Pages

Sunday, January 30, 2011

நொறுக்ஸ்.(3)



நொறுக்ஸ்.(3)

எங்க முதல்பெண்ணை 5 வயதில் கான்வெண்டில் சேர்த்தோம். அப்பல்லாம் கே. ஜி யு.கே, ஜி எல்லாம் கிடையாது. நேரா ஒன்னாம் வகுப்புதான். மௌண்ட் கார்மெல்என்று பூனாவில் பிரபலமான கான்வெண்ட். யூனிஃபார்மில் பட்டாம் பூச்சி மா த்ரி ஸ்கூல் போய்வரும்பெண்ணைப்பார்க்கும்போது, ரொம்ப சந்தோஷமா இருக்கும்.அவளுக்கு ஹோம் ஒர்க் எல்லாம் சொல்லிக்கொடுக்க எனக்கு இங்க்லீஷே தெரியாதே?அதனால ஒரு ஆங்கிலோஇண்டியன் லேடி கிட்ட ட்யூஷன் அனுப்பினோம். ரொம்ப ஆர்வமாக போய்வந்தா. அந்த ஆங்கிலோ இண்டியன் லேடி ரொம்பவே ஸ்ட்ரிக்ட் ஒன்றாம்
வகுப்புக்குழந்தைகள்ஆரம்பத்திலேயேநோட்,பெனயூஸ்பண்ணக்கூடாது.ஸ்லேட் குச்சிதான் யூஸ் பண்ணனும்னும் ஆனாதான் ஹேண்ட் ரைட்டிங்க் நல்லா இம்ப்ரூவ் ஆகும்னும்சொல்லி ட்யூஷன் ஹோம் ஒர்க் எல்லாம் ஸ்லேட்டில் தான் எழுதிக்கொடுப்பா.ஒரு நாள் 1 ,2, 3, 4, 5 எல்லாம் ஸ்பெல்லிங்க் ல 10-வரை எழுதிக்கொடுத்து எல்லாத்தையும்5, 5 தடவை எழுதிண்டு வரச்சொன்னா.


Wednesday, January 26, 2011

குடியரசுதின வாழ்த்துக்கள்.



அனைவருக்கும் குடியரசுதின நல் வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் உங்களிடம்

ஒரு விஷயம் பகிர்ந்துகொள்கிரேன். ஏற்கனவே பலருக்கும் தெரிந்த விஷயமாகக்கூட இருக்கலாம்.இதுவரை தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். தெரிந்தவர்கள் திரும்பவும் ஒருமுறை தெரிந்து கொள்ளுங்கள். நல்ல விஷயங்கள் எத்தனை முறை தெரிந்து கொண்டாலும் நல்லதுதானே. எப்பவுமே நினைவில் இருத்திக்கொள்ள முடியும்தானே?





நானும் எப்பவோ ஒரு புக்கில் படித்து தெரிந்து கொண்டதுதான். இதுவும் குழந்தைகள் சம்மந்தப்பட்ட விஷயம்தான்.
குடியரசு தினத்தில் மட்டுமே குழந்தைகளுக்கு கொடியின் நிறம் பற்றி சரியாக நினைவில் இருக்கும். அது எப்பவுமே மறக்காமல் இருக்க ஒருவழி இருக்கு.




பச்சைக்கலரில்வாழை இலயை கீழேபோட்டு, வெள்ளைக்கலர் சாதம் நடுவில் போட்டு ஆரஞ்ச் கலர் சாம்பாரை மேலே ஊற்றி என்று சப்பாட்டை சம்மந்தப்படுத்தி, கீழேபச்சைக்கலர், நடுவில் வெள்ளைக்கலர், மேலே ஆரஞ்ச்
கலர் என்று சுலபமாக நினைவில் இருத்திக்கொள்ளும்விதமாகச்சொல்லலாம்.
இப்படிச்சொல்லிக்கொண்டிருக்கும் போதே என் சுட்டிப்பேரன் பாட்டி நடுவில் ரவுண்டா இருக்கே அது என்னதுன்னு கேக்கரான். அதுவா அப்பளம் என்ரேன்.

Saturday, January 22, 2011

நொறுக்ஸ்(2)










ஒரு சீரியஸ் பதிவு போட்டா பின்னாடியே ஒரு மொக்கை போடனுமே.
தாணாவிலிருந்து அம்பர்னாத், லோக்கல் வண்டியில் வந்துகொண்டி
ருக்கும்போது லேடீஸ் கம்பார்ட்மெண்டில் நிறைய குட்டி, குட்டி பொருட்
கள் விற்கும் சேல்ஸ்மேன், உமன் வருவார்கள். வீட்டு உபயோக பொருட்கள்
கடைகளில் கூட கிடைக்காது, அவ்வளவு வெரைட்டிகள். லேடீசுக்கு காது
தோடுகள், வளையல்கள், மாலைகள், ப்ளாஸ்டிக்கிலும் மெட்டலிலும் பல
வெரைட்டிகள் இருக்கும். விலையும் மிக, மிக, மலிவு. ஆரம்ப விலையே 5- ரூபாதான்.இப்ப எல்லாமே யூஸ் &;த்ரோ கலாச்சாரம்தானே. நல்ல வியாபாரம் ஆகும்.


குஜராத்திக்காரர்கள் பெரிய அலுமினிய டப்பாக்களில் சமோசா, டோக்ளா, டேப்ளாஎன்று வித, விதமாக ஸ்னாக்ஸும் சூடாக கொண்டு வருவா. வேலையில் இருந்துகளைத்துப்போயி, பசியுடன் வருபவர்களுக்கு மிகவும் தேவையாகவும் இருக்கும்.




Tuesday, January 18, 2011

காஃபி.

                 காஃபி

  அதுஒரு தீபாவளி நாள். (35 வருடங்கள் முன்.) என்புகுந்த வீட்டில் கணவர்
   மாமியார், மாமனார் மூவருக்குமே காஃபி குடிக்கும் பழக்கம் மிக, மிக அதிகம்.
   அதுவும் பில்டர்காஃபிதான் வேனும். அதனால வீட்ல எந்த நேரமும் டிகாஷன்,
   பால் ரெடியா இருந்துகொண்டே இருக்கும். காலை5 மணிக்கு பால்வாங்கி வந்ததும்   எல்லாருக்கும் ஃப்ரெஷ்ஷா முதல்காஃபி. பிறகு குளித்து வந்ததும் காலை டிபனுடன்ஒருகாஃபி.11மணிக்கு ஒருத்டவை. மத்யான சாப்பாட்டுக்கு தட்டுவைக்கும்போது டம்ளரில் தண்ணீருக்குபதில் காஃபிதான்.திரும்ப 3 மணிக்குஒருதடவை.7மணிக்குஒருதடவை, இரவு சாப்பாட்டுடனும் ஒருகாஃபி என்று தண்ணீருக்குபதில் காஃபியாகவேகுடிக்கும் இவர்களின் பழ்க்கம் எனக்கு ரொம்பவே வேடிக்கையா இருந்தது.

Thursday, January 13, 2011

பிரம்மா, ஓ, பிரும்மா.

பிரம்மா ஓ பிரும்மா.

மும்மூர்த்திகளில் நம்மையெல்லாம் படைக்கும் கடவுள் பிரும்மா
என்று நாமெல்லாம் கேள்விபட்டிருக்கோம். இல்லியா?

டிஸ்கி:- இதுவரை அப்படி கேள்வியே படலைன்னாகூட இப்பவாவது
தெரிஞ்சுக்கோங்க. பெரியவங்க சொல்ராங்க.


கீப் கொயட், டிஸ். ஓ, கே, ஓ ,கே.

அவங்க படைப்புத்தொழிலில் ஈடு பட்டிருக்கும் போது சரஸ்வதி தேவிக்கு
கேக் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருந்ததாம்.

டிஸ்கி:- ஐயோ, சாமிக்கெல்லாம் கேக் பண்ண ஆசை வரலாமா?
நீ வாயை மூடிண்டு ஒரு ஓரமா நிக்கிரியா?

Tuesday, January 11, 2011

dhega,,,,,,,,,,dhiya,,,,,,,.

dega,,,,,,,,,dhiya,,,,,,,,,

நான் சக்கோ புகழ் அத்தைபயன் பேசரேங்க. என் அக்கா சைக்கோன்னு ஒருபதிவுபோட்டு என்னை உங்ககிட்டல்லாம் ரொம்ப பிரபலப்படுத்திட்டாங்க:). ஹி, ஹி, ஹி.

ஒருசண்டே அங்கிள் என்னை டிபன் சாப்பிட ஹோட்டல் கூட்டிட்டுப்போனாங்க.(முதல் தடவையா ஹோட்டல் போரேன்). சந்தோஷமாகவும் இருக்கு. பயம்மாவும்இருந்தது. நல்ல பெரிய ஹோட்டலா கூட்டிட்டு போனாங்க. என்னிடம், மணி என்னசாப்பிடரே, என்றார். நீங்களே ஏதானும் சொல்லுங்கன்னுட்டேன். ரெண்டுபேருக்கும்மசால்தோசா, காபி ஆர்டர் பண்ணினாங்க. அரைமணி நேரத்தில் சூடு,சூடாகதோசை

Friday, January 7, 2011

2010 டைரி

2010- டைரி(தொடர் பதிவு)

ரோஜா பூந்தோட்டம் பாரத் பாரதியின் அன்பு அழைப்பி பேரில் நானும்
களம் இறங்கி இருக்கேன். டைரின்னு சொல்லும் போது பெர்சனல் மேட்டர்
சொல்லவேண்டி வருமேன்னு சின்ன தயக்கம். தெரிஞ்சதுனால ஒன்னும்
தப்பில்லை. அதனால படிக்கிரவங்களுக்கு எந்த உபயோகமும் கிடையாதே.
சுவாரஸ்யமான அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளலாம்(அப்படி ஏதானும்
நடந்திருந்தால்). எனக்கு கடந்த 15 வருடங்களாகவே டைரி எழுதும் பழக்கம்
உண்டு. நானும் ஒருவருட மலரும் நினைவுகளில் மூழ்க ஒரு சந்தர்ப்பம்.

Tuesday, January 4, 2011

தொடர்பதிவு

தொடர் பதிவு.




என்னையும் மதித்து தொடர்பதிவு எழ்த நண்பர் கணேஷ் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கார்.நன்றி கணேஷ். என்னஎழுத எதைப்பற்றி எழுதன்னு சிறு குழப்பம். அவர்சொன்னதுபோலஎனக்கும் குறிப்பிடும்படி ஃப்லோவர்ஸோ, பின்னூட்டமிடுபவர்களோ சேரவே இல்லை.நானும் மற்றவர்களின் ப்ளாக் எல்லாம் போயி படித்து ஃபாலோவராகவும் பதிவு செய்தேன்.

நான்ப்ளாக் தொடங்கியே 4 மாசம் கூட முழுசா ஆகலை. ஒவ்வொருவரின் ப்ளாக் படிக்கும்
போதும் நிறைய அனுபவங்கள் கிடைத்தது என்னமோ உணமை. நம்மால் அந்த அளவுக்கெல்லாம் எழுதவே முடியாது என்பது லேட்டாகத்தான் புரிய வந்தது.

Sunday, January 2, 2011

லோட் ஷெட்டிங்க் ஜிந்தாபாத்:)

பவர்கட் ஜிந்தாபாத்




இங்கு நாங்க வசிக்கும் பகுதிகளில் சம்மரில் காலை 3 மணி நேரம்

சாயந்தரம் 3 மணி நேரம் கரண்ட் கட் ஆகும். காலை, மாலை இரு

நேரமும் 6 டு 9 கரண்ட் கிடையாது.இப்ப விண்டரில் காலை, மாலை

ஒரு, ஒருமணி நேரம் கரண்ட்கட். எல்லா இடங்களிலும் உள்ளதுதான்.

நாங்க இருப்பது ஸிட்டியை விட்டு 60 கிலோ மீட்டர் உள்ளே தள்ளி

இருக்கும் புற நகர்ப்பகுதியாகும். நல்ல கிராமப்புரப்பகுதி தான். எல்லா

விஷயங்களுக்கும் 3 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஸ்டேஷன் வரை

போகனும். காய்கறி, பால், ப்ரொவிஷன்,டாக்டர், மருந்துக்கடை என்று

எதுவுமே பக்கத்தில் கிடையாது.

என்னை ஆதரிப்பவர்கள் . .