்குவத்தில் சலித்துவைத்திருக்கும் கடலை மாவை மெதுவாக பரவலாக தூவிக்கொண்டே கை விடாமல் கிளறவும்.

    பாகும் மாவும் சேர்ந்து கொதிக்க ஆரம்பிக்கும் சமயம் இளக்கி வைத்திருக்கும் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக்கொண்டே கை விடாமல் கிளறவும். சுமாராக அரைமணி நேரமாவது கை விடாம கிளற வேண்டி இருக்கும். சரியான பதத்திற்கு வரும்போது சோப்பு நுரை போல பூத்து சட்டியில் ஒட்டாமல் வரும்.

 இந்த பக்குவத்தில் நெய் தடவிவிய பெரிய தாம்பாளத்தில் கொட்டவும். நன்கு ஆறிய பிறகு டைமண்ட் ஷேப்பில் கட் செய்யவும். கிருஷ்ணா மைசூர் பாகுபோல மிருதுவாக சுவையாக இருக்கும். இந்த அளவுக்கு  நிதான சைசில் 50- துண்டுகள் முதல் 60- துண்டுகள் வரும்.
                                                                               
                          
இதே மைசூர்பாக ஒருதரம் மைக்ரோவேவிலும் பண்ணி பார்த்தேன். அதற்கு எண்ணீ 5- நிமிடங்கள் தான் ஆச்சு. பொருட்களும் கம்மி தான் தேவைப்பட்டது. ஒருபங்கு கடலை மாவுக்கு ஒன்னரை பங்கு ஜீனியும், ஒன்னரைப்பங்கு  நெய்யுமே போது மானதாக இருந்தது.  ஜீனியை மட்டும் மிக்சியில் பொடித்துக்கொண்டு எல்லா சாமானையும் ஒன்னுபோல சேர்த்து கலக்கி மைக்ரோ ப்ரூப் பாத்திரத்தில் போட்டு  ஹை பவரில் 5- நிமிடங்களுக்கு ஸெட் பண்ணி உள்ளே வைக்கனும். ஒவ்வொரு 30- செகண்டுக்கும் ஒருதரம் வெளியே எடுத்து கிளறி விட்டு மறுபடியும் வைக்கனும். சுமாராக 4- நிமிடத்துக்குள்ளேயே சரியான பக்குவத்தில்      வந்து விடுகிரது. ஆனா ஒரு விஷயம். ஒரிஜினல்  டேஸ்ட்பிரியர்களுக்கு இது அவ்வளவாக திருப்தி தருவதில்லை. ஆனால் கூட இப்படி பண்ணுவதில் உள்ள டேஸ்டும் நல்லாதான் இருக்கு.   நேரமும் மிச்சம் பொருட்களும் கம்மி தான் தேவைப்படுது.

45 comments:

Abdul Basith said...

முதல் சமையல் குறிப்புக்கு நன்றிமா! கடையில் ஸ்பெஷல் மைசூர் பாகு என்று இருக்குமே? அது தான் நான் விரும்பி சப்பிடுவேன்.

:) :) :)

கணேஷ் said...

படிக்கறப்ப டேஸ்ட்டியா இருககும்னு தோணுது. செஞ்சு பாக்கறேன்... சரியா வரலைன்னா நேரா உங்க வூட்டுக்கு வந்துடுவே சரியா...

raji said...

ஆரம்பம் அருமையானதொரு ஸ்வீட்டோடவா? ஆஹா!

பகிர்விற்கு நன்றி

கோமதி அரசு said...

சித்திரை வருடப்பிற்ப்புக்கு மைசூர் பாகுதான் . அருமையாக செய்முறை விளக்கம் சொல்லி இருக்கிறீர்கள்.
உங்களுக்கு என் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் said...

மைசூர்பாக் அருமையா இருக்கு..

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆரம்பமே இனிய மைசூர்பாகிலிருந்து!

நாக்கில் நீர் வரவழைக்கும் பதிவு.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

Asiya Omar said...

மிக அருமை.செய்து பார்க்க வேண்டும்.தொடர்ந்து குறிப்பு தாருங்கள்.சமையல் வலைப்பூ ஒன்று தனியாகவே ஆரம்பிக்கலாமே லஷ்மிமா!உங்க கிட்ட இருந்து நிறைய சைவ ரெசிப்பி கத்துக்க ஆசை.

koodal bala said...

அசத்தலான சமையல் குறிப்பு !

ஸ்ரீராம். said...

ஸ்வீட்டோட ஆரம்பிச்சிருக்கீங்க...எங்கள் வீட்டில் நான்தான் ஸ்பெஷலிஸ்ட்! ஆனால் இறக்கும் பதம் மாறினால் போச்! அதில் கொஞ்சம் குழப்பம் வந்துடும்.

Manimaran said...

சமையல் குறிப்பு அருமை.நான் நிறைய தடவை மைசூர் பாக்கு செய்து பார்த்திருக்கிறேன்.ஒரு தடவை கூட சரியாக வரவில்லை.இதை முயற்சி செய்து பார்க்கிறேன்.

Jaleela Kamal said...

முதல் குறிப்பே அசத்தல் .

எனக்கு நெய் மைசூர் பாக் ரொம்ப பிடிக்கும்

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

. சரியா வரலைன்னா நேரா உங்க வூட்டுக்கு வந்துடுவே சரியா...//கணேஷண்ணா,லக்‌ஷ்மிம்மா ஆத்துக்கு சரியா வராத மைசூர்பாக்கை எடுத்துண்டு போய் என்ன செய்யப்போறேள்?

அமுதா கிருஷ்ணா said...

நீங்க சொல்றது சரிதான்.இப்பொழுதெல்லாம் பசங்க பழைய முறை சமையல்களை கிண்டல் தான் செய்கிறார்கள். மைசூர் பா சூப்பரா வந்திருக்கு.

இராஜராஜேஸ்வரி said...

இனிப்பு பகிர்வுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

கோவை2தில்லி said...

முதல் ரெசிபி இனிப்புடனா. அருமைம்மா.

நானும் அவ்வப்போது செய்து விடுவேன்.

அஸ்மா said...

அருமையா இருக்கு லக்ஷ்மிமா! இனி தொடர்ந்து உங்க ஸ்பெஷல் ஐட்டங்களைக் கொடுங்கள். எதிர்ப்பார்க்கிறேன் :)

ஸாதிகா said...

ஆரம்பமே அட்டகாசமான மைசூர் பாக்குடனா?பலே.மைசூர் பாக் என்றால் பேசாமல் கடையிலேயே வாங்கி விடுவேன்.வீட்டில் மெனக்கெடுவதில்லை.இப்ப உங்கள் குறிப்பைப்பார்த்ததுமே வீட்டில் செய்ய தோன்றுகிறது.

இனி அடுத்தது பிரமாணாள் இல்ல ஸ்பெஷல் ஐடட்ங்கள் எதிர் பார்க்கலாமா?

கே. பி. ஜனா... said...

படங்களுடன் ரெசிபி அழகா இருக்கு. கேட்டுப் பார்க்கணும்...

வெங்கட் நாகராஜ் said...

மைசூர் பாகுடன் ஆரம்பித்திருக்கிறது சமையல்.... நல்லதும்மா.

அம்மா அடிக்கடி செய்வாங்க! ஆதியும் தான்!

ஹேமா said...

அட இவ்ளோதானான்னு இருக்கு.செய்து பாக்கணுமே.ஆனால் சாப்பிட மட்டும் வாயில போட உடனே கரைஞ்சிடும் !

Lakshmi said...

அப்துல் பாசித் உங்களுக்கு பிடித்த அந்தமைசூர் பாகும் இதேதான். வாங்க.

Lakshmi said...

கணேஷ் உங்க வீட்டு கிச்சன் இன் சார்ஜ் நீங்கதானா? சூப்பர். செய்து பாருங்க கண்டிப்பா நல்லா வரும் இல்லைன்னா நாந்தான் இருக்கேனே நேரா கிளம்பி வந்துடுங்க.

Lakshmi said...

ராஜி வருகைக்கு நன்றி.

Lakshmi said...

கோமதி அரசு வருகைக்கு நன்றி உங்களுக்கும் உங்க வீட்டாருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள் மைசூர்பாகு செய்து பாருங்க. ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க.

Lakshmi said...

சாந்தி, வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

ஆஸியா ஓமர் சமையல் குறிப்புக்கு வரவேற்பு எப்படி இருக்குமோன்னு நினைச்சேன் ஆனா நீங்க எல்லாருமே விரும்புரீங்க. அப்பரம் என்னா தூள் கிளப்ப வேண்டியதுதான்.

Lakshmi said...

கூடல் பாலா, வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸ்ரீ ராம் இந்த மைசூர்பாகை ரெண்டு மூனு விதமாக செய்யலாம். இந்தமுறைதான் எல்லாருக்கும் சுலபமாக செய்யமுடியும் என்று கொடுத்திருக்கேன். நல்லா வரும். ஆல் த பெஸ்ட்

Lakshmi said...

மணீ மாறன் இந்த மைசூர்பாகே இப்படித்தான் சில சமயம் காலை வாரி விட்டுடும். இப்ப நான் சொல்லி இருக்கும் முறைப்படி ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா நல்லாவே வரும். வாழ்த்துகள்.

Lakshmi said...

ஜலீலா கமல் வருகைக்கு நன்றி செய்து பாருங்க நல்லாவே வரும்.

Lakshmi said...

ஸாதிகா உங்களுக்கு விஷயமே தெரியாதா? முதலில் குழந்தைகள் எல்லாரும் கூட இருந்தப்போ அடிக்கடி ரிப்பேர் சமையல் தான் செய்யவேண்டி வரும். அதாவது சரியா வராத பண்டங்களை ரிப்பேர் செய்து புது டிஷ் செய்து பேரும் மாத்திடுவேன்.கணேஷ் சரியாவராத மைசூர்பாகை கொண்டு வந்தாலும் அதற்கும் புது அவதாரம் கொடுத்து அசத்தலா புது பேரும் வச்சுடலாம் இது எப்படி இருக்கு?

Lakshmi said...

அமுதா கிருஷ்னா வருகைக்கு நன்றி

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

Lakshmi said...

அஸ்மா நீங்கல்லாம் இவ்வளவு ஆர்வமா கேக்கும்போது கொடுத்திடவேண்டியதுதான்.

மாதேவி said...

இனிப்புடன் ஆரம்பமே அசத்தல்.

Lakshmi said...

ஸாதிகா முதல்ல இந்தக்குறிப்பு போட ரொம்ப தயக்கமா இருந்துச்சு. ஆனா நீங்கல்லாம் நல்லா விரும்புரீங்கன்னு தெரிஞ்சதுமே சந்தோஷமா இருக்கு 12-வயசுல கரண்டி பிடிக்க ஆரம்பிச்சாச்சு. அப்போ எவ்வளவு அனுபவம் இருக்கும் இல்லியா? தொடர்ந்து கொடுக்கிரேன்.

Lakshmi said...

கே.பி ஜனா வருகைக்கு நன்றி என்ன கேட்டுபார்க்கணும்?

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி ஆமா நீங்க சொல்வது போல நாங்க பழய ஆட்கள் என்ன பண்டிகைனாலும் முதல்ல மைசூர்பாகுதான் செய்வோம், தீபாவளின்னா மைசூர்பாகும் மிக்சரும் தான் மெயின் ஐட்டமா இருக்கும்

Lakshmi said...

ஹேமா செய்து பாருங்க நல்லாவரும்

ராஜி said...

அம்மா எங்க வீட்டுல மைக்ரோவேவ் அவன் இல்லையே என்ன செய்யட்டும்.

Lakshmi said...

இல்லேன்னா என்னமா அடுப்பில் வைத்து அரைமணி நேரம் கிண்ட வேண்டியதுதான்.ஹா ஹா

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .