சில வருடங்கள் முன்பு ஆப்பிரிக்கா போய்வந்தேன். அப்போ நான் ப்ளாக் எழுதுவேன் என்றோ அந்த அனுபவங்களை எல்லாருடனும் பகிர்ந்து கொள்வேன் என்றோ நினைத்ததே இல்லே.ஈஸ்ட் ஆப்ப்ரிக்காவில் உள்ள கிலிபி என்கிர இடத்தில் என் பெரிய பெண்ணும் மாப்பிள்ளையும் வசித்து வந்தார்கள். நான் பாஸ்போர்ட் வாங்கியதுமே (அது ஒரு பெரிய புராணம்). முதல்ல இங்க வந்துடுன்னு மாப்பிள்ளை டிக்கட்டே எடுத்து அனுப்பிட்டார். பொண் போன் பண்ணீ முதல்ல போயி எல்லோஃபீவர் இஞ்செக்ஷன் போட்டுண்டுடுஅதுக்கு அடையாளமா ஒரு மஞ்ச கார்ட் தருவா, நீகொடுத்தபணத்துக்கும் ரசீது தருவா. அதெல்லாம் பத்திரமா பாஸ்போர்ட்கூடவே வச்சுக்கோ. ஆனாதான் ஆப்ப்ரிக்கா உள்ளயே அலவ் பண்ணுவான்னு சொன்னா.மும்பயில் இருக்கும் பையனிடம் விவரம் கேட்டுண்டு கிளம்பறதுக்கு10- நாட்கள் முன்பே ஏர்போர்ட் வெளியே இருக்கும் அந்த இடத்துக்குபோனேன்.அங்க சின்ன ஒரு ரூம்ல ஒரு ஆம்பிளை டாக்டர்!!!!!!!!! ???? இருந்தான். 7, 8, பேர் ஊசி போட்டுக்க காத்துண்டு இருந்தா.
Tweet | |||||