Pages

Monday, December 31, 2012

சிங்கப்பூர் 13

இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு.
வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப
  குட்டியாக ஒரு பைனாப்பிள் காய்த்திருந்தது. பெரிய பைனாப்பிளே பாத்திருக்கோம் இல்லியா இந்த குட்டிபாக்கவே க்யூட்டா இருந்தது.  ஸ்டேஷனில் ஒரு ரெஸ்டாரெண்டில் ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட போனோம்.
                 
பிரெட்டே மெல்லிசாதான் இருக்கும். அதையும் நடுவில் கீறி இன்னும் மெல்லிசாக்கி நடுவில் வெண்ணை ஜீனி தடவி  டோஸ்ட் பண்ணி தராங்க. ரொம்ப சுவையா இருந்தது. காபி கடுங்காப்பி போல கருப்பா தராங்க. காபி டேஸ்ட் தான் வந்தது. பால் குறைச்சலா சேர்க்கராங்க.
சாங்கி ஏர்போர்ட் பத்தி சொல்லிண்டே இருக்கலாம் அவ்வளவு விஷயம்.
அது ஒரு ப்ரும்மாண்ட தனி உலகம்தான். பார்க்க பார்க்க பிரமிப்பா இருக்கு ஒவ்வொரு இடமும்.முதல்ல லக்கேஜ் எல்லாம் செக்கின்ல போட்டுட்டு
 சாப்பிட போனோம். ஆனந்தபவன்ரெஸ்டாரெண்ட் இங்கே ஒரு பிராஞ்ச்
                     
           
 திறந்திருக்காங்க. ரொம்ப நல்லா இருக்கு. நல்ல சாப்பாடு கிடைத்தது.
 பிறகு  எஸ்கலேட்டரில் முதல் மாடிக்கு போனோம். மாடிக்கு போக படிக்
கட்டு எஸ்கலேட்டர் போல நடந்து போகவும் தரையே நகந்து போவதுபோல
எஸ்கலேட்டரும் இருக்கு. நாம வெரும்ன நின்னாலே போதும் போக
                     
வேண்டிய இடத்துக்கு போயிட முடிகிரது நடக்க முடியாதவங்களுக்கு இது ரொம்ப வசதியா இருக்கு. மாடியில் கைனடிக் ரெயின்னு ஒன்னு வச்சிருக்கா.
 பாக்க பாக்க அவ்வளவு அழகு. மழைதுளிகள் போல கோல்டன்கலரில் டியூ
                       
 மேலயும் கீழயுமா போயிட்டு போயிட்டு வந்துண்டே இருக்கு.இஙயும் குழந்தைகளுக்கு நிறையா விளையாட்டு மையங்கள் இருக்கு. ஷாப்பிங்க் மால் போல திரும்பின பக்கமெல்லாம் டியூட்டிஃப்ரீஷாப்ஸ்தான்.
                         
டெரசில் சன்ஃப்ளவர் கார்டன் இருக்கு. பூரா பூர சன்ஃப்ளவர்பூக்கள்தான்.
                         
                   
பக்கத்துக்கு பக்கம் டி. வி. கம்ப்யூட்டர் எல்லாமே ஓடிண்டு இருக்கு யாரு
வேனாலும் எத வேனாலும் யூஸ் பண்ணிக்கலாம்.இங்கயும் கிறிஸ்மஸ்
                           
அலங்கரங்கள் திரும்பின பக்கமெல்லாம் இருக்கு.ஸ்கை ட்ரெயின்ன்னு
                           
ஒன்னு ஓடிண்டே இருக்கு அதில் எந்த டெர்மினசுக்கு வேனும்னாலும் போக
 முடியுது. ஒவ்வொரு ஏற்பாடும் அவ்வளவு கச்சிதமா பண்ணி இருக்காங்க.
 பாக்க பாக்க அவ்வளவு சந்தோஷமா இருக்கு.இங்கயும் குழந்தைகளுக்கு
                   
  பொழுது போக நிறைய விளையாட்டுக்கள் இருக்கு. குழந்தைகளும் ஜாலியா சிரிச்சு விளையாடி ஃபௌண்டன்களில் கை நனைத்து கும்மாளமிட்டுக்கொண்டிருக்கிரார்கள். குட்டி குழந்தைகளுக்கு  ஒரு இடம்
                     
முழுவதும் பலூங்களை நிறப்பி அதில் விளையாட ஏற்பாடு செய்திருக்காங்க
இன்னொரு இடத்திஉல் சின்ன ஓடை மாதிரி தண்ணி ஓடிண்டு இருக்கு
                 
     
கரையெல்லாம் கலர் கலராக பூக்கள் மலர்ந்து சிரிக்கின்றன ஓடையில் கலர் கலரான மீன்கள் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தன.எத்தனை நேரம் பார்த்தாலும்மலுக்காத காட்சிகள்.
                               
மொத்தத்துல சிங்கப்பூர் லைஃப்  ஸ்டைல் காஸ்ட்லியா தான் இருக்கு.ரொம்பவே எக்ஸ்பென்சிவ்தான் ஆனா செலவழிக்குர காசுக்கு வஞ்சனை இல்லாம வசதிகளும் சவுகரியங்களும் தாராளமாகவே கிடைகின்றன. ட்ரான்ஸ்போர்ட் பராமறிப்பு உபயோகம் எல்லாமே கன கச்சிதம். காத்து கிடக்க வேண்டிய அவசியமே இல்லாமல் குறித்த நேரப்படி வந்து விடுகிரது,க்ளீன்  ஊரு.இவ்வளவு வாகனங்கள் ஓடினாலும் ஹார்ன் சத்தமோ பெட்ரோல் புகயோ தூசியோ துளிகூட இல்லே. ஸிஸ்டமேடிக்கா இருக்கு எல்லாமே.வயசானவங்களுக்கு, சின்ன குழந்தைகளுக்கு கவனம் எடுத்து  மதிப்பும் மறியாதையுமாக நடத்துரங்க.
சிங்கப்பூர் டிரிப் இனிமையான சந்தோஷமான அனுபவமாகவே அமைந்தது.
 அதையும் உங்க எல்லார் கூடவும் பகிர்ந்து கொண்டது இன்னும் அதிக சந்தோஷமா இருந்தது. பயணம் முடிந்தது.   GOOD  BYE.

45 comments:

கோமதி அரசு said...

சிங்கப்பூர் டிரிப் இனிமையான சந்தோஷமான அனுபவமாகவே அமைந்தது.//

எங்களுக்கும் இனிமையாக அமைந்தது.
நாங்களும் உங்கள் கூட பயணித்தோம் அல்லவா!

இராஜராஜேஸ்வரி said...

சாங்கி ஏர்போர்ட்
ஒரு ப்ரும்மாண்ட தனி உலகம்தான். பார்க்க பார்க்க பிரமிப்பா இருக்கு ....

பயணங்கள் முடிவதில்லை அம்மா ..தொடரட்டும் ...

தங்களுக்கும் அருமை குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

வல்லிசிம்ஹன் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் லக்ஷ்மி. அருமையான படங்கள் கொடுத்த ஆநந்தத்தில் ஆழ்த்தி இருக்கிறீர்கள்.

மிக மிக நன்றி மா.

அமைதிச்சாரல் said...

படங்கள் இந்தத்தடவை ரொம்பவே அழகாருக்கு. காமிரா மாத்திட்டீங்களா லக்ஷ்மிம்மா :-)

குட்டிப்பைனாப்பிள் க்யூட்டா இருக்கு.

JAYANTHI RAMANI said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் லட்சுமி அம்மா. புத்தாண்டுக்கு இந்தியா வந்தாச்சா. புகைப்புடங்கள் அருமை. உங்களுடைய புன்னகை ரொம்ப ரொம்ப அருமை. நாங்களும் உங்களோட பயணம் செய்த மாதிரி இருக்கு.
பகிர்விற்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

பயணம் இனிதாக அமைந்ததில் மகிழ்ச்சி. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

இளமதி said...

லக்ஷ்மிம்மா.....சூப்பரோ சூப்பர்மா. எல்லாப் படங்களும், நீங்க ரசிச்சு ரசிச்சு அனுபவிச்சு எழுதியிருக்கிற பதிவும் எல்லாமே மனசுக்கு நிறைவா இருக்கு.....

நானும் ரொம்பவே ரசிச்சு பார்த்தேன், படிச்சேன்...:)அழகிய பகிர்வுக்கு மிக்க நன்றி!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!!

என் பதிவிலும் வாழ்த்து அட்டை போட்டிருக்கேன் நேரம் கிடைச்சா வந்து பார்க்கணும்மா..நன்றி.

பழனி.கந்தசாமி said...

ரசித்தேன்.

அம்பாளடியாள் said...

கொடுத்து வைத்த சீவன் அம்மா
நீங்கள் .பூக்களும் உங்கள் புன்னகையும் மனதைக் கவர்ந்து நிக்குறது !...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா இன்று போல் என்றும் மகிழ்ச்சி தொடரட்டும் ..

Ranjani Narayanan said...

சிங்கபூர் பயணம் முடிந்து தாயகம் வந்திருப்பீர்கள். இனிமையான பயணம். உங்கள் எழுத்துக்களில் பலவற்றையும் தெரிந்து கொண்டேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் said...


ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
01.01.2013
kambane2007@yahoo.fr

athira said...

ஆ.. லக்ஸ்மி அக்கா.. பயணம் முடிஞ்சுதோ? இன்றுதான் சூப்பரா படங்கள் போட்டிருக்கிறீங்க.. நல்லாயிருக்கு.

அன்னாசி இப்போதான் முதன் முதலில் பார்க்கிறேன்ன் இதுவரை மரத்தில் பார்த்ததில்லை. அன்னாசிமரம் வளர்த்தால் பாம்பு வரும் எனச் சொல்லிச்சினம் உண்மையோ?:)

athira said...

லக்ஸ்மி அக்கா வர வர குண்டாவும் நல்ல அழகாகும் வாறா.. டயட் பணுங்கோ லக்ஸ்மி அக்கா:).

RAMVI said...

ஓ!! முடியும் போது வருகிறேனா?? நேரம் கிடைக்கும் போது மீதி பகுதிகளையும் பார்க்கிறேன் அம்மா.
இந்த பதிவில் படங்களெல்லாம் மிக அருமையாக இருக்கு.

தங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள், அம்மா.

Asiya Omar said...

அருமையாக முடிச்சிருக்கீங்க. பயணக்கட்டுரை அனைத்து பாகங்களும் ரசிக்கும்படி எழுதியது சிறப்பு..பாராட்டுக்கள் லஷ்மீமா.

அஸ்மா said...

அடேயப்பா...! என்னோட சுறுசுறுப்பை வைத்து பார்த்தா நீங்க என்றும் பதினாறுதான் லக்ஷ்மிம்மா :) எவ்ளோ படங்களோடு 13 பதிவு போட்டும் ஒண்ணுகூட முழுசா படிக்கல நான் :( முதல் பார்ட்லேர்ந்து படிச்ச பிறகு வர்றேன்.

இராஜராஜேஸ்வரி said...

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

இளமதி said...

லக்ஷ்மிம்மா சிங்கையிலிருந்து வந்தபின்பு உங்களக் காணலியே..

நலமாக உள்ளீர்களா?

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

Lakshmi said...

பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் நன்றிகள்.

Vijiskitchencreations said...

லகஷ்மி மேடம்,புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களோட சிங்கபூர் பயணம் சூப்பர். நானும் 8 வருடங்களுக்கு முன் போயிருந்தேன். உண்மையிலேயே ஊர் அழகு+சுத்தம். எனக்கும் மிகவும் பிடித்தது சந்தோஷா கார்டன்.
நைட் சவார். இது இரண்டும் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.

புத்தாண்டு பதிவு இன்னும் வரவில்லையே. ரெஸ்ட் எடுத்திட்டு வந்து மெதுவா எழுதுங்க.
நல்ல படங்களோட எழுத்தும் அருமை.நன்றி.

சேக்கனா M. நிஜாம் said...

அழகிய பயண அனுபவங்கள் !

வாழ்த்துகள்...

முள்றியின் டைரி.... said...

Hallo Mam....
This is Murali from Kenya.
I just came to your blog only this evening....interesting. Usually I do not read my blog also as I am very busy in FB.....I will keep reading your blog

Lakshmi said...

oh neenga sivasankarasubramaniyanoda friend murali thane. romba santhosham. varukaikku nanRi

athira said...

லக்ஸ்மி அக்கா எங்க போயிட்டீங்க? பிஸியாகிட்டீங்களோ? நீங்களும் மற்றும் எல்லோரும் நலம்தானே?

அதிரா.

Asiya Omar said...

லஷ்மி அக்கா எங்கே போயிட்டீங்க? பிஸியா? நலம் என்று வந்து ஒரு பதிவு மட்டும் போடவும்.எங்களுக்கு நிம்மதியாக இருக்கும்.

Agila said...

Hello Madam
How are you.. long time no writing??
..Agila

Ambal adiyal said...

வணக்கம் !
தங்களின் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் முடிந்தால் தங்களின் வருகையினை உறுதிப் படுத்துங்கள் .தங்களை அறிமுகம் செய்ய எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பதனை நான் மிகவும் பெருமையாகக் கருதுகின்றேன் .மிக்க நன்றி படைப்பிற்கு !
http://blogintamil.blogspot.ch/2013/07/3.html

Nrmpshans Shans said...

nalla irukunga porumaiya paduchu comment podaren...siva

Nrmpshans Shans said...

nalla irukunga porumaiya paduchu comment podaren...siva

Nrmpshans Shans said...

nalla irukunga porumaiya paduchu comment podaren...siva

Cherub Crafts said...

Lakshmi amma ..how are you .we've been searching for you ...take care .

Angelin.

அம்பாளடியாள் வலைத்தளம் said...

அம்மா உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
தங்களின் சுக நலத்தை அறியும் ஆவலுடன் காத்திருக்கின்றேன் நானும் .

அம்பாளடியாள் வலைத்தளம் said...

இனிய தைப் பொங்கல் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அம்மா !

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு : கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் :
அன்பின் பூ - இரண்டாம் நாள்

Angelin said...

லக்ஷ்மி அம்மா ..உங்களை ரொம்ப நாளாச்சி பதிவுலகில் பார்த்து .நலமாக இருக்கீங்களா .take care.

yathavan nambi said...

அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (08/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு:
http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

yathavan nambi said...

அன்பு வலைப்பூ நண்பரே!
நல்வணக்கம்!
இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
"குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
ஆம்!
கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
மற்றும்!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள லக்ஷ்மி அம்மா அவர்களுக்கு வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (08.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

வலைச்சர இணைப்பு இதோ:

வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள்
http://blogintamil.blogspot.in/2015/06/8.html

ADHI VENKAT said...

அன்புடையீர்,

வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.

இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/8.html

Dr B Jambulingam said...

வலைச்சரத்தில் இன்று தங்களது வலைத்தளத்தை திரு வை.கோபாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்.
http://www.drbjambulingam.blogspot.com/
http://www.ponnibuddha.blogspot.com/

பூந்தளிர் said...

ரொம்ப அழகா எழுதுரீங்க. பக்கத்துல உக்காந்து கேககராப்ல இருக்கு. ஏன் புது பதிவு ஏதுமே போடலே. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்

ஆல் இஸ் வெல்....... said...

Enter your comment...பயணக்கதை வெகு சிறப்பாக சொல்லி இருக்கீங்க.

ஸ்ரீராம். said...

Hello.... Koyi hai? How are you?

ஸ்ரீராம். said...

லக்ஷ்மி அம்மா.. நலமா? அட்வான்ஸ் 2018 புத்தாண்டு வாழ்த்துகள்.

என்னை ஆதரிப்பவர்கள் . .