Google+ Followers

Pages

Thursday, December 29, 2011

A ? 3 ( END)

 எப்பாது விடியும் என்று காத்துக்கொண்டிருந்தவர்போல விடிந்ததுமே எழுந்து மகன் நவீனையும் குளிப்பாட்டி ஸ்கூலுக்கு தயார் பண்ணினார். ஏதேது இன்னிக்கு மழைதான் கொட்டப்போகுது.என்று மனைவி கேலியாக கூறவும் மனசுக்குள் சிரித்துக்கொண்டார் பால்ராஜ். நேற்று நவீனுக்கு ஹோம் ஒர்க் சொல்லிக்கொடுத்ததில் எவ்வளவு பெரிய க்ளூ கிடச்சிருக்கு என்று நினைத்தார். டிபன் சாப்பிட்டு ஸ்டேஷன்  சென்றவர் அங்கும் செய்ய வேண்டிய சில அவசர வேலைகள் முடித்துவிட்டு 204- வண்டி எடுங்க என்றார். நேராக பூஜா வீடு. நேற்றுபோலவே வீடு அமைதியாக இருந்தது. வாச்மேனும் தோட்டக்காரனும் வாங்க ஐயா என்று வரவேற்றனர். நேராக ஹால் சோபாவில் சென்று அமர்ந்தார். கிச்சனில் இருந்து இட்லி வேகும் மணமு ம்பில்டர்காபி மணமும் வந்து அவர் நாசியை நிறைத்தது.வேலைக்காரர்கள் அனைவருக்குமே மூன்று வேளை ச்சாப்பாடும் இங்கேயேதான் தயார் செய்து கொடுப்பார்கள். பெரியம்மாவை ஹாலில் காணோம். இவர் வந்த சப்தம் கேட்ட சமையல்காரம்மா வாங்க சார்  காபி குடிக்கிரீங்களா என்றாள். காபி வாசனை ஹால்வரை வந்து மூக்கைத்துளைக்குதே கொண்டு வாங்கம்மா என்றார்.  நுரை ததும்ப சூடான சுவையான காபி கொண்டு தந்தாள் பெரியம்மா எங்கேம்மா. என்றார். மாடில பூஜை ரூமில் இருக்காங்க ஐயா இதோ போயி கூப்பிடுரேன் என்று மாடியில் போய் இவர் வந்திருக்கும் தகவல் சொன்னாள்.

Monday, December 26, 2011

A ? 2

 இன்ஸ்பெக்டர் பால்ராஜ் முடிக்க வேண்டிய பார்மாலிட்டீசெல்லாம் முடித்து பாடியை ஆம்புலன்சில் ஏறி அனுப்பியதும் அனைவரும் அழுதவாறே கலைந்து சென்றனர். ஸ்டேஷன் சென்ற இன்ஸ்பெக்டர், அன்றைய வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பிபோனார். வீட்டிலும்   சாப்பிடும்போதும் படுத்தபின்னும் கூட பூஜா பொண்ணின் முகம்தான் அவர் நினைவில் வந்து கொண்டே இருந்தது. சே என்ன ஒரு முட்டாள் தனம் பண்ணிட்டேன் ஏதோ குழந்தைப்பேச்சுன்னு எண்ணிட்டேனே. நான் கொஞ்சம் சீக்கிரமே போயிருந்தா அந்தப்பொண்ணைக்காப்பாத்தி இருக்கலாமோன்னுல்லாம் நினைவுகள். மறு நாள் டூட்டிக்கு வந்ததுமே ஃபோரன்சிக்கு போன் பண்ணி என்ன சார் ரிப்போர்ட் ரெடிபண்ணிட்டீங்களா என்றார்.  ஆமா சார் அதான் கொண்டு வந்திட்டு இருக்கேன். என்று உள்ளே வந்தார். சார் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் என்ன சொல்லுது? என்ரார் பால்ராஜ். சார் முகத்தை ஒரு மெலிசு பொருளால்  அழுத்தினதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்பாட்டிருக்கு. வேர எந்தஒரு நகக்கீரலோ மற்ற அடையாளங்களோ ஏதுமில்லே. கிட்டத்தட்ட 5- நிம்ஷம் போராடியிருக்குஅந்தக்குழந்தை. ஒருவேளை அது தலகானியாகவும் இருக்கலாம். வேர ஃபிங்கர் பிரிண்ட்ஸ் ஏதும்  கிடைக்கல்லே இந்தாங்க சார் ரிப்போர்ட் என்று பால் ராஜிடம் கொடுத்து விட்டு கிளம்பி வாசல் வரை போனவர் சார் இன்னொரு விஷயம் அந்தப்பொண்ணு இடது உள்ளங்கையில் சிகப்புகலர் ஸ்கெச் பென்னால்  A  என்ற எழுத்து இருந்தது. சரி அந்தப்பொண்ணுகாலில் கொலுசு ஏதாச்சும் இருந்ததா? என்று பால்ராஜ் கேட்டார். இல்லே சார் கான்வெண்ட்ல படிக்கர குழந்தை இல்லியா கொலுசோ கையில் வளையலோ ஏதுமே இல்லே. என்று அவர் கிளம்பி போனார்.

ஓ, அப்போ அந்தப்பொண்ணு ஒரு சின்ன  க்ளூ  கொடுத்திருக்கா. இப்ப  A- யில் ஆரம்பிக்கும் பேர் உள்ளவங்களை தரோவா விசாரிக்கணும். என்று 204- வண்டி எடுங்க என்றார். நேராக பூஜா வீடு. அந்த வீடே அமைதியாக இருந்தது. வாச்மேன் ஸ்டூலில் அமர்ந்து அன்றைய தினசரி படித்துக்கொண்டிருந்தார். தோட்டக்காரர் பெருக்கி குப்பை அள்ளிப்போட்டு மரம் செடிகளுக்கு பைப் மூலம் தண்ணீர்பாய்ச்சிக்கொண்டிருந்தார்.இன்ஸ்பெக்டர் உள்ளே போனதும் வீட்டின் பெரியம்மா ஹாலிலேயே உக்காந்திருந்தார்கள் வாங்க இன்ஸ்பெக்டர். என்ன விஷயம்.அம்மா. இங்க யாரெல்லாம் இருக்காங்க எனக்கு ஒவ்வொருவரையா விசாரிக்கணும் என்றார். இப்போ நான் இருக்கேன். இவ்வள்ளவு நாள் என் செல்லம் இருந்தா என்று சொல்லும்போதே அந்தம்மாவின் கண்களில் கண்ணீர், அப்புர,ம் வாச்மேன், தோட்டக்காரன், ட்ரைவர், வேலைக்காரி, சமையல் காரின்னு என்று 5- பேரும் பின்னால சர்வெண்ட் குவார்ட்டரில் தங்கி இருக்காங்க. என்றாள் பெரியம்மா. சரி முதல்ல வாச்மேனைக்கூப்பிடுங்க் அம்மா என்றார். ஆண்டனி இங்க வாப்பா ஐயா உங்க கிட்டல்லாம் எதோ விசாரணை செய்யணுமாம் என்றாள். பவ்யமாக வந்து நின்றார் வாச்மேன். கிட்டத்தட்ட 40- வயசு இருக்கலாம் போன்ற தோற்றம். சரி உங்க பேர் என்னங்க என்றார் பால் ராஜ். ஆண்டனிங்க என்றார். ஓ இவர்பேரு A- ல தான் ஆரம்பிக்குது . நீங்க எவ்வளவு வருஷமா இங்க வேலை செய்யுரீங்க? என்றார்.பால்ராஜ். ஐயா கடந்த 5- வருஷமா இங்கதாங்க வேலை செய்யுரேன். நல்ல சம்ப்ளம் மூனூவேளை சாப்பாடு துணிமணி எல்லாமே இங்கியே தந்துடுவாங்க இருக்க இடமும் பின்னாடியே கட்டி தந்திருக்காங்க. ரொம்ப சந்தோஷமா தான் இங்க வேலை பாக்குரேன் ஐயா பூஜா பொண்ணு எங்க கூடல்லாம் ரொம்ப அன்பாபேசிப்பழகுவாங்க ஐயா எந்தப்பாவிக்கு அவங்களை இப்படி இறக்கமில்லாம கொல்ல மனசு வந்ததோன்னு கண்ணீர் விட்டார். இவன் பேச்சில் தெரிந்த உண்மையால் மேற்கொண்டு அவரை விசாரிக்காமல், சரி தோட்டக்காரரைக்கூப்பிடுங்க என்றார். 50- வயசுக்கும் மேல் இருக்கும் தோட்டக்காரர் உள்ளே வந்தார். ஐயா கும்புடரேங்க.

 உங்க பேரு என்னங்க என்றார் பால்ராஜ் அண்ணாமலைங்க என்றார் தோட்டக்காரர். அடடா இவர்பேரும்  A-லயே ஆரம்பிக்குதே. என்று எண்ணி அவரையும் வாச்மேனிடம் கேட்ட கேள்வியைக்கேட்டார். அவரும் ஆண்டனி சொன்னதுபோல சொன்னார். சரி நீங்க போங்க என்று சொல்லிவிட்டு ட்ரைவரைக்கூப்பிட்டார். உங்க பேரு என்னங்க?ஆனந்த் ஐயா என்றார் ட்ரைவர் ஐயோ தலைய சுத்துதே. எல்லார் பேருமே A -  லெட்டரில் ஆரம்பிக்குதே. என்று நினைத்தவர் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த சமையல்காரம்மா, வேலைக்காரி எல்லாரையும் விசாரித்தார்.அவர்கள் பெயர்களும் ஆண்டாளம்மாள், அஞ்சலை என்றே இருந்ததில் பால் ராஜுக்கு ஏக குழப்பம். சரி பெரியம்மா உங்க பேரு என்னங்க என்றார் அம்புஜம் சார் என்றாள்  பால்ராஜ் தலையை உலுப்பியபடி நான் மறுபடி நாளைக்கு வரேன்னு கிளம்பினார். ஸ்டேஷன் போனதுமே கான்ஸ்டபிள்,  சார் ஏதானும் க்ளூ கிடைச்சுதா என்றார் எங்க?, குழப்பம்தான் நிறைய ஆச்சு அங்க இருக்கரவங்க எல்லார் பேருமே  A-  லதான் ஆரம்பிக்குது. எனக்கு ஒன்னுமே புரியல்லே. திரும்பவும் முதல்லேந்தே தொடங்கணும் என்று அலுப்புடன் சொன்னார். சார் உங்க மிஸஸ் ரெண்டு மூணுவாட்டி போன் பண்ணிட்டாங்க நீங்க வீட்டுக்கு கிள்ம்புங்க. நாங்க பாத்துக்கரோம் என்று கான்ஸ்டபிள் சொல்லவும் பால்ராஜுக்கும் வீட்டுக்குப்போய் கொஞ்சம் ஓய்வு எடுத்தால் தேவலாம் போலத்தான் இருந்தது. உடனே கிளம்பி வீடு போனார்.

 ஹை அப்பா இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டாங்கன்னு அவர் 5- வயது மகன் நவீன் வந்து காலைக்கட்டிக்கொண்டான். அவரும் ஆசையுடன் குழந்தையை த்தூக்கி செல்லம் கொஞ்சி விட்டு யூனிஃபார்ம் மாற்றி லுங்கியில் பெட் ரூம் நோக்கி போனார். அவர் மனைவி கிச்சனில் இரவு சாப்பாடு தயார் செய்து கொண்டிருந்தாள். அப்பா எனக்கு ஹோம் ஒர்க் சொல்லிக்கொடுக்கரீங்களா என்று நவீன் அவர் கால்களை கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்சினான். நவீன் அப்பா ரொம்ப டயர்டா இருக்கேன்பா. அம்மாவிடமே கேட்டுக்கோயேன் என்றார்.உள்ளேயிருந்து வந்த அவர்மனைவி ஏங்க நவீன் தூங்கிட்டு இருக்கும் போதே ஆபீஸ்போயிடரீங்க இரவு அவன் தூங்கின பிறகு வீடு வரீங்க இன்னிக்குதான் அதிசயமா சீக்கிரமே வந்திருக்கீங்க போலீஸ்காரன்னா வீடு குடும்பம் குழந்தை குட்டியை கவனிக்க கூட நேரமே கிடையாதா. எனக்கும் தெரியும் உங்க வேலை ரொம்ப டென்ஷன் நிறைந்தது  நேரம் காலம் பார்க்காம உழைக்கணும் எல்லாமே எனக்கும் தெரியுங்க ஆனா சின்னப்பையன் அப்பாவின் நெருக்கம் கிடைக்காம எப்படி ஏங்கிப்போரான் தெரியுமா. இப்பவும் நீங்க இப்படி விலகிப்போனா குழந்தை ரொம்ப ஏங்கி போவாங்க. ஒன்னம் வகுப்பு படிக்கு குழந்தையின் ஹோம் ஒர்க் ஒன்னும் கஷ்ட்டமா இருக்காது. நீங்க அவன்கூட சிரிச்சு பேசி ஹோம் ஒர்க் சொல்லிக்கொடுங்க. அவனுக்கும் சந்தோஷமா இருக்கும் உங்களுக்கும் ரிலாக்சா இருக்கும் என்றாள் ஆமா நீ சொல்வதும் சரிதான்மா. நானே சொல்லிக்கொடுக்கரேன் என்று  நவீன் வாப்பா. என்ன ஹோம் ஒர்க் இருக்கு எடுத்துட்டுவா அப்பா சொல்லித்தரேன் என்றார். குஷியாக உள்ளே சென்ற நவீன் ஸ்கூல் பேக்கை எடுத்துவந்து அப்பாவின் முபு அமர்ந்தான்.

அப்பா, நாம வீட்ல தமிழ்லதான் பெச்ணும்னு நீங்க சொல்வீங்க இல்லியா. ஆனா என்னை கான்வெண்டில் சேர்த்துபடிக்க வைக்கரீங்க. காம்பவுண்டுக்குள்ள நுழைஞ்சதுமே இங்க எல்லாரும் இங்கிலீஷ்தான் பேசனும்னு சொல்ராங்க. அப்பா அம்மான்னு சொல்வதற்குபதில் மம்மி டாடின்னு சொல்ல சொல்ராங்க. அதுபோல சித்தப்பா, மாமா, அத்திம்பேர் இவங்களுக்கெல்லாம் இங்கிலீஷ்ல என்ன சொல்லனும்பா? என்றான் நவீன். சிரித்தவாரே  இவங்களையெல்லாம் மொத்தமா அங்கிள்னு சொன்னாலே போறும்பா. என்றார் பால்ராஜ். ஓக்கே. அப்போ சித்தி அத்தை மாமிக்கு? அதுக்கு ஆண்டின்னு சொல்லணும்பா. என்றார். ஏ அப்பா ஒரே வார்த்தைல எல்லார்பேரும் அடங்கிடுமாப்பா/ என்று ஆச்சர்யமாக கேட்ட மகனிடம் ஆமாண்டா செல்லம் அதான் இங்கிலீஷ் ஷார்ட்& ஸ்வீட். .  இரவு சாப்பாடு முடிந்து படுத்த பால்ராஜின் மூளையில் ஒருமின்னல் ஓ அப்படியும் இருக்குமோ. இப்படி ஒரு கோணத்தில் யோசிக்கவே இல்லியே? என்று அமைதி இல்லாமலே தூங்கினார்.

Friday, December 23, 2011

A?

இன்ஸ்பெக்டர் பால் ராஜ் ஒரு கைதியின் கேஸ் கட்டை மும்முரமாக படித்துக்கொண்டிருந்தார்.ஸ்டேஷனில்  இன்ஸ்பெக்டரும் கூட 4 கான்ஸ்டபிள்களும் இருந்தார்கள். அப்போது டேபிளில் இருந்த போன் அடிக்கவும் இன்ஸ்பெக்டர் பால் ராஜ் எஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஹியர் என்றார். மறுபுற்மிருந்து  சார் இது பி,2 போலீஸ் ஸ்டேஷந்தானே என்று கேட்டது ஆமா, நீங்க யாரு உங்களுக்கு என்ன வேனும்? சார் நான் பூஜா மௌண்ட் கார்மலில் 5-வது படிக்கரேன். எனக்கு இன்ஸ்பெக்டரிடம் பேசணும் என்றது. நான் இன்ஸ்பெக்டர் பால் ராஜ்தான் பேசுரேன் சொல்லுங்க என்றார். சார் என்னை யாரோ கொலை பண்ணிடுவாங்களோன்னு பயம்மா இருக்கு. எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும் என்றதுபோன் குரல். பாப்பா 5-வது படிக்கரேன்னு சொல்ரே அப்போ உனக்கு 10- வயதுக்குள்ளதான் இருக்கணும் நீ டி.வி. சீரியல் நிறையா பாக்குரியா? வேண்டாததெல்லாம் கற்பனை பண்ணிகிட்டு இருக்கியா? ஐயோ அப்படில்லாம் இல்லே  சார் நான் உண்மைதான் சொல்ரேன். அப்படி அந்தப்பெண் பேசிக்கொண்டிருக்கும் போதே மெல்லிசாக சலுங்க், சலுங்க் என்று ஒரு சலங்கை சப்தம் போனில் கேட்டது பின்னணியில். அந்த பாப்பா காலில் கொலுசு போட்டிருக்கோ என்னமோ காலை ஆட்டிகிட்டே பேசுதோ என்னமோ அதான் இப்படி சலங்கை சத்தம் கேக்குதோன்னு பால்ராஜ் நினைத்துக்கொண்டார்.பிறகு எந்தவித சப்தமும் வராமல் போன் அமைதியாகி விட்டது.  பால்ராஜுக்கு ஒரே குழப்பம் என்னடா இது அந்தப்பொண்ணு எங்கேந்து பேசுரேன்னுகூட ஏதும் சொல்லலே. என்ன பிரச்சனைன்னும் சொல்லலே. இப்போ நாம என்ன பண்ணனு யோசித்து கான்டபிள் 204- இங்க வாங்க. இப்ப எனக்கு ஒரு போன்கால் வந்தது எக்சேஞ்சுக்கு கேட்டு இந்த அட்ரெஸ் கேட்டுவாங்க என்றார்.

Friday, December 16, 2011

காவலன் 3என்னங்க, ராஜாவுக்கு வயசாயிண்டே போறது . அடுத்த லீவுல வரப்போ அவனுக்கு நல்ல பொண்ணாபார்த்து கல்யானம் பண்ணிடலாங்க என்றாள் அம்மா. ஆமா நீ சொல்வது சரிதான். ஏண்டா ராஜா அங்கியே ஏதானும் பொண்ணு பாத்து வச்சிருக்கியா என்றார். ஐயோ என்னப்பா இது நீங்கபாத்து யாரைச்சொல்ரீங்களோ அவளைத்தான் கல்யாணம் செய்துப்பேன் என்றான்.மகனின் இதபதிலால் பெற்றோருக்கு ரொம்பவே சந்தோஷம். சரி அப்பா ஒரு முக்கியமான விஷயம் பத்தி உங்க கிட்ட பேசணும். என்றான். என்னடா ராஜா சொல்லுப்பா. அப்பா நேத்து இரவு நான் நம்ம சன்னதி தெரு வழியாதான் வந்தேன். நீங்களும் உங்க வயசுக்காரங்க சிலரும்கோவில் வாசல்ல உக்காந்து சீட்டு விலையாடிகிட்டு இருந்தீங்க. பாக்கவே மனசுக்கு ரொம்ப கஷ்ட்டமா இருந்ததுப்பா. அம்மாவை இரவு தனியே வீட்ல விட்டுட்டு நீங்க இப்படி சின்னப்பிள்ளை போல சீட்டு விளையாடல்லாம் போலாமாப்பா? ஓஅதுதான் விஷயமா. நீ ஒரு வார்த்தைல கேள்வியா கேட்டுட்டே. இதுக்கு பின்னால ஒரு கதையே இருக்குப்பா.

Wednesday, December 14, 2011

காவலன் 2

காலை 8- மணிக்கு எழுந்த ரகு பின்புறம்போய் பல்தேய்த்துவிட்டு நேரே கிச்சன் போய் அம்மாவுக்கு குட்மார்னிங்க் சொன்னான். அம்மா சூடு சூடாக காபி கொடுத்தாள். குடித்துவிட்டு அம்மா நான் குளிச்சுட்டு வந்துடரேன்னு சொல்லி சோப்பு டப்பா, டவல் எடுத்துண்டு வெளியே போகும் போது அப்பா குளித்து சாமி ரூமில் பூஜையில் இருந்தார். ஆத்தங்கரை நோக்கி நடந்த ரகு தெருக்களைக்கடந்து வாய்க்கால் தாண்டி ஒத்தையடிப்பாதை வழியே ஆத்தங்கரை நோக்கி நடந்தான். முன்பெல்லாம் இருபுறமும் பச்சை பசேல்னு வயல்வெளிகள் கண்ணுக்கும் மனதுக்கும் பசுமையாக இருக்கும். இப்போது இருபுறமும் வயல் வெளியே கண்களில் தென்படாமல் எல்லா நிலங்களையும் ப்ளாட் போட்டு விற்று கட்டிடங்களாக எழும்பிக்கொண்டிருந்தன. வழிபூராவும்
 ஒரு ஈ காக்கை கூட இல்லாமல் வெ றிச்சோடி இருந்தது.

Monday, December 12, 2011

காவலன். 1

ரகு விமான நிலையம் விட்டு வெளியே வந்து டாக்சி பிடித்து போகவேண்டிய இடம் சொல்லி அமர்ந்தான்.குறைந்தது ஒருமணினேரமாவது ஆகும் அவன் போய்ச்சேரவேண்டிய இடம் வர. வெளி நாட்டில் வேலை ரகுவுக்கு. வெளி நாடு போகும் போதும் வரும்போதும் இந்த விமானங்கள் நடு இரவில் தான் இருக்கின்றன.அம்மா அப்பாவுக்கு ஒரே பையன் ரகு. அவன் பிறந்தது வளர்ந்தது எல்லாமே ஒரு சிறிய கிராமத்தில்தான்.மேல்படிப்புக்கு பக்கத்தில் உள்ள பெரிய நகரம் போக வேண்டி வந்தது. படித்தபடிப்பு வீணாகாமல் வெளி நாட்டில் வேலைக்கும் முயற்சி செய்து ரெண்டு வருடங்களாக வெளி நாட்டு வேலை. முதலில் அவன் அப்பா அம்மா இதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. உள் நாட்டிலேயே ஏதானும் நல்ல வேலையில் சேர்ந்துக்க சொன்னார்கள். ரகுதான் பிடிவாதமாக வெளி நாடு சென்றான். வருடம் ஒருமுறை வந்து தாய் தந்தை யுடன் ஒருமாசம் இருந்துவிட்டுபோவான்.

Wednesday, December 7, 2011

படாடோபம்.

 டிங்க், டாங்க்,  டிங்க், டாங்க்,  காலிங்க் பெல்லில் குருவி அழைத்தது. காவேரி கதவைத்திறந்ததும் அவள் முகத்தில் சந்தோஷ ஆச்சரியம். ஹாய் லல்லி வாடி வா, நிஜம்ம நீதானா நான் சொப்பனம் கானுரேனா? நீயும் லீவுக்கு வந்திருக்கியா? என்று மிகவும் அன்புடன்  தன் தோழி லலிதாவை வீட்டுக்குள் அழைத்துப் போனாள் காவேரி.இருவரும் சிறுவயது தோழிகள் ஒரே ஊரைச்சேர்ந்தவர்கள் .திருமணம் முடிந்து வேறு, வேறு ஊர்களில் செட்டில் ஆனவர்கள். 6, 7-வருடங்களுக்குப்பிறகு இருவரின் சந்திப்பு. உள்ள வாடி என்று கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு நடு கூடத்தில் இருந்த மர ஊஞ்சலில் போய் உக்கார வைத்தாள் அவளும் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டாள்.உள்ளே பார்த்து சித்தி இங்க வாயேன் யாரு வந்திருக்கா பாரேன்னு கூப்பிட்டாள் சித்தியும் வந்து அடடே லலிதாவா வாம்மா எவ்வ்ளவு வருஷம் ஆச்சு உன்னப்பார்த்து இப்ப எந்தௌஉர்ல இருக்கே? எத்தனை குழந்தைகள். ஆத்ல அம்மா அப்பா நன்னா இருக்காளான்னு கேள்விகளை
 அடுக்கிக்கொண்டே போனாள்.உடனே காவேரி சித்தி முதல்ல அவளுக்கு  சாப்பிட ஏதானும் கொண்டுவாங்க என்றாள்.

Friday, December 2, 2011

காத்திருப்பு 2

 போன்பேச்சை முடித்துக்கொண்டுவந்த டாடி, என்னம்மா சொல்லிக்கொண்டிருந்தேன்? நம்ம அந்தஸ்துக்கு தகுந்தமாப்பிள்ளைபற்றி சொல்லிண்டு இருந்தேன் இல்லியா? எனக்கு பிடிக்காதுன்னு நினைத்தா சேகர் ஏழைன்னு என்கிட்ட சொன்னே? நம்மிடம் இருக்கும் சொத்தே நாலு தலைமுறைக்கு கானும். மேலும் மேலும் சொத்து எதுக்கு? என் பெண்ணை பூப்போல வச்சு காப்பாத்தர ஒரே குணம் மட்டும்தான் நான் மாப்பிள்ளையாவரப்போரவனிடம் எதிர்பார்க்கிரேன்.  ஆனாலும் உத்யோகம் புருஷ லட்சணம் இல்லியா நம்ம கம்பெனியிலேயே பெரிய பதவி கொடுத்துட்டாபோச்சு  எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லேம்மா உன் விருப்பம்தான் என் சந்தோஷம் சேகர் வரட்டும் நானே பேசி அவன் தயக்கத்தை போக்கி கல்யாணப்பேச்சை ஆரம்பிச்சுடரேன். இப்பகுஷியாடா? ஆமா மணி 8- ஆச்சே இன்னும் சேகரைக்காணோமே என்னாச்சும்மா எனக்கு தெரியும் டடி என் விருப்பத்துக்கு மாறா நீங்க ஏதுமே சொல்ல மாட்டீங்கன்னு நான் சேகரிடம் சொல்லிகிட்டே இருந்தேன் ஆனா அவந்தான் நம்பவே இல்லே  சரி டாடி அவன் உங்க கூட பேசத்தயங்கி வீட்லயே இருக்கானோ என்னமோ? நீங்க குளிச்சுட்டுவாங்க டாடி நாம சாப்பிட்டு அவனை  அவன் வீட்லயே போயி பார்த்த்ட்டு வரலாம் ப்ளீஸ்டாடி. என்று கெஞ்சலாக கூறினாள் அவரும் குளித்துவந்து சமையல்காரன் சூடாக பரிமாறிய உணவை முடித்துக்கொண்டு இருவரும் சேகர் வீடு போகும்போது இரவு 10- மணி ஆனது. பெல் அடித்ததும் சேகரின் வயதான மாமாதான் வந்து கதவைத்திறந்தார்.

Wednesday, November 30, 2011

எனக்குள் நான் (பயங்கர) டேட்டா- தொடர் பதிவு

நண்பர் பிரகாஷ் என்னையும் இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருக்கார்.
என்னைப்பற்றி என் பல பதிவுகளில் விலாவாரியாக ஓபன் ஸ்டேட்மெண்ட்
கொடுத்தாச்சு. இப்ப புதுசா சொல்ல என்ன இருக்கு தெரியல்லே. அதான்
கொஞ்சம் மாத்தியோசிச்சேன்.

நான்.  நானே  நானோ யாரோ தானோ மெல்ல, மெல்ல மாறினேனோ?
பிறந்த நாள்--ஏன் பிறந்தாய் மகளே ஏன் பிறந்தாhttp://www.youtube.com/watch?v=CSD1juEt_eY
பிறந்த ஊர், வளர்ந்த இடம்-- யாதும் ஊரே யாவரும் கேளீர்.
http://www.youtube.com/watch?v=kSIcAh-4lj8
இருப்பது.- ஏ தில் ஹை முஷ்கில் ஹை ஜீனா யஹாம்( சாரி, இதுமட்டும் ஹிந்தி)    http://www.youtube.com/watch?v=7Xu44aq8Fog
படிப்பு.-வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம்.
http://www.youtube.com/watch?v=Wrk-BVzgy9s
வேலை.-செய்யும் தொழிலே தெய்வம்.
http://www.youtube.com/watch?v=u7X9zRoYon
 பிடித்த விஷயங்கள்.- அதோ அந்தப்பறவைபோல .
http://www.youtube.com/watch?v=FB_mHPsm6Bk


பிடிக்காதது.  இல்லாததொன்றில்லை.
http://www.youtube.com/watch?v=z2klpOa4SlU&feature=related
 நட்புக்காக.--தோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சாய்ஞ்சுக்கனும்.
http://www.youtube.com/watch?v=bZPP03w6Yh8
காதல். கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே.
http://www.youtube.com/watch?v=AMotc9NQ9B8
அன்பு பாசத்துக்கு.என்ன தவம் செய்தனை.
http://www.youtube.com/watch?v=Zb3oCguhjtY
மறக்கமுடியதது.-இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்.
http://www.youtube.com/watch?v=zRJjE3Y9LLg
மறக்க நினைப்பது. நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா?
http://www.youtube.com/watch?v=G84Nd2r0nEk
சந்தோஷம். எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்.
http://www.youtube.com/watch?v=9RjgxnK50oA
பலம். ஒவ்வொரு பூக்களுமே சொல்கிரதே.
http://www.youtube.com/watch?v=d4nftQgisrU
பலவீனம். சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்.
http://www.youtube.com/watch?v=EyrdQ7_lKF0
கோபம். ராதே உனக்கு கோபம் ஆகாதடி
http://www.youtube.com/watch?v=TsypI_e1DQs
ஏமாற்றம். ஏமாறாதே, ஏமாற்றாதே.
http://www.youtube.com/watch?v=5g2fSFVyIPE&feature=related
பிடிச்ச பொன் மொழி.-உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்.
http://www.youtube.com/watch?v=09EBJA1eTU4
பிடிக்காத பொன் மொழி. போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை

http://www.youtube.com/watch?v=S-jHNs31dJs&feature=related
பொழுது போக்கு. இது ஒரு பொன்மாலைப்பொழுது.
http://www.youtube.com/watch?v=hymujdC0mlw 
ரசிப்பது. செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்
http://www.youtube.com/watch?v=9svqcyNIgvo
பிடிச்ச சுற்றுலாத்தளம். போவோமா ஊர் கோலம்.பூலோகம்
http://www.youtube.com/watch?v=rix_wX6dd6c
நிறைவேராத ஆசை--சின்ன சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசை
 .http://www.youtube.com/watch?v=Czhkrwzqvww
கடவுள்.- ஜனனி ஜனனி ஜகம் நீ.
http://www.youtube.com/watch?v=6eFjBl_r4jE
சமீபத்திய பெருமை. என்ன சொல்லப்பொகிராய்
http://www.youtube.com/watch?v=95wHqKPh49g 
தற்போதைய சாதனை. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்.
http://www.youtube.com/watch?v=vwgLot131dg
டிஸ்கி. தொடர்பதிவு.
1சோதனைமேல் சோதனை போதுமடா சாமி.
http://www.youtube.com/watch?v=3BZ4Fx-GRKY
ஒய், திஸ் கொலவெறி, கொல வெறி, கொலவெறி டீ
http://www.youtube.com/watch?v=1JagUR48mXE&feature=relatedMonday, November 28, 2011

காத்திருப்பு. 1

இந்திரபிரஸ்த் கார்டன் ஏர்கண்டிஷன் செய்ததுபோல குளு, குளு என்றிருந்தது. கார்டன் என்றால் குழந்தைகள் விளையாடும் பார்க்தான். அதற்கே உறிய சறுக்குமரம், ஊஞ்சல், குடைராட்டினம் கம்பி விளையாட்டு எல்லாமே இருந்தது. பக்கவாட்டில் இருந்த புல் வெளிகளையும் அழகாக மிருகங்களின் உருவத்தில் செதுக்கி ட்ரிம் செய்திருந்தது மிகவும் அழகாக இருந்தது. சுனிதாவும் சேகரும் அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த மிக்சரைக்கொறித்தவாரே தங்கள் எதிர்காலம் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். சேகர் வேலை இல்லா பட்டதாரி. சுனிதாவோ அந்தஊரிலேயே பெரும் செல்வந்தரின் ஒரே ஆசைமகள். இருவருக்கும் காதல் ஏற்பட்டு ஒருவருடமாகிரது.

Friday, November 25, 2011

கண்ணாடி

உலகில் கண்ணாடிகள் தோன்றி இராத காலம் அது. யாருமே தங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்ததில்லை. அப்போது முதன் முதலாக முகம் பார்க்கும் கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவனுக்கு அந்தக்கண்ணாடி கிடைத்தது.அதை வீட்டுக்கு கொண்டுவந்து ஒரு பெட்டியில் வைத்டுக்கொண்டு பின் அதை திறந்து பார்த்தான். அதில் அவன் முகம் தெரிகிரது. அது தன் முகம் தான் என்று அவனுக்குத்தெரியவில்லை.இதற்குள் ஒரு மனிதன் இருக்கிரான்.இதற்குள்ளே ஆனந்தமாக வசிக்கும் அவன் ஒரு தேவனாகத்தான் இருக்கவேண்டும், என்று எண்ணினான். உடனே கண்ணாடியை பெட்டியில் வைத்து பூட்டிக்கொண்டான்.

Friday, November 18, 2011

சில நம்பிக்கைகள்

எங்கேன்ஜ் மெண்ட் ரிங்க் மோதிர விரலில் ஏன் போடுராங்க?
தெரிஞ்சுக்கலாமா? வாங்க.

முதல்ல உள்ளங்கைரெண்டையும் சேத்து சாமி கும்பிடுவதுபோல வைங்க.

வைச்சீங்களா? இப்போ நடுவிரலைஉள்ளங்கையை தொடுவதுபோல உள்ள

மடக்கி வைங்க. பாக்கி நாலுவிரல்களையும் சேத்து கும்பிடு வதுபோல ஒட்டி

வைங்க.ஆச்சா? இப்ப முதல்ல ரெண்டுகட்டை விரல்களையும் கொஞ்சமா விலக்கிட்டு திரும்பவும் ஒட்டவச்சுக்குங்க. அடுத்து ஆள்காட்டி விரல்களையும்

அதுபோலவே கொஞ்சம் விலக்கிட்டு திரும்ப ஒட்ட வச்சுக்குங்க. அடுத்து

சுட்டுவிரலையும் அதேபோல விலக்கி, சேருங்க. இப்ப மோதிர விரலையும் விலக்கி சேருங்க.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!. என்னங்க முடியலை இல்லியா?


Wednesday, November 16, 2011

மழலை உலகம் மகத்தானது

 பதிவர் ரசிகன் இந்த தலைப்பில் தொடர்பதிவு எழுத அழைப்பு அனுப்பி இருக்கார்.
  நிறையபதிவர்கள்இதுபத்திநிறையஎழுதிஇருக்காங்க.எனக்குத்தெரிந்தவிதத்தில் நானும் கொஞ்சம் சொல்ரேன். எனக்கு வெளிவிவகாரம் பழக்கமில்லை. வீட்டுப்பறவை நான். வீட்டில் நடந்ததை வைத்து என் எண்ணங்களை ச்சொல்ரேன். எனக்கு என் முதல் பெண் பிறந்தப்போ என் வயது13.( நம்பித்தான் ஆகனும்) வரிசையா 5குழந்தைகள் 19-வயதில் கடைசி குழந்தை. அப்போல்லாம்  பெரியகுடும்பம். மாமியார், மாமனார், தாத்தா, நாங்க இருவர் , 5 குழந்தைகள் என்று வீடு நிறம்பி மனிதர்கள் அவர்களுக்கு காலை என்ன டிபன் செய்யலாம்?, என்னமதிய சாப்பாடு , இரவு சாப்பாடு பண்ணலாம் என்று யோசிச்சு செயல் படுவதிலேயே பூரா நாளும் சரியா இருக்கும் . அதுதவிர வீடு பெருக்கிமெழுகி, பாத்திரம் தேய்த்து துணி துவைத்து என்று மூச்சு முட்ட வேலைகள் சரியா இருக்கும் என் குழந்தைகள் கூட செலவு செய்ய நேரமே இருக்காது. எப்படி வளர்ந்தார்கள் என் று தெரியாமலே வளர்ந்து ஆளாகி இன்று பெரிய பெண்ணுக்கே 50 வயது.

Tuesday, November 8, 2011

டாக்டர் 2நித்யா கன்யாவிடம் கன்யா என் அப்பா எனக்காக மெடிகல் ஸீட் ஏற்பாடு செய்திருப்பதாக சொல்ராங்க.ஆனா எனக்கு மெடிகல்ல இண்ட்ரெஸ்ட்டே இல்லே. டாடி கிட்ட எப்படி சொல்லன்னும் புரியல்லே. அதான்.

ஏண்டி பிடிக்கல்லே?ஒவ்வொருத்தர் மெடிக்கல் கிடைக்கலியேன்னு எவ்வளவு தவியா தவிக்கராங்க? நீ என்னடான்னா பிடிக்கலேங்கரே? ஏன் காரணம் என்கிட்ட சொல்லேன். என்று கன்யா கேட்கவும் உன்கிட்ட சொல்லாம வேர யாருகிட்டேடி சொல்லப்போரேன். டாக்ட்டருக்குப்படிக்க எனக்குபிடிக்கலே. நாள்பூரா வியாதிக்காரங்க மத்திலயேஅவங்க வேதனையான புலம்பல் களுக்குமத்தியில், அசிங்கம் பார்க்காம ஆப்ரேஷன் ரத்தம் வாடைகளுக்குமத்தில என்னால சகிச்சுக்கவே முடியாது. அது தவிர கால நேரம் பாக்காம எந்தன்னேரமானாலும் ட்ரீட்மெண்ட் கொடுக்க அலர்ட்டாவே இருக்கனும்.னமக்குன்னு செலவுபண்ண நேரமே இருக்காது

இப்படி எல்லாவிதத்திலும் நம்ம சுதந்திரத்தையும் விட்டுக்கொடுத்து ஆயிரக்கணக்கில் பணத்தையும் செலவு செய்து அப்படியாவது இந்தபடிப்பில் சேரனுமான்னுதான் யோசனையா இருக்கு. நா ஆரம்பத்திலேந்தே சொகுசா செல்லமா சகல வசதிகளுடனு வளர்ந்தவ இல்லியா என்னால இப்படி கஷ்ட்டப்பட முடியுமாடி?அதுவும் கைராசி இல்லேன்னா பேரும் கெட்டுப்போகும் ஒரு சி. ஏ. படிச்சு பேங்க்ல ஆபீசரா 10- டு 5 வேலைன்னா ஓ. கே. அதுதான் எனக்கு சரிவரும் . ஆமா உனக்கு மேலே படிக்க ஆசை இல்லியாடி?
நித்யா இந்தவிஷயத்தில் நான் உன் எண்ணங்களிருந்து நேர்மாறானது என் எண்ணம். எனக்குமட்டும் பணவசதி இருந்தா நான் தேர்ந்து எடுப்பது இந்த டாக்டர் படிப்பைத்தான்.சின்ன வயசிலேந்தே என்லட்சியமே, ஏன் வெறின்னு

கூட சொல்லலாம்.டாக்டர் படிப்புதான் . ஆனா என்ன செய்ய பணம்னா ஆட்டிவைக்குது. நீ ஈசியா சொல்லிட்டே காரணங்களை. அது உன் விருப்பம். ஆனா கொஞ்சம் யோசிச்சுப்பாரு, உடல் உபாதையுடன், வலி வேதனைகளுடன் வருபவர்களை, நம்ம படிப்பால்,னம்மால் தீர்க்கமுடிந்தால் அது எவ்வளவுநல்ல விஷயம்.னம்மாலும் மற்றவர்கள் படும் துன்பங்களை த்தீர்க்கமுடிகிரதே? வலி நீங்கி மன நிறைவுடன் செல்பவர்களைப்பார்த்தால் நம் மனசுக்கு எவ்வளவு அமைதி கிடைக்கும்.எத்தனை வியாதி அவஸ்தியுடன் வருபவர்களையும் நாம் படிக்கும் படிப்பால் குணப்படுத்தி அவர்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்கமுடியுமே அதே சமயம் நம் குண

நலன்களிலும்னல்லவித மாறுதல்களை நம்மால் உணற முடியும்.வேதனைப்படுபவர்களை சந்தித்து சந்தித்து மற்றவர்களிடம் பொறுமையாகவும் சாந்தமாகவும் பேசும் குணம் படிப்படியாக வந்துவிடும். நாம்

கவனமாக செயல் பட்டால் மக்கள் நம்மை தெய்வத்துக்கு சம்மாக மதிப்பார்கள். என்னைப்பொறுத்தவரை டாக்டர் படிப்புதான் உயர்ந்தபடிப்பு என்பேன் என்றாள் கன்யா.

ஏ அப்பா, உன் மனசுல இவ்வளவு ஆசை இருக்கா, ஏன் இத்தனை நாள் சொல்லலேடிஎன்றாள் நித்யா.

போடி முடவன் கொம்புத்தேனுக்கெல்லாம் ஆசைப்படக்கூடாது இல்லியா அதான் உன்கிட்ட கூட சொல்லல்லே என்றாள்

சரிடி நேரமாச்சு நான் கிளம்புரேன் என்று சொல்லி நித்யா வீடு போனாள்.

இரவு சாப்பாட்டின்போது நித்யா தன் அப்பாவிடம் டாடி உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனுமே என்றாள். நான் என்ன சொன்னாலும் மறுக்காம செய்வீங்களா டாடி? என்றாள்.

என்னடா செல்லம், நீகேட்டு நான் என்னிக்காவது மறுப்பு சொல்லி இருக்கேனா தயங்காம சொல்லுடா என்றார்.

வந்து டாடி......... எனக்கு மெடிக்கல் படிக்க விருப்பம் இல்லே. என்று தயங்கியவாரே ஆரம்பித்தாள் .

ஏண்டா செல்லம் பிடிக்கலியா?வேர எதுல சேரனுமோ சொல்லுடா உன் விருப்பத்துக்கு மாறா நான் என்னிக்குமே எதுவுமே செய்யமாட்டேண்டா என்றார்.

டாக்டர்படிப்பு தனக்கு ஏன் பிடிக்கலை என்பதற்கு விரிவாக காரணங்களை சொல்லிவிட்டு என்ஃப்ரெண்ட் கன்யா இருக்கா இல்லியாப்பா அவளுக்கு மெடிகல் சேர ரொம்ப ஆசை இருக்கு ஆனா வசதி இல்லே.அவளுக்கு அந்த ஸீட்டை வாங்கி கொடுங்க டாடி. என்றாள் டாடியு மகள் விருப்பப்படியே

கன்யாவை மெடிக்கலில் சேர்க்க எல்லா ஏற்பாடுகளும் செய்தார்.

மறு நாள் நித்யா வீடு வந்த கன்யா என்னடி நித்தி நம்ம ஃப்ரெண்ட் ஷிப்பை இப்படி கடனாளி ஆக்கிட்டியே என்னை.ஆனாலும் உனக்கு உனப்பாவுக்கும் ரொம்ப பெரிய மனசுடி நான் சம்பாதிக்க ஆரம்பித்ததும் உன்கடனை முதலில் அடைப்பதுதான் என் வேலையா இருக்கும். உங்களை என் வாழ் நாள் பூராவும் மறக்கவே மாட்டேண்டி என்று கண்களி நீர் வழிய கன்யா நித்யாவை கட்டிக்கொண்டாள்.

Monday, November 7, 2011

டாக்டர் 1வெங்காய சாம்பாரின் வாசனை அந்த சாப்பாட்டு அறையையும் தாண்டி தெருவில் போவோர் வருவோரின் நாசியையும் கவர்ந்தது.

டாடி, நம்ம தாமு பண்ற சமையல் மாதிரி வேர யாராலயுமே பண்ணமுடியாது

நீங்க என்ன சொல்ரீங்க டாடி?

அதில் என்ன சந்தேகம் அம்மா?அதிலயும் நீ பாசானசந்தோஷத்தில் ஜமாய்ச்சுட்டான். என்று அப்பாவு மகளும் மாறி, மாறி சமையல் கார தாமுவை புகழ்ந்து தள்ளினார்கள்.

தாமு சங்கோசத்தில் நெளிந்தவனாக என்ன குழந்தே,என்னப்போயி இப்படில்லாம் புகழரே. நா எப்பவும் போலத்தான் செய்ஞ்சிருக்கேன். என்றான்

தாமு உனக்கு என்ன வேனும்னு கேளேன். உனக்கு ஏதானும் தரனும்போல இருக்குன்னு நித்யா கேட்டாள்.

குழந்தே நீ பெரிய படிப்பெல்லாம் படிச்சு பெரிய கைராசிக்கார டாக்டரா ஆக்னும்மா.உன் குழந்தைக்கும் என்கையால் தான் முதல் சோறு ஊட்டனும்

எனக்கு வேர என்னவேனும் சொல்லும்மா?

உடனே நித்யாவின் அப்பா ,னித்யா பாத்தியா ஒன்னு சொல்லவே மறந்துட்டேன் நல்ல வேளை தாமு நினைவு படுத்தினான். உனக்காக மெடிக்கல் ஸீட்டுக்கு நிறைய டொனேஷன்லாம் கொடுத்து ஏற்பாடு செய்திருக்கேன் பலத்த சிபாரிசிக்கும் தெரிந்தவர்களிடம் சொல்லி வச்சிருக்கேன்.ரொம்ப அலைஞ்சு திரிஞ்சு ஸீட் வாங்கி இருக்கேன்மா தாமுச் சொல்ராப்ல நீ கைராசியான பெரிய டாக்டரா வரனும்மா. நல்லா பேரும் புகழும் வாங்கனும்மா. என்றார்.

இதைக்கேட்டதும் நித்யாவின் முகம் வாடி விட்டது. பதில் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு எழுந்துபோனாள்.

நித்யாவின் தகப்பனார் வரதன் நல்ல பணவசதி படைத்தவர்தான். ஒரே செல்லமகள் நித்யா.அவள் 10-வயதில் அவ அம்மா இறந்தபிறகு அப்பாதான் அவளுக்கு எல்லாமாக இருந்தார். வீட்டில் அப்பா, மகளைத்தவிர சமையலுக்கு தாமு, அவனை வீட்டில் ஒருவனாகவே நடத்தி வந்தார்கள். இது தவிர தோட்டக்காரன், கார் ட்ரைவர், வாச்மேன், வேலைக்காரிகளாலேயே வீட்டில் சிறிது நடமாட்டம் இருக்கும். நித்யாவுக்கு மனம் விட்டு பேசு ஒரே தோழியாக எதிர் வீட்டு கன்யா இருந்தாள். இருவரும் ஒன்றாம் வகுப்புமுதல் சேர்ந்தே படித்து இன்று காலேஜ் படிப்புவரை தொடரும் நெருங்கிய தோழியாக இருந்து வந்தார்கள் இருவருமே போட்டி போட்டு நன்றாக படிப்பவர்கள் எப்பவும் முதல் ரெண்டாம் இடம் இவர்களுக்குத்தான்,
கன்யாவின் அம்மா 4- வீடுகளில் சமையல் வேலைகள் செய்து, அப்பளாம் வடாம் செய்துவிற்று பெண்ணை இவ்வள்வுதூரம் கஷ்ட்டப்பட்டு படிக்கவைத்தாள். நித்யா கன்யாவைதேடி வந்தசமயம் அம்மாவு பெண்ணும் வடாம் தயார் செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள். நித்யாவைப்பார்த்ததும் வாடி வா

நானே உன் வீட்டுக்கு வரனும்னு இருந்தேன் நீயே வந்துட்டே. பாத்தியா நாம இருவருமே 95% எடுத்து பாசாகி விட்டோம். கங்க்ராட்ஸ். மேல என்ன செய்யப்போரே?ரொம்ப சந்தோஷமா இருக்கில்லியாடின்னு கன்யா கேக்கவும் ஆமாடி ஒருபக்கம் சந்தோஷம் தான். ஒருபக்கம் ஒரே யோசனையாவும் இருக்குடீ. என்றாள். நித்யா

உடனே கன்யா என்னடி எவ்வளவுசந்தோஷமான விஷயம் நீ சுரத்தே இல்லாம இருக்கியே என்னாச்சு என்கிட்ட சொல்லமாட்டியா? என்றாள்

அதெல்லாம் ஒன்னுமில்லே, நீ மேற்கொண்டு என்னபடிக்கப்போரே அதைச்சொல்லு முதல்ல என்றாள் நித்யா.

நானா, என்ன சொல்ல இவ்வளு படிக்க வைக்கவே என் அம்மா ரொம்ப கஷ்ட்டப்பட்டுட்டா. இதுக்கும் மேல அவங்களை கஷ்ட்டப்படுத்த விரும்பலே.

டைப் ஷார்ட் ஹாண்ட் படிச்சு ஏதானும் கம்பெனில ஒரு வேலைல சேரவேண்டியதுதான். என்று கன்யாவும் சுரத்தில்லாமலே பதில் சொன்னாள்                                                                                                                                        (தொடரும்)

Wednesday, November 2, 2011

ருசி.

என்னம்மா இது டெய்லி இரவு வெரும் மோர் சாதமும் ஊறுகாயும் மட்டுமே போட்டு போரடிக்கரே. வெரைட்டியா பண்ணக்கூடாதா?  யாரு ரமணியா படிக்கர வயசில நாக்கு ருசி தேடினா படிப்பு அவ்வளவுதான்.போட்டதை தின்னு.மோருக்கும் ஊறுகாய்க்கும் ஆலாப்பறக்கும் நேரமும் வரும் அப்போ தெரியும் அதோட அருமை. அப்பாவின் கோபக்குரல்.
எதை வேணாலும் சாப்பிடலாம் அப்பா  இந்த மோறும் ஊறுகாயும் அலுத்துப்போகுதுப்பா.  இதுமகன் ரமணி.
 பேசாமபோட்டதை தின்னுட்டுப்போ. இல்லேன்னா ஒன்னும் சாப்பிடாமலேயே போய்க்கோ.அப்பாவுக்கு கோபத்தில் மூக்கு சிவந்தது.
  ஏங்க, வயசுப்பிள்ளை வாய்க்கு ருசியா கேக்கத்தான் செய்யும். இப்பதானே சாப்பிடர வயசு.இதுக்குப்போயி ஏங்க இப்படி கோவப்படுரீங்க? இது அம்மா.
வந்துட்டேல்லே?ச்ப்போர்ட்டுக்கு. குட்டி சுவர்தான் பிள்ளை.எப்ப கண்டிக்கும் போதும் இப்படி ஊடேல வராதேன்னு சொல்லி இருக்கேன்ல? ஏண்டி உனக்கு புரியமாட்டேங்குது? இது அப்பாவின் கோபம்.


Tuesday, October 25, 2011

1960- ல் தீபாவளி (தலைதீபாவளி)

 தலைதீபாவளி கல்லிடைக்குறிச்சியில்தான் கொண்டாடினோம். கல்யாணம் ஆகி 6-வது மாசமே தீபாவளி வந்தது.பூனாவிலிருந்து நான்
 கணவர், மாமியார், மாமனார், மாமியாரின் அப்பா என ஐவரும் கிளம்பி
 கல்லிடை போனோம். எங்கதாத்தா அஞ்சு பேருக்கும் பர்ஸ்ட் க்ளாசில்
 டிக்கட் எடுத்துதந்தாங்க. பூனா டு மெட்ராஸ் ஒன்னரை நாள் ஆகும் மெட்ராஸ்டு திருனவேலி ஒன்னரை நாள் ஆகும். திருனவேலி டு கல்லிட
 பாசஞ்சர்தான்.புகுந்த வீட்டில் வெளியில் எதுவும் வாங்கி சாப்பிட மாட்டாங்க. வீட்லேந்தே (பத்தில்லாம) சப்பாத்தி, பூரி,சட்னி,அவல் வெல்லம் கலந்து என்று மூனு  நாளுக்கு தேவையான உணவுகள் தயார் செய்து எடுத்துக்கனும். அது தவிர ரெண்டு ப்ளாஸ்க் நிறைய  சூடுதண்ணி கொதிக்க கொதிக்க எடுத்துண்டு பால் பவுடர், ப்ரூ காபி பொடி ஜீனி எல்லாமும் தனியே எடுதுப்போம் இடையில் கொறிக்க கொஞ்சம் டிட்பிட்ஸ் எல்லாமும் உண்டு.
அந்தக்கால பர்ஸ்ட்க்ளாஸ் கம்பார்ட்மெண்ட் எல்லாம் தனி ரூம்போல விஸ்தாரமா இருக்கும் அட்டாச்டு பாத்தும் இருக்கும்.

Saturday, October 22, 2011

திருட்டு 2

சொன்னபடியே மாதவன் காரில் வந்து ரமணனை தன் வீட்டுக்கு கூட்டிப்போனார்.ஆபீசிலிருந்து கொஞ்சம் தள்ளியேதான் அவர் வீடு இருந்தது. வீடு நல்ல விஸ்தாரமாக சுத்தமாக இருந்தது. மாதவனின் மனைவியும் வாசலில் வந்து வாங்கோன்னுஅன்பாக அழைத்தாள்.15-வயதில் ஒரு பெண் குழந்தையும் வந்து ஹாய் அங்கிள் என்றுதன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள்.மூவர் அடங்கிய சின்ன குடும்பம்தான். ரமணன்
மாதவனிடம் எந்த ஊரு அப்பா அம்மா எல்லாம் எங்க இருக்காங்கன்னு சாதாரணமாகப்பேசிவிட்டு ஆமா மாதவன் வீடு நல்ல பெரிசா இருக்கே வாடகை அதிகமிருக்குமே என்றார்.மாதவன் பதில் சொல்ல வாய் திறக்கும் முன்பாகவே நல்லா சொன்னீங்க நாங்க எதுக்குவாடகை வீட்ல இருக்கனும்? இது சொந்தவீடுதான். போனவருஷம்தான் கட்டிமுடிச்சோம்.
எல்லாமே இவரின் சம்பாத்த்யம்தான்.என்று மாதவனின் மனைவி பெருமையாகச்சொன்னாள்.வீட்டிலும் எல்லாவிதமான விலை உயர்ந்த சாமான்களும் இருந்தன.மாதவன் மனைவியும்காதிலும் மூக்கிலும் வைரம் டாலடிக்க செழிப்பாகவே இருந்தாள். சரி வருமானத்தில் மிச்சம்
பிடித்து கட்டும் செட்டுமாக குடித்தனம் செய்து வாங்கி சேர்த்திருப்பாங்க போல இருக்குன்னு ரமணன் மனதில் நினைத்துக்கொண்டார்.அதேசமயம் மாதவனின் மூடும் மாறிவிட்டதையும்மனதில் குறித்துக்கொண்டார்.

Wednesday, October 19, 2011

திருட்டு 1

லஞ்சுக்கான சைரன் ஒலி கேட்டதும் அவரவர்கள் கொண்டுவந்தடிபன் கேரியரை திறந்தனர். மதராஸி, பெங்காலி, மராட்டி, பஞ்சாபி சாப்பாடு ஐட்டங்களின் வாசனை மூக்கைத்துளைத்தது.பேசிக்கொண்டே எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அது ஒரு பெரிய தொழிற்சாலை.வெடிமருந்துகள் தயார்பண்ணும் தொழிற்சாலை ஆதலால் ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாக அமைந்திருந்தது. நிறையபேரு அங்கு வேலை பார்த்துவந்தனர். சிலர் ஆபீஸ் குடியிருப்பிலும் சிலர் நகரத்தில் சொந்தவீடு கட்டிக்கொண்டும் வேலைக்கு வந்துபோய்க்கொண்டு இருந்தனர். காலை 9மணிமுதல் மாலை 5 மணிவரை வேலை நேரம். மதிய லஞ்ச் 1-மணி நேரம்.

Monday, October 17, 2011

அவசரம்

கிருஷ்னன் செண்ட்ரல் கவர்மெண்டில் வடக்கே வேலை பார்ப்பவர். ஒவ்வொரு வ ருடமும் ஆபீசில்  L.T.C. போட்டு மனைவி இரண்டு குழந்தைகளுடன் தமிழ் நாட்டில் முக்கிய இடங்களுக்கு போய் சுற்றிப்பார்த்து வருவார். அதுபோல இந்த வருடமும் கன்யாகுமாரி, மற்றும் பக்கத்தில் இருக்கும் சுற்றுலா தலங்களுக்கும் கிளம்பிபோனார்கள். மனைவி மீரா, பையன் ரவி 10- வயது, பெண் வாசவி,15 வயது. எல்லாஇடங்களும் சுற்றிவிட்டு கடைசியாக கன்னியாகுமாரியில் இரண்டு நாட்கள் தங்கி விவேகானந்தாராக்ஸ், காந்தி மண்டபம் குமரி அம்மன் கோவில் எல்லாம் சுற்றி, கடைகளில் கொஞ்சமாக பர்ச்சேசும் முடிந்து அன்று சாயங்காலம் கிளம்பினார்கள். முதலில் கேரளாவில் பார்க்கவேண்டிய இடங்கள் எல்லாம் பார்த்ததிலேயே எல்லாருக்குமே மனசு பூராவும் உற்சாகமா இருந்தது.

Wednesday, October 12, 2011

தவிப்பு 3

ரெண்டுமாசம் இப்படியே போச்சு. பிறகு பெண்ணுமாப்பிள்ளையும் வந்து அந்தப்பையனை டாக்டரிடம் கூட்டிப்போனார்கள். எல்லா டெஸ்ட்டும் பண்ணிப்பார்த்ததில் ஹெல்த் எல்லாம் சரியாகவே இருந்தது. மெண்டலி கொஞசம் ப்ராப்லம் தெரிந்தது. டாக்டர் அந்த மாப்பிள்ளை பையனிடம் நீங்க ஒரிஸ்ஸாவில் இந்தப்பையனை பாத்துக்கொண்டிருந்தவா கிட்ட விவரம் ஒன்னுமே கேக்கலியான்னார். ஐயோ அதையேன் கேக்குரீங்க அவங்க பேசுர பாஷையே புரியல்லே. அவங்களுக்கோ நான் பேசுவதே புரியல்லே. என்ன கேக்க ?  அப்போ இந்தபையனுக்கு என்ன தான் ஆச்சுன்னு ஒன்னுமேதெரியல்லியான்னார். டாக்டர். அவங்க யாரு இந்த அட்ரெஸ் எப்படிஅவங்களுக்குத்தெரிஞ்சது எப்படி தகவல் அனுப்பினாங்கன்னே இன்னிக்கு வரை தெரியல்லே. ஆண்டவன் கருணைன்னுதான் நினைக்கனும். இந்த 5 வருஷ்மா இந்தப்பையன் எங்க இருந்தான் எப்படி இருந்தான்னு ஒன்னுமே தெரியவே இல்லை. என்று மாப்பிள்ளைப்பையன் டாக்டரிடம் சொல்லவும் அவர் சரி அது தெரிஞ்சு நீங்க என்ன பண்ணப்போரீங்க அதைபத்தி எந்த ஆராய்ச்சியும் பண்ண வேண்டாம் அதை அப்படியே விட்டுடலாம்.


அந்தப்பையனாலயும் எதுவும் சொல்ல் முடியல்லே . இப்ப கிடைச்சுட்டானே . நடந்தவை நடந்தவையாக வே இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று டாக்டர் சொல்லவும் ஆமா அதுவும் சரிதான்னு இவங்களும் அதுபத்தி அதிகம் அலட்டிக்காம விட்டுட்டாங்க. ஆமா அதுக்குத்தானே உங்க கிட்ட கூட்டிவந்திருக்கோம் என்று சொன்னான்.மாப்பிள்ளைப்பையன்.டாக்டராலயும் எதுவும் சரியா சொல்ல முடியல்லே. மருந்து மாத்திரை எழுதிக்கொடுத்தார் அரைகுறைமனதுடனே வீடு வந்தார்கள்.அந்தப்பையனின் அக்காவும் மாப்பிள்ளையும் அந்தப்பையனிடம் அன்பாக பக்குவமாக பேசினார்கள். மாப்பிள்ளைப்பையன் ஆபீசிலேயே ஒரு வேலையும் போட்டுக்கொடுத்தான். வேலைக்கு போய்வந்தாலாவது அவனிடம் நல்ல மாற்றம் தெரியுதான்னு பாக்கலாமேன்னு. அதுக்கு நல்ல சம்பளமும் கொடுத்தான். அந்தப்பையனும் எந்த தகறாறும் செய்யாமல் வேலைக்கு ஒழுங்கா போயி வந்தான். அவனின் சம்பளம் அந்தக்குடும்பத்துக்கு ரொம்பவே தேவையாக இருந்தது.

Monday, October 10, 2011

தவிப்பு 2

அந்த லெட்டரை மாப்பிள்ளையிடம் கொண்டு காட்டினார் அந்த அப்பா. மாப்பிள்ளைப்பையனும் நான் போயி பாக்குரேன்னு சொல்லி ஒரிஸ்ஸா கிளம்பி போனான். எங்கியோ ஒரு ஒடுக்குப்புறமாக இருந்தது அடரஸ்.   அங்கு 10- அடிக்கு 10-அடி ஒரு ரூமில் ஹிப்பிகள் போல ஆண்களும் பெண்களுமாக 10- பேரு கஞ்சா புகைத்துக்கொண்டு மயக்கத்தில் ஆடிக்கொண்டு இருந்தார்கள் யாருக்குமே சுய நினைவு இருப்பதுபோலவே தெரியல்லே இந்தப்பையன் மட்டும் கோழிக்குஞ்சு போல ஒரு ஓரமா ஒட்டிண்டு உக்காந்து இருந்தான். ரூம்பூராவும் புகைமண்டலம்தான்.அங்குபோயி அந்தப்பையனிப்பார்த்ததும் மாப்பிள்ளைப்பையனுக்கு ரொம்ப சந்தோஷமாச்சு. உடனே அவனைக்கூட்டி வந்தா. அந்தப்பைனை அங்கேந்து ஏன் கூட்டிப்போரேன்னு கூட யாரும் எதுவும்கேக்கவும் இல்லே கண்டுக்கவும் இல்லே. அந்தமாப்பிள்ளைப்பையனோ பக்கத்தில் இருவரிடம் பேச்சுக்கொடுத்துப்பார்த்தான் இவர் பேசும் பாஷை அவங்களுக்குத்தெரியல்லே அவர்கள் பேசும் பாஷை இவருக்கு புரியல்லே.சரி பையனாவது கிடைச்சானேன்னு அவனைக்கூட்டிண்டுவரும்போது

Friday, October 7, 2011

தவிப்பு.

கொஞ்சம் வருஷம் முன்பு எனக்குத்தெரிந்தவர் வீட்டி நடந்த சம்பவம் இது.
 கணவன், மனைவி வயதுக்குவந்த பெண் ஒன்று, ஆண் ஒன்று என்று சின்னக்குடும்பம் அது. பெண்ணும் பையனும் ஒரு தனியார்  நிறுவனத்தில் வேலை பார்த்து கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் அவர்கள் குடும்பவாழ்க்கை நடந்து வந்தது. பையன் 21, வயது, பெண் 23 வயது.குடும்பத்தலைவர் வெலைக்கு ஏதும் செல்வதில்லை.ஆரம்பத்தில் மஸ்கட்டில் நல்ல வேலையில் இருந்து நன்கு சம்பாதித்தவர்தான். அவரின் போதாத வேளை அந்தவேலை போய்விட்டது. 4-பேர் இருக்கும் சிறு குடும்பத்துக்கு பையன், பெண்ணின் சம்பளம் போதுமானதாக இருக்கவே அவர் வேலைக்கு போக எந்தமுயற்சியும் எடுக்கவே இல்லை. வாடகை வீடுதான். ஒண்டிக்குடுத்தனம் தான். அமைதியாக போய்க்கொண்டிருந்த குடும்பத்தில் பெண்ணால் சிறு குழப்பம். வேறு பாஷைப்பையனை லவ் பண்ணி அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டா. அவர்களிடமோ பெண்கல்யாணத்திற்கென்று ஒருபைசா கூட சேமிப்பு கிடையாது

Sunday, October 2, 2011

அஞ்சலி

ஒரு நல்ல மனிதரின் நினைவுகள். இன்று அக்டோபர் 2...  10-வருடம் முன்பு அவர் இந்த தேதியில் தான் காலமானார். பார்க்கும் அனைவரிடமும் அன்புமட்டுமே காட்டத்தெரிந்தவர். வீட்டுக்கு ஒரே பிள்ளயாக பிறந்ததால் அனைவருடனும் சகோதரபாச்த்துடனே பழகுவார்.யாருக்கு எந்த உதவி தேவைன்னாலும் முதல் ஆளாக போய் உதவுவார். சரியான வயதில் திருமணம் குழந்தைகள் என்று நடந்தது. கடவுள் பக்தியில் கன்மூடித்தனமானபக்தி உள்ளவர்.கோவிலில் ஸ்வாமி ஊர்வலம் இருந்தால்  ஸ்வாமிக்கு அல்ங்காரம் எல்லாம் சிறப்பாகப்பண்ணுவார். வீட்டிலும் ஒரு பண்டிகையும் பண்ணாமல் இருந்ததில்லை பூஜை புனஸ்காரம் எல்லாம் முறையாகப்பண்ணிவருவார்.தாராளமாககுழந்தைச்செல்வங்களும்பிறந்தார்கள்.
குழந்தைகளைச்சிறந்தமுறையில் வளர்த்து நன்கு படிப்பு வேலை திருமணம் என்று தன்கடமைகளைமிகச்சிறப்பாகவே செய்து முடித்தார்.செண்ட்ரல் கவர் மெண்ட் உத்யோகத்தில் இருந்ததால் ஊர் ஊராக மாறி, மாறிபோகவேண்டி இருந்தது.எல்லா இடங்களிலுமே அவருக்கு மிக நல்ல பெயர் கிடைத்தது.

Friday, September 30, 2011

டீச்சர்

அன்று மரகதம் வீட்டில் மீட்டிங்க். 10- லேடீஸ் மாதம் ஒரு சிறு தொகையை சிட்பண்டுபோல போட்டு வருகிறார்கள். குலுக்கல் முறையில் ஆட்களைத்தேர்ந்தெடுத்து அவர்களுக்கு  சீட்டுத்தொகை வழங்கி வருவார்கள். அந்தமாதம்யாருக்கு சீட்டு விழுகிரதோ அவர்கள் வீட்டில் மற்ற மெம்பர்களும் ஒன்றுகூடி ஸ்வீட் காரம் காபி+ அரட்டையுடன் கலைந்து போவார்கள். ஏதானும் ஒரு விஷயத்தை எடுத்து கார சாரமாக விவாதமும் பண்ணூவார்கள். அன்று மரகதத்திறுகு சீட்டு விழுந்திருந்தது. எல்லாரும் அவர்கள் வீட்டில் கூடி ஸ்னாக்ஸ் சாப்பிட்டுவிவாதம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். அன்று அவர்கள் பேச்சில் மாட்டிக்கொண்டவர்கள் பள்ளிகளில் வேலை செய்யும் டீச்சர்கள்.

Wednesday, September 21, 2011

ஹாப்பி பர்த் டே.

மம்மி, ஹாப்பி பர்த்டே, அம்மா, மெனி மோர்ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப்த டே,பிறந்த நாள் வாழ்த்துக்கள்மா. பெரிய பெண் பையன் கணவரின் வாழ்த்துக்கள் மனதுக்கு இதம்மாக இருந்தது. நன்றி சொல்லிட்டு வழக்கமான வீட்டு வேலைகளில் பிசியானா கல்பனா. பின்னாடியே வந்த பெண் ஏன்மம்மி புது சாரி எடுத்துக்கலே? பையன் ஏன் அம்மா ஸ்வீட் ஏதுமே பண்ணலே? கோவிலுக்கும் கூட வரமாட்டேங்கரேன்னு கணவர்  மூவரும் சேர்ந்து எங்க பர்த்டேன்னா க்ராண்டா கொண்டாடரோம் இல்லியா?  புதுசு போட்டுண்டு ஸ்வீட் சாப்பிட்டு சந்தோஷமா கொண்டாடரோம் இல்லியா? அட்லீஸ்ட் ஒரு பாயசம் கூட பண்ண மாட்ரே. ஏன் இப்படி பன்ரே மம்மின்னு துளைச்சு எடுத்துட்டா. கல்பனா பதில் ஏதுமே சொல்லாம வேலையைகவனித்தாள்.  அவள் எது சொன்னாலும் அவர்கள் அவளை ச்சரியாபுரிந்துகொள்ள மாட்டார்கள். கல்பனாவுக்கு என்று சில விஷயங்கள் மனசுக்குப்பிடிக்கும். ஆனா செயலபடுத்த முடியாத நிலை. சொன்னாலும் இவர்களின் கேலிப்பெச்சும் கிண்டலுக்கும் கேட்க வேண்டி வரும். அதனால் எதுமே பேசாமல் இருந்து விடுவாள்.

Monday, September 19, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்(11)

ஆசிரமம் பேரு ஜனகல்யாண்.வய்தான முதியோர்களுக்காக நடத்தப்படும் முதியோர் இல்லம்.16, முதல் 20 முதியோர்கள் அங்கே இருந்தார்கள். அவர்களுக்கு உறைவிடம் உணவு, உடுக்க உடை, பாதுகாப்பு கொடுத்து நன்கு கவனித்துக்கொள்கிராரகள்.அமைதியான சூழ் நிலையில் நன்கு பராமரித்து வருகிரார்கள்.பொழுது போக்குக்கு நிறைய புஸ்தகங்கள் , டி. வி எல்லாம் இருக்கு.ஆசிரமத்தைகவனித்துக்கொள்ள பணியாளர்களும் இருக்காங்க. சமையலுக்கும் தனியா ஆட்கள் இருக்காங்க. ரொம்ப அமைதியான இடம். அங்குள்ளவர்களின் முகங்களிலும் நிம்மதியும் சாந்தமும் பாக்க முடிந்தது. எங்க ஊரில் இந்த முதியோர் இல்லம் எல்லாம் மிகப்புதிய விஷயங்கள்தான். கூட்டுக்குடும்பமுறை சிதைந்துபோனதால் வந்த விளைவுதான் வேர என்ன சொல்ல. ஆண்டவன்படைப்பில் என்னல்லாம் ஏற்றத்தாழ்வுகள்.ஒருகாலத்தில் லட்சாதி பதியாக இருந்தவால்லாம் இன்று பிட்சாதி பதிகளா இருக்காங்க. அவர்களுக்கு தகுந்த வைத்திய வசதிகளும் செய்து கொடுக்கராங்க.

Friday, September 16, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்(10)

 மறு நாள் ஆடி மாசப்பிறப்பு.எங்க ஊரிலிருந்து சுமார் 10-கிலோ மீட்டர்தூரத்தில் பாவனாசம் என்னும் புண்ணிய ஷேத்திரம் இருந்தது, அங்குபோய் குளித்து ஸ்வாமிதரிசனம் செய்தால் நாம் பண்ணிய பாவங்கள் எல்லாம் விலகி விடும்னு ஒரு நம்பிக்கை எல்லாருக்கும் உண்டு.காலை 6-மணிக்கு கால் டாக்சி கூப்பிட்டு நாங்க 4-பேரும் பாவனாசம் கிளம்பினோம். வழக்கம்போல சுகமான காலைப்பயணம். 15- நிமிஷத்தில் பாவனாசம் போய்ச்சேர்ந்தோம். அன்று ஆடி மாசப்பிறப்பென்று கொஞ்சம் நிரைய கூட்டம் இருந்தது. 30, 40 படிகள் கீழே இறங்கி ஆத்தங்கரை போக வேண்டி இருந்தது. ஆனா இங்கே படிகள் சரியான வரிசையில் இருந்ததால் ஈசியா இறங்கினோம். ஆறு நிற்ம்பி தண்ணீர் நிறைய சல சலன்னு ஓடிக்கொண்டிருந்தது. சுகமா சாரலும் கூட இருந்தது. தண்ணீரைப்பார்த்ததுமே நீச்சல் அடிக்கதான் தோனிச்சு. தண்ணீரில் காலைவைத்தது, ஐஸ்போல ஜில்லுனு இருந்தது. அதுக்கும் மேல கருப்பு கருப்பா பெரிசு பெரிசா மீன்களின்கூட்டம் இருந்தது,  அந்த பெரிய மீன்களைப்பார்த்ததும் தண்ணீரில் இறங்க வே பயம்மா இருந்தது. அத்தை மேலே போயி ஒருகடையில் இருந்து ரெண்டு பாக்கெட்பொரிகடலைவாங்கி வந்து ஆற்றின் நடுப்பகுதிதண்ணிரில்வீசிப்போட்டா.எல்லாமீனும் அந்த்ப்பக்கம் ஓடிப்போச்சு.அப்புரமா நாங்க் தண்ணீரில் இறங்கிஆசை தீர நீச்சல் அடித்து நிறையமுங்கி நன்றாககுளித்தோம். கரை ஏறவேமனசில்லாம ஏறிப்போயி ட்ரெஸ் மாத்திண்டு கோவில் போனோம். பாவனாசர்சாமி. பட்டரிடம் இந்தசாமி சிவந்தானேன்னு கேட்டோம்.இது கைலாச லிங்கம்,கல்யாண லிங்க்ம்,பரஞ்ஞோதி லிங்கம் மூனும் சேர்ந்து இங்க பாவனாசலிங்கமா தரிசனம் தரார்னு சொன்னார் உலகம்மன் சன்னிதிபாலசுப்ரமன்யர் சன்னதி வினாயகர்சன்ந்தி எல்லாம் போய் கண்குளிர தரிசன்ம் செய்தோம். இந்தக்கோவிலும் நல்ல பெரிசா இருக்கு. நல்லபராம்ரிக்கராங்க. சுத்தமாகவும் இருக்கு.

Monday, September 12, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ் (9)

துணீ துவைத்து குளிச்சு ஈரத்துணியுடனே வீடு வந்தோம். வரும் வழியில் வாய்க்காலில் தளும்பி ஓடும் தண்ணீரைப்பார்த்ததும் இங்கியே குளிச்சிருந்தா நிறைய முங்கி நீச்சலும் அடிச்சிருக்கலாமேன்னு தோனித்து.வீடு வரும் வழியிலேயே அத்தை என்னிடம் இங்க வந்தும் நீ காலை பிஸ்கெட் தான் வேனும்னுலாம் முரண்டு பண்ணக்கூடாது. அவா என்னதராளோ அதை சாப்பிடனும்னு மிரட்டலா சொல்லி கூட்டிண்டு வந்தா. நானும் பூம், பூம் மாடு போல தலையை ஆட்டிண்டு கேட்டுண்டேன் வேர வழி.எலாருக்கும் சுட சுட முறுகலாக கல் தோசை சூடாக வார்த்துப்போட்டா. தொட்டுக்க சாம்பார் ,சட்னி எல்லாம் பண்ணி இருந்தா. எனக்கு இப்படி காலேல சாம்பார்சட்னிலாம் சாப்பிட்டா ஹெவி ஆயிடும். நான் மட்டும் பொடி எண்ணை போட்டுண்டேன். எள்ளுமணக்க மிளகா பொடியும் செக்குலேந்து ஆட்டிவந்த நல்லெண்ணையும் அத்தனை ருசியா இருந்தது. இதுதான் கிரமத்து அசல்மணம் கூடவே திக்காக பில்டர்காபியும் தந்தா. ரெண்டு தோசை சாப்பிட்டதுமே வயிறு ஃபுல். சாப்பிட்டு அவசரமாக பெரியஹாலில் போயி ஊஞ்சலில் உக்காந்தேன். அப்பாடா வீசி வீசி ஆடினேன். கூடவே ஒருமாமியும் வெந்து உக்காந்தா. என்ன ஆனந்த அனுபவம் தெரியுமா. நேத்து நைட்டே ஒருமணி நேரம்தானே தூங்க கிடைச்சது ஊஞ்சல்லயே படுத்துட்டேன். சுகமா தூக்கம்வந்தது. எங்க தூங்க விட்டா.?

Friday, September 9, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ் ( 8)
அந்த ஹாலின் நடுவில் பெரிய மர ஊஞ்சல் என்னை வாவ்வான்னு கூப்பிட்டுது. தரைபூரா க்ரேனைட் பதிச்சு பள பளன்னு இருந்துச்சு. ஒரு பெரிய கல்யாணமே நடத்தலாம் போல அவ்வளவு பெரிய ஹால். ஒருபுறம், ஹோம் தியேட்டர் சுற்றி நிறய சோபா செட்ஸ், இன்னொரு புறம்  விஸ்தாரமாக பூஜாரூம். அங்கு இல்லாத சாமி படங்களே இல்லை. எல்லா படங்களையும் பள, பளன்னு துடைத்து வைத்து சந்தன குங்குமம் வைத்து மலர் மாலைகளால் அழகு படுத்தி இருந்தர்கள். தசாங்க மணமும் ஊதுபத்திமணமும் கமழ பூஜா ரூம் தெய்வீக மா இருந்தது. இன்னொரு புறமாக விருந்தினருக்காக ரெண்டு தனித், தனி ரூம்கள் நல்ல பெரிசா கட்டில் மெத்தை அட்டாச் பாத்துடன் அமர்க்களமாக இருந்தது. ஊஞ்சலை வீசி வீசி ஆட தாராளமாக இடமும் இருந்தது. ஒவ்வொரு அழகையும் கண்ணுக்குள் சிறை பிடித்தவாரே மெதுவாக நடந்துபோனேன். அத்தை, இதோ பாரு நேரா போயி ஊஞ்சல்ல உக்காராதே. அப்புரம் உன்னை அங்கேந்து எழுப்பவே முடியாதுன்னு மிரட்டியவாரே உள்ளே டைனிங்க் ஹால் கூட்டினு(கர, கரன்னு இழுத்துண்டு)போயிட்டா.ஒரே நேரத்ல 50 பேருக்கு இலை போட்டு பந்தி பரிமாறலாம்போல அவ்வளவு விஸ்தாரமான டைனிங்க் ஹால் இந்தக்காலத்துக்கு ஏத்தமாதிரி நடுவில் பெரிய டைனிங்க் டேபிலும் சேர்களும் கூட இருந்தது. மணக்க மணக்க பில்டர் காபி உபசாரம்பண்ணினா. அப்போ காலை 6.30 மணி தான் ஆகி யிருந்தது. அவர்கல் வீட்டிலும் பெரியவர்கள் சிறியவர்கள் என்று 6- பேர் இருந்தா, நாங்க 4 பேரு செந்தா மொத்தமா 10 பேரு இருந்தோம்.

Wednesday, September 7, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ் (7)

திரு நெல் வேலி ஸ்டேஷன் அப்பல்லாம் ரொம்ப சாதாரணமா ஐயோ பாவமா
 இருக்கும். இப்ப  நல்லா பள, பளப்பா இருக்கு. டைல்ஸ்பதித்ததரை, எல்லா இடத்துலயும் மின்விளக்குகள். என்று அமர்க்களமா இருந்தது.எனக்கு திருன
வேலி டு கல்லிடை, பாசஞ்சர் வண்டியில் போகனும்போல இருந்தது.(ஹி,ஹி)
அப்போல்லாம் செங்கோட்டை பாசஞ்சர்னு ஒரு பாசஞ்சர் கல்லிடை வழியா
தான் போகும். அதில் பயணம் செய்வது தனி சுகம். அதில் கரி எஞ்சின்தான்
 இருக்கும். சீட் எல்லாம் மர பெஞ்ச்தான் ஜன்னலில் குறுக்கு கம்பிகளே இருக்
காது. தலையை முழுசா வெளில நீட்டி வேடிக்கை பார்க்கமுடியும். அப்போ இஞ்சின்லேந்து வர கரிப்புகை தலைபூராவும் அப்பிக்கொள்ளும் அதுமட்டுமில்லே, வேடிக்கை பார்க்கும் எல்லார்கண்களிலும் கரிப்பொடி
 விழுந்து எல்லார் கல்களுமே மிளகாய்ப்பழ சிவப்பாக இருக்கும். ஆனாலும்
 கண்ணை கசக்கிண்டே வேடிக்கை பார்ப்போம்.

Friday, September 2, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ் (6)

காத்து இப்படி அடிச்சா தூக்கமா வருதேன்னு ஜன்னல் கண்ணாடியை
போட்டேன்.வண்டிக்குள்ள ஒரே அமைதி. ரொம்ப நேரமா காதுல ஹெட்
 போன் போட்டுண்டு பாட்டுக்கேட்டா காது வலிக்கும். அதனால அதையும்
 எடுத்துட்டேன். ஜன்னலை சாத்தினா இறுக்கமா புழுக்கமா இருந்தது. அது
 சரிப்படலே. திரும்ப ஜன்னலை திறந்து வச்சேன். பாத் ரூம் போயி குளிர்ந்த தண்ணி ஊத்திண்டு முகத்தை நல்லா அலம்பிண்டு வந்து உக்காந்தேன்.
 அப்போ கொஞ்சம் தூக்கத்தை தடுக்க முடிந்தது. சின்ன டார்ச் கையில்
 வச்சிருந்தேன். அதை வச்சுண்டு புக் படிச்சுண்டு கொஞ்ச நேரம் ஓட்டினென்.
 அந்தகம்மி லைட்டுல சரியா படிக்க முடியல்லே கண்ணெல்லாம் வலிச்சது
 தான் மிச்சம். அரை மணி நேரம்தான் படிக்க முடிஞ்சது. இப்ப பாத்து டைம்
 ரொம்ப மெதுவா போரதுபோலவே இருந்தது.திரும்பவும் போயி முகத்துல
 தண்ணி ஊத்திகிட்டு வந்தேன். வெளில பூரா ஒரே இருட்டு.என்ன பண்ணலாம்னு ஒரே யோசனை.  மதுரை வரும்போது தூங்கிட்டா கஷ்ட்டம்
ஆச்சேன்னு முழிச்சுகிட்டு இருக்க ரொம்பவே முயற்சி செய்ய வேண்டி
 இருந்தது . தூங்கிட்டேன்னா மிடில்ல எழுந்துக்கவே மாட்டேன் டீப் ஸ்லீப்தான்
 மொபைலி அலாரம் வச்சுக்கலாம்னு நினைச்சேன். அது அடிக்கிர சத்ததில்
 என்னைத்தவிர மத்தவங்கல்லாம் தான் எழ்ந்துப்பாங்க.   நான் இல்லே. ஹா  ஹா.

Monday, August 29, 2011

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் (5)

 நங்க நல்லூர் உறவுக்காரா கொஞ்சம் நெருங்கின சொந்தம். அதனால என்னை
யும் அத்தையையும் இரவு அங்கே தங்கிட்டு போச்சொன்னா. மறுக்க முடிலே.
மத்தவங்க தாம்பரம் கிளம்பிட்டாங்க.இரவு என்ன சாப்பிடரீங்கன்னு கேட்டா.
 அப்பவே மணி 8- ஆச்சு. அத்தை எப்பவுமே இரவு2 சப்பாத்திதான் சாப்பிடுவா.
 நான் தினமுமே இரவு ஒரு கிண்ணம் சாதம் கொஞ்சம் நிறையா மோர் விட்டு
 கரைச்சமதிரி 2 க்ளாஸ் குடிப்பேன் அவ்வளவுதான்.காலையும்பிஸ்கெட்டும் இரவு கரைச்ச மோர் சாதமும்தான் எப்பவுமே. அதுரொம்ப வருஷமாவே இப்படித்தான்.அதுதான் வயத்துக்கு ஈசியா இருக்கு. அந்த வீட்டு மாமி என்கிட்ட வந்து நீங்க

Saturday, August 27, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ் (4)

 மறு நாகாலை 3மணிக்கே எழுந்து திருப்பதி பயணம். அது பத்தித்தான்
 இன்னொரு பதிவுல சொல்லிட்டேனே. இங்க மறுபடியும் வேண்டாம்.
 அதுக்கு அடுத்த நாள் வழ்க்கமான காலை வேளை ரசிப்பு. எழுத்துவேலை..
 பாலாஜி தரிசன் எனக்கு கிடைக்காதது, என்னை விட அவாளுக்களுக்குத்தான்
 மிகவும் கஷ்ட்டமா இருந்தது. சொல்லிண்டே இருந்தா. இன்னிக்கு பாத்ரூமில்
 குளிக்காம கிணத்தடிலயே குளிக்கலாம்னு நினைச்சேன். தகர வாளில தாம்பு
 கயிறு கட்டி தண்ணீ கிணத்லேந்து இறைத்து சுகமான குளியல்.கயிறு இழுத்து
 இழுத்து  உள்ளங்கை பூரா காச்சு போச்சு. ஒரே காந்தல். அடுத்த நா கிணத்துல
 தண்ணி இறைக்க மோட்டார் போட்டா. மேல டாங்க ரொம்பியதும் மேலேந்து
 ஓவர்ப்ளோ தண்ணி அருவி மாதிரி ஜோரா கொட்டிட்டு இருந்தது அன்றைய
 குளியல் அருவி குளியல்.(குளியல் பத்தில்லம் கூட பதிவுல எழுதனுமா?)
 அது ஒன்னுமில்லே. சரியான சிட்டி லைஃப், நாலு சுவத்துக்குள்ளயே குளித்
து குளித்து இந்தகிராமத்துக்குளியல் கொஞ்சம் புது அனுபவாமைருந்ததா அதான்.

Thursday, August 25, 2011

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் (3)

சாப்பிட்ட பிறகுஹாலில் எல்லாரும் டி, வி பாத்துண்டு இருந்தோம்.ஓடுகள்
 வேய்ந்த கூரைதான். நல்லா சூடு.அப்போ பின் வாசல் வழியா ஒரு சுண்டெலி
 முன் வாசல் வழியா ரெண்டு பெரிய எலி ஓடி வந்தது. பெட் ரூமிலும் சாமி
 ரூமிலும் ஓடிப்போனது. நான் சேரில் காலை தூக்கி மேலே வச்சுண்டேன்.
 அப்போ வாசல் புறமிருந்து ஒரு பூனை ஓடிவந்து பெட் ரூமுக்குள்ள போயி
 எலியை கவ்விண்டு போச்சு. ஓட்டுமேல பல்லி ஊறுது. கிச்சன் கீழேல்லாம் கரப்பு ஓடுது. என்னது இதுன்னு எனக்கு ஒருமாதிரி ஆச்சு, ஆனா அவாளுக்
 கெல்லாம் தினமும் பாத்து பாத்து பழகின விஷயமா இருந்தது. அதுபாட்டுக்கு
 வரும் போகும் நீ பயப்படாதே நம்மைல்லாம் ஒன்னுமே பண்ணாதுன்னு வேர
சொல்ராங்க.

Tuesday, August 23, 2011

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் (2)

இரவு அவால்லாம் அந்த நீண்ட ஹாலிலேயே ஒரு போர்வை விரிச்சுண்டு
 கீழேயே படுத்துட்டா. எனக்கு கடந்த 20- வருஷமா ஆர்த்த்ரைட்டீஸ் ப்ராப்லம்
 உண்டு.    கால முட்டி மடக்கவே முடியாது. அதனால கீழ உக்காந்து எழுந்துக்கவோ கீழே படுக்கவோ முடியாது. கட்டில்லதான் படுக்கமுடியும்.
 ஒரு ரூம்ல ஒரு இரும்பு கட்டில் போட்டிருந்தா நான் அதில் படுத்தேன். வெண்டி
லேஷனே இல்லே. நல்ல வேர்வைதான். அப்படியும் அலைச்சல் களைப்பு
(ஃப்ளைட்ல வந்துட்டு களைப்பாம்). தூங்கிட்டேன். அவங்கல்லாம் மறு நாள்
 சீக்கிரமே எழுந்து அவங்க வேலை தொடங்கிட்டாங்க. நான் இருக்கும் ரூமில் வெளிச்சமோ சப்தமோ எதுமே வல்லே. 9 மணி வரை தூங்கிட்டேன். 9.30-க்கு
 கரெண்ட் போச்சு. அப்பதான் முழிப்பு வந்தது. யாரும் என்னை எழுப்பவும் இல்லே.கரண்ட்போனாதன்னாலமுழிப்புவந்துடும்னுதான்எழுப்பலேன்னுசொல்ராங்க.

Friday, August 19, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்

ஊருக்கெல்லாம் போய் வந்து அது பத்தி ஏதாவது சொல்லலைன்னா எப்படி?
எனக்கு மெட்ராஸ்னுதான் சொல்லத்தான் வருது. சென்னைனு சொல்லவே வரலே.
  எனக்கு ஒரு குணம், என் பசங்க வீட்லகூடவே போயி ஒரு நாள் தான் தங்க
 முடியும். சனிக்கிழமை சாயங்காலம் போனா,சண்டே எல்லாரும் வீட்ல இருப்பாங்க. ஒரு நா பூரா அவங்க கூடவே இருந்துட்டு அன்னிக்கு சாயங்காலமே
 கிளம்பிடுவேன் . அப்ப்டி இருக்கும்போது தூரத்து சொந்தக்காரங்க வீட்டில்
 எல்லாம் போயி ஒரு வாரம் 10 நாட்கள் எல்லாம் என்னால தங்க முடியுமான்னு
 ஒரே யோசனைதான் முதல்ல இருந்தது. என் ஃப்ரெண்ட்( அதான் என் அத்தை)
 ரொம்ப கூப்பிட்டா. வாடி அப்படியே நம்ம ஊர்பக்கமும் போயிட்டு வரலாம்னா.

Tuesday, August 16, 2011

சினேகிதியே,,,, சினேகிதியே.......
                             
 நானும் என்ஃப்ரெண்டும் கடந்த 65- வருடங்களாக நெருங்கிய தோழிகள்.
  நாங்க, பிறந்தது, வளர்ந்தது, ஒத்துமையா , கட்டிப்பிடித்து சந்தோஷங்கள்
 பட்டது அடிச்சு பிடிச்சுண்டு சண்டை போட்டுண்டது எல்லாமே ஒரே வீட்டில்.
  ஆச்சரியமா இருக்கு இல்லியா. அவ வேர யாரும் இல்லீங்க.என் அப்பாவின்
 கடைசி தங்கைதான் அவ. எங்க ரெண்டு பேருக்குமே ஒரு 6- மாசம்தான் வித்
 யசம் வயசுல. அவளுக்கு அவ அம்மாஅவளோட4வயசுலேயேஇறந்துட்டாங்க.
 என் அம்மாதான் அவங்க 7- குழந்தைகளுடனும் அவளையும் 8-வதுகுழந்தையா
 நினைத்து வளர்த்தாங்க.அம்மா இல்லாத குழந்தைன்னு அவளுக்கு அதிகச்
சலுகைகள் காட்டுவாங்க. நாங்க இருவரும் கிட்டத்தட்ட ஒரே வயசுன்னால
எங்களுக்கு எல்லாமே சமம்மா தான் செய்வாங்க. பாக்கப்போனா அவளுக்கு
 ஒரு படிமேலாகவே கவனம் கொடுப்பாங்க. நகையோ, துணிமணியோ எல்லாமே எங்க இருவருக்கும் ஸேமா எடுப்பங்க. ட்வின்ஸ் மாதிரி ஒன்னுபோல அலங்காரங்கள் செய்வாங்க. எங்க இருவரையும் எங்கயுமே
 தனியே பாக்க முடியாது. சேர்ந்தாப்போலவே சுத்துவோம்.
Saturday, August 6, 2011

எங்க ஊரு நல்ல ஊரு (தொடர் பதிவு)

அஸ்மா தொடர்பதிவுக்கு அழைச்சிருக்காங்க. நன்றி அஸ்மா.
 யாரெல்லாம் என்னெல்லாம் சொல்லி இருக்காங்கன்னு பொயி
 பாத்துட்டு தான் வந்தேன். எல்லாரும் ஹிஸ்ட்ரி, ஜாகர்பி என்று
 கல்ந்துகட்டி அவங்க, அவங்க ஊரு பத்தி கலக்கி இருக்காங்க.
 எனக்கு ஹிஸ்ட்ரி, ஜாகர்பின்னா என்னன்னே தெரியாது. எனக்கு
 தெரிந்த விதத்தில் எங்க ஊருபத்தி சொல்ரேன்.


எங்க ஊரு க்ரேட் கல்லிடைக்குறிச்சி. திருனெல் வேலி ஜில்லாவில்
 இருக்கு. கல்லிடை ஒரு சின்னகிராமம்தான்.பக்கத்தில் உள்ள சற்றே
 பெரிய ஊரு என்றால் 35 கிலோ மீட்டரில் இருக்கும் திரு நெல் வேலி
 தான். ஒரு சமயம் ஜகத்குரு காஞ்சி பரமாச்சாரியார் அவர்கள் பாத
 யாத்திரையாக அந்தபக்கம் வந்தப்போ நாதஸ்வரத்தில் கல்யாணப்
 பாடல்கள் வாசிக்கும் சப்தம் அவர்கள் காதில் கேட்டதாம். அதனால
 அந்த ஊருக்கு கல்யாண்புரி என்று நாம கரணம் சூட்டினார்களாம்.
  விட்டதாம். இது பெய்ர்காரணம். நாளாவட்டத்தில் கல்லிடைக்
 குறிச்சியாகி விட்டது.

Friday, August 5, 2011

மூணு, மூணாய்த்தான் சொல்லனுமாம்.(தொடர்பதிவு)

கீதா சாம்பசிவம் தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்து படிக்கும் உங்க எல்லாரையும் என்கிட்ட
மாட்டிக்க வச்சுட்டாங்க. விதி யாரை விட்டது.படிங்க, படிங்க படிச்சுகிட்டே இருங்க.

விரும்பும் மூன்று விஷயங்களில் எதைச்சொல்ல?

சின்ன வயதில் எழுதப்படிக்கத்தெரியாத குறையை இப்போ இந்த வயதில் எல்லா புத்தகங்களையும்
படித்துமுடிக்க நினைப்பேன். சமைக்கும்போதும் சாப்பிடும்போதும், டி, வி பாக்கும்போதும்கூட
ப்ளாக் எழுதும்போதும்கூட இடதுகையில் ஏதாவது ஒரு புத்தகம் கூடவே பிறந்தத் 6-வது விரல் போல
ஒட்டிக்கொண்டே இருக்கும். முதல் விருப்பம் புக்ஸ்.

அடுத்து எனக்கு ம்யூசிக் ரொம்பவே இஷ்ட்டம். கீபோர்டில் தெரிந்த எல்லா பாடல்களையு கற்றுக்கொள்ள
ரொம்பவே விருப்பம். கற்றுக்கொடுக்கத்தான் யாருமே கிடைக்கலே.கீ போர்ட் கூட பசங்க வாங்கி தந்தாங்க. தினசரி அதைதட்டிண்டு இருப்பேன். அதில் சிறப்பாக கத்துக்க ஆசை யாரானும் எனக்கு கத்து தரீங்களா? யாரு என் கிட்ட மாட்டிக்கப்போரீங்க?

அடுத்து இயற்கை கட்சிகளை ரசிப்பது. விடிந்தும் விடியாத காலைப்பொழுது பறவைகளின் உற்சாக
கீச் கீச் குரல்கள் ரொம்பவே நான் விரும்பும் விஷயம்.

Thursday, August 4, 2011

உன்னைச்சொல்லி குற்றமில்லை.

ஒருமாச லீவு முடிந்து திரும்ப உங்களை எல்லாம் சந்திக்க வந்துட்டேன்.
யாவரும் நலம் தானே? ரெண்டுபேரு தொடர்பதிவுக்கு அழைப்பு கொடுத்தி
ருக்காங்க.. முதலில் என்னை பாதித்த ஒரு சம்பவம் சொல்லிட்டு பிறகு
தொடர் பதிவுக்கு வருகிரேன்.திருப்பதி பாலாஜி தரிசனத்தில் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு அனுபவம் சொல்லி இருக்காங்க. இது என் அனுபவம். சென்னை
போய் இறங்கியதும் அடுத்த நாளே திருப்பதி போகலாம்னு வண்டில்லாம் புக்
பண்ணினோம். சென்னை தாம்பரத்தில் இருந்து, திருப்பதி போக வர ஒரு
ஆளுக்கு 2000- ரூபா.காலை ப்ரேக் ஃப்ஃஃஸ்ட், மதியம் லஞ்ச், தரிசன க்யூவில்
நிக்க 300 ரூபா எல்லாம் அவா செலவு என்றார்கள். மறு நா காலை 3 மணிக்கே
எழுந்து குளித்து 4 மணிக்கு ரெடி ஆகி வீட்டிலிருந்து 2- கிலோ மீட்டரில் இருந்த
பொது பஸ் ஸ்டாண்ட் போகவேண்டி இருந்தது. ரெண்டு ஆட்டோ காரர்களை 4 மணிக்கு
வரச்சொன்னோம். நாங்க பெண்கள் 3 பேர்,ஆண் ஒருவர் என்று 4 பேர் போனோம்


விடிகாலை வருவதால் ஆட்டோக்காரா கூடகொஞ்சம் பணம் கேட்டா. சரின்னு கொடுத்து
பஸ்ஸ்டாண்ட் 4.30-க்கு போய்ச்சேர்ந்தோம். புக் பண்ணின இன்னோவா வண்டி ரெடியாக
இருந்தது.கொஞ்சம் பெரிய வண்டிதான். பின்னாடி ரெண்டு பேரு, நடுவில் ரெண்டு பேரு
ட்ரைவர் சீட் பக்கமும் ஒருவர் உக்காரலாம்.காலை சரியாக டயத்திற்கு வண்டி கிளம்பியது.
அதிகாலைப்பயணம் எப்பவுமே ரசனைஇகுகந்ததாகவே இருக்கும். இருட்டு பிரியாத அதிகாலை
நேரம் மெல்லிசாக பூந்தூரலுடன் பயணம் இனிமையாக ஆரம்பமானது.பாட்டும் கேட்டுக்கொண்டே
சுகமான பயணம்.அரை மணி ஓடியதும் பரங்கி மலையில் வண்டி நின்னது, அங்கும் ஒருஆள்
ஏறிக்கொண்டார். தன்னை நகை வியாபாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். புது நகை
பண்ணும் போது வெங்கடாசலபதி கால்களில் வைத்து ஆச்சிர்வாதம் வாங்குவாராம். மாசம்
ஒருமுறை திருப்பதி சென்று வருவேன்னு சொன்னார்,

5.30 ஆனதும் இருட்டுப்பிரிந்து வெளிச்சம் சூழும் அழகான நீல ஆகாயம் கண்கொள்ளாக்காட்ச்சி
பறவைகளின் இனிய கானங்கள் என்று அற் புதமான காலைப்பயணம்.மிகவும் ரசித்துக்கொண்டு
கல கலப்பாக சந்தோஷமாகப்பேசிக்கொண்டுசென்றோம். 7.30- மணிக்கு ஆண்டாள் குப்பம்
என்னும் ஊர் வந்தது. அங்கு சரவண பவன் ரெச்டா ரெண்டில் ப்ரேக் ஃப்ஃஃஸ்ட் சாப்பிட்டோம்.
சின்ன ரெஸ்டாரெண்ட்தான். ஆனா சுத்தமாக வும் சுவையான சிற்றுண்டியுடனும் இருந்தது.
அங்கேந்து 8 மணி திரும்ப பயணம் தொடர்ந்தோம்.வழியில் குபேரகனபதி கோவில், முனீஸ்வரன் கோவில் தரிசனங்கள்.காலை வேளை இனிமையான பாடல்கள் கேட்டுக்கொண்டு பயணம் செய்து
கொண்டே இருக்கலாம் போலைருந்தது. எனக்கு எப்பவுமே ரோட் ஸைட் ட்ராவல்ஒத்துக்கொள்ளாது.
பஸ்ஸோ, ஏசி காரோ ஏதானாலும் வயத்தைக்குமட்டிண்டுவரும். பெட்ரோல் வாடை சகிச்சுக்கவே
முடியாது. கயில் எலுமிச்சம் பழம், இஞ்சி முறப்பா, ஆரஞ்ச் வில்லை என்று எல்லாம் ரெடியா
கொண்டு போனோம். 9.30-க்கு கீழ் திருப்பதி வந்தது.பிறகு மலை ஏற்றப்பாதை வளைந்து நெளிந்து
செல்லும்போது எனக்கு த்லை சுத்திண்டு வந்துடுத்து.கூடவே ப்ளாஷ் பேக் நினைவுகளும் கூடவே.

என் வீட்டுக்காரர் இருந்தப்போ 30- வருஷம் முன்பு திருப்பதி வருஷா வருஷம் போவோம். அதன்
பிறகு இவர்போன பிறகு இப்பதான்வரேன். நிறைய மாற்றங்கள். திரும்பின பக்கமெல்லாம்குடியிருப்பு
வசதிகள். ஹோட்டல்கள் சில பொழுதுபோக்கு இடங்கள்.என்று ஜொலிக்கரது.10.30 மேல போயிச்
சேர்ந்தோம். காரை ஒரு இடத்தில் நிப்பாட்டிட்டு கோவில் போக ஒரு பேட்டரி காரில் ஏறிக்கொண்டு
கோவில் வாசல் போனோம். வண்டி நிக்கும் இடத்திலிருந்து கோவில் கொஞ்சம் தள்ளியே இருந்த
தால பேட்டரி காரில் பயணிகளை கூட்டி ச்செல்கிரார்கள். வாசலிலிருந்தே அனுமார் வால் போல
நீண்ட க்யூ வரிசை. நாங்களும் அதி சேர்ந்து கொண்டோம். க்யூ நிக்குமிடம் ஒரே அடைசலா இருந்தது. பாதிபேரு அங்கே போட்டிருந்த சேரில் உக்காந்து இருந்தா. பாக்கி எல்லாரும் வரிசையில்
கால் கடுக்க நிக்கதான் வேண்டி இருந்தது.முதலில் 11 மணிக்கு உள்ள விடுவான்னு கும்பலில்
சிலபேரு பேசிண்டா. 11.30 வரையிலும் உள்ள விட ஆரம்பிக்கவே இல்லே. காலு சுகமா வலிக்க
ஆரம்பிச்சது.

சிறுவர், பெரியவர், வயதானவா என்று நிறைய பேரு நிக்கமுடியாம நெளிந்து கொண்டு இருந்தோம்
ஒரு வழியா 12.30க்கு டவாலி ஆட்கள் வந்து ஒவ்வொரு வரையா வரிசையாக செக் செய்து உள்ளே
அனுப்ப ஆரம்பித்தார்கள்.க்யூ மெதுவாக நகர்ந்தது. எங்க முறை வர அரை மணி நேரம் ஆச்சு.
நாங்க 4 பேருமே 60 வயதைக்கடந்தவர்கள். எங்க முறை வந்ததும் எனக்குமுன் போன சொந்தக்காரா
ஆண் 70 வயசுக்காரர். அவரை எதுவும் கேக்காம உள்ளே அனுப்பினா. அடுத்தெரெண்டு பெண்களில்
ஒருவர் பைபாஸ் ஆபரேஷன் பன்னிண்டு இருந்தவர். ஆட்களை செக் செய்பவர்கள் அவர்களிடம்
ஐ டி கார்ட் கேட்டார். அவா இருவரும் ஆபரேஷன் தழும்புகளைக்காட்டினதும் அவர்களை உள்ளே
அனுப்பிட்டா. என் முறை வந்ததும் ஐ டி கார்ட் கேட்டா. நான் எதுக்கு ஐட் கார்ட் கேக்கரீங்கன்னு
கேட்டேன். உண்மையில் நீங்க சீனியர் சிட்டிசன் தானான்னு தெரியனுனாங்க.ஏங்க எங்க நரைச்ச
தலைமுடியும் தள்ளாடும் நடையப்பாத்தாலே 60 வயசுக்கு மேல உள்ளவங்கன்னு தெரியுமே அதுக்கு
எதுக்கு ஐடி கார்டு கேக்குரீங்கன்னேன்.அதெல்லாம் கிடையாது எங்க ரூல் நாங்க ஃபாலோ பன்னனும்
என்று அசட்டுத்தனமா பிடிவாதம் பிடிச்சாங்க.

எனக்கும் கோவம் வந்தது. என்னங்க இது நீங்க சாமி பாக்க ஆட்களை உள்ள விடுரீங்களா இல்லே
இண்டெர்வ்யூ நடத்தி வேலைக்கு ஆள் எடுக்குரீங்களா சாமி தரிசனம் பண்ண் அஎங்கேந்தெல்லம்மொ
எவ்வளவோ கஷ்ட்டங்கள் பட்டு நாங்க வந்தா இது என்ன புதுசா ஐடி எல்லாம் கேக்குரீங்க என் பான்கார்ட் இருக்கு வண்டில மறந்துட்டேன் நானும் ஹார்ட் பேஷண்டுதான்னு எவ்வளவோசொல்லியும்
தயவு தாட்சனியமே இல்லாம அவுட் வெளிய போன்னுட்டாங்க.கூடவந்தவங்கல்லாம் இது எதுவும்
தெரியாம தரிசன க்யூவில் கல்ந்துட்டாங்க. எனக்கு உள்ளே போக அனுமதியே கிடைக்கலை
ஒருபுறம் அழுகை ஒரு புறம் அவமானம்னு மனசு ரொம்ப கஷ்ட்டமாச்சு.கார் ட்ரைவர் கோவில்
வாசலிலேயே நின்னுண்டு இருந்தான். நான் வெளியே வருவதைப்பாத்து என்னன்னு கேட்டான்
சொன்னேன்.சீனியர் சிட்டிசனுக்கு சவுரியம் பண்ராங்கம்மான்னு சொல்ரான் இதுக்குபேரு சவுரியமா
மாடி மாடி யா ஏறி வேர ஏதானும் க்யூ வில் என்னைச்சேர்த்து விடமுடியுமான்னு பார்த்தான்
300 கொடுக்கவேண்டிய தரிசன்க்க்யூவில் 1000- ரூபா கொடுத்தா உள்ளே விடரேன்னு பேரம் பேசு
ராங்க. எனக்கு இப்படி லஞ்சம் கொடுத்து சாமி பாக்க வேண்டிய அவசியம் இல்லேன்னுட்டேன்.

ஆகா மலை எற்றி கோவில் வாசலில் வந்தவளை கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளினது போல இருந்தது.மனசு எவ்வளவு வலித்திருக்கும். யாரைச்சொல்வது. அந்தசாமியையா, இல்லை இந்த ஆசாமி களையா? இந்த ஆசாமி களையும் ஆட்டி வைப்பதும் அந்தசாமி தானே. அதுதான் உன்னைச்சொல்லி குற்றமில்லை என்னைச்சொல்லி குற்றமில்லை.

Saturday, June 25, 2011

சிக்கனம்தீபாவளிக்கு போனஸ் உண்டுதானே?ஏன் இல்லாம, வழக்கம் போல அதெல்லாம் உண்டு.ஏன் கேக்கரே? அதில்லே எல்லா வருஷமும் இங்க உள்ள ஒரே துணிக்கடையில்துனி எடுக்கரோம். அவன் என்ன விலை சொல்ரானோ அதுதான் விலை.எல்லாத்லயும் கூட்டி கூட்டி விலை சொல்லுவான்.இவன் கடையை விட்டாவேரகடையும் இங்க கிடையாது. எல்லாருமே இவன்கடையில் தான் துணிஎடுக்கரா இல்லியா. யூனிபார்ம் போல அனேகமா எல்லாருமே ஒரே டிசைனில்டிரஸ்போடுவோம். இந்த வாட்டி நாம் சிட்டில போயி துனி எடுக்கலாமே.

Tuesday, June 21, 2011

தனக்கொரு நீதி.

இந்த டீச்சர்கள் எல்லாம் என்னதான் வேலை ப்ண்ராங்களோ. ஒன்னாம் வகுப்பு
குழந்தைகளுக்கு எவ்வளவு ஹோம் ஒர்க் கொடுக்கரா.?குருவி தலெல பனங்காய்
 மாதிரி. வர, வர கேள்வி கேப்பாரே இல்லே.ஆனா அந்தப்பிஞ்சுகளுக்கு பாடம்
சொல்லிக்கொடுப்பதெல்லாம் அம்மாக்கள்தான்.

டீச்சருக்கு கொடுக்கர சம்பளமும் சலுகைகளும் சுத்த வேஸ்ட் தான். ஒரே
 வேளைதான் ஸ்கூலு, கை நிறைய சம்பளம்,சம்பளத்தோட ஒருமாச லீவு
வேர, இவ்வளவு சௌரியம் கிடைக்கரவா குழந்தைகளை கவனிச்சு பாடம்
சொல்லிக்கொடுக்கக்கூடாதோ? வருவா, போர்ட்ல பேருக்கு ஏதானும் கிறுக்கிட்டு பசங்களை காப்பி பண்ண சொல்லிட்டு அவங்க ஹாயா ஒரு
 நாவலோ, இல்லைனா ஏதானும் கை வேலைகளிலோ மூழ்கிடுவாங்க.
நம்ம காலத்திலயும் ஸ்கூல் போயிருக்கோம். இப்படியா? டீச்சர்னாலே
என்ன ஒரு மதிப்பு, மறியாதை பயம் எல்லாம் இருந்தது.அவங்களும் குழந்தை
களை கவனிச்சு பாடம் சொல்லிக்கொடுப்பாங்க.

வீட்ல சொல்லிக்கொடுத்தா பசங்க எங்க படிக்கராங்க?ஸ்கூல் அனுப்பினா நல்ல படிப்பு கிடைக்கும் அவங்க வயசொத்த குழந்தைகள்கூட பழக வாய்ப்பு
கிடைக்கும்,ஒருவரைப்பார்த்து ஒருவர் போட்டி போட்டு நல்ல படிப்பாங்கன்னுதானே ஸ்கூலுக்கே அனுப்பரோம். இதுக்கும் மேல பிரைவேட்
 டியூஷனுக்கு வேர அனுப்பவேண்டி இருக்கு.குழந்தைக எதிர்காலம் முக்கியம் இல்லியா? ஆரம்பத்திலேயே கோச்சிங்க் நல்லா இல்லைனா என்ன பண்ரது?

அன்று மரகதம் வீட்டில் கூடிப்பேசிக்கொண்டிருந்தவர்களின் காரசார உரை
 யாடல்தான் மேலே பார்த்தது.10-பேர்க சேர்ந்து மாதம் ஒரு தொகை சீட்டு
 போடுவாங்க. குலுக்கிப்போட்டு அந்தந்தமாசம் சீட்டு விழுந்தவங்க வீட்டில்
 எல்லாரும் கூடி இதுபோல ஏதானும் பேசிக்கொள்வார்கள். இன்று அவர்களின்
பேச்சில் பாவம் டீச்சர்கள் மாட்டிக்கொண்டார்கள்.அந்தமாதம் மரகத்துக்கு
 சீட்டு விழுந்தது. ஏக குஷியில் எல்லாருக்கும் ஸ்வீட், காரம், காஃபி கொடுத்து
 உபசரித்தாள் மரகதம்.

இப்படி மாதம் ஒரு மெம்பர்வீட்டில் கூடுவார்கள்.  பேசிமுடித்து காஃபி டிபன்
முடிந்து கலைந்து சென்றார்கள். அடுத்தமாதம் கல்யாணிக்கு சீட்டுப்பணம்
 குலுக்கலில் விழுந்தது. மறுபடியும் எல்லாரும் அவர்கள் வீட்டில் கூடி
 அரட்டையில். அன்றும் தொடராக டீச்சர்ஸ் பற்றிய பேச்சே ஆரம்பித்தார்கள்.
 உடனே மரகதம். என்ன நீங்கள்ளாம் ஒரு தலையாக டீச்சர்ஸ் மேலயே பழி
போடரிங்க. அவளும் மனுஷிதானே. ஒரு க்ளாஸ்ல புளிமூட்டை மாதிரி
 40, 50 குழந்தைகளைச்சேர்த்தா, அவதான் என்ன பண்ணுவா? ஒவ்வொருவரையும் தனிதனியா கவனிக்கவா முடியும். நம்மகாலத்ல எல்லாம் ஒருக்ளாஸ்ல மிஞ்சி, மிஞ்சி போனா 15, 20 குழந்தைகளுக்கு மேல
 இருக்கமாட்டா. ஒவ்வொரு குழதைகளையும் தனியா கவனிக்க முடியும்.


அதுதவிரஅன்னன்னிக்குஎன்னபாடம்நடத்தினா,என்னசொல்லிக்கொடுத்தான்னு
பிரின்சிக்கு நோட்ஸ் எழுதி சப்மிட் பண்ணனும். படம் வரைஞ்சு பாடங்களுக்கு
சார்ட் பேப்பர்லாம் ரெடிபண்ணனும், ஒருமாசம் லீவுலயும் அடுத்த வருஷத்தோட புதுஅட்மிஷனுக்கு எல்லாம் ரெடிபண்ணனும்னு அவாளுக்கும்
தலைக்குமேல வேலைகள் கொடுத்துடுவா.பரீட்சை சமயம் அந்த டீச்சர்கள்படும் அவதி சொல்லி முடியாது..பாவம் அவக்களைப்பற்றி வாய்க்கு
 வந்தபடி பேசாதீங்கன்னு பொரிந்து தள்ளி விட்டாள். மற்றவர்களுக்கோ ஒரே
ஆச்சரியம். என்னது இது,  நேத்துவரை டீச்சர்களை மட்டம்தட்டிண்டே இருந்தா
  இன்னிக்கு என்ன ஆச்சு? ஒரே அடியா அவங்களுக்கு சப்போர்ட்டா பேசரா?

இப்படி எல்லாரும் யோசித்துக்கொண்டிருக்கும் போது மரகதத்தின் பெரிய
 பெண் சுஜி ஒரு பெரிய சாக்லெட் டப்பாவுடன் அங்கு வந்து அனைவருக்கும்
 சாக்லெட் கொடுத்துவிட்டு ஆண்டி எனக்கு நம்ம ஸ்கூல்ல டீச்சர் வேலை கிடைச்சிருக்குன்னு சந்தோஷமாகச்சொல்லவும், எல்லார்முகங்களிலும்
 ஓ, அப்படியா விஷயம். அதான் மரகதம் டீச்சகளுக்கு சப்போர்ட்டா பேசராளா?
அப்போ சரிதான். என்று கலைந்து போனார்கள்.

Tuesday, June 14, 2011

சின்ன சின்ன ஆசை.ஒரு குயர் ரூல்ட் பேபர், பார்க்கர், சியெல்லொ,ரேனொல்ட் என்றுவகைக்கு ஒரு
பேனா, ஃப்ளாஸ்க் நிறையா சூடாஸ்ட்ராங்கா காஃபி, கொறிப்பதற்கு கொஞ்சம்
கடலை, சாக்லெட் என்று டேபிள் பூராவும் பந்தாவாக பரப்பி வச்சுண்டு கூடவே
மாதாந்திர வாராந்திர தமிழ் பத்திரிக்ககளையும் எடுத்து வச்சுண்டு உக்காந்தேன்.நல்லா வசதியாக குஷன் சேரில் ஹாயாக சாய்ந்து உக்காந்துஐபாட்டையும்காதில் சொருகிண்டேன்.குன்னக்குடி, நாமகிரிபேட்டை,கத்ரி கோபால் நாத்காயத்ரி வீணை, மாண்டலின் சீனிவாஸ் எல்லாரையும் துணைக்கு வச்சுண்டேன்.
இது தவிர, ஹிந்தி ,தமிழ்,பாட்டுக்களையும் விட்டு வைக்கலை.

Tuesday, June 7, 2011

வலைச்சரம் ஆசிரியர்.

அன்பான நண்பர்களே இன்றுமுதல் என்னை வலைச்சர்த்தில் ஆசிரியராக
 நியமித்துள்ளார்கள்.எல்லாரும் அங்கும் வந்து கருத்துக்களைக்கூறி என்னை
உற்சாகப்படுத்தவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_07.html

Sunday, June 5, 2011

சாப்பாடு”ஒரு அவசரம் , அவசியம் என்றால் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டீங்களா?”

”எனக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போடுன்னு சொன்னா அது குத்தமா?”

”இன்னிக்கு எனக்கு சீக்கிரமா கிளம்பணும். அதுதான் சிம்பிளா பண்ணினேன்.”

“அவசரமென்றால் கொஞ்சம் சீக்கிரமா எழுந்து தயார் செய்துக்கணும். எதுக்கு

என்னை வாயைக்கட்டச்சொல்ரே?”

Saturday, May 28, 2011

அதிர்ஷ்ட்டம் என்பது.


போன வருஷம் ஒரு எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், பிரெஸ்டிஜ் ஸோடது  வாங்கினேன். எனக்கு வேண்டியபடி சின்னதாக அரை லிட்டர் குக்கர்
வாங்கினேன். எந்தப்பொருள் வாங்கினாலும் அடுத்த நாளே உபயோகப்
படுத்திப்பார்ப்பது என் வழக்கம். ஏதானும் ப்ராப்லம் இருந்தா உடனே போயி
சொல்லிடலாம் இல்லியா? அதுபோல அந்தக்குக்கரையும் மறு நாளே யூஸ்
 பண்ணினேன். சின்னதா, அடக்கமா நல்லா இருந்தது. டைம் அட்ஜெஸ் மெண்ட்
எல்லாமே ஆட்டோமேடிக்.அரை டம்ளர் அரிசி அலம்பி அதில் சொன்னபடி
 அரை மணி நேரம் ஊறவச்சு குக்கரில் போட்டு வேண்டியதண்ணீரையும்விட்டு
குக்கரை மூடி ஸ்விட்ஸ் ஆன் பண்ணினேன். அதுவே டைம் செட்பண்ணிக்கும்.
 நமக்கு ஒரு வேலையும் இல்லே. நாம வேர வேலையை பாக்கப்போயிடலாம்.

Thursday, May 19, 2011

மலரும் நினைவுகள்(15)குழந்தைகளுக்கு ஸ்கூல் திறந்து 10 நாட்களில் டிரான்ஸ்பர் வந்ததால பாதில
போக முடியாதுஎல்லாரும். அவர் மட்டும் முதலில் போயி ட்யூட்டி ஜாயின்
 பண்ணி ஒருவருஷம் அங்க தனியா இருக்கவும், நாங்கல்லாம் ஒரு வருஷம்
கழிச்சுபோலாம்னுநினைச்சோம்.இவர்குடும்பத்தைப்பிரிந்துஇருந்ததேஇல்லை.தவிர என்னை வெலி வேலைகள் எதுக்குமே அனுப்பினதும் இல்லை.வீட்டோடசரி. நான் எப்படி வீட்டு வேலை, வெளி வேலைகள் சமாளிப்பேனு அவருக்குரொம்ப க்கவலை. எப்படி சமாளிப்பேன்னு திரும்பதிரும்பக்கேட்டுண்டே இருன்தார். நான் பாத்துக்கரேன், நீங்கபோயிட்டு வாங்கோன்னு சொல்லி அவருக்குத்தெவையான எல்லா சாமனும் பேக் பண்ணி அனுப்பினேன். அரைமனதாகத்தான் கிளம்பி போனார்.

Monday, May 16, 2011

மலரும் நி்னைவுகள்(14ஒருவழியா போர் அமர்க்களம் எல்லாம் ஓய்ந்த பின்னும் கூட அதனால்எற்பட்ட தாக்கம் குறையவே இல்லை. வெளி மார்க்கெட்டில் விலைவாசிகள் குரையவே இல்லை. ரேஷனில் என்ன பொருட்கள் கிடைக்கிரதோ அதில்தான் சமாளிக்க வேண்டி வந்த்து. எங்க குடும்பத்திற்கு ரேஷனில்கிடைக்கும்பொருட்கள் போதும் போதாததாகவே இருந்தது.வளரும் குழந்தைகள் நல்லா சாப்பிடும் வயது, எதைக்குறைப்பது? பார்க்கப்போனால்

அனாவசியச்செலவுஎன்றுசொல்லும்படிஎதுவுமேகிடையாது.அத்தியாவசியச்செலவுகளையே சமாளிக்க முழி பிதுங்கும். குழந்தைகளின் ஸ்கூல் ஃபீஸ் யூனிஃபார்ம், பாடபுத்தகங்கள், நோட்புக்ஸ், சாப்பாடு என்று எல்லாமே தேவையான செலவுகள்தான்.

Wednesday, May 11, 2011

மலரும் நினைவுகள்(13கடன் இல்லாத வாழ்க்கை அமைதியாக நடந்தது. அந்த சமயங்களில்தான், இண்டியா, பாகிஸ்தான் வார் இண்டியா சீனாவார் எல்லாம் வந்தது.ஊர்பூராவும் கர்ஃப்யூ,இரவு ஒரு வீட்டிலும் லைட்எறியக்கூடாது என்று ஏக கெடுபிடிகள். எல்லா சாமான்களுக்கும் ரேஷனும்வந்தது. வெளியில் ஓபன் மார்க்கெட்டில் சாமான்கள் யானை விலை குதிரைவிலை சொல்வார்கள். ரேஷனில் என்னகிடைக்கிரதோ அதைத்தான் வாங்கிவருவோம். கோதுமை சோளம் எல்லாம் தருவார்கள். அரிசி மட்டும் ஐந்துகிலோதான் கிடைக்கும். சோளத்தில்தான் இட்லி, தோசை எல்லாம் பண்ணனும்.

Saturday, May 7, 2011

மலரும் நினைவுகள்(12)இந்த சமயம் நான் என்ன பண்ணனும், சரியான முடிவு எடுக்கணும்கடன் இல்லாத வாழ்க்கைக்கு என்ன செய்வதுன்னு ரொம்பவேயோசிக்க வேண்டி வந்தது.இவருக்கு வரும் சம்பளம எங்க அன்றாட செலவுகளுக்கே போதும் போதாத நிலைமை.அதில் கடனுக்கு வட்டியும் கட்ட முடியாது,கடனையும் அடைக்முடியாது. பிறகுதான் ஒரு துணிச்சலான முடிவு எடுத்து அவரிடம்
சொன்னேன். அதாவது ஊரில் இருக்கும் நிலம், வீடு வித்துடலாம்
ஊர்ல என் தாத்தா இருக்கும் வரை அவர் மேற்பார்வை பார்த்து
வந்தார். இப்ப கவனிக்க ஆளும் இல்லை அதிலிருந்து எந்த வரும்
படியும் இல்லே. சும்ம அதை வச்சுண்டிருப்பதில் அர்த்தமில்லே அதை
வித்துடலாம் என்ரேன். அவர் ஒத்துக்கவே இல்லை. பெரியவா கஷ்டப்
பட்டு சேத்து வச்ச சொத்து, எப்படி விக்கமுடியும்? என்று ரொம்பவே
தயங்கினார். பெரியவங்க குழந்தைகளுக்கு சொத்து சேர்க்கிரதே ஒரு
கஷ்ட காலங்களில் உதவுவதற்காகத்தான் தவிர நாமும் அனாவசியமா
செலவு செய்துட்டு ஒன்னும் கடன் வாங்கலியே? நீங்க சம்பாதிச்சு இதை
விட அதிகமா சொத்து சேர்க்கமுடியுமே. பணம் எப்ப வேணாலும் சம்பா
திச்சுக்கலாம். இப்பத்திய அவசர தேவைக்கு இதைத்தவிர வேர வழி இல்லை.

Wednesday, April 27, 2011

மலரும் நினைவுகள்(11)அந்த அமர்க்களமெல்லாம் ஒருமாதத்தில் ஓய்ந்தது. இவரும் புது வேலையில்சேர்ந்துபோஆரம்பித்தஅடுத்தவருடம்மாமியாரும்போயிட்டாங்க. ஒருதீபாவளி நாளில். அதுபற்றி விவரமாக ”காஃபி” என்றபதிவில் ஏற்கனவேபோட்டிருக்கேன்.அதுக்கும்( கடைசி காரியங்களுக்கு) ஏகச்செலவு ஆனது.இவ்ரோட ஒரு சம்பளத்தில் குடும்பம் நடத்தி ஆகணும்.என்வரை வரவு செலவுசொல்லமாட்டார். என்னை வெளியிலேயே அனுப்பமாட்டார். எல்லா சாமான்களும் காய்கறிகளும்பாலும் அவரேதான் வாங்குவார். என்ன வரவு என்ன செலவுன்னு அப்பவும் எனக்கு தெரியலை.குழந்தைகளை ஸ்கூலில் சேர்த்தோம். 5 குழந்தைகளை படிக்கவைத்து, துனிமணி எடுத்துக்கொடுத்துசாப்பாடு போட்டு வளர்ப்பது அவ்வளவு ஈசியான வேலை இல்லைதான். நானும் குழந்தைகள்படிக்கும்போது கூடவே உக்காந்து படிக்க ஆரம்பித்தேன்.மராட்டி, ஹிந்தி, இங்க்லீஷ் எல்லாம் ஆரம்பத்லேந்து படித்தேன். தமிழ் படிக்கத்தான் வாய்ப்பே கிடைக்கலை.5 வயசுல படிக்கவேண்டிய பாடங்கள் எல்லாம் 25 வயசில் படிக்க ஆரம்பிச்சேன். ஒன்னொன்னா தெரிய, தெரிய எனக்கே ரொம்ப சந்தோஷ்மா இருந்தது.கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் என்று எல்லாம் குழந்தைகள் மூலமாகதெரிஞ்சுண்டேன். நயாபைசா பற்றியும் ஓரளவு தெரிஞ்சுண்டேன். இவர் கடையில் இருந்து சாமான்வங்கிவந்ததும் இது என்ன விலை இது என்ன விலைன்னு கேட்டு தெரிஞ்சுப்பேன். மூடு இருந்தாசொல்வார். இல்லனா இதெல்லாம் தெரிஞ்சு என்னபண்ணப்போரேன்னுடுவர்.

Thursday, April 21, 2011

மலரும் நினைவுகள்.(10)

புது வேலையில் சேர ஒருமாதம் அவகாசம் இருந்தது. ஏற்கனவே
 பார்த்துவந்தவேலையும் செண்ட்ரல் கவர்மெண்ட் வேலைதான்.
 இன்னிக்கு சொல்லி நாளை வேலையை விட முடியாது. சில பார்
 மாலிட்டிஸ் எல்லாம் உண்டு. ஒருமாத நோட்டீஸ்கொடுக்கணும்.
 அந்த ஒருமாதமும் வேலைக்குப்போகணும்.எல்லாம் முறைப்படி
 செய்தார். அப்படி ஒரு நாள் காலை வேலைக்கு கிளம்பி போனதும்
 வீட்லேந்து 5, கிலோமீட்டர் உள்ள டெக்கன் ஜிம்கானா என்னுமிடத்தில்
 சைக்கிள் செயின் கட் ஆச்சு. சைக்கிளை அங்கு ஸ்டேண்டிலேயே
 வச்சுட்டு பஸ் பிடித்து கடக்வாசலா ஆபீஸ்போனார்.

Thursday, April 14, 2011

மலரும் நினைவுகள்.(9)எப்படியோ முட்டி, முட்டி ஒன்னொன்னா கத்துகிட்டேன். ஒன்னுமேதெரியாம
 வந்த நான் ஓரளவுக்கு எல்லா வீட்டு வேலைகளும் தெரிந்து கொண்டேன்.
 அடுத்தவருஷம் மாமனாருக்கு ஹெல்த் ப்ராப்ளம் ஆகி ஆஸ்பிடலில் அட்மிட்
 செய்யும்படி ஆச்சு. ஒருவாரமா யூரின்போகாம வயறு வீங்கி ரொம்பவே கஷ்ட்டப்பட்டார். ஆஸ்பிடலில் ஆபரேஷனும் ச்ய்து பார்த்தார்கள். எதுவும்
 சரி ஆகலை. ஆஸ்பிடலிலேயே போயிட்டார். அவரின் கடைசி காரியங்கள்
 எல்லாம் முறைப்படி செய்தோம். மாமனார் சிறுக, சிற்க சேர்த்துவைத்த பணம் எல்லாமே அவரின் ஆஸ்பிடல் செலவுகளுக்கும் அவரின் கடைசி காரியங்களுக்குமே சரியாப்போச்சு. இப்ப கையில் சேவிங்க்ஸ் என்று எதுவுமே
 இல்லை.

Sunday, April 10, 2011

பெண் எழுத்து

ஆயிஷாபவுல் அவர்கள் என்னையும் தொடர்பதிவுக்கு அழைத்திருக்காங்க.
 அவங்களுக்கு நன்றி. இதுபற்றி பலரும் பலவிதமா கருத்துசொல்லிஇருக்காங்க.கூடிய மானவரை எல்லார் பதிவும் படிச்சிருக்கேன். பொதுவா பதிவுலகத்தைப்பொருத்தவைரை பெரும்பாலானவர்கள்,உண்மையான பெயரோ, முகமோ காட்டாமல் தான் இருக்காங்க. ஒரு சிலரே, உண்மையான பெயரும் முகமும்
காட்டுராங்க. வெரும் பதிவுகளைப்பார்த்து இந்தப்பதிவு ஆண் எழுதியதா, பெண்
எழுதியதா என்றுஅனுமானிப்பதுகொஞ்சம்சிரமம்தான்.இப்பபெண்களும்எல்லா
 விஷயங்கள்பற்றியும்எழுதிட்டுவராங்க.தங்களுக்குகிடைக்கும்அனுபவத்தால்
 சிலர்தைரியமாகதங்ககருத்தைவெளிப்படுத்தராங்க.அந்தஎழுத்துக்குக்கிடைக்குகிடைக்கும் அங்கீகாரத்தால்(பின்னூட்டம் மூலமாக) இன்னும் இன்னும் சிறப்பாக தங்களை வெளிப்படுத்துகிறார்கள்.

Friday, April 8, 2011

மலரும் நினைவுகள்.(8)தாத்தாவுக்கு மமியார் ஒரே பொண்ணு. வேறயாரும் கிடையாது.அதனால
அவரும் இவங்க கூடவே தங்கி, சமையலும் வீட்டையும் நிர்வாகம் பண்ணி
வந்தார். மாமியாருக்கு என் வீட்டுக்காரர் ஒரே பிள்ளை.அப்பாவும் மகனும்
ஆபீஸ்போயி சம்பாதிக்கணும். மாமியார் உடம்பு முடியாதவங்க . தாத்தா
கூட இருந்தது அவங்களுக்கு சவுரியமாகவே இருந்தது. சமையல் பாத்திரங்கள்
 தேய்க்கப்போனேன். வைக்கொல்லில் சாம்பலும் சீக்காபொடியும் பிரட்டிண்டு
ஒவ்வொரு பாத்திரமாக் கவனமாக தேய்த்தேன்.சாதம் பண்ணவெங்கலபானை
குழம்பு பண்ண கையாசட்டி, ரசம் பண்ண ஈயசெம்பு, கீரை மசிக்க மண் சட்டி
எல்லாம் ஒன்னிச்சு வேக வைக்க பெரிய பித்த்ள்ளைக்குக்கர் என்று எல்லா
பாத்திரங்களும் ஏக கனம். ஒரு வழியா பாத்திரம்லாம் தேய்த்து கழுவி துடைத்
து அதனதன் இடதில் வைத்தேன்.


Sunday, April 3, 2011

மலரும் நினைவுகள்(7)குடிக்க வென்னீரும் ஒரு பித்தளை தவலயில்தான்.அதையும் வச்சுட்டு டிகாஷன்
பால் எப்படி கலக்கனும்னு தாத்தாவிடம் கேட்டு முதல்முறையா காபி கலக்க
தெரிஞ்சுண்டேன். அளவாக ஜீனி போட்டு எல்லாருக்கும் காபி கொடுத்தேன்.
அதற்குள் மாமனார்,மாமியாரும் எழுந்து பல்தேய்த்துவிட்டு வந்தார்கள்.இவர்
காபி நல்லா இருக்கு லஷ்மின்னார். எனக்கு குஷி தாங்கலை. மாமனார் பேசி
பாத்ததே இல்லை, எல்லாத்துக்கும் ஒரு தலை ஆட்டலில்தான் பதில் வரும்.
மாமியாரும் எதுவும் சொல்லலை.முதலில் இவர் மோரியில் குளியல் அப்பரம்
மாமனார் குளியல் ஆகி இருவரும் ஸ்லோகம்லாம் சொல்லி காயத்ரி ஜபித்துகரக்டாக 6.30. க்கு சாப்பிட உட்கார்ந்தார்கள்.


Thursday, March 31, 2011

மலரும் நினைவுகள்(6)விழிப்புமில்லாம, தூக்கமும் இல்லாம இருக்கும்போதே கிணத்துக்குள்ளேந்து
 என்னமோ கினு, கிணுன்னு மணி அடிக்கறமாதிரி சப்தம் கேட்டுது.(பூனா)
இது என்ன பாதி ராத்திரி யாரு பூஜைலாம் பண்ராங்கன்னு நினைச்சேன். அப்பரம்
சமையல் ரூமில் லைட் எரிந்தது. தாத்தா எழுந்து நடமாடும் சப்தம் கேட்டுது.
 நான் இப்ப எழுந்துக்கரதா, என்னபண்ணரதுன்னு தெர்யலை. சரி அவங்க என்ன
 பண்ராங்க்ன்னு போயி பாக்கலாம்னு சமயல்ரூம்கதவு திறந்து அங்க போனேன்.
ரூம்பூரா ஒரே புகை, தாத்தா பாய்லர் பத்தவச்சிருக்காங்க. அது திகு திகுன்னு
 எரிஞ்சு ரூம்பூர புகை.தாத்தா, ஏன் இவ்வளவு சீக்கிரமா எழுந்தீங்க?, தூக்கம் வல்லியான்னேன். இல்லைமா, தினமுமே நாலரைக்கு எழுந்தாதான் வெலை
ஆகும் என்ரார்.இப்போ நாலரை மணியாஎன்ரேன். உனக்கு அலாரம் அடிச்சது
கேக்கலியா? என்ரார். அலாரம்னா என்னதுன்னுதெரியலை. அப்படின்னா என்ன? என்ரேன். சுத்தம். அலாரம்னா தெரியாதா. இதோ பாரு இது அலாரம்
டைம்பீஸ்.என்று குட்டியா ரவுண்டா நம்பர்லாம் போட்டிருந்த ஒரு விளையாட்டு சாமான்(!!!!!!!!!!!!!!1) காட்டினாங்க. இதுல காலேல எவ்வளவுமணிக்குஎழுந்திரிக்கணுமோ அவ்வளவு மணிக்கு அலாரம் ஸெட்
 பண்ணி வச்சோம்னா காலேல மணி அடிச்சு நம்மளை எழுப்பிடும்.என்ரார்.
 எங்க வீட்ல பெ,,,,,,,,ரி,,,,,,,,,சா,,,,,,, சுவர்க்கடிகாரம்தான் பாத்திருக்கேன்.


இது பாக்கவும் கேக்கவும் புதுசா இருந்தது. சரி வள வளன்னு பேசிட்டு நிக்காதே
வாளில தண்ணி எடுத்துண்டு பின்புறம் போயி பல் தேய்ச்சுட்டு,முகம், கை
கால் அலம்பிண்டுவா.அதுக்குள்ள வென்னீர் ரெடி ஆயிடும். நான் முதல்ல
குளிச்சுடரேன். என்ரார். வாளின்னா இப்பமாதிரி ப்ளாஸ்டிக் பக்கெட்லாம்
இல்லை. கனம், கனமா இரும்போ, த்கரமோ வாளிதான். கூடவே ஒரு பித்தளை
செம்பும் கொண்டுபோன்னார்.சரின்னு பின்புறமாக வாளியை தூக்கமுடியாம
தூக்கிண்டு போனேன். பல்தேய்க்கவும் பேஸ்ட் ப்ரெஷ்லாம் இல்லை. உமிக்கரி
தான் பல்தேய்க்கனும். நல்ல வெட,வெடன்னு குளிர் நடுக்கித்து.
எங்க ஊர்ல எப்பவுமே வெக்கைதான். அதனால இந்தக்குளிர் எனக்கு ரொம்ப
கஷ்டமா இருந்தது. நான் நடுங்கிண்டே பல்தேய்ச்சுட்டு இருக்கும் போதே வரிசையா 4, 5 பேர் பக்கத்து குடுத்தனக்காரா சின்ன வாளிலதண்ணி கொண்டு
வந்து லைன்ல க்யூவா நின்னாங்க.(டாய்லெட்டுக்காம்).அட கடவுளே, இது வேரயா? வேக, வேகமா பல்லை விளக்கிட்டு வீட்டுக்கு(!!!!!!!!!!!!!!!) போனேன்.
 அதற்குள்ள தாத்தாகுளித்து 8 முழம் வேஷ்டி கட்டிண்டு என்னமோஸ்லோகம்
 சொல்லிட்டே காய்கறி நறுக்கிண்டு இருந்தார். நான் வந்ததும், முதல்ல சாணி
கரைச்சு வாசல் தெளிச்சு ரெண்டுவாசலிலும்(சமையல்ரூம்,முதரூம்) கோலம்
போடு என்ரார்,ஐயே சாணியா என்று அறுவெருப்பா நினைச்சேன். எனக்கு
 இந்த அசிங்கம், அறுவெருப்பு எல்லாம் கொஞ்ச்ம் அதிகமாவே பிடிக்காது.
சரி வேர வழி இல்லை மூக்கைபொத்திண்டே சாணி கரைத்து வாசலில் தெளித்
து தென்னை விளக்கு மாரால் நன்கு பெருக்கி கோலமும் போட்டேன். நல்ல
வேளை கோலம்போடத்தெரிந்திருந்தது.உள்ளவந்ததும் தாத்தா நான் வாசல்ல
 உக்காந்து காயத்ரி ஜபிச்சுண்டு அடுப்பையெல்லாம் பத்தவைக்கரேன் நீயும்
 வென்னீர் எடுத்துண்டு மோரில(தொட்டி முற்றம்)குளிச்சுட்டு மடி புடவை
போட்டுக்கோ. என்றார்.சமையல் ரூமிலேயே மேல உருட்டு மரக்கம்பால் ரெண்டு கொடி தொங்கிட்டு இருந்தது. அதில் ஒரு கொடியில் தாதாவின் வேஷ்டியும், இன்னொரு கொடியில் என்புடவையும் இரவே காயப்போட்டிருந்தேன். அவர் சொல்லித்தான்.
தொட்டி முற்றம் மிகவும் சின்னது அதில் கஷ்டப்பட்டு குளித்து முடித்துபுடவை
மாற்றினதும் தாத்தா உள்ளே வந்தார். வாலில் வைத்தே நாலு கரி அடுப்பும்
 பத்த வைத்திருந்தார்.கரி அடுப்பே இப்பதான் பாக்கரேன்.கீழேசின்ன வாய் மாதி
ரி இருக்கும் இடத்தில் தேங்கா நார், பேப்பர் மண்ணெண்ணை ஊற்றிமேலே
 நிறைய கரி போட்டு பத்தவைத்திருந்தார். நாலு அடுப்பும் உள்ளே கொண்டு
வந்து வைத்து ஒரு பெரிய நீளமான பித்தளை அடுக்கை கொண்டு வந்தார்.
அதிலுள்ளே தண்ணீர் ஊற்றி, இன்னொரு வெங்கலப்பானையில் அரிசி அலம்பிபோட்டு தண்ணீர் ஊற்றி அந்தபெரிய பாத்திரத்திற்குள் வைத்தார்.
 அதன்மேல் இன்னொரு பாத்திரத்தில் ப்ருப்பும், அதன்மேல் இன்னொரு பாத்தி
ரத்தில் நறுக்கிய காயும் வைத்து டோம் போன்ற மூடியால் மூடி அடுப்பில் வைத்தார்.
அதன்பேரு ருக்மினி குக்கராம். அந்தகாலகட்டத்தில் அதுதான் .என்னிடம் ஒரு
 பனை ஓலை விசிறியைக்கொடுத்து இப்போ நீ நாலு அடுப்பையும் தணல்
குறைய விடாமல் வீசிண்டே இருக்கனும். முதல்லவிளக்கேத்திட்டுவான்னார்.
சமையல் ரூமிலேயே சின்னதா ஒருவிளக்குப்பிறையும்இருந்தது.விளக்கேத்தி
கஜானனம் சொல்லிட்டு(அதுமட்டும்தான் தெரியும்) அடுப்பு வீச ஆரம்பித்தேன்.
தாத்தா, லஷ்மி இந்த மூணு அடுப்பும் பத்து அடுப்பு, கடைசி அடுப்பு பத்தில்லாத
அடுப்பு என்ரார். எனக்கு என்ன சொல்ரார்னே புரியலை. வெருமனே தலையை
ஆட்டிவைத்தேன். எதுக்கு இவ்வளவு சீக்கிரமே சமயல் பன்ரேள். என்றேன்.
நல்லா கேட்டாய்போ,இப்போஆரம்பிச்சாதான்ஆறறைக்குசாப்பாடுரெடிஆகும்
அப்பாவும் பிள்ளையும் காலை ஏழுமணிக்கு வேலைக்கு கிளம்பணும். ஆறறைக்க்கு கரெக்டா சாப்பிட உக்காந்துடுவா.அதுக்குள்ள ரெடி ஆக வேண்டாமா? என்கிறார். காலங்காத்தால 6 மணிக்கு ஃபுல் மீல்ஸா எப்படி
 சாப்பிட முடியும்னு நினைச்சேன். அதுவும் அந்தக்கால மனுஷா, எந்த வியாதி, வெக்கையும் இல்லாதவா, சாப்பாட்டுவிஷயத்தில் வேண்டாங்கர ஐட்டமே
எதுவுமே கிடையாது. சங்கோஜமோ, எதுவுமோபடாம வயறு ஃபுல்லா நல்லாவே சாப்பிடுவா.
நான் அடுப்பு வீசிண்டே தூங்கி வழிஞ்சுண்டே இருப்பேன். இடை,இடையே
தாத்தா குரல் கொடுப்பார்.இன்னம் வேகமா வீசு தணல் குறைஞ்சா சாதம் வேக
 நேரம் எடுக்கும். ஜோரா வீசு என்று சொல்லிண்டே, அடுத்தடுத்த அடுப்புகளில்
சாம்பாரும், பொரியலும் தயார்பண்ணுவார், விசிறின்னா இப்பமாதிரி லைட்
வெயிட் ப்ளாஸ்டிக் விசிறில்லாம் இல்ல. பனை ஓலை விசிறி. கைபிடிக்கும்
கம்பெல்லாம் கையைஅறுக்கும். வீசிண்டே நல்லாதூக்கமா வரும். நான்
வரும் முன்பு என் வீட்டுக்காரர்தான் வீசுவாராம். வீசிண்டே தாத்தாவிடம்
 நல்லா சமையலும் கத்துண்டார். இவர் ஐந்தரைக்கு எழுந்து வந்தார். பின் பக்கம்போய்வந்துட்டு சைக்கிள்எடுத்துண்டுபால்வாங்கப்போனார்.அப்பல்லாம்
பாட்டில்ல பால் வரும். தாத்தா என்னிடம் அவன்பால்வாங்கிண்டுவரதுக்குள்ள
பில்டரில் காபி டிகாக்‌ஷன் போட்டுவை. பத்தில்லாத அடுப்பில் தண்ணீர் கொதிக்கவை என்றார்.
ஓ, சமையல் எல்லாம் பத்து, பால் டிகாஷன்லாம் பத்தில்லை போலன்னு
 நினைச்சுண்டேன்.தாத்தா டிகாஷன் எப்படி போடனும் என்றேன். ஐயோ
 உன் மாமியார் காதுல கேட்டா போறும் வேர வினையே வேண்டாம். தண்ணி
 கொதிக்கவை. பில்டரில் மேபுறம் ஓட்டையா இருக்கு இல்லையா அங்க
ஐந்துஸ்பூன் காபி பொடி போட்டு கொதிக்கர தண்ணி அதன்மேல் விடனும்.
 என்றார். அதற்குள் இவர் பால் வாங்கி வந்தார்.பாலைக்காய்ச்சி காபி ரெடி
பண்ணுனு அடுத்தாஆர்டர்.வேரொரு பாத்திரத்தில் பாலைஊற்றிகாய்ச்சினேன்
அதுபொங்கி வரும்போது என்ன பண்ணனும்னே தெரியலை. அடுப்பை எப்படி
 அணைக்கனும்னு தெரியலை. தாத்தா பால் பொங்கி வழியுது எப்படி அடுப்பை அணைக்கனும் என்ரேன். அடுப்ப அணைக்கரதா,சரியாபோச்சு ஒருதுணி பிடிச்சு பாலைக்கிழே இறக்கிவை.அந்த அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தில்
 எல்லாருக்குமாக குடிக்க வென்னீர்வை என்றார்.

Saturday, March 26, 2011

மலரும் நினைவுகள்(5)

விழிப்பும் உறக்குமுமான ஒரு சொப்பன நிலையில் எப்படி கல்யாணம் நடந்தது
 என்று  நினைவுகள்வந்து போனது.எங்கதாத்தா பெரிய அப்பளா டிப்போ நடத்தி வந்தார்.அதில் வேலைபார்ப்பவர்களும்  ஆணும் பெண்ணுமாக சுமார் 50 பேர்வரையிலும்இருந்தார்கள். விருது நகரிலிருந்து மூட்டை மூட்டையாக உளுத்தம்பருப்பு லாரிகளில் வந்து இறங்கிய வண்ணமே இருக்கும். கல் இயந்திரத்தில் பருப்பு திரிப்பதில் ஆரம்பித்து அப்பளா பாக்கெட்டுகளாக ரெடி ஆகி வெளி மானிலங்கள், வெளி நாடுகள் எல்லாம் எல்லாம் அனுப்புவார்கள்.
அந்தசமயம் மாமனார் குடும்பத்தினர்ஸிலோனில்(ஸ்ரீலங்கா) இருந்தார்கள்.
எங்கள் அப்பளாத்திற்கு அவர்கள்தான் அங்கு ஏஜண்டாக இருந்தார்கள். அப்படி
பழக்கமானவர்தான் அவர். என் வீட்டுக்காரருக்கு 5 வயதாகும் வரை சிலோனில் தான் இருந்திருக்காங்க. அப்பரமா பிரிட்டிஷ்காரன் குண்டு போடரான்னு கிளம்பி இந்தியா வந்துபூனாவில் செட்டிலாயிட்டாங்க. பூர்வீகம் அவங்களுக்கும் எங்க கிராமம்தான்.

Tuesday, March 22, 2011

பெயர் காரணம். ( தொடர் பதிவு)

அமைதிச்சாரல் என்னையும் தொடர்பதிவு எழுத அழைச்சிருக்காங்க.நிறையப்பேரு நிறைய விதமா சொல்லியாச்சு. நான் என்ன சொல்ல?
எனக்கும் எங்க குடும்ப வழக்கப்படி அப்பாவின் அம்மா (பாட்டி) பெயர்வச்சாங்க. அப்படியும் இப்பவும் இந்தவயசிலும் எங்கவீட்டில் எல்லாருக்கும்
நான் ”கோந்தே” தான். நான் பிறந்ததும் என்னை வளர்க்க ஒரு வேலைக்காரி
ஏற்பாடு பண்ணினாங்க. அவங்கபேரு லஷ்மிதான். பின்னாடிகொல்லைப்புறமா நிக்கும் பசுமாடுகளில் ஒன்றின்பெயரும்லஷ்மிதான்.பாத்திரம்தேய்க்கவரும்வேலைக்காரிகளில்ஒருவர்பேரும்லஷ்மியே.
Saturday, March 19, 2011

மலரும் நினைவுகள்(4)              
மேலே இருப்பது 1960-ல் நடந்த எங்க கல்யாணப்போட்டோ. கீழே வீட்டுக்காரரின் 60-வது வயசு சஷ்டி அப்த பூர்த்திபோட்டோ. ஏற்கனவே இந்தபடங்கள் ஃபேஸ்புக்ல போட்டிருக்கேன். ஆனா ப்ளாக் படிக்கிரவங்க எல்லாருமே ஃபேஸ்புக்ல வரமாட்டாங்களே. என்பதிவு படிக்கரவங்களுக்காக
இங்கயும் இன்னொரு முறை இந்தப்படங்கள் போட்டிருக்கேன்.
ஃப்ளாஷ்பெக் சொல்லிட்டு இருக்கும்போதே இன்னொரு ஃப்ளாஷ் பேக்குள்ள
போயிட்டேன்.திடீர்னு ஊர் நினைவு வந்திடுத்து. இப்ப திரும்ப பூனா வரேன்..
அந்த சமயம் எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணனும்னே புரியலை. இரவு 9 டு10
வரையிலும், காலை 9 டு 10 வரையிலும் தான் தண்ணி வருமாம். தண்ணீர்
பிடித்துவைக்கும் அண்டா, குண்டா,எல்லாமே பித்தளையில் தான் இருந்தது.
மாமியார் என்னிடம் லஷ்மி பாய்லரில் தண்ணி பிடிச்சு வை.காலேல வென்னீர்
போட சவுரியமா இருக்கும் என்றார்கள். 50 வருடம் முன்பு பூனாவில் 6
மாதங்கள் நல்ல பனியாக குளிராக இருக்கும். ஊர் பூரா ஏ, ஸி போட்டதுபோல 
அப்படி ஒரு ஜில்லிப்பா இருக்கும்.

Monday, March 14, 2011

மலரும் நினைவுகள்.(3)எங்க வீட்ல என் குழந்தைப்பருவம் குட்டி இளவரசி போல. என் அம்மா, அப்பாவுக்கு திருமணம் முடிந்து 5-வருடங்களுக்குப்பிறகு தான் நான் பிறந்தேனாம். அதனால பாட்டி தாத்தாவுக்கு நான் ரொம்பவே செல்லம்.அதிலும் பாட்டி பேரை எனக்கு வைத்திருப்பதால் இன்னும் அதிக செல்லம்.நான் பிறந்ததுமே, என்னை கவனிச்சுக்க ஒரு வேலைக்காரி ஏற்பாடு செய்துஅவளுக்கும் வீட்டி பின்புறமே ஒரு ரூமும்கட்டிக்கொடுத்து வீட்டோடு தங்கவைத்தார்கள். நிறைய நேரம் வேலைக்காரி இடுப்பில் தான் வாசம். அதனாலஎங்க பாஷையை விடஅவபாஷைதான் ஈசியாவந்தது,அவளைத்தான் ஆத்தாஎன்று அழைப்பேன்.

Friday, March 11, 2011

மலரும் நினைவுகள்.(2)கல்யாணம் முடிந்து வருவதால் எக்கச்சக்க லக்கேஜ் இருந்தது.வெல்வெட்மெத்தை,தலகாணி போர்வைகள்மூட்டை, சீர்பாத்திர பண்டங்கள் ஒரு வண்டி,அதுபோக 5 பெரிய டின்களில் கல்யாண சீர் பட்சணங்கள்.ஆனை அடி முறுக்கு,அதிரசம், மனோகரம், லட்டு, மைசூர் பாகு என்று ஏகத்துக்கு.அந்தசாமான்களை வைக்கவே முதல் ரூம் கால்வைக்க இடமில்லாம நிரம்பிடுத்து.எனக்கும் 50 பவுனுக்கு நகை போட்டிருந்தார்கள். நானும் நகைக்கடைபொம்மை மாதிரி ஒரு ஓரமா நின்னுண்டு இருந்தேன்.
Tuesday, March 8, 2011

மலரும் நினைவுகள்.(1)நான் திருமணம் முடிந்து பூனா வந்தது1960-ல். கிராமத்தில் எங்கவீடுரொம்பவும்
பெரிது. 7-மாடிகளுடன் விஸ்தாரமான வீடு. ஒரே தெருவில் சேர்ந்தாப்போல 4-வீடுகள் எங்களுக்கு உண்டு.அது தவிர கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தோம்.
குழந்தைகள் ஒரு டஜனுக்கு குறையாமல் இருப்பார்கள். பெரியவர்களும் அ ந்த
அளவுக்கு இருந்தார்கள்.அத்தை,சித்தப்பா, பெரியப்பா எல்லார் குழந்தைகளும்
ஒருதாய் வயிற்று பிள்ளைகளாகவே பழகுவோம்.வித்யாசமே கிடையாது.
அதற்குமேல சமையலுக்கு ரெண்டு வயதான மாமிகள்,வீட்டு வேலைகளுக்கு 3
வேலைக்காரிகள், குழந்தைகளை கவனிக்க ரெண்டு வேலைக்காரிகள் என்று 
வீடுநிறைய கல்யாண கல, கலப்புதான் எப்பவுமே.

Thursday, March 3, 2011

எது வெற்றி?.
எது வெற்றி?.


உலகம் திறமையைப்பார்த்து மதிப்பிடுவதில்லை. வெற்றியைத்தான் போற்றுகிறது.உள்ளுக்குள்ளே திறமைகளைப்போட்டுப்பூட்டி வைத்துக்கொண்டால் யாரும் வந்துநம்மைத்தட்டிக்கொடுத்து,சபாஷ் போட மாட்டார்கள். நாம் எடுத்துக்கொண்ட துறையில் போய்,அந்தத்துறையிலே வெற்றி எது என்பதைக்கண்டு அந்த வெற்றியைசாதித்துக்காட்டினால், புகழும், பணமும், பெயரும் பெருவது எளிது.

Sunday, February 27, 2011

மிஸ்டர் ” எக்ஸ்” ஜோக்ஸ்.

இன்னிக்கு என்கிட்ட மாட்டினவங்க மிஸ்டர் எக்ஸ்.
(ஐயோ பாவம்.!!!!!!!!!!!).

 மிஸ்டர் எக்ஸுக்கு டீ குடிக்க ரொம்பவே பிடிக்கும் ஆனா எப்படி டீ போடனும்னு
தெரியாது, ஒரு ஹோட்டலில் டீ குடிக்கப்போனார்.கிச்சன் வரை போயி டீ
எப்படி போடராங்கன்னு நல்லா கவனிச்சுப்பார்த்து மனதில் பதிய வைத்துக்கொண்டார். சரி, இப்ப நாமே வீட்ல நாமே டீ போட்டுக்கலாம் என்று
கடையில்போயி ஜீனி,டீத்தூள்,பால், ஸ்டவ் எல்லாம் வாங்கிண்டு வீடு வந்தார்.
ரொம்ப குஷியாக அடுப்பை பததவைத்தார். அப்பரம்தான் அவருக்கு நினைவுக்கு
 வந்தது டீ போட பாத்திரமே வாங்கலைனு. சரின்னு ஜீனி, டீத்தூள் பால் எல்லாவற்றையும் ஆ.....ன்னு வாயைத்திறந்துண்டு வாயில் போட்டுக்கொண்டு
ஸ்டவ்வில் உக்காந்துட்டார். டீ கொதிக்கவேண்டாமா?  :))))))))))))))))))))

Thursday, February 24, 2011

குழந்தை மனசு.

குழந்தை மனது.


என் பெரிய மகனின் மகன் என்பேரன் பிறக்கும்போதே சிறிய
குறைபாட்டுடன் பிறந்தான்.இப்போது அவனுக்கு 15 வயது ஆகிரது.
அவன்பேசுவது வீட்டில் உள்ளவர்களுக்குமட்டுமே புரிந்து கொள்ள
முடியும்படி இருக்கும். நான் ஒரு சமயம் அவர்கள் வீடுபோனேன்.
பேரன் என்னிடம் ஒரு நாள் பாட்டி எனக்கு இப்பவே முறுக்கு வேனும்
பண்ணிக்கொடுங்க என்ரான். வீட்ல அரிசி மாவு இல்லைடா, அப்பரமா
பண்ணித்தரேனே என்ரேன். அவன் கேட்பதற்கு ரெடி இல்லை. இப்பவே
வேனும், என்கிட்ட காசு கொடுங்க நா கடைக்குப்போயி அரிசி மாவு
வாங்கிண்டு வரேன்னான்.

Saturday, February 19, 2011

நொருக்ஸ்(6)

நொறுக்ஸ்(6)


இந்த சம்பவமும் கிராமத்தில் தங்கை கல்யாணதுக்கு போனப்போ நடந்தது.
கிராம்த்ல லாம் கல்யாணமண்டபம் என்று தனியாக எல்லாம் கிடையாது.
வீட்டு வாசலில் தெருமுழுவதுமாக பந்தல் போட்டு வீட்டு வாசலில்தான்
கல்யாணம் நடத்துவார்கள். நாங்க போன அடுத்த நாள் குழந்தைகளுக்கு
டாய்லெட் போக வேண்டி இருந்தது.வீட்டின் பின் ஒரு ஒதுக்குப்புறம
இருந்தது. வாளியில் தண்ணி கொண்டு பின்னாடி பக்கமா போகச்சொன்னேன்.
அவர்களும் போன வேகத்திலேயே திரும்பி வந்தார்கள். என்னாச்சு? என்ரேன்
போ மம்மி, பெரிசு, பெரிசா 4 டாய்லெட் இருக்கு, நாங்கல்லாம் உக்காந்தா
உள்ளயே விழுந்துடுவோம். அவ்வளவு பெரிசா இருக்கு. அதுமட்டுமில்லை.
அதுமேல அழகா ரங்கோலில்லாம் போட்டு வச்சிருக்கா. எல்லாம் ஓபன் ப்ளேசுலஇருக்கு கதவே இல்லியே என்றார்கள்.

Saturday, February 12, 2011

நொறுக்ஸ்(5)
நொறுக்ஸ்(5)


நான் மத்தபாஷைங்க தெரியாம அசட்டுப்பட்டம் கட்டிண்டேன்னா
என் பசங்க தமிழ் தெரியாம படுதின காமெடி இன்னும் அதிகம்.
என் தங்கயின் கல்யாணம் எங்க கிராமத்தில் இருந்தது. நானும் அவரும்
எங்க 5 குழந்தைகளுடன் ஒருவாரம் முன்பே போனோம். வீடு நிறையா
சொந்தக்காரங்க நிறம்பி, வீடு ஒரே கல, கலப்பா இருந்தது. கிராமத்து வீடு
விஸ்தாரத்துக்கு கேக்கனுமா?அதுவும் எங்க வீடு ஏழு மாடிகளைக்கொண்டது.
அடுத்தடுத்து நான்கு வீடுகளும் எங்களோடதுதான்.குழந்தைகள் கும்மாளம்
அடிக்க கேக்கனுமா? என் அம்மா 32-வயடிலேயே என்குழந்தைகளால் பாட்டி
ஆகிட்டாங்க அதனால என்பசங்ககிட்ட என்னை பாட்டின்னு கூப்பிடக்கூடாது
அம்மம்மானு சொல்லுங்க இல்லைனா மாப்பிள்ளை( என்னவர்) கூப்பிடுவது
போல மாமின்னுதான் கூப்பிடனும்னு.சொல்லி வச்சிருந்தா.குழந்தைகளும்
சில சமயம் அம்மம்மான்னும், சில சமயம் மாமின்னும் கூப்பிடுவாங்க. பின்னால

Friday, February 4, 2011

நொறுக்ஸ்நொறுக்ஸ்


இந்தப்பதிவில் ஹிந்தி தெர்யாம வாங்கின அசட்டுப்பட்டம் பற்றி.
கல்யாணம் ஆகி பூனா வந்து ஒருமாசம் ஆகியிருக்கும். ஹிந்தி,
மராட்டின்னுல்லாம் ஒரு பாஷை இருக்குன்னே தெரியாது.ஒரு மாலை
நேரம் அவர்களுக்கெல்லாம் காபி குடுத்துட்டு பேசிண்டு இருந்தோம்.
வாசலில் பழ வண்டிக்காரன் போனான். இங்கு பெரியவர்கள் இரவு
சாப்பாட்டுக்குப்பின் தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.
என் வீட்டுக்காரர், லஷ்மி வாசல்ல பழக்காரன் போரான் பாரு ஒரு
டசன் பழம் வாங்கிண்டு வான்னு சொல்லி மூன்று ரூபாய்கள் தந்தார்.

Sunday, January 30, 2011

நொறுக்ஸ்.(3)நொறுக்ஸ்.(3)

எங்க முதல்பெண்ணை 5 வயதில் கான்வெண்டில் சேர்த்தோம். அப்பல்லாம் கே. ஜி யு.கே, ஜி எல்லாம் கிடையாது. நேரா ஒன்னாம் வகுப்புதான். மௌண்ட் கார்மெல்என்று பூனாவில் பிரபலமான கான்வெண்ட். யூனிஃபார்மில் பட்டாம் பூச்சி மா த்ரி ஸ்கூல் போய்வரும்பெண்ணைப்பார்க்கும்போது, ரொம்ப சந்தோஷமா இருக்கும்.அவளுக்கு ஹோம் ஒர்க் எல்லாம் சொல்லிக்கொடுக்க எனக்கு இங்க்லீஷே தெரியாதே?அதனால ஒரு ஆங்கிலோஇண்டியன் லேடி கிட்ட ட்யூஷன் அனுப்பினோம். ரொம்ப ஆர்வமாக போய்வந்தா. அந்த ஆங்கிலோ இண்டியன் லேடி ரொம்பவே ஸ்ட்ரிக்ட் ஒன்றாம்
வகுப்புக்குழந்தைகள்ஆரம்பத்திலேயேநோட்,பெனயூஸ்பண்ணக்கூடாது.ஸ்லேட் குச்சிதான் யூஸ் பண்ணனும்னும் ஆனாதான் ஹேண்ட் ரைட்டிங்க் நல்லா இம்ப்ரூவ் ஆகும்னும்சொல்லி ட்யூஷன் ஹோம் ஒர்க் எல்லாம் ஸ்லேட்டில் தான் எழுதிக்கொடுப்பா.ஒரு நாள் 1 ,2, 3, 4, 5 எல்லாம் ஸ்பெல்லிங்க் ல 10-வரை எழுதிக்கொடுத்து எல்லாத்தையும்5, 5 தடவை எழுதிண்டு வரச்சொன்னா.


Wednesday, January 26, 2011

குடியரசுதின வாழ்த்துக்கள்.அனைவருக்கும் குடியரசுதின நல் வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் உங்களிடம்

ஒரு விஷயம் பகிர்ந்துகொள்கிரேன். ஏற்கனவே பலருக்கும் தெரிந்த விஷயமாகக்கூட இருக்கலாம்.இதுவரை தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். தெரிந்தவர்கள் திரும்பவும் ஒருமுறை தெரிந்து கொள்ளுங்கள். நல்ல விஷயங்கள் எத்தனை முறை தெரிந்து கொண்டாலும் நல்லதுதானே. எப்பவுமே நினைவில் இருத்திக்கொள்ள முடியும்தானே?

நானும் எப்பவோ ஒரு புக்கில் படித்து தெரிந்து கொண்டதுதான். இதுவும் குழந்தைகள் சம்மந்தப்பட்ட விஷயம்தான்.
குடியரசு தினத்தில் மட்டுமே குழந்தைகளுக்கு கொடியின் நிறம் பற்றி சரியாக நினைவில் இருக்கும். அது எப்பவுமே மறக்காமல் இருக்க ஒருவழி இருக்கு.
பச்சைக்கலரில்வாழை இலயை கீழேபோட்டு, வெள்ளைக்கலர் சாதம் நடுவில் போட்டு ஆரஞ்ச் கலர் சாம்பாரை மேலே ஊற்றி என்று சப்பாட்டை சம்மந்தப்படுத்தி, கீழேபச்சைக்கலர், நடுவில் வெள்ளைக்கலர், மேலே ஆரஞ்ச்
கலர் என்று சுலபமாக நினைவில் இருத்திக்கொள்ளும்விதமாகச்சொல்லலாம்.
இப்படிச்சொல்லிக்கொண்டிருக்கும் போதே என் சுட்டிப்பேரன் பாட்டி நடுவில் ரவுண்டா இருக்கே அது என்னதுன்னு கேக்கரான். அதுவா அப்பளம் என்ரேன்.

என்னை ஆதரிப்பவர்கள் . .