Google+ Followers

Pages

Wednesday, May 30, 2012

அழைப்பிதழ்

           
 அன்பு பதிவுலக நண்பர்களுக்கு. என் பேரனுக்கு ஜூன் 7-ம் தேதி
 மும்பையில் வைத்து பூணூல் கல்யாணம் வச்சிருக்கோம்.
 மும்பையில் இருக்கும் பதிவுலக நண்பர்கள் தவராமல் வந்து
 கலந்து கொண்டு குழந்தையை ஆசிர்வதிக்கவும். வெளி ஊரில்
 இருப்பவர்கள் வரமுடிந்தவர்கள் வந்து கலந்து கொள்ளவும்.
வரமுடியாதவர்கள் ஆசிர்வாதம் சொல்லவும் நன்றி                              

Monday, May 28, 2012

கொத்தமல்லி தொகையல்.

தேவையான பொருட்கள்.
 கொத்துமல்லி-------------------  5 சிறியகட்டு.
 உளுத்தம்பருப்பு----------------  250- கிராம்
மிளகாய்ப்பொடி----------------   100- கிராம்
 புளி--------------------------------   ஒரு சிறிய ஆரஞ்ச் அளவு.
பெருங்காயம்-------------------   சிறிதளவு
 எண்ணை------------------------   2 டேபிள் ஸ்பூன்
 உப்பு தேவையான அளவு.
                             

Friday, May 25, 2012

7- கப் கேக்

தேவையான பொருட்கள்.
 கடலை மாவு------------------  ஒரு கப்.
துருவிய தேங்காய் ----------  ஒரு கப்.
பால்------------------------------  ஒரு கப்.
 நெய்-----------------------------   ஒரு கப்.
 ஜீனி-----------------------------   3 கப்.
 முந்திரி பருப்பு-------------- 50 கிராம்.(பொடித்துக்கொள்ளவும்.)
       

Wednesday, May 23, 2012

காத்திருப்பு. 3

வீட்டுக்கு வந்தவர்கள் சவிதாவிடம் நடந்ததெல்லாம் சொன்னார்கள்.  நீ என்னம்மா சொல்ரே என்ரார்கள். நான் சொல்ல என்ன இருக்கு. பெரியவங்க நீங்க பாத்து எது செய்தாலும் சரிதான் என்றாள்.மறு நாளே குடும்ப நல கோர்ட்டுக்குபோய் விஷயங்கள் எல்லாம் சொல்லி கேஸ் ஃபைல் செய்து சங்கருக்கு சம்மன் அனுப்பினார்கள். சம்மனைப்பார்த்ததும் கோபம் தலைக்கேற  விவாகரத்து வழக்கா போடுராங்க பாத்துடலாம் நானா அவங்களான்னு நான் சம்மத்ம் சொல்லாம விவாகரத்து வாங்கிடமுடியுமா அவங்களால என்று அப்பவும் திமிர்த்தனமாகவே பேசினான். அவன் அம்மா எவ்வளவோ சொல்லியும் கூட அவன் காதிலேயே வாங்கலே. கோர்ட்டில் வாய்தா வாங்கி ,வாங்கியே ஒரு வருடத்துக்கும் மேலே கேசை இழுத்தடித்தான் சங்கர். கோர்ட்டில் நீங்க சொல்ரபடி சங்கர் கிட்ட இது போல குறை இருக்கு என்பதற்கு உங்க கிட்ட எதானும் ஆதாரம் இருந்தா நம்மபக்கம் பலமாக இருக்கும் என்றார்கள். உடனே அடுத்த நாள் சவிதா அப்பா அம்மாவை கூட்டிக்கொண்டு டாக்டர் ராமமூர்த்தியை பார்க்கப்போனாள். வாம்மா சவிதா. என்ன விஷயம் என்றார். அவரிடம் எல்லா விஷயங்களும் விவரமாக சொல்லி விட்டு கோர்ட்ல கேஸ் நடக்கும் போது நீங்க வந்து சாட்சி சொல்ல முடியுமா என்று கேட்டாள் சவிதா. கண்டிப்பா சொல்ரேன்மா. அவனோட மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் என்னிடமும் ஒரு காப்பி இருக்கு. கேஸ் நம்ம பக்கம் தான் ஸ்ட்ராங்கா இருக்கு நாம ஜெயிச்சுடலாம் கவலையே படாதீங்கன்னு தைரியம் சொல்லி அனுப்பினார்.

Monday, May 21, 2012

காத்திருப்பு. 2

சவிதாவைப்பார்த்ததும் பெற்றவர்களுக்கு சந்தோஷம். வாம்மா வா. மாப்பிள்ளை வரலியா? என்றார்கள். இல்லேம்மா, நா மட்டும்தான் வந்தேன். கல்யாணமாகி முத முதல்லா பிறந்தவீடு வரும்போது மாப்பிள்ளையுடன் வரனும்மா. என்று  வாஞ்சையுடன் சொன்ன பெற்றவர்களை அன்பாகப்பார்த்தாள் சவிதா. பெண் கல்யாணம் நல்லபடியாக முடிந்தது என்று எவ்வள்வு நிம்மதியாக இருக்காங்க. இவங்ககிட்ட நான் எப்படி விஷயத்தைச்சொல்லப்போரேனோ தெரியல்லியே என்று சவிதா யோசனையில் ஆழ்ந்தாள் ஆனாலும் சொல்லித்தானே ஆகனும். அம்மா தந்த காபியை குடித்துவிட்டு பெற்றவர்களை ஆழமாகப்பார்த்த சவிதா அம்மா, அப்பா இங்க வாங்க இப்படி உக்காருங்க உங்க கிட்ட ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் பற்றி பேசனும். என்ராள் அம்மா பதறிப்போயி என்னடி ஏதானும் பிரச்சினையா என்றாள். ஆமம்மா. வாங்க சொல்ரேன் என்று அவர்களிடம் எல்லா விஷயங்களும் எடுத்து சொன்னாள்.

Friday, May 18, 2012

காத்திருப்பு.

கொட்டு மேளம் முழங்க சங்கர் சவிதாவின் கழுத்தில் தாலி கட்டினான். கல்யாணமண்டபம் முழுவதும் நிறைந்திருந்த உறவினர்கள் பூவும் அட்சதையும் தூவி மணமக்களை ஆசீர்வத்தனர். திரும்பினபக்கம் எல்லாம் ச்ந்தோஷம் உற்சாகம். பெண்ணின் கல்யாணம் ன்எபது பெற்றவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமான விஷயம். பெண்ணின் பெற்றோருக்கு சவிதா ஒருபெண் வெங்கட் ஒரு பையன் என்று அளவான குடும்பம்தான். பெண்ணின் கல்யாணம்கூட சொந்தக்காரர்களின் பண உதவியாலும் பொருள் உதவியாலும் தான் சிறப்பாக நடந்தது.பெண்ணின் அப்பா குறைந்த சம்பளக்காரர். அவர்மனைவியும் குடும்பத்தலைவிதான் . சொந்த பந்தங்கள்தான் எல்லா பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடித்தனர்.

Wednesday, May 16, 2012

க்ரீன் ஸாலட்

தேவையான பொருட்கள்.
 கேரட்-----------------   ஒன்று
 வெள்ளரிக்காய்----  ஒன்று
தக்காளி -------------- ஒன்று
பெரிய வெங்காயம்--  ஒன்று.
மிளகு பொடி---------- ஒரு டீஸ்பூன்
தேன் -------------------- ஒரு ஸ்பூன்
ஒயிட் வினிகர்------ ஒரு ஸ்பூன்
உப்பு---------------------- தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை---- ஒரு கைப்பிடி
         

Monday, May 14, 2012

ஸாண்ட்விச்

தேவையான பொருட்கள்.
ப்ரௌன் ப்ரெட்-----------   8 ஸ்லைஸ்.
ஆலிவ் ஆயில் -----------  ஒரு கிண்ணம்.
       

Friday, May 11, 2012

பாசம்

சீதாவின் கணவருக்கு ஜூன்மாதம் வேறு ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர் வந்தது. அப்போது தான் குழந்தைகள் பள்ளி திறந்திருந்தது. பாதி படிப்பில் வேறு ஊர் போவது சிரமம் என்பதால் முதலில் சீதாவின் கணவர் அங்க போகட்டும் ஒருவருடம் கழித்து குழந்தைகளுடன் சீதாவும் அங்கு போய்ச்சேர்ந்து கொள்ளலாம் என்று நினைத்து முதலில் அவர் கிளம்பி போனார். இரண்டு குடும்பச்செலவு அதிகமாகவே ஆனது.அங்கு அவருக்கும் தனி வீட்டு வாடகை, சாப்பாட்டு செலவு, அதுபோலவே இங்கு இவர்களுக்கும் தனியா வீட்டு வாடகை சாப்பாட்டு செலவு குழந்தைகள் படிப்பு செலவு என்று சமாளிக்க ரொம்பவே சிரமமாக இருந்தது. சீதா எல்லா விஷயங்களிலும் சிக்கனம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம். அந்த நேரம் சீதாவின் அப்பா பெண்ணைப்பார்க்க வந்தார். வீட்டில் குழந்தைகளுடன் அவள் ரொம்ப சிக்கனமாக குடும்பம் நடத்துவதைப்பார்க்க அவருக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.

Wednesday, May 9, 2012

இட்லி உப்மா.

முதல்ல இட்லி உப்மால்லாம் பதிவா போடனுமான்னு நினைச்சேன். ஆனா இப்ப பெரும்பாலான வீடுகளில் ஆண்களும் குழந்தைகளும் இட்லின்னாலே என்னம்மா எப்ப பாத்தாலும் இட்லியே பண்ணி போரடிக்கரேன்னு முகம் சுளிக்கிரார்கள்.தோசையை விரும்பி சாப்பிடுவதுபோல இட்லியையும் அவங்க விரும்பி சாப்பிடனும்னா இப்படி ஏதானும் மேக்கப் செய்து கொடுக்கனும். கலர் ஃபுல்லா இருந்தா சாப்பிடுவாங்க. என் பேரன்களிடம் நான் இதை பனீர் உப்மான்னு சொல்லி கொடுப்பேன். இட்லிய சதுரமாக  பனீர் துண்டுகள் போலவே கட்செய்துகாய்களும் சேர்த்து உப்மா செய்தால் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. தினசரியுமே என்ன டிபன் செய்ய, என்ன லஞ்ச் செய்யன்னு சர்க்கஸ்தான் பண்ண வேண்டி இருக்கு.ஒருவருக்கு பிடிப்பது இன்னொருவருக்கு பிடிக்க மாட்டேங்குது. எல்லாரையும் திருப்தி செய்யனும்னா ஏதானும் புதுசு புதுசா யோசிக்கத்தானே  வேனும்.
தேவையான பொருட்கள்.
ஏற்கனவே செய்து வைத்திருக்கும் இட்லிகள் ---------     4
 வெங்காயம்-------------------------------------------------------- 1
தக்காளி--------------------------------------------------------------  1
உருளைக்கிழங்கு =-----------------------------------------------  1
பச்சைமிளகாய்----------------------------------------------------    2
கறி வேப்பிலை------------------------------------------ கொஞ்சம்
தாளிக்க
எண்ணை-----------------------     2 ஸ்பூன்
கடுகு-----------------------------1  ஸ்பூன்
உளுத்தம்பருப்பு-------------- 1   ஸ்பூன்
கடலைப்பருப்பு--------------  1   ஸ்பூன்
மஞ்சபொடி--------------------   கால் டீஸ்பூன்
உப்பு----------------------------    சிறிதளவு
                                          
செய் முறை
காய்களை நன்கு கழுவி சின்ன துண்டங்களாக கட் செய்து கொள்ளவும்
 இட்லிகளை உதிர்த்துக்கொள்ளவும். கடாயில் எண்ணை ஊற்றி கடுகு
                                                    
பொரிந்ததும் பருப்புகபோட்டு சிவந்ததும் மிளகாய் வெங்காயம் போட்டு பாதி வதங்கியதும் காய்களைச்சேர்க்கவும். விருப்ப பட்டவர்கள் ஒரு கைப்பிடி
                                        
பச்சை பட்டாணி, ஒரு குடை மிளகா சேர்த்துக்கொள்ளலாம் ஒரு கண்ணுள்ள தட்டால் மூடி 5 நிமிடங்களுக்கு வேக விடவும். இட்லியில் உப்பு இருக்கும்,
                                                  
அதனால காய்களுக்கு தேவையான உப்பு சேர்க்கவும்.காய்கள் நன்குவதங்கியதும் உதிர்த்து வைத்திருக்கும் இட்லி துண்டுகளைச்சேர்த்து 5-
                                              
நிமிடங்களுக்கு வதக்கி இறக்கவும்.          
 நான் ஒரு ஆளுக்கு தேவையான அளவுகளுக்குத்தான் சொல்லி இருக்கேன் அதிக நபர்களுக்கு செய்யும்போது அதற்கேற்றார்போல் பொருட்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்ளவும்.            

Monday, May 7, 2012

ராஜ்மா க்ரேவி

தேவையான பொருட்கள்.
 ராஜ்மா-------------    கால் கிலோ.
பெரிய வெங்காயம்-----------   3.
தக்காளிப்பழம்-----------------   4.
மல்லித்தழை--------------------  ஒரு கைப்பிடி
பூண்டு---------------------------    10 பல்லு.
இஞ்சி -----------------------   ஒரு சிறிய துண்டு.
பட்டை----------------------  ஒரு சிரிய துண்டு
ஏலக்காய்----------------   4.
கிராம்பு-------------------- 4.
சோம்பு-------------------- ஒரு ஸ்பூன்.
 ஜீரகம்----------------------- ஒரு ஸ்பூன்.
மஞ்சப்பொடி-------------- ஒரு டீஸ்பூன்.
தனியா பொடி-------------  ஒரு ஸ்பூன்.
மிளகாய்ப்பொடி----------  2 ஸ்பூன்.
கரம் மசாலா பொடி-------- ஒரு ஸ்பூன்.
தாளிக்க எண்ணை---------    4 ஸ்பூன்.
 உப்பு-------------------------  தேவையான அளவு.
 செய் முறை.

Wednesday, May 2, 2012

சாந்தா ( M. S.)

 ரவிக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் அன்றுதான் கையில் கிடைத்தது. மஹா ராஷ்ட்ராவில் ஒரு ஒதுக்கு புறமாக இருக்கும் சந்த்ரபூர் என்னும் இடத்துக்கு. பேரு கூட கேள்விப்பட்டதில்லியேன்னு நினைத்தார்கள். அதுவும் ஊருக்கு 40- கிலோ மீட்டர் உள்ள தள்ளி இருக்கும் சாந்தா என்னும் பொட்டல்காடு.செண்ட்ரல் கவர்மெண்ட் உத்யோகத்தில் இருந்து கொண்டு டிரான்ஸ்பருக்கு பயந்தா முடியுமா?5, 5 வருஷத்துக்கு ஒரு முறை இப்படி காவடி தூக்கித்தான் ஆகனும். இதுக்கு முன்ன ஜபல் பூரிலிருந்து 50- கிலோ மீட்டர் உள்ள தள்ளி இருக்கும் கமேரியா என்னும் இடம். அதுக்கும் முன்ன பூனாவிலிருந்து உள்ள தள்ளி இருக்கும் கர்க்கி என்னும் இடம். ரவி வேலை செய்வது ஆர்டினன்ஸ் ஃபேக்டரி.அது ஊருக்கு வெளியே ஒதுக்கு புறமாகத்தான் இருக்கும். வெரும் ஃபேக்டரி, அதில் வேலை செய்பவர்களுக்கு பதவிக்கு தகுந்தாற்போல குடி இருப்பு வசதிகள். அந்தக்குழந்தைகள் படிக்க ஒருஸ்கூல். அதில் 10- வது வரைதான் இருக்கும். அப்புரம் பேருக்கு ஒரு ஆஸ்பிடல். மற்றபடி வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை கூடும். அங்கிருந்துதான் ப்ரொவிஷன் சாமானோ, காய்கறிகளோ வேறு அத்தியாவசிய பொருட்கள் வாங்கிக்கனும். பொழுது போக்கு என்று ஏதுமே கிடையாது. அந்த சமயம் டி, வி, யோ கம்ப்யூட்டரோ வந்திருக்கலே.

என்னை ஆதரிப்பவர்கள் . .