Pages

Friday, September 7, 2012

வெஜிடபுல் புலாவ்

தேவையான பொருட்கள்
 பாஸ்மதி அரிசி------------- 2 கப்
 உரித்த பச்சை பட்டாணி---------- ஒரு கைப்பிடி
 கேரட்-------------------------     4
 உருளைக்கிழங்கு-------------  2
காலிஃப்ளவர்பூவாக உதிர்த்தது-------  ஒரு கைப்பிடி
                                 
 வெங்காயம்----------- 2
 பூண்டு பற்கள் ------- 8
 இஞ்சி -------- சிரிய துண்டு
 கொத்துமல்லி தழை----- ஒரு சிறிய கட்டு
பட்டை------- 2 துண்டு
பிரிஞ்சி இலை--------- 2
 க்ராம்பு--------------     2
 ஏலம்

மிளகு------- ஒரு ஸ்பூன்
ஜீரகம் ------ ஒரு ஸ்பூன்
எண்ணை------- 4 டேபில் ஸ்பூன்
 உப்பு தேவையான அளவு
செய்முறை
 அரிசியை நன்கு அழுவி அலம்பி வைக்கவும்
காய்களை நிதான அளவில் நறுக்கவும்
                         
பிரஷர் பேனில் எண்ணை ஊற்றி மிளகு, ஜீரகம் பட்டை, பிரிஞ்சி இலை போட்டு
                                       
பொரிந்ததும் அரிசியைப்போட்டு ஈரப்பதம் போக வறுக்கவும். பிறகு நறுக்கி ய
வெங்காயம்  இஞ்சி பூண்டு கொத்துமல்லி சேர்க்கவும் பிறகு நறுக்கி
                               
வைத்திருக்கும் காய்களை சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்கு கலக்கி
உப்பையும் சேர்த்து மூடவும். பாஸ்மதி சீக்கிரமே வெந்து விடும் 2,அல்லது 3
                                         
விசில் வந்ததுமே அடுப்ப அனைத்து விடவும்.
அந்த புலாவுடன் தொட்டுக்க ராய்த்தா நல்லா இருக்கும் அடுத்த பதிவில் போடுரேன். இப்ப நீளம் அதிகமாயிடுச்சி இல்லியா?
                           
                               
 கொத்துமல்லி வெங்காயம் பூண்டு இஞ்சியை அரைத்து வதக்கி சேர்த்தால் அது தனிச்சுவையாக நன்றாக இருக்கும். இப்படி வதக்கி போட்டாலும் தனிச்சுவையுடன் நன்றாக இருக்கும்.

28 comments:

ஸாதிகா said...

மசால அதிகம் இல்லாமல் அருமையக செய்து காட்டி இருக்கீங்க லக்ஷ்மிம்மா.சூப்பர்,

ஆமினா said...

அரிசியை போட்டுவிட்டுதான் காய்கறி சேர்ப்பீங்களா மாமி? வித்தியாசமா இருக்கு!

செய்து பாக்குறேன்

கவி அழகன் said...

Nalla sappadu

எல் கே said...

இந்த வார இறுதியில் செஞ்சுட வேண்டியதுதான்

ADHI VENKAT said...

உங்க கைப்பக்குவத்தில் புலாவ் பிரமாதமா இருக்கும்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது அம்மா... வீட்டில் குறித்துக் கொண்டார்கள்...
நன்றி...

(சில படங்களை நேராக போடச் சொல்லுங்களேன் - இது என் பொண்ணு)

அமுதா கிருஷ்ணா said...

கலர் கலரா சாப்பிட தூண்டும் புலாவ்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கும்மா.....

அம்பாளடியாள் said...

ஆஹா இது எங்க அம்மா வீட்டு சமையல் கட்டு .அதனால சத்தம் இல்லாமல் இண்டைக்கு ஒரு புடி புடிச்சிட வேண்டியதுதான் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...... சமையல் விதம் சொன்ன போதே நினைச்சன் சாப்பாடு சூப்பரா இருக்கும் என்று நான் சொல்வது சரிதானே ?...
இந்தியாக்கு வந்தா உங்களை அவசியம் காணாமல் திரும்ப மாட்டேன்
அம்மா .

மனோ சாமிநாதன் said...

எளிமையான, ஆனால் சுவையான புலவு குறிப்பு லக்ஷ்மிம்மா!

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆமி அரிசியை முதலில் வறுத்துபோட்டாதான் சாதம் ஒன்னோடு ஒன்னு ஒட்டாம உதிரியாக வரும். செய்து பாரு வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கவி அழகன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கார்த்தி செய்ய சொல்லுங்க. பதிவர் சந்திப்பில் சந்தித்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது.

குறையொன்றுமில்லை. said...

கோவை 2 தில்லி எங்க போனிங்க ரொம்ப நாளாக காணோமே

குறையொன்றுமில்லை. said...

திண்டுக்கல் தனபாலன் ஏற்கனவெ சில பேரு சொல்லிட்டாங்க ஏன் படங்களை படுக்கை வசத்தில் போடுரீங்க சரியா போடுங்கன்னு. எங்க சேவ் பண்ணி வச்சிருக்கனோ அங்க சரியா தான் இருக்கு ப்ளாக்ல அப்லோட் பண்ணும் போது எல்லாபடங்களும் படுக்குதே எப்படி சரி செய்யனும்னு பல பேரு கிட்ட கேட்டுட்டேன்.சரி பண்ணத்தெரியல்லே

குறையொன்றுமில்லை. said...

அமுதா கிருஷ்னா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

அம்பாளடியாள் உன் பின்னூட்டம் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு இண்டியா வந்தா நேரா என் வீட்டுக்கே வா இப்ப எங்க இருக்கே. நானும் உன்ன சந்திக்க ஆவலா இருக்கேன்

குறையொன்றுமில்லை. said...

ம்னோ மேடம் நன்றி

சாந்தி மாரியப்பன் said...

அருமையான சத்தான குறிப்பு..

Unknown said...

மிளகு சீரகம் சேர்த்து செய்ததில்லை .மிளகாய் சேர்க்க வேண்டாமா? எளிமையாக இருக்கிறது.நன்றி அம்மா.

மாதேவி said...

அருமையான புலாவ்.

கதம்ப உணர்வுகள் said...

அன்பின் லக்‌ஷ்மிம்மா,

காரம் அதிகம் சாப்பிட இயலாத நிலையில் உங்களின் இந்த சமையல் குறிப்பு மிக மிக அருமையாகவும் ருசியாகவும் செய்ய எளிமையாகவும் இருக்கிறது....

காய்கள் எல்லாம் போட்டு வதக்கி அரிசி போட்டு வதக்கிறது அம்மா தான் அப்டி செய்வாங்க...

பார்க்கவே அழகா கலர்ஃபுல்லா இருக்கு...

அன்பு நன்றிகள் அம்மா பகிர்வுக்கு....

படம் ஏன் இப்படி இருக்குன்னு சொல்லி இருந்தீங்க...

எடுக்கும்போது நேரா எடுக்காம சைட்வாக்கில் எடுத்து சேவ் செய்து அதை ப்ளாக்ல போட்டு பாருங்கம்மா.. ஒரு வேளை சரியாக வந்தால்???

குறையொன்றுமில்லை. said...

மஞ்சு வருகைக்கும் படங்களை எப்படி போடனும்னு சொன்னதுக்கும் நன்றி அப்படியே செய்து பாக்குரேன்

அமர பாரதி said...

படங்கள் பசியைத் தூண்டுகிறது. நல்ல பிஞ்சு கத்திரிக்காய்ப் பொரியல் ஒரு வருடம் முன்பு ஊருக்குச் சென்ற போது சாப்பிட்டது. ஹூம். எக் ப்ளான்ட் மட்டுமே கிடைக்கிறது. கிட்டத்தட்ட இதே போலத்தானே சேனைக் கிழங்கு வதக்கலும், அம்மா?

குறையொன்றுமில்லை. said...

அமரபாரதி முதல்முறையா என் பக்கம் வரீங்களா நன்ரி சேனைக்கிழங்கு வதங்க கொஞ்சம் நேரம் அதிகம் எடுக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : மூத்தோருக்கு மரியாதை

என்னை ஆதரிப்பவர்கள் . .