Google+ Followers

Pages

Monday, April 30, 2012

பாலக் கீரை

தேவையான பொருட்கள்.
 பாலக்கீரை ------------------    ஒரு கட்டு.
பயத்தம் பருப்பு-------------   100- கிராம்.
 துருவிய தேங்காய்--------    ஒரு மூடி
ஜீரகம்-----------------------   ஒரு ஸ்பூன்
 மிளகா வத்தல்----------    4
கடுகு-----------------------   ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-----------  ஒரு ஸ்பூன்
கறி வேப்பிலை---------   ஒரு ஆர்க்
தேங்கா எண்ணை--------- ஒரு ஸ்பூன்
 உப்பு ----------------------------   தேவையான அளவு
 செய் முறை

Friday, April 27, 2012

போட்டிக்கு கதை

        ஏய் ரகு கதிர்ல ஒருபோட்டி வச்சிருக்காங்கடா. நம்ம போல புது எழுத்தாளர்களுக்காக சிறுகதைப்போட்டி,தலைப்பு வித்யாசமா கொடுத்துருக்காங்க.
 அட யாருடா இவன், நீஎழுதி அனுப்புனதும் உனக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும்னுகனவுகாணுரியா? இதெல்லாமே ஒரு ஐ வாஷ்டா.கடைசில யாரோ ஒரு பிரபல எழுத்தாளருக்குதான் பரிசு போகப்போகுது. நாமெல்லாம் எழுதி அனுப்பினாஅதுவும் புதுசா எழுதமுயற்சி செய்யுரவங்க எழுத்துன்னா படிச்சுகூட பாக்காம குப்பைகூடைக்குதான் போகும்பா.என்று வெருப்பாக பதில் சொன்னான் ரகு. சரிடா அப்படியே இருக்கட்டும் ஆனா இதுபோல பத்திரிகைகளில் போட்டின்னு விளம்பரத்த பாத்த உடனே ஏதானு எழுதி அனுப்பனும்னு மனசும் கையும் பர பரன்னு வருதேடே. விடாம முயற்சி செய்தா ஒரு நா இல்லேன்னா ஒரு நாநம்ம எழுத்தும் கண்டிப்பா பத்ரிக்கையில் வரும் பாரேன் .   என்ரான் சிவா நம்பிக்கையுடன்.

Wednesday, April 25, 2012

புல்கா ரொட்டி

தேவையான பொருட்கள்.
 கோதுமை மாவு--------------- 3-கரண்டி
 சோயாமாவு------------------ 2-தேக்கரண்டி
 எண்ணை----------------- 2 டீஸ்பூன்
 உப்பு--------------------- ஒரு பிஞ்ச்.
 செய் முறை.
ஒரு பௌலில் மாவுகளைப்போட்டு சிட்டிகை உப்பும் போட்டு
தேவையான தண்ணீர் ஊற்றி மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
 மேலாக 2-டீஸ்பூன் எண்ணை விட்டு கையில் ஒட்டாத பக்குவத்
தில் பிசைந்து கொள்ளவும்.
                                                          
பிசைந்த உடனே ரொட்டிகளாக இடவும். அடுப்பை சிம்மில் வைத்து
 தவாவை சூடு படுத்தவும்.
 சூடான தவாவில் வட்டமாக மெலிதாக இட்டு வைத்திருக்கும்
                                            
ரொட்டிகளைப்போடவும். லேசாக சூடானதும் திருப்பி போடவும்
 பிறகு தவாவில் இருந்து எடுத்து தணலில் வாட்டவும். வாட்டும் போது
                                                        
தணலை அதிகப்படுத்தவும். அப்போதுதான் நன்கு உப்பிக்கொண்டு வரும்.
சூடாகவே ஒரு துணியில் முடிந்து எவர்சில்வர் டப்பாவில் மூடி வைக்கவும்
 இரவு வரை மிருதுவாகவே இருக்கும். எண்ணையோ நெய்யோ தடவாத
 ஆரோக்கிய ரொட்டி ரெடி.
              விருப்பப்பட்டவர்கள் ஜவார் பாஜ்ரா மாவு வகை களையும் சேர்த்துக்
கொள்ளலாம். ஜவார்னா சோளமாவு, பாஜ்ரா கம்பு மாவு. இன்னும் சத்துள்ளதாக இருக்கும்.

  வழக்கம்போல கேமராவில் டைம்&டேட் செட் பண்ண மறந்தேன் சாரி

Monday, April 23, 2012

ஸ்டஃப்ட் பிண்டி.

வெண்டைக்காயைத்தான் இங்க பிண்டின்னு சொல்வாங்க.
 தேவையான பொருட்கள்.
                                              
பிஞ்சு வெண்டைக்காய்கள்.--------     10 அல்லது 15.
ஸ்டஃப் பண்ண தேவையான பொருட்கள்.
மஞ்சள் பொடி-------------   ஒரு டீஸ்பூன்.
பெருங்காயப்பொடி------ ஒரு டீஸ்பூன்.
எள்ளு பொடி--------------- ஒரு டேபிள் ஸ்பூன்.
 (எள்ளை வெரும் கடாயில் சிவக்கவறுத்து பொடிக்கவும்.)
 மிளகாய்ப்பொடி-------------    ஒரு ஸ்பூன்.
 கரம் மசாலா பொடி---------  ஒரு ஸ்பூன்
தனியா பொடி----------------  ஒரு ஸ்பூன்.
உப்பு---------------------------- தேவையான அளவு
தாளிக்க எண்ணை--------- 2  ஸ்பூன்
தயிர்-------------------------   ஒரு கரண்டி.
                

Friday, April 20, 2012

தண்ணீர் தண்ணீர்.அப்பா, எதிர் வீட்டு அங்கிள் உங்கள கூப்பிடராங்க என்று மகன் சொன்னதும் வெளியே வந்தான் வாசு. வெளியே பக்க்த்து வீட்டு பெங்காலிகாரன் பட்டாச்சாரியா கோபமாக நின்றுகொண்டிருந்தான். ஆயியே பட்டசார்ஜி . என்றான் வாசு. உள்ள வரதெல்லாம் இருக்கட்டும். என் கூட கீழ வாங்க. நீங்க மேல டாங்க் குழாயை மூடிவக்கிரீங்க கீழ் வீட்டுக்காரங்க எம்மேல கத்துராங்க. நீங்களும் வாங்க என்ன ஏதுன்னு கேளுங்க. நீங்களும் மதராசி, அவங்களும் மதராசி. சரியா பேசி புரியவைக்கமுடியும் பட்டா தொடர்ந்து சொல்லிக்கொண்டே போனார்.

Wednesday, April 18, 2012

புளி பொங்கல்.

 புளி பொங்கல்.
 தேவையான பொருட்கள்.
பச்சை அரிசி--------------   2 கப்.
புளி-------------------------  1 எலுமிச்சை அளவு.
வெல்லம்----------------   1 நெல்லிக்கா  அளவு.
உப்பு----------------------    தேவையான  அளவு.

 தாளிக்க.

 நல்லெண்ணை-------------   4 டேபில் ஸ்பூன்.
 கடுகு--------------------------- 1  டீஸ்பூன்.
வெந்தயம்---------------------  1 டீஸ்பூன்
உ.பருப்பு----------------------- 1 டேபில் ஸ்பூன்
 கடலைப்பருப்பு  -----------  1  டேபில் ஸ்பூன்.
 நிலக்கடலை---------------   1 டேபில் ஸ்பூன்.
 மிளகா வத்தல்-------------  7.
 பச்சமிளகா-----------------   2.
 மஞ்ச பொடி----------------  1  டீஸ்பூன்.
 பெருங்காயப்பொடி------   1  டீஸ்பூன்.
 கறி வேப்பிலை------------ 1 ஆர்க்.
 செய் முறை.
 அரிசியை நன்கு கழுவி தண்ணீரை வடிய வைக்கவும்.

Monday, April 16, 2012

விவாஹம்

 நான் குடி இருக்கும் பில்டிங்கில் கீழ் வீட்டில் வசிப்பவர்களின் பெண்ணுக்கு கல்யாணம் என்று பத்திரிக்கை கொடுத்து வீட்டுக்கு வந்து அழைத்தார்கள். ஏப்ரல் 15- சண்டே கல்யாணம். நான் எவ்வள்வோ கல்யாணங்களில் கலந்துகொண்டிருக்கேன். ஆனா மலயாளி நாயர்குடும்பத்து கல்யாணத்தில் இப்பதான் முதல் முறையாக கல்ந்துக்கப்போரேன் ஒவ்வொரு பிரிவினரின் கல்யாணமும் ஒவ்வொரு விதம் இல்லியா? இதுவும் ஆரம்பத்திலிருந்து  பார்க்கணும் என்று கிளம்பினேன். காலை 10. 15-க்கு முஹூர்த்தம் என்று கார்டில் போட்டிருந்தது. நான் இருந்தது அம்பர் நாத். கல்யாணம் உல்லாஸ் நகர் என்னும் இடத்தில். ஒரு ஹோட்டலில் இருந்தது. 10-மணிக்கு கிளம்பி உல்லாஸ்னகர்போனேன். அம்பர் நாத் டு உல்லாஸ் நகர் 7-கிலோ மீட்டரில் இருந்தது.  ஆட்டோவில் இடம் தேடிப்போகும்போதே 10. 30 -ஆனது. ஹோட்டல் வாசலில் போர்ட் எதுவும் வைக்கலே. வாச்மேனிடம் விசாரித்துக்கொடு மாடியில் ஹால் போனேன். ஒரே ஆச்சர்யமா போச்சு.

Friday, April 13, 2012

ரவா லட்டு

 அனைவருக்கும்  நந்தன வருட தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
ஸ்வீட் எடுங்க. கொண்டாடுங்க.
 ரவாலட்டு இன்றைய ஸ்வீட்.

Wednesday, April 11, 2012

அட்வைஸ்

ஏன் மீனா, நீயாவது சொல்லக்கூடாதா?
 என்னத்தை ச்சொல்ல சொல்ரே? நான் ஒன்னு சொல்லி உடனே கேட்டிருக்கார்னு உண்டா? நா வாயத்தொறந்தாலே, உனக்கு ஒன்னும் தெரியாது, வாய மூடிண்டு இருன்னுதானே அவர்கிட்டேந்து பதில் வரும். சொல்லி சொல்லி  எனக்கே பொறு மை போயாச்சு,இனி அவர் என்ன செய்தாலும் நா ஏதுமே சொல்லப்பொரதில்லேங்குர முடிவுக்கே வந்துட்டேன்மா. அவர் இஷ்ட்டப்படியே நடக்கட்டும்.
இப்படி ,அப்பவும் சொன்னாப்ல ஆயிடுத்தா?.குடும்பம்னா அப்படி இப்படி இருக்கு ம் தான்.அதுக்காக எப்படியோ போகட்டும்னு விட்டுட முடியுமா?குடும்பத்லஒரு புருஷனுக்கு எவ்வளவு பொறுப்புகள் இருக்கோ, அதேபோல மனைவிக்கும் இருக்கு. ஒரு புருஷன் பொறுப்பாகவும் பதவிசாகவும் நடந்துகொண்டால் அவன்பொண்டாட்டி கெட்டிக்காரின்னும், அதே அவன் பொறுப்பில்லாமல் நடந்துண்டா அவன் பொண்டாட்டிக்கு சாமர்த்தியமே போராதுன்னும்தானேசொல்லுவா? அவன் எப்படி இருந்தாலும் பெத்த பேரு என்னமோ மனைவியைத்தான் சேரும் . அதனால நீ தான் கொஞ்சம் அனு சரிச்சுண்டு போகனும்.

Monday, April 9, 2012

மைசூர் பாக்

ஒரு வருடத்துக்கும் மேலேயே பதிவு எழுதிண்டு இருக்கேன். இதுவரை சமையல் குறிப்புன்னு எதுவுமே போட்டதில்லே. சில பேரு அம்மா உங்க வயசுக்கு நிறையா சமையல் அனுபவம் இருக்குமே. பாரம்பரிய சமையல், பழங்கால சமையல் முறைகள் இந்தக்கால தலை முறையினருக்கும் சொல்லுங்கன்னு  மெயில்ல  கேட்டிருக்காங்க. இந்தக்கால குழந்தைகளோ பீஸா, பர்கர் நூடுல்ஸ் சுவைக்கே பழகி இருக்காங்க. எதனை பேருக்கு இதில் ஆர்வம் இருக்கும்னு தெரியல்லே. கேட்ட அன்பு உள்ளங்களுக்காக நம்ம எல்லாருக்க்ம் தெரிந்த ஒர்   ஸ்வீட்டில் ஆரம்பிச்சிருக்கேன். எததனை பேருக்கு பிடிக்கும்னும் தெரியல்லே. வீட்டுக்கு ஒரு ஷுகர் பேஷண்ட் இருக்காங்களே.//?
 வரும் தமிழ் வருடப்பிறப்பன்று இந்தஸ்வீட் பண்ணி பாருங்க.
 தேவையான  பொருட்கள்.

Monday, April 2, 2012

கிலிபி 22 ஆப்ரிக்கா (எண்ட்)

       

என்னை ஆதரிப்பவர்கள் . .