Google+ Followers

Pages

Monday, August 29, 2011

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் (5)

 நங்க நல்லூர் உறவுக்காரா கொஞ்சம் நெருங்கின சொந்தம். அதனால என்னை
யும் அத்தையையும் இரவு அங்கே தங்கிட்டு போச்சொன்னா. மறுக்க முடிலே.
மத்தவங்க தாம்பரம் கிளம்பிட்டாங்க.இரவு என்ன சாப்பிடரீங்கன்னு கேட்டா.
 அப்பவே மணி 8- ஆச்சு. அத்தை எப்பவுமே இரவு2 சப்பாத்திதான் சாப்பிடுவா.
 நான் தினமுமே இரவு ஒரு கிண்ணம் சாதம் கொஞ்சம் நிறையா மோர் விட்டு
 கரைச்சமதிரி 2 க்ளாஸ் குடிப்பேன் அவ்வளவுதான்.காலையும்பிஸ்கெட்டும் இரவு கரைச்ச மோர் சாதமும்தான் எப்பவுமே. அதுரொம்ப வருஷமாவே இப்படித்தான்.அதுதான் வயத்துக்கு ஈசியா இருக்கு. அந்த வீட்டு மாமி என்கிட்ட வந்து நீங்க

Saturday, August 27, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ் (4)

 மறு நாகாலை 3மணிக்கே எழுந்து திருப்பதி பயணம். அது பத்தித்தான்
 இன்னொரு பதிவுல சொல்லிட்டேனே. இங்க மறுபடியும் வேண்டாம்.
 அதுக்கு அடுத்த நாள் வழ்க்கமான காலை வேளை ரசிப்பு. எழுத்துவேலை..
 பாலாஜி தரிசன் எனக்கு கிடைக்காதது, என்னை விட அவாளுக்களுக்குத்தான்
 மிகவும் கஷ்ட்டமா இருந்தது. சொல்லிண்டே இருந்தா. இன்னிக்கு பாத்ரூமில்
 குளிக்காம கிணத்தடிலயே குளிக்கலாம்னு நினைச்சேன். தகர வாளில தாம்பு
 கயிறு கட்டி தண்ணீ கிணத்லேந்து இறைத்து சுகமான குளியல்.கயிறு இழுத்து
 இழுத்து  உள்ளங்கை பூரா காச்சு போச்சு. ஒரே காந்தல். அடுத்த நா கிணத்துல
 தண்ணி இறைக்க மோட்டார் போட்டா. மேல டாங்க ரொம்பியதும் மேலேந்து
 ஓவர்ப்ளோ தண்ணி அருவி மாதிரி ஜோரா கொட்டிட்டு இருந்தது அன்றைய
 குளியல் அருவி குளியல்.(குளியல் பத்தில்லம் கூட பதிவுல எழுதனுமா?)
 அது ஒன்னுமில்லே. சரியான சிட்டி லைஃப், நாலு சுவத்துக்குள்ளயே குளித்
து குளித்து இந்தகிராமத்துக்குளியல் கொஞ்சம் புது அனுபவாமைருந்ததா அதான்.

Thursday, August 25, 2011

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் (3)

சாப்பிட்ட பிறகுஹாலில் எல்லாரும் டி, வி பாத்துண்டு இருந்தோம்.ஓடுகள்
 வேய்ந்த கூரைதான். நல்லா சூடு.அப்போ பின் வாசல் வழியா ஒரு சுண்டெலி
 முன் வாசல் வழியா ரெண்டு பெரிய எலி ஓடி வந்தது. பெட் ரூமிலும் சாமி
 ரூமிலும் ஓடிப்போனது. நான் சேரில் காலை தூக்கி மேலே வச்சுண்டேன்.
 அப்போ வாசல் புறமிருந்து ஒரு பூனை ஓடிவந்து பெட் ரூமுக்குள்ள போயி
 எலியை கவ்விண்டு போச்சு. ஓட்டுமேல பல்லி ஊறுது. கிச்சன் கீழேல்லாம் கரப்பு ஓடுது. என்னது இதுன்னு எனக்கு ஒருமாதிரி ஆச்சு, ஆனா அவாளுக்
 கெல்லாம் தினமும் பாத்து பாத்து பழகின விஷயமா இருந்தது. அதுபாட்டுக்கு
 வரும் போகும் நீ பயப்படாதே நம்மைல்லாம் ஒன்னுமே பண்ணாதுன்னு வேர
சொல்ராங்க.

Tuesday, August 23, 2011

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் (2)

இரவு அவால்லாம் அந்த நீண்ட ஹாலிலேயே ஒரு போர்வை விரிச்சுண்டு
 கீழேயே படுத்துட்டா. எனக்கு கடந்த 20- வருஷமா ஆர்த்த்ரைட்டீஸ் ப்ராப்லம்
 உண்டு.    கால முட்டி மடக்கவே முடியாது. அதனால கீழ உக்காந்து எழுந்துக்கவோ கீழே படுக்கவோ முடியாது. கட்டில்லதான் படுக்கமுடியும்.
 ஒரு ரூம்ல ஒரு இரும்பு கட்டில் போட்டிருந்தா நான் அதில் படுத்தேன். வெண்டி
லேஷனே இல்லே. நல்ல வேர்வைதான். அப்படியும் அலைச்சல் களைப்பு
(ஃப்ளைட்ல வந்துட்டு களைப்பாம்). தூங்கிட்டேன். அவங்கல்லாம் மறு நாள்
 சீக்கிரமே எழுந்து அவங்க வேலை தொடங்கிட்டாங்க. நான் இருக்கும் ரூமில் வெளிச்சமோ சப்தமோ எதுமே வல்லே. 9 மணி வரை தூங்கிட்டேன். 9.30-க்கு
 கரெண்ட் போச்சு. அப்பதான் முழிப்பு வந்தது. யாரும் என்னை எழுப்பவும் இல்லே.கரண்ட்போனாதன்னாலமுழிப்புவந்துடும்னுதான்எழுப்பலேன்னுசொல்ராங்க.

Friday, August 19, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்

ஊருக்கெல்லாம் போய் வந்து அது பத்தி ஏதாவது சொல்லலைன்னா எப்படி?
எனக்கு மெட்ராஸ்னுதான் சொல்லத்தான் வருது. சென்னைனு சொல்லவே வரலே.
  எனக்கு ஒரு குணம், என் பசங்க வீட்லகூடவே போயி ஒரு நாள் தான் தங்க
 முடியும். சனிக்கிழமை சாயங்காலம் போனா,சண்டே எல்லாரும் வீட்ல இருப்பாங்க. ஒரு நா பூரா அவங்க கூடவே இருந்துட்டு அன்னிக்கு சாயங்காலமே
 கிளம்பிடுவேன் . அப்ப்டி இருக்கும்போது தூரத்து சொந்தக்காரங்க வீட்டில்
 எல்லாம் போயி ஒரு வாரம் 10 நாட்கள் எல்லாம் என்னால தங்க முடியுமான்னு
 ஒரே யோசனைதான் முதல்ல இருந்தது. என் ஃப்ரெண்ட்( அதான் என் அத்தை)
 ரொம்ப கூப்பிட்டா. வாடி அப்படியே நம்ம ஊர்பக்கமும் போயிட்டு வரலாம்னா.

Tuesday, August 16, 2011

சினேகிதியே,,,, சினேகிதியே.......
                             
 நானும் என்ஃப்ரெண்டும் கடந்த 65- வருடங்களாக நெருங்கிய தோழிகள்.
  நாங்க, பிறந்தது, வளர்ந்தது, ஒத்துமையா , கட்டிப்பிடித்து சந்தோஷங்கள்
 பட்டது அடிச்சு பிடிச்சுண்டு சண்டை போட்டுண்டது எல்லாமே ஒரே வீட்டில்.
  ஆச்சரியமா இருக்கு இல்லியா. அவ வேர யாரும் இல்லீங்க.என் அப்பாவின்
 கடைசி தங்கைதான் அவ. எங்க ரெண்டு பேருக்குமே ஒரு 6- மாசம்தான் வித்
 யசம் வயசுல. அவளுக்கு அவ அம்மாஅவளோட4வயசுலேயேஇறந்துட்டாங்க.
 என் அம்மாதான் அவங்க 7- குழந்தைகளுடனும் அவளையும் 8-வதுகுழந்தையா
 நினைத்து வளர்த்தாங்க.அம்மா இல்லாத குழந்தைன்னு அவளுக்கு அதிகச்
சலுகைகள் காட்டுவாங்க. நாங்க இருவரும் கிட்டத்தட்ட ஒரே வயசுன்னால
எங்களுக்கு எல்லாமே சமம்மா தான் செய்வாங்க. பாக்கப்போனா அவளுக்கு
 ஒரு படிமேலாகவே கவனம் கொடுப்பாங்க. நகையோ, துணிமணியோ எல்லாமே எங்க இருவருக்கும் ஸேமா எடுப்பங்க. ட்வின்ஸ் மாதிரி ஒன்னுபோல அலங்காரங்கள் செய்வாங்க. எங்க இருவரையும் எங்கயுமே
 தனியே பாக்க முடியாது. சேர்ந்தாப்போலவே சுத்துவோம்.
Saturday, August 6, 2011

எங்க ஊரு நல்ல ஊரு (தொடர் பதிவு)

அஸ்மா தொடர்பதிவுக்கு அழைச்சிருக்காங்க. நன்றி அஸ்மா.
 யாரெல்லாம் என்னெல்லாம் சொல்லி இருக்காங்கன்னு பொயி
 பாத்துட்டு தான் வந்தேன். எல்லாரும் ஹிஸ்ட்ரி, ஜாகர்பி என்று
 கல்ந்துகட்டி அவங்க, அவங்க ஊரு பத்தி கலக்கி இருக்காங்க.
 எனக்கு ஹிஸ்ட்ரி, ஜாகர்பின்னா என்னன்னே தெரியாது. எனக்கு
 தெரிந்த விதத்தில் எங்க ஊருபத்தி சொல்ரேன்.


எங்க ஊரு க்ரேட் கல்லிடைக்குறிச்சி. திருனெல் வேலி ஜில்லாவில்
 இருக்கு. கல்லிடை ஒரு சின்னகிராமம்தான்.பக்கத்தில் உள்ள சற்றே
 பெரிய ஊரு என்றால் 35 கிலோ மீட்டரில் இருக்கும் திரு நெல் வேலி
 தான். ஒரு சமயம் ஜகத்குரு காஞ்சி பரமாச்சாரியார் அவர்கள் பாத
 யாத்திரையாக அந்தபக்கம் வந்தப்போ நாதஸ்வரத்தில் கல்யாணப்
 பாடல்கள் வாசிக்கும் சப்தம் அவர்கள் காதில் கேட்டதாம். அதனால
 அந்த ஊருக்கு கல்யாண்புரி என்று நாம கரணம் சூட்டினார்களாம்.
  விட்டதாம். இது பெய்ர்காரணம். நாளாவட்டத்தில் கல்லிடைக்
 குறிச்சியாகி விட்டது.

Friday, August 5, 2011

மூணு, மூணாய்த்தான் சொல்லனுமாம்.(தொடர்பதிவு)

கீதா சாம்பசிவம் தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்து படிக்கும் உங்க எல்லாரையும் என்கிட்ட
மாட்டிக்க வச்சுட்டாங்க. விதி யாரை விட்டது.படிங்க, படிங்க படிச்சுகிட்டே இருங்க.

விரும்பும் மூன்று விஷயங்களில் எதைச்சொல்ல?

சின்ன வயதில் எழுதப்படிக்கத்தெரியாத குறையை இப்போ இந்த வயதில் எல்லா புத்தகங்களையும்
படித்துமுடிக்க நினைப்பேன். சமைக்கும்போதும் சாப்பிடும்போதும், டி, வி பாக்கும்போதும்கூட
ப்ளாக் எழுதும்போதும்கூட இடதுகையில் ஏதாவது ஒரு புத்தகம் கூடவே பிறந்தத் 6-வது விரல் போல
ஒட்டிக்கொண்டே இருக்கும். முதல் விருப்பம் புக்ஸ்.

அடுத்து எனக்கு ம்யூசிக் ரொம்பவே இஷ்ட்டம். கீபோர்டில் தெரிந்த எல்லா பாடல்களையு கற்றுக்கொள்ள
ரொம்பவே விருப்பம். கற்றுக்கொடுக்கத்தான் யாருமே கிடைக்கலே.கீ போர்ட் கூட பசங்க வாங்கி தந்தாங்க. தினசரி அதைதட்டிண்டு இருப்பேன். அதில் சிறப்பாக கத்துக்க ஆசை யாரானும் எனக்கு கத்து தரீங்களா? யாரு என் கிட்ட மாட்டிக்கப்போரீங்க?

அடுத்து இயற்கை கட்சிகளை ரசிப்பது. விடிந்தும் விடியாத காலைப்பொழுது பறவைகளின் உற்சாக
கீச் கீச் குரல்கள் ரொம்பவே நான் விரும்பும் விஷயம்.

Thursday, August 4, 2011

உன்னைச்சொல்லி குற்றமில்லை.

ஒருமாச லீவு முடிந்து திரும்ப உங்களை எல்லாம் சந்திக்க வந்துட்டேன்.
யாவரும் நலம் தானே? ரெண்டுபேரு தொடர்பதிவுக்கு அழைப்பு கொடுத்தி
ருக்காங்க.. முதலில் என்னை பாதித்த ஒரு சம்பவம் சொல்லிட்டு பிறகு
தொடர் பதிவுக்கு வருகிரேன்.திருப்பதி பாலாஜி தரிசனத்தில் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு அனுபவம் சொல்லி இருக்காங்க. இது என் அனுபவம். சென்னை
போய் இறங்கியதும் அடுத்த நாளே திருப்பதி போகலாம்னு வண்டில்லாம் புக்
பண்ணினோம். சென்னை தாம்பரத்தில் இருந்து, திருப்பதி போக வர ஒரு
ஆளுக்கு 2000- ரூபா.காலை ப்ரேக் ஃப்ஃஃஸ்ட், மதியம் லஞ்ச், தரிசன க்யூவில்
நிக்க 300 ரூபா எல்லாம் அவா செலவு என்றார்கள். மறு நா காலை 3 மணிக்கே
எழுந்து குளித்து 4 மணிக்கு ரெடி ஆகி வீட்டிலிருந்து 2- கிலோ மீட்டரில் இருந்த
பொது பஸ் ஸ்டாண்ட் போகவேண்டி இருந்தது. ரெண்டு ஆட்டோ காரர்களை 4 மணிக்கு
வரச்சொன்னோம். நாங்க பெண்கள் 3 பேர்,ஆண் ஒருவர் என்று 4 பேர் போனோம்


விடிகாலை வருவதால் ஆட்டோக்காரா கூடகொஞ்சம் பணம் கேட்டா. சரின்னு கொடுத்து
பஸ்ஸ்டாண்ட் 4.30-க்கு போய்ச்சேர்ந்தோம். புக் பண்ணின இன்னோவா வண்டி ரெடியாக
இருந்தது.கொஞ்சம் பெரிய வண்டிதான். பின்னாடி ரெண்டு பேரு, நடுவில் ரெண்டு பேரு
ட்ரைவர் சீட் பக்கமும் ஒருவர் உக்காரலாம்.காலை சரியாக டயத்திற்கு வண்டி கிளம்பியது.
அதிகாலைப்பயணம் எப்பவுமே ரசனைஇகுகந்ததாகவே இருக்கும். இருட்டு பிரியாத அதிகாலை
நேரம் மெல்லிசாக பூந்தூரலுடன் பயணம் இனிமையாக ஆரம்பமானது.பாட்டும் கேட்டுக்கொண்டே
சுகமான பயணம்.அரை மணி ஓடியதும் பரங்கி மலையில் வண்டி நின்னது, அங்கும் ஒருஆள்
ஏறிக்கொண்டார். தன்னை நகை வியாபாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். புது நகை
பண்ணும் போது வெங்கடாசலபதி கால்களில் வைத்து ஆச்சிர்வாதம் வாங்குவாராம். மாசம்
ஒருமுறை திருப்பதி சென்று வருவேன்னு சொன்னார்,

5.30 ஆனதும் இருட்டுப்பிரிந்து வெளிச்சம் சூழும் அழகான நீல ஆகாயம் கண்கொள்ளாக்காட்ச்சி
பறவைகளின் இனிய கானங்கள் என்று அற் புதமான காலைப்பயணம்.மிகவும் ரசித்துக்கொண்டு
கல கலப்பாக சந்தோஷமாகப்பேசிக்கொண்டுசென்றோம். 7.30- மணிக்கு ஆண்டாள் குப்பம்
என்னும் ஊர் வந்தது. அங்கு சரவண பவன் ரெச்டா ரெண்டில் ப்ரேக் ஃப்ஃஃஸ்ட் சாப்பிட்டோம்.
சின்ன ரெஸ்டாரெண்ட்தான். ஆனா சுத்தமாக வும் சுவையான சிற்றுண்டியுடனும் இருந்தது.
அங்கேந்து 8 மணி திரும்ப பயணம் தொடர்ந்தோம்.வழியில் குபேரகனபதி கோவில், முனீஸ்வரன் கோவில் தரிசனங்கள்.காலை வேளை இனிமையான பாடல்கள் கேட்டுக்கொண்டு பயணம் செய்து
கொண்டே இருக்கலாம் போலைருந்தது. எனக்கு எப்பவுமே ரோட் ஸைட் ட்ராவல்ஒத்துக்கொள்ளாது.
பஸ்ஸோ, ஏசி காரோ ஏதானாலும் வயத்தைக்குமட்டிண்டுவரும். பெட்ரோல் வாடை சகிச்சுக்கவே
முடியாது. கயில் எலுமிச்சம் பழம், இஞ்சி முறப்பா, ஆரஞ்ச் வில்லை என்று எல்லாம் ரெடியா
கொண்டு போனோம். 9.30-க்கு கீழ் திருப்பதி வந்தது.பிறகு மலை ஏற்றப்பாதை வளைந்து நெளிந்து
செல்லும்போது எனக்கு த்லை சுத்திண்டு வந்துடுத்து.கூடவே ப்ளாஷ் பேக் நினைவுகளும் கூடவே.

என் வீட்டுக்காரர் இருந்தப்போ 30- வருஷம் முன்பு திருப்பதி வருஷா வருஷம் போவோம். அதன்
பிறகு இவர்போன பிறகு இப்பதான்வரேன். நிறைய மாற்றங்கள். திரும்பின பக்கமெல்லாம்குடியிருப்பு
வசதிகள். ஹோட்டல்கள் சில பொழுதுபோக்கு இடங்கள்.என்று ஜொலிக்கரது.10.30 மேல போயிச்
சேர்ந்தோம். காரை ஒரு இடத்தில் நிப்பாட்டிட்டு கோவில் போக ஒரு பேட்டரி காரில் ஏறிக்கொண்டு
கோவில் வாசல் போனோம். வண்டி நிக்கும் இடத்திலிருந்து கோவில் கொஞ்சம் தள்ளியே இருந்த
தால பேட்டரி காரில் பயணிகளை கூட்டி ச்செல்கிரார்கள். வாசலிலிருந்தே அனுமார் வால் போல
நீண்ட க்யூ வரிசை. நாங்களும் அதி சேர்ந்து கொண்டோம். க்யூ நிக்குமிடம் ஒரே அடைசலா இருந்தது. பாதிபேரு அங்கே போட்டிருந்த சேரில் உக்காந்து இருந்தா. பாக்கி எல்லாரும் வரிசையில்
கால் கடுக்க நிக்கதான் வேண்டி இருந்தது.முதலில் 11 மணிக்கு உள்ள விடுவான்னு கும்பலில்
சிலபேரு பேசிண்டா. 11.30 வரையிலும் உள்ள விட ஆரம்பிக்கவே இல்லே. காலு சுகமா வலிக்க
ஆரம்பிச்சது.

சிறுவர், பெரியவர், வயதானவா என்று நிறைய பேரு நிக்கமுடியாம நெளிந்து கொண்டு இருந்தோம்
ஒரு வழியா 12.30க்கு டவாலி ஆட்கள் வந்து ஒவ்வொரு வரையா வரிசையாக செக் செய்து உள்ளே
அனுப்ப ஆரம்பித்தார்கள்.க்யூ மெதுவாக நகர்ந்தது. எங்க முறை வர அரை மணி நேரம் ஆச்சு.
நாங்க 4 பேருமே 60 வயதைக்கடந்தவர்கள். எங்க முறை வந்ததும் எனக்குமுன் போன சொந்தக்காரா
ஆண் 70 வயசுக்காரர். அவரை எதுவும் கேக்காம உள்ளே அனுப்பினா. அடுத்தெரெண்டு பெண்களில்
ஒருவர் பைபாஸ் ஆபரேஷன் பன்னிண்டு இருந்தவர். ஆட்களை செக் செய்பவர்கள் அவர்களிடம்
ஐ டி கார்ட் கேட்டார். அவா இருவரும் ஆபரேஷன் தழும்புகளைக்காட்டினதும் அவர்களை உள்ளே
அனுப்பிட்டா. என் முறை வந்ததும் ஐ டி கார்ட் கேட்டா. நான் எதுக்கு ஐட் கார்ட் கேக்கரீங்கன்னு
கேட்டேன். உண்மையில் நீங்க சீனியர் சிட்டிசன் தானான்னு தெரியனுனாங்க.ஏங்க எங்க நரைச்ச
தலைமுடியும் தள்ளாடும் நடையப்பாத்தாலே 60 வயசுக்கு மேல உள்ளவங்கன்னு தெரியுமே அதுக்கு
எதுக்கு ஐடி கார்டு கேக்குரீங்கன்னேன்.அதெல்லாம் கிடையாது எங்க ரூல் நாங்க ஃபாலோ பன்னனும்
என்று அசட்டுத்தனமா பிடிவாதம் பிடிச்சாங்க.

எனக்கும் கோவம் வந்தது. என்னங்க இது நீங்க சாமி பாக்க ஆட்களை உள்ள விடுரீங்களா இல்லே
இண்டெர்வ்யூ நடத்தி வேலைக்கு ஆள் எடுக்குரீங்களா சாமி தரிசனம் பண்ண் அஎங்கேந்தெல்லம்மொ
எவ்வளவோ கஷ்ட்டங்கள் பட்டு நாங்க வந்தா இது என்ன புதுசா ஐடி எல்லாம் கேக்குரீங்க என் பான்கார்ட் இருக்கு வண்டில மறந்துட்டேன் நானும் ஹார்ட் பேஷண்டுதான்னு எவ்வளவோசொல்லியும்
தயவு தாட்சனியமே இல்லாம அவுட் வெளிய போன்னுட்டாங்க.கூடவந்தவங்கல்லாம் இது எதுவும்
தெரியாம தரிசன க்யூவில் கல்ந்துட்டாங்க. எனக்கு உள்ளே போக அனுமதியே கிடைக்கலை
ஒருபுறம் அழுகை ஒரு புறம் அவமானம்னு மனசு ரொம்ப கஷ்ட்டமாச்சு.கார் ட்ரைவர் கோவில்
வாசலிலேயே நின்னுண்டு இருந்தான். நான் வெளியே வருவதைப்பாத்து என்னன்னு கேட்டான்
சொன்னேன்.சீனியர் சிட்டிசனுக்கு சவுரியம் பண்ராங்கம்மான்னு சொல்ரான் இதுக்குபேரு சவுரியமா
மாடி மாடி யா ஏறி வேர ஏதானும் க்யூ வில் என்னைச்சேர்த்து விடமுடியுமான்னு பார்த்தான்
300 கொடுக்கவேண்டிய தரிசன்க்க்யூவில் 1000- ரூபா கொடுத்தா உள்ளே விடரேன்னு பேரம் பேசு
ராங்க. எனக்கு இப்படி லஞ்சம் கொடுத்து சாமி பாக்க வேண்டிய அவசியம் இல்லேன்னுட்டேன்.

ஆகா மலை எற்றி கோவில் வாசலில் வந்தவளை கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளினது போல இருந்தது.மனசு எவ்வளவு வலித்திருக்கும். யாரைச்சொல்வது. அந்தசாமியையா, இல்லை இந்த ஆசாமி களையா? இந்த ஆசாமி களையும் ஆட்டி வைப்பதும் அந்தசாமி தானே. அதுதான் உன்னைச்சொல்லி குற்றமில்லை என்னைச்சொல்லி குற்றமில்லை.

என்னை ஆதரிப்பவர்கள் . .