Google+ Followers

Pages

Monday, July 30, 2012

ஆலு ஹல்வா

 ஆலுன்னா உருளைக்கிழங்கு. சிரிக்காதீங்க. உருளைக்கிழங்கில் அல்வாவா?  ஆமாங்க செய்து பாருங்க. புதுசா சாப்பிடுரவங்க பாதாம் அல்வான்னே நினைப்பாங்க.
 தேவையான பொருட்கள்
 உருளைக்கிழங்கு--------------  1/2 கிலோ
ஜீனி-------------------------------- 1/4 கிலோ
 நெய்------------------------------  100 மில்லி
 பால்------------------------------ 150 மில்லி
 முந்திரி பருப்பு---------------- 10-
 ஏலப்பொடி--------------------  ஒருஸ்பூன்
                                           
 செய் முறை

 உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து தோல் நீக்கி மையாக
                                       
மசித்துக்கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி மசித்த கிழங்கை நன்கு வதக்கவும். பச்சை வாசனை போக நன்கு வதக்கனும். இது ரொம்ப அடி பிடிச்சுக்கும். நான் ஸ்டிக் கடாயில் கிளறினால் சரியா இருக்கும். பிறகு பால் ஊற்றி வேக விடவும் .கொஞ்சம் கெட்டி ஆனதும் ஜீனி சேர்த்து கை விடாமல் கிளறவும்.பாக்கி நெய்யும் ஊற்றி சுருள கிளறி இறக்கவும். நெய்யில் முந்திரி வறுத்து சேர்க்கவும். ஏலப்பொடியும் சேர்க்கவும்.
                                         

Monday, July 23, 2012

வெல்ல தோசை

தேவையான பொருட்கள்
                                               
கோதுமை மாவு-----------------    2 கப்
வெல்லம்-------------------------   1  கப்
 நெய் ------------------------------ 1 கிண்ணம்
துருவிய தேங்காய்----------  ஒரு கைப்பிடி
 ஏலப்பொடி-------------------   1 ஸ்பூன்

 செய் முறை

 வெல்லத்தை தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவும். கல் மண் போக வடி கட்டிக்கொள்ளவும். அதில் தேங்காய்ப்பூ, ஏலப்பொடி, கோதுமை மாவு சேர்த்து தோசை மாவு பக்குவத்தில் கலந்து கொள்ளவும். அடுப்பில்
                                                 
தோசைக்கல் காயவைத்து மாவை ஊற்றி கரண்டியால் வட்டமாக தேய்க்கவும்.
                                                   
சுற்றிலும் ஒர் ஸ்பூன் நெய் ஊற்ற்வும். நன்கு சிவந்து மொறு, மொறுப்பானதும் திருப்பி போடவும். நன்கு வெந்ததும் எடுத்து  சூடாக பரிமாறவும்.
                                                 
                                                   
 எங்க ஊருல ஏகாதசி அன்று பாட்டிம்மால்லாம் இந்த தோசைதான் செய்வாங்க. அன்று உப்பு சேர்க்க மாட்டாங்க . வெல்ல தோசைதான் செய்வாங்க. ரொம்ப டேஸ்டா இருக்கும்.

Friday, July 20, 2012

A. T. M.

மாசாமாசம் பேங்க் போய் பென்ஷன் எடுத்துட்டு வர அவஸ்தைகள் தாங்க முடியாம இருந்தது. கேஷ் வித்ட்ரா பண்ண ஒருமணி நேரம் க்யூவில் கால் கடுக்க நிக்கனும். பாஸ்புக்ல எண்ட்ரி போட வேர கவுண்டர்ல போயி ஒருமணி நேரம் க்யூவில் நிக்கனும்.சரின்னு ஏ. டி. எம் கார்டுக்கு அப்ளை பண்ணினேன்.ஃபர்ம் எல்லாம் ஃபில் அப் பண்ணி கொடுத்துட்டு எப்ப கார்ட் கிடைக்கும்னு கேட்டேன். இன்னும் ரெண்டுமாசத்ல கிடைக்கும்னாங்க. வீடு போயி பசங்களுக்கு போன் பண்ணி சொன்னேன். அவங்களும்  கார்ட் போஸ்ட்ல வீட்டுக்கு அனுப்புவாங்கன்னு சொன்னாங்க. நான் ரெண்டு மாசம் இல்லே மூனு மாசம் வெயிட் பண்ணி பாத்தேன் . ஒன்னும் வல்லே. பேங்க்லயே போயி கேட்டேன். போச்ட்ல வரும்னு யாரு சொன்னாங்க அப்படில்லாம் இல்லே. நீங்கதான் இங்க வந்து என்கொயரி பண்ணிருக்கனும்னாங்க. உங்க கார்ட் வந்து ஒருமாசத்துக்கு மேலே ஆச்சுன்னாங்க. நீங்க இன்ஃபார்ம் பண்ணிருக்கலாம்லன்னு கேட்டேன். அதெல்லாம் எங்க வேலை கிடையாதுன்னு சொல்ராங்க.சரின்னு கார்ட் வாங்கிண்டேன். எப்படி யூஸ்பண்ணனும்னு மேலோட்டமா சொன்னாங்க.

அடுத்தமாசம் அந்த பேங்கோட ஏ. டி. எம். மிஷின் போனேன். முதல் முறை ஆனதால கொஞ்சம் நெர்வசா இருந்துச்சு. கார்ட் இன்செர்ட் பண்ணினேன். அது உள்ளயே போச்சு. அப்புரம் பக்கத்தில் உள்ள மானிட்டரில் மெசேஜ் வந்தது. அதுபடியே வரிசையா எல்லாம் பண்ணிட்டே வந்தேன். கார்ட் தன்னாலே வெளியே வந்தது. அதை எடுத்து பையில் வச்சுகிட்டேன். பாஸ்வெர்ட் எல்லாம் போட்டு எவ்வளவு அமௌண்ட் வெனும்னெல்லாம் கரெக்டா ப்ரஸ்பண்ணினேன்.ஒரு புரத்திலிருந்து ரசீது வந்தது, மானீட்டர் கீழேந்து பணமும் வந்தது. நான் அசட்டுத்தனமா முதல்ல ரசீது எடுத்துட்டு எவ்வள்வு பேலன்ஸ் இருக்குனு செக் பண்ணிகிட்டு இருந்தேன். அதுக்குள்ள பணம் திரும்ப மிஷின்க்குள்ளயே திரும்பவும்போயிடுத்து. எனக்கோ இப்ப என்னபண்ணரதுன்னு புரியல்லே.ரசீதுல நான் பணம் எடுத்தாச்சுன்னு காட்டுது. ஆனா கையில் கேஷ் கிடைக்கலே.ஒரே கன்ஃப்யூஸ். தமிழ்ல ஒரு பழமொழி சொல்வாங்க். முன பின்ன செத்திருத்தாதானே சுடுகாடு தெரியும்னு. அதுபோல ஏ.டி. எம். பத்தி முன்ன பின்ன தெரியாததால ஒரே குழப்பம். திரும்ப பேங்க்ல போயி விஷயம் சொன்னேன்.

முதல் முறை போகும் போது யாரையானும் கூட்டிட்டு போயிருக்கலாம்லேன்னு சொல்ராங்க.அப்புரம் ஃபுல் டீடெய்லும் எழுதி ஒரு அப்லிகேஷன் கொடுங்க. ஒரு மாசத்துல உங்க அக்கவுண்ட்ல பணம் சேர்ந்துடும்னு சொன்னாங்க.அதெல்லாம் பண்ணிட்டு வீட்டுக்குப்போயி பசங்களுக்கு போன் பண்ணி சொன்னேன். ஒருமாசம்லாம் ஆகாது இப்ப எல்லா பேங்குமே கம்ப்யூட்டரைஸ்டு ஆயிடுத்து. மிஞ்சி போனா ஒருவாரத்துல கிடைச்சுடுங்க.10- நாள் கழிச்சு பாஸ் புக் எண்ட்ரி போடப்போனேன். பணம் போட்டிருந்தாங்க அப்பாடா தப்பிச்சேன்.இது முதல் மாச அனுபவம்னா அடுத்தமாசம் வேர மாதிரி சங்கடம். கார்ட் உள்ள இன்செர்ட் பண்ணினது வழக்கமான மெசேஜ் மானிட்டரில் வந்தது. பாஸ்வேர்ட் போட்டதும் இன் கரெக்ட் அப்படின்னு காட்டுது. மறுபடி மறுபடி பாஸ்வேர்ட் செக் பண்ணிட்டு கரெக்டாதான் போட்டேன். தப்பு, தப்புன்னே காட்டிச்சு. ஆனா ரசிட்துவரும் கௌண்டரிலிருந்து பில் வந்துகிட்டே இருந்தது கேஷ் மட்டும் வரவே இல்லே

 மறுபடியும் பேங்க் போயி கேட்டேன் என்ன மேடம் உங்க கூட ரொம்ப தொந்திரவா போச்சு. திரும்ப திரும்ப ஏதானும் பிரச்சினை பண்ணிகிட்டே இருக்கீங்கன்னு கோவமா பேசுராங்க. இதுல என் மிஸ்டேக் என்னான்னு எனக்கு புரியல்லே. இன்னொரு ஆள்கிட்ட் போயி கேட்டேன் மேடம் சில சமயம் மிஷின்ல பணம் போட மறந்திருப்பாங்க அப்போ பணம் வராது. நீங்க வேர பேங்க் ஏ. டி. எம். மிஷின்ல போயி ட்ரை பண்ணிபாருங்கன்னு கூலா சொல்ரான். அப்புரம் வேர ஏ.டி. எம். போனேன். கார்ட் உள்ளயே போலே. கார்ட் வச்சதுமே மானிட்டரில் மெசேஜ் வந்தது கார்டை எடுத்துகிட்டேன். எல்லா விவரங்களும் ப்ரெஸ் பண்ணினதும் உடனே பணம் வந்தது. முதல்ல அவசரமா பணத்தை எடுத்துகிட்டேன் அப்புரமா ர்சீது எடுத்தேன். புதுசா ஏ.டி. எம் யூஸ்பண்ணும்போது எல்லா விஷயங்களிலும் கவனமா இருக்கணும்னு இது ஒருபாடம்தான். எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருப்பதில்லையே, அனுபவம் தானே கத்துக்கொடுக்குது.

Wednesday, July 18, 2012

வாழைக்காய் புளி கூட்டு

வாழைக்காய் புளிக்கூட்டுக்கு தேவையன பொருட்கள்.
                             
 நாட்டு வாழைக்காய் -------------- 2
 புளி -------------------------------------  எலுமிச்சை அளவு
 துவரம் பருப்பு--------------------- 100 கிராம்
சாம்பார் பொடி-------------------  3 ஸ்பூன்
மஞ்ச பொடி----------------------- அரை ஸ்பூன்
பெருங்காயப்பொடி-------------- ஒரு ஸ்பூன்
வெல்லம்------------------------- கோலி அளவு
உப்பு ----------------------------- தேவையான அளவு
தாளிக்க-----------------------
 நல்லெண்ணை----------- 2 ஸ்பூன்
கடுகு------------------------ ஒரு ஸ்பூன்
 வெந்தயம்-------------- அரை ஸ்பூன்
 சிவப்பு மிளகாய்--------- 3
தேங்காய்------------------   பல்லு பல்லாக கட் செய்தது ஒரு கைப்பிடி
கருவேப்பிலை-------------- ஒரு ஆர்க்
செய் முறை
வாழைக்காய்களை தோல் நீக்கி சின்னதுண்டுகளாக கட் செய்ஜு மோர்கலந்த தண்ணீரில் போட்டு 10 நிமிடங்களுக்கு வைக்கவும். அப்போதான் காய் கருக்காமல் இருக்கும்.
                                         
புளியை 3 கப் அளவுக்கு கரைத்து வைக்கவும்
கடாயில் எண்ணை ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும் தேங்காய் துண்டுகளைப்போட்டு சிவக்க வறுக்கவும்.
 அதன் மேல் கட் செய்த வாழைக்காய் களை நன்கு கழுவி சேர்க்கவும்
 அதன் மேல் மஞ்ச பொடி, பெருங்காயப்பொடி, சாம்பார் பொடி கருவேப்பிலை போட்டு வதக்கி புளித்தண்ணி ஊற்றி நனகு புளி பொடி வாசனை போக கொதிக்க விடவும்.
                                           
  நன்கு வெந்த துவரம் பருப்பயும் சேர்த்து எல்லாம் சேர்ந்து கொதிததும் கீழே இறக்கி வெல்லம் சேர்க்கவும்.
                                                   
 சிலர் துவரம் பருப்பு சேர்க்காமல் செய்வார்கள் எங்க வீட்டில் பருப்பு சேர்த்தால் தான் பிடிக்கும். அது தவிர வாழைக்காயில் சாதா பொரியல் செய்தால் என்னம்மா தெவச பொரியல் பண்ணிருக்கேன்னு தொடவே மாட்டாங்க . இப்படி பண்ணினா தான் சாப்பிடுவாங்க. ஒவ்வொருவர் டேஸ்ட் ஒவ்வொரு மாதிரி இல்லியா?

Monday, July 16, 2012

பைங்கன் பர்த்தா.

 தேவையான பொருட்கள்.
                       
பெரிய கத்தரிக்காய்-------------------------   ஒன்று.
 வெங்காயம்---------------------------------- ஒன்று
 தக்காளிப்பழம்------------------------------ ஒன்று
 பூண்டு பற்கள்------------------------------- 4
 பச்சை மிளகாய்---------------------------- 2
எண்ணை------------------------------------ 2 ஸ்பூன்
கடுகு----------------------------------------- 1 டீஸ்பூன்
உப்பு ------------------------------------------  தேவையான அளவு
 செய் முறை
                                 
                                   
                           கத்தரிக்காயை எண்ணைதடவி தணலில் நன்கு தோல் கருகும்
 வரை சுட்டு எடுக்கவும். நன்கு ஆறினதும் தோல் நீக்கவும்.
                                           
கடாயில் எண்ணை ஊற்றி, கடுகு போட்டு பொரிந்ததும்
 பொடிசாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் சேர்த்து
                                   
 நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி
சேர்த்து பூண்டு மிளகாய் சேர்த்து சுருள வதக்கவும்.
                                             
 எல்லாம் நன்கு வதங்கியதும் தோல் நீக்கி பொடிசாக அரிந்து
 வைத்திருக்கும் கத்தரிக்காய் துண்டங்களைப்போட்டு நன்கு
                                             
 சுருள வதக்கவும். உப்பு சேர்க்கவும். சிலர் இதில் தயிர் சேர்த்து
 ராய்த்தாபோல செய்வார்கள். அதுவும் நல்லா இருக்கும். தயிர்
 சேர்க்காமல் அப்படியேவும் நல்லா இருக்கும்.
                                                 

Wednesday, July 11, 2012

கோவா (2)

இரவு நான் கொஞ்சமா தயிர் சாதம் மட்டுமே சாப்பிடுவேன் ஸோ மாடியில் என்ரூமில் கொண்டு த ந்துட்டாங்க.டி.வி.யில் அவங்க GOD சேனலில் ஏதோ பிரசங்கம் கேட்டுட்டு இருந்தாங்க. கம்ப்யூட்டரும் நெட் பிடிக்கவே மாட்டேங்குது.9 -மணிக்கே பெட்ரூமில் ஏ.சி. போட்டு கதவையும் சாத்திட்டு போயிட்டாங்க. எனக்கு 9- மணிக்கெல்லாம் தூக்கமே வராது.புது இடம் வேர. புரண்டு புரண்டு படுதுட்டே இருந்து அப்புரமா தூங்கினேன்.காலை 9-மணிக்கு எழுந்து பல்தேச்சு குளிச்சுட்டு கீழேபோனேன். நான் எப்பவருவேன்னு நாய்தான் காத்துக்கிட்டே மாடிப்படிகீழயே நின்னுட்டு இருந்தது.வந்ததுமே காலை நக்கி பின்னாடியே சுத்தி சுத்தி வந்தது. கார்டனில் சுத்தி அரைமணி நேரம் வாக்
                         
போனேன்.வந்து காபி பிஸ்கெட்ஸ்.அவங்கல்லாம் 9 மணிக்கே பிரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டாங்க.அவங்க இருவருமே 90 வயசை நெரிங்குரவங்க. பெரிய வீடு சகல் வசதிகள் எல்லாமும் இருக்கு. அவங்க வயசுகாரணமாக உடல் நிலையில் பல பிராப்லங்கள் வாக்கர் உதவியுடந்தான் நடக்கவேமுடிகிரது. அவர்களை கவனித்துக்கொள்ள இரண்டு வேலைக்கார பெண்கள் வீட்டோடயே தங்கி இருக்காங்க.பாதுகாப்புக்கு நாய் . அவங்க பெண் பிள்ளைகள் அடிக்கடி வந்து கவனிச்சுக்கராங்க.

 நானும் மகனும் மருமகளும் 11- மணிக்கு வெளியே கிளம்பினோம் mapusa  மெயின் மார்க்கெட் போனோம் திரும்பின பக்கமெல்லாம் மீன் காய வச்சிருக்காங்க. மூக்கிலிருந்து கர்ச்சீப்பை எடுக்கவே முடியல்லே. அங்க  எல்லா கடைகளிலும் முந்திரு பருப்பு ப்ரௌன் கலர் தோலுடன் ஃப்ரெஷாக மலிவாக கிடச்சுது. அதுமட்டும் வாங்கினோம்..ஊரைச்சுத்தி நிறையா பீச் தான். நல்ல டூரிஸ்ட் ஸ்பாட்டுன்னு சொல்ராங்க. பழமையும் புதுமையும் கலந்துதான் இருக்கு ஊரு. ரோடெல்லாம் ரொம்பவே சுமார் ரகம்தான்.ஒவ்வொரு இடத்தயும் விவரித்துக்கொண்டே வந்தான் மகன்.மட்காவ் என்னுமிடத்தில் அவன் ஒரு பங்களாகட்டி இருக்கான்
                                   
முதலில் அங்க போனோம்.கோடிக்கணகில் செலவுபண்ணி இங்க ஒரு பங்க்ளாகட்டி அதைப்பூட்டி போட்டுட்டு வெளி நாட்ல லஷக்கணக்கில் வாடகை கட்டி அங்க இருக்கான் என்ன வேடிக்கை இல்லியா?இந்த வீட்டை ஒருகேர் டேக்கர் பார்த்து கவனிச்சுக்கரான். வீட்டைச்சுத்தி தென்னை, மா,
                                   
வாழை மரங்கள் முன் புறம் பூவகைகள் என்று நல்லாவே பராமரிக்கரான்.வீட்டைப்பாத்துட்டு அது இருக்கும் பகுதிWHISPERING PALMS
                             
COWK.அங்கேந்து COLVA BEACH, MAJORDA CONSAULIM, PANJIM, NERUL,  இப்படி பல இடங்கள் சுத்திட்டுஹோட்டல் போனோம்.பேருSATKAAR.  சாப்பிட்டு வீடு வர்ம்போது 3- மணிக்கு மேல ஆச்சு. மாடில போயி படுத்துட்டேன். மறுபடி 5 -மணிக்கு எழுந்து டீ குடிச்சுட்டு நானும் மகனும் மட்டும் CALANGUTE  பீச் போனோம்.
                               
எந்த நேரம் பீச் போனாலும் நிறையா வெள்ளைக்காரங்க உடம்பு பூராவும் எண்ணை தடவிண்டு ஸன்பாத் எடுக்கரேன்னு சூடு மணலில் புரண்டுகிட்டே இருக்காங்க. அவங்களுக்கு  நம்மப்போல ப்ரௌன் ஸ்கின் வேனுமாம்.  நம்ம  மக்களோ சிவப்பழகு க்ரீம்பூசி வெளுப்பாக ட்ரை பண்ணுராங்க.வேடிக்கைதான். இர்ந்த எல்லா நாட்களும் கோவாவை பூராவும் சுத்தி காட்டினான். ஒவ்வொரு இடமாக பேர் சொல்லிண்டே வந்தான் எல்லாமே நினைவில் வச்சுக்க முடியல்லே   பீச் பேரெல்லாம் நினை வில் இருக்குCOLVA BEACH, CALANGUTE BEACH,   WAGHATOR BEACH, CONTOLIM BEACH  எல்லாம் போய் சூரிய அஸ் த்மனம் எல்லாம் பாத்தோம். மறு நாள் மர்கெட் ஏரியா மாபுசா போனோம். ந்யூடௌன் கண்டொலிம்னு ஒரு இடம்,கலங்கோட் டிண்டோன்னு ஒரு இடம் இரவு ஐஸ்க்ரீம் பாஸ்கின்&ரபின்ஸ் போனோம்.  இப்படியே 5 நாள் கோவா சுத்தி ஹோட்டலில் சாப்பிட்டு நாய் கூட விளையாடி நல்லா டைம் பாஸ் பண்ணினேன். கிளம்பும் அன்று நாய் பாவம் பேசத்தெரியல்லியே தவிர அதன் கண்களில் நாங்க கிளம்பரோம்னு சோகம் தெரிஞ்சது.. என்ன பண்ண முடியும் கொஞ்ச நாள் வீடு பூராவும் எங்களைத்தேடிண்டே இருக்கும். 5-ம் தேதி பாம்பே. வந்து வரிசையா விசேஷங்களில் கலந்து கொள்ள வேண்டி வந்தது. எல்லாம் முடிந்து அம்பர்னாத் வந்து15 நாள் ஆச்ச்சு மழை பிச்சு வாங்குது.இன்னும் 3- மாசத்துக்கு பாம்பே மழையில்தான் குளிச்சுட்டு இருக்கும்.

Monday, July 9, 2012

கோவா (1)

ஜூன்மாசம் 1-ம் தேதி கோவா போய் வந்தேன். இங்க வந்ததும் வரிசையா விசேஷங்களில் கலந்து கொள்ள வெண்டி வந்தது. ஸோ அந்தப்பதிவெல்லாம் முதல்ல போட்டேன். கோவா பின் தங்கி விட்டது. ஏர்போர்ட் போய் வழக்கமான பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிந்து போர்டிங்க் பாஸும் வாங்கிண்டு செக்கின் முடிந்து உள்ள போய் உக்காந்து வேடிக்கை பாக்க ஆரம்பிச்சேன். ஃப்ளைட்2 மணிக்குதான் இருந்தது வீட்லேந்து ப்ரேக்ஃபாஸ்ட் பிஸ்கெட் காபி குடிச்சுட்டு 11 மணிக்கு கிளம்பி 12- மணிக்கு ஏர்போர்ட் போயாச்சு.2- மணி வரை டைம் பாஸ் பண்ணனுமே. கொஞ்ச நேரம் ஏர்போர்ட் சுத்தி பாத்தேன் கொஞ்ச நேரம் புக் படிச்சு வாக் மேனில் பாட்டுகேட்டுன்னு டைம் பாஸ் பண்ணினேன் நேரம் ஆனதும் எல்லாரும் வரிசையில்  நின்னா நானும்போய் சேர்ந்துண்டேன். எனக்கு முன்ன 25-பேரு வரிசையில் இருந்தா. க்யூ ரொம்ப ஸ்லோவா நகர்ந்தது. என் ஆர்த்தரட்டீஸ் ப்ராப்லம்னால என்னால பத்து நிமிஷம் சேர்ந்தாப்ல ஒரு இடத்தில் நிக்க முடியாது. ஸோ பாத்ரூம் வரை போயி வந்துடலாம்னு போனேன். அது கொஞ்சம் தள்ளி இருந்தது. என்னால மெதுவாதான் நடக்கமுடியும். அது எங்கியோ ஒரு ஓரமா இருந்தது. அங்கபோயிட்டு வெளில வந்து தண்ணி குடிக்க போனேன். அப்போ என் மகனின் போன் வந்தது. அம்மா எங்க போயிட்டேள் எல்லாரும் ஃப்ளைட்டில் ஏறியாச்சு உங்களைக்காணோம்னு அங்க தேடிண்டு இருக்கா ஓடுங்கோன்னு அவசரமா சொன்னான்.

நான் இங்க தானேடா இருக்கேன் க்யூவில நிக்க முடியல்லே க்யூ ரொம்ப மெதுவா நகருதுன்னு பாத்ரூம் பக்கம் வந்தேன்னு சொன்னேன். அவசரமா எண்ட்ரன்ஸ் பக்கம் போனேன். அங்க யாருமே இல்லே டிக்கட் செக் பன்ரவன் மட்டும் இருந்தான் எங்க போயிட்டீங்க மேடம்னு ஒரு முறை முறைச்சான். சாரி, சாரின்னு சொல்லிட்டு பஸ்ல போயி ஏறிண்டேன் பஸ்சில் என்னையும் ட்ரைவரையும் தவிர யாருமே இல்லே. எனக்கே ஒரு மாதிரி ஆச்சு. எவ்வளவுதடவை ஃபலைட்பயணம் போயிருக்கேன் இப்படி ஒருதடவைகூட ஆனதில்லே. சரி இதுவும் ஒரு அனுபவம்னு நினச்சேன்.ஃப்ளைட்டில் முதல் வரிசையிலேயே ஸீட் ஒதுக்கி இருந்தா. கால் நீட்டிண்டு வசதியா உக்கார முடிஞ்சது. இது பட்ஜெட் ஃப்ளைட். உள்ள சாப்பிடவோ குடிக்கவோ எதுவும் தரமாட்டா. ஏதானும் வேனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுத்து வாங்கிக்கனும்.  காலேலயே பிஸ்கெட் மட்டும் சாப்பிட்டு கிளம்பிட்டதால ஒரு காபியாவது குடிக்கலாம் போல இருந்தது. கேட்டு வாங்கினேன். ஒரு பேப்பர்கப்பில் தந்தா. டேஸ்ட் ஓக்கேதான். 100- ரூவா கொடுத்தேன் 30- ரூவா பாக்கி தந்தா. அங்க பேரமா பேச முடியும்? தரையில் ஒரு காபி 10 ரூவாய்க்கு கிடைக்கும் ஆகாயத்தில் 70- ரூவா. விலையும் இறக்கை கட்டி பறக்கும் போல இருக்கு. 45- நிமிஷத்தில் கோவா வந்தது. சின்னப்பையன் ஏர்போர்ட் வந்திருந்தான்.   காரில் ஏறினதுமே என்னமா பாம்பே ஏர்போர்ட்டில் அமர்க்கள்ம் பண்ணிட்டியே எவ்வளவுதரம் ஃப்ளைட்ல போயிருக்கே ஏன் இப்படி பன்னினேன்னு கேக்கரான் என்னத்த சொல்ல?கோவா ஏர்ப்போர்ட்பேர்.   DOBOLIM. காரில் போகும்போதே
                                                   
 முக்கியமான இடங்களின் பெய்ர்கள் சொல்லிண்டே வ்ந்தான்.திரும்பின இடம் எல்லாம் சர்ச் தான் நிறையா இருக்கு. ஏர்போர்ட் பக்கத்தில் உள்ள சர்ச் பேரு,BAMBLIN HOLY CROSS CHURCH  .  நாங்க யாரு வீட்டுக்கு போனோமோ
    அவங்க கிறிஸ்டியன்ஸ். நான் வெஜ் இல்லாம சாப்பிடவே தெரியாது அவங்களுக்கு.ஏர்போர்ட்லேந்து ஒரு மணி நேரம் காரில் போகனும். அப்பவே 3- மணீ ஆச்சு என்னை ஒரு ஹோட்டல் கூட்டின்டு போனான். ஒரு வெஜிடேரியன் ஹோட்டல் கூட கண்ணில் படலே. தேடிப்பிடிச்சு எங்கியோ இருந்த ஒரு ஹோட்டல் கூட்டிண்டு போனான். NAVTARA PORVORIM என்று பேர் போட்டிருந்தது. ரவாதோசையும் காபியும் சாப்பிட்டோம்.
CALANGUTE  CAROLINA VILLA  COBRA VADDO  என்று அவர்கள் வீடு வரும்போது 4
                                      
 -மணி ஆச்சு. வீட்டுக்குள் நுழைத்ததுமே ஒரு ஜெர்மன் ஷெப்பேர்ட் நாய் ஓடிவந்து குலைத்து மேலே ஏறி நக்க ஆரம்பிச்சது. நல்ல பெரிய சைஸ். நாய்
    பாக்கவே பயம்மா இருந்தது.அது பேரு மேக்ஸ்.மாடியும் கீழுமா பெரிய விஸ்தாரமான பங்களா.90- வயசில் கணவனும் மனைவியுமாக இருவர் இருக்காங்க. அவங்க பெண்,   பிள்ளை  எல்லாரும் வெளி நாட்டில் இருக்காங்க. இவங்க வயசு காரணமாக இவங்களை அங்க கூட்டி போக முடியல்லே.அம்மா நீ மாடில போயி ரெஸ்ட் எடுத்துக்கோன்னு சொன்னான். மேல போனேன் 20 பேருக்குமேல படுத்து புறளலாம் போல பெரிய பெட் ரூம் நடுவில் பெரிய கட்டில் ஃபோம் மெத்தை எல்லாம் இருந்தது. படுத்துட்டேன் 6- மணிவரை படுத்துட்டு கீழ வந்தேன் ரெடியா டீ போட்டுதந்தா.தனி வீடு சுத்திவர் பெரிய தோட்டம் தென்னை, பழ, மரங்கள் வாசல் பக்கம் பூசெடிகள் என்று வீடு விஸ்தாரமா இருந்தது.

அன்று ரொம்ப நேரமாகிவிட்டதால் எங்கும் சுத்த முடியல்லே. நான் சோபாவில் உக்காந்ததுமே நாய் ஒரு குழந்தைபோல மடியில் வந்து படுத்துவிட்டது.
       நாங்களும் ஜபல்பூரி இருந்தப்போ வீட்டில் நாய் வளர்த்திருக்கோம். அதனால பயம்லாம் இல்லே ஆனா புது ஆட்களைக்கண்டதும் நாய் எதிர்ப்பு கிலப்பும் இல்லியா . அப்புரம் நல்லா பழகிட்டுது என் காலையே நக்கி என்னையே  சுத்தி சுத்தி வந்தது.
( நன்றி கூகுல் இமேஜ்)                                                      (தொடரும்)

Friday, July 6, 2012

மாலாடு

எங்க திருனவேலி ஜில்லாவில் எங்க பிரிவில் மாலாடு இல்லாத பண்டிகையே கிடையாது. பெண்ணுக்கு கல்யாண் நிச்சயதார்த்ததுக்கே 101 மாலாடுகள் தேங்காய்ஸைசில் சீராக வைப்பார்கள்.

தேவையான பொருட்கள்

 பொட்டுக்கடலை-----------------  200 கிராம்
 ஜீனி---------------------------------- 200 கிராம்
  ( அதாவது சரிக்கு சரி அளவு)
 முந்திரி பருப்பு-------------- 10 முதல் 15 வரை
 ஏலம்---------------------   5
 நெய்-------------------   150 மில்லி

 செய் முறை
                                   
                                            
 பொட்டுக்கடலையை தனியாக மிக்சியில் பொடிக்கவும்
       ஜீனியையும் தனியாக பொடிக்கவும்
                                                           
 இரண்டையும் நல்லா கலந்து மேலாக முந்திரி வறுத்துபோட்டு ஏலம் பொடித்து போட்டு கலக்கவும். நெய்யை நன்கு சூடாக்கி அதில் விட்டு கரண்டியால் நன்கு கலக்கி கை பொருக்கும் சூட்டிலேயே உருண்டைகளாக
                                             
பிடிக்கவும். மிகவும் சுவையாக இருக்கும்.

Wednesday, July 4, 2012

பூண்டு கடலைப்பொடி

தேவையான பொருட்கள்.
 வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை---------------      200 கிராம்
 பூண்டு--------------------- பெரிதாக ஒன்று பல்லு பல்லாக உதிர்த்து
 தோல் நீக்கவும்
 மிளகாய்ப்பொடி---------------  2 ஸ்பூன்
 உப்பு--------------- தேவையான அளவு
  செய்முறை
                                   
                                         
                                                                                 
                                           
 வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையை மிக்சியில் ரவை பக்குவத்தில் பொடிக்கவும்.  தோல் நீக்கிய பூண்டு பற்கள் மிளகாய்ப்பொடி உப்பு சேர்த்து மறுபடி மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். எண்ணையே சேர்க்காத ஆரோக்கியப்பொடி, சப்பாத்தி, இட்லி, தோசையுடன் தொட்டு சாப்பிட மிகவும் நல்லா இருக்கும். பூண்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவதுதான் சிறந்தமுறையாகும்.வேர்க்கடலையும் நல்லது.ருசிக்காக்க உப்பு காரம் சேர்க்கிரோம் இது ஒரு மராட்டிய ரெசிப்பி.

Monday, July 2, 2012

கடலைப்பிரதமன்.

தேவையான பொருட்கள்.

 கடலைப்பருப்பு---------------    200 கிராம்.
 ஜவ்வரிசி ------------------------  100 கிராம்.
 வெல்லம் -----------------------   200 கிராம்.
 முந்திரி, கிஸ்மிஸ் ----------  கொஞ்சம்.
 ஏலப்பொடி--------------------- கொஞ்சம்
 பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய்துண்டுகள் ------  ஒரு கைப்பிடி
                                   
 நன்கு காய்ச்சி ஆறவைத்த பால்----------------   250 மில்லி
 செய் முறை
                               
 கடலைப்பருப்பை நன்கு கழுவி குக்கரில் 4 ,5 விசில் வருமளவுக்கு குழைய வேக விடவும். ஜவ்வரிசியை நன்கு கழுவி கடாயில் வேக விடவும். அடியில் ஒட்டாமல் அடிக்கடி கிளறி விடவும். கண்ணாடிபோல் நன்குவெந்ததும் வெந்த
கடலைப்பருப்பயும் வெல்லத்தையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
                                           
வெல்ல வாசனை போக கொதிததும் கீழே இறக்கி காய்ச்சின பால் சேர்த்து நன்கு கலக்கவும்.முந்திரி கிஸ்மிஸ்தேங்கா நெய்யில் சிவக்கவறுத்து மேலாக ப்போடவும். ஏலப்பொடி தூவவும்.மிகவும் சுவையான கடலைப்பிரதமன் ரெடி.இதற்கு தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவை கூடும். கொலஸ்ட்ரால் ப்ராப்ளத்துக்குபயந்து வெரும் பால் சேர்க்கிரோம்.வெரும் கடலைப்பருப்பு மட்டும் சேர்த்து செய்தால் நீர்க்க இருக்கும் அதனால ஜவ்வரிசி சேர்க்கனும்  சேர்ந்து திக்காக இருக்கும். சுவையாகவும் இருக்கும்.
                                                

என்னை ஆதரிப்பவர்கள் . .