Google+ Followers

Pages

Friday, December 7, 2012

சிங்கப்பூர் 6

இங்க நவம்பர் 23-ம்தேதிவந்தேன்.இந்த சம்பவம் 24-ம் தேதி நடந்தது. இதை உங்க கூடல்லாம் பகிரலாமா வேனாமானு ரொம்ப  நாளா யோசிச்சுகிட்டே
இருந்தேன்.முதல்ல என் அசட்டுத்தனத்தயெல்லாம் இப்படி வெளிப்படையா சொல்லனுமான்னே இத்தனை நாள் சொல்ல வேணாம்னு இருந்தேன். ஆனா நிறையா பேரு இந்த பதிவை படிக்குரத பாக்கும் போது எதுக்கு மறைக்கனும் சொல்லிடலாம்னு தைரியமா!! சொல்ல தொடங்கிட்டேன். புதுசா யாரானும் வெளி நாடு வரவா, முதல்முறையா தனியா வெளில போனா எவ்வளவு கவனமா இருக்கணும்னு புரிஞ்சுப்பாங்க, புரிஞ்சுக்கனும்னுதான் இத சொல்ரேன்.பீடிகல்லாம் பலம்மா இருக்கேன்னு பாக்கரீங்களா?ஆமா.
 எங்க இருந்தாலும் நான் காலை ஒருமணி நேரம் வாக்கிங்க்,யோகா, பிராணாயாமம், மெடிடேஷன் இதெல்லாம் ரெகுலரா பண்ணிடுவேன்.
(ஹெல்த் கேர்:))))) ).

அதுபடி காலேல வாக் கிளம்பினேன்.வழக்கம்போல கையில் ஒரு 100- ரூவா மொபைல் எடுதுகிட்டேன் எம்.பி3-யும் கூடவே உண்டு.பையன் முத நா  சொல்லி இருந்தான் சிங்கப்பூர்ல திரும்பின பக்கமெல்லாம் மேப் இருக்கும் அத பாத்துண்டே நாம போனா யாருக்குமே வழி தப்பாம இருக்கும்னு. நானும் அத நம்பி வெளில இறங்கிட்டேன்.ரோடு ஓரமா நடை பாதை வழியா நடந்துண்டே இருந்தேன். எல்லா பில்டிங்குகளும் ஒரே மாதிரி தான் இருக்கு வித்யாசமே கண்டுபிடிக்கமுடியாது, பில்டிங்க் நம்பர் வச்சுதான் அடையாளம் தெரிஞ்சுக்க முடியும்.ரெண்டு பக்கமும் வேடிக்கை பாத்துண்டே நடக்குர ஆர்வத்தில் ரொம்ப தூரம் போயிட்டேன். ஒரு டர்னிங்க்ல திரும்பி நடந்துண்டே இருந்தேன். புது முகங்கள்  ரோடில் ஓடும் பஸ், டாக்சின்னு பாத்துண்டே நடந்ததில் நேரம் போனதே தெரியல்லே. ஒரு இடம் வந்ததும் மேலே பில்டிங்க் நம்பர் பாத்தேன். 109-என்று இருந்தது. நாங்க இருக்கும் பில்டிங்க் நம்பர்  206-அடடா, ரொம்ப தூரம் வந்துட்டோம் போல இருக்கேன்னு நினைச்சேன். சரி திரும்பி வந்தவழியே போயிடலாம்னு திரும்பி நடக்க ஆரம்பிச்சேன்.
                                 
                                         
கொஞ்ச தூரம் போனதும் ரோடுல டபுல்டக்கர் மாடி பஸ் எல்லா ஒடிட்டு இருந்தது. மேலே பாத்தா பறக்கும் ரயில்கள் வேற வேக வேகமா ஓடிட்டு இருக்கு. நாங்க இருக்கும் பக்கம் மாடி ப ஸ்ஸோ, பறக்கும் ரயிலோ
                                       
                           
  கிடையாதுஸோ  எங்கியோ வழி தப்பிடுச்சின்னு புரிஞ்ச்து.லேசா பக் பக்குன்னுஅடிச்சுக்குது.வீட்டோட காண்டாக்ட் நம்பரும் கையில இல்லே
மும்பை போன் இங்க வேலைக்கு ஆகாது பஸ்லியோ டக்சிலியோ போலாம்னா எந்தஸ்டாப்பிங்க்ல இறங்கனும்னு சொல்ல?அதுவும் பஸ்ல ரூவா அதுவும் இண்டியன் ரூவால்லாம் செல்லாது கார்ட் சிஸ்ட்டம்தாம்
அந்த 100- ரூவாயும் பிரயோசனமில்லே. இப்ப என்ன பண்ணனு மனசு குடையுது.ரோடுல போர வரவாகிட்ட எனக்கு 206-ம் நம்பர் பில்டிங்க் போகனும் எப்படி போகனும்னு கேட்டேன் எல்லாருமே அவசரமா ஓடிண்டு இருக்காங்க எனக்காக நின்னு நிதானமா பதில் சொல்ல யாருக்கும் பொறுமை இல்லே. ஐ  டோண்ட் நோ ஸாரின்னு சொல்லிட்டு போயிகிட்டே இருக்காங்க.
ஒவ்வொரு பஸ் ஸ்டாப்லயா போயி மேப்  ல வழி பாத்த்கேன் 108, 109, 110ன்னு அங்க இருக்கே தவிர வேர எதுவும் தெரிஞ்சுக்க முடியல்லே.மருபடி விடாம ஒவ்வொருவரிடமா கேட்டுட்டே இருந்தேன். ஒருவர்மட்டும் மேடம் இங்கெல்லாம் 100- லேந்து ஆரம்பிக்கரது  நீங்க 200-லேந்து ஆரம்பிக்கர நம்பர்ல போயி தேடுங்க என்ரான். அதுதான் எப்படி போகனும்னு கேட்டேன் ஐ டோண்ட் நோ தான் பதில்


47 comments:

துளசி கோபால் said...

அட ராமா...........

அதுக்குத்தான் புது இடத்தில் நடந்து போகும்போதே அங்கங்கே லேண்ட் மார்க் எதாச்சும் நம்ம மனசுக்குத் தோணும்படி பார்த்து வச்சுக்கணும்.

எப்படியோ பத்திரமாப் போய்ச்சேர்ந்தபின்தானே எழுதறீங்க... அதனால் நீங்க பத்திரமுன்னு மனசுக்கு நிம்மதியாத்தான் இருக்குன்னாலும்

எப்படிப் போய்ச்சேர்ந்தீங்கன்னு சொல்லுங்க.

அமைதிச்சாரல் said...

அடப்பாவமே.. அப்புறம் பத்திரமா எப்படித்திரும்பி வந்தீங்க?

LAKSHMINARAYANAN IYER said...

Anxiously waiting for the second part

ஸாதிகா said...

ஐயோ..பக் பக் பதிவா இருக்கே..அப்புறம் அப்புற‌ம்...சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்கோ லஷ்மிம்மா.

100 ரூபாய் ,மொபைல் எடுத்துட்டு போனேன் என்று சொன்னதும் 100 சிங்கப்பூர் வெள்ளியாக்கும் என்று நினைச்சேன்.அதே போல் சிங்கை வீட்டு லேண்ட் லைன் நம்பர் பதிவு செய்யாமல் போனை எடுத்து போய் இருக்கிங்க.எல்லாவற்றிலும் கரெக்டா கறார் ஆக இருப்பீங்க.ஏன் இப்ப மட்டும் இப்படி?அதான் யானைக்கும் அடி சறுக்கும் என்று ஒரு பழ மொழி கூட இருக்கே:)

semmalai akash said...

அச்சச்சோ! அம்மா அப்பறம் எப்படி திருப்பி வீட்டுக்கு வந்திங்க? சீக்கிரம் அடுத்த பதிவை எழுதுங்க நெஞ்சு படபடக்குது..

உங்களை யாரு செல்லாத காசையும், உதவாத போனையும் கொண்டுப் போகச்சொன்னது.... அம்மா பாசத்துல உரிமையா கேட்க்கிறேன், கோவிச்சுக்காதிங்க....

Asiya Omar said...

நீங்க தங்கியிருந்த செங்காங்க் இடத்தில் தான் நாங்களும் இருந்தோம், அடடா, நான் இருந்தால் வழி காட்டியிருப்பேனே, ரிவர்வேல் ஸ்ட்ரீட்டா லஷ்மிமா? ஏன்னா நாங்க இருந்தது அங்கே, முதலில் நான் மனப்பாடம் செய்தது அட்ரஸை தான்.பில்டிங் நம்பர், ஃப்லோர் நம்பர்,வீட்டு நம்பர் தெரியாவிட்டால் குழம்பி தான் போய்விடுவோம்.
சீக்கிரம் எழுதுங்க.மிக ஆர்வமாக இருக்கு.

அமுதா கிருஷ்ணா said...

ஆஹா பாட்டு கேட்டுட்டு போனதால லேண்ட்மார்க் எதுவும் நினைவில் இல்லையா??

இராஜராஜேஸ்வரி said...

திகிலாக இருக்கிறதே அம்மா !

sury Siva said...லக்ஷ்மியம்மா ! கடைசிலே வீட்டைக் கண்டுபிடிச்சீகளா இல்லையா ?

அது எப்படி சிங்கப்பூர் லே தனியா அதுவும் கையில் பணம் இல்லாம ரூட்டும் தெரியாம ...

வீட்டு கான்டேக்ட் நம்பர் கூடவா குறிச்சு வச்சுக்கல !!

இத என்ன சொல்றதுன்னே தெரியல்ல...

என்ன இருந்தாலும் உங்க அனுபவத்திலே சில லெசன்ஸ் எல்லாருக்குமே இருக்கு.

1. நம்ம நாடு, நம்ம ஊரு, நம்ம தெரு, நம்ம வூடு, அதிலெயும் நம்ம ரூம் அதிலேயும் நமக்குன்னு ஒரு சேர்.
உட்கார்ந்திருக்க முடியல்லைன்னா ஒரு ரிக்லைனிங் பெட்.

2. அப்படியே வெளி நாடு போனாலும் கையிலே விஸா பாஸ்போர்ட் ஜெராக்ஸ் காபி கண்டிப்பா வச்சிருக்கணும்.

3. அந்த ஊரு கரென்ஸி கொஞ்சமாச்சும் இருக்கணும். அந்த ஊருலே செல்லுபடியாற செல்லு ஒண்ணு கண்டிப்பா இருக்கணும்.

4. எந்த ஊருக்கு போனாலும் வெளிலே சுத்த போகும்பொழுது அந்த ஊரு தெரிஞ்சவங்க யாருனாச்சும் கூட அழைச்சுக்கின்டு
போகணும்.

5. யார் வூட்டுக்கு போறோமோ அவங்க வூட்டுக்கு முன்னமேயே ஃபோனி அம்மா அய்யா நான் வரேன், நீ ஊட்டுலே இருக்கியா, பக்கத்துலே
என்ன லன்ட் மார்க் அப்படின்னு சொல்லி வைக்கணும். ஏன்னு கேட்டா, இத்தன சிரமப்பட்டு அங்கன போய் சேர்ந்தா, அடடா, நீங்க தேடரவங்க, நேத்திக்கு தானே இந்தியாவுக்கு போனாக என்று பக்கத்து வூட்டு அம்மா சொல்வாக.


6. முக்கியமா, நடந்து போகறதா இருந்தா, நடை பாதை எங்கெங்கெ க்ராஸ் செய்யலாம், அந்த நாட்டு ரோடு ரூல்ஸ் என்ன அப்படின்னு தெரிஞ்சு வச்சுருக்கணும்.

வூட்டுக்கு பத்திரமா வந்து சேர்ந்தீகளா அம்மா ?
ஹார்ட் படக் படக்னு அடிச்சுக்குது.

அடையாரு அனந்த பத்ம சாமி துணை இருப்பார்னு தனியா போயிடலாம். இருந்தாலும் அதுக்கு ஒரு தகிரியம் வேணும்ல....

நான் அதான் வூட்டு கிழவி துணை இல்லாம கிளம்பவே மாட்டேன்.

சுப்பு தாத்தா.

வெங்கட் நாகராஜ் said...

அடடா....

ம்... அப்புறம் என்ன நடந்தது. உதவி செய்தவர் யார்....

M. Shanmugam said...

நல்ல ஒரு வித்தியாசமான பதிவு
மிக்க நன்றி.

Tamil Magazine

athira said...

அவ்வ்வ்வ்வ் லக்ஸ்மியக்காவோ கொக்கோ?:)).. கரெக்ட்டாக் கண்டு பிடிச்சிருப்பீங்க.. என்ன கொஞ்சம் நேரம் ஆகியிருக்கும்:))

இதுக்குத்தான் எப்பவும் பேஸில, வீட்டு அட்ரசும், போன் நம்பர், அந்நாட்டுப் பணம் கொஞ்சம் வச்சிருக்கோணும்.

ராமலக்ஷ்மி said...

பத்திரமாய் திரும்பி விட்டீர்கள் எனத் தெரிகிறது. விவரம் அறியக் காத்திருக்கிறோம்.

Lakshmi said...

துளசி கோபால் நான் இப்படி கவனக்குறைவா இருக்கவே மாட்டேன். எப்படியோ வழி தப்பிடுச்சி.அடுத்த பதிவுல சொல்ரேன் என்னாச்சின்னு

Lakshmi said...

சாந்தி அடுத்தபதிவுல அத சொல்ரேன்மா

Lakshmi said...

ஸாதிகா கரெக்டா சொன்னே ஆமா இந்த யானைக்கும் அடி சறுக்கிடுச்சி

Lakshmi said...

ஆகாஷ் இவ்வளவு உரிமையா கேக்கும் போது எப்படி கோவம் வரும்?அடுத்தபதிவுல சொல்லரேன்

Lakshmi said...

ஆஸியா இவங்க இருப்பது கம்பஸ்வேல் லேன். நீங்கலும் சிங்கப்பூர்ல இருக்கீங்களா

Lakshmi said...

ஆமா அமுதா, பாட்டுகேட்டுகிட்டே நடக்கர சுகம் தனி இல்லியா அது இப்படி பழி வாங்கிடுச்சே

Lakshmi said...

ஆமா இராஜ ராஜேஸ்வரி அந்த நேரம் ஒரே பக் பக்கு தான்.

Lakshmi said...

சூரிசிவா நீங்க சொல்ரது எல்லாமே கரெக்டுதான்.அந்த நேரம் நம்ம புத்தி மழுங்கி போயிடுச்சே. நா எல்லா விஷயதிலுமே நல்லா கவனமாத்தான் இருப்பேன்.என்னமோ போதாத நேரம்

Lakshmi said...

அதிரா வா வா லக்ச்மி அக்காவா கொக்கா அந்த கொக்கால கரெக்டா கண்டு பிடிக்க முடியல்லியே ஒரு சீனாக்காரன் தானே உதவி பண்ணினான்

Lakshmi said...

வெங்கட் அடுத்தபதிவுல சொல்ரேன்

Lakshmi said...

ஸ்ரீதரா வா வா, நீயும் இந்த பதிவெல்லாம் படிக்கரயா அன்னாபா படிக்கராளா?

Lakshmi said...

ஷன்முகம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராமலஷ்மி அடுத்தபதிவில் சொல்ரேம்மா

இளமதி said...

அச்சச்சோ...அப்புறம்...
நல்லபடியா வந்திட்டதால்தான் எழுதறீங்க...
ஆனாலும் நடுவில பட்ட கஷ்டம்னு கேட்கிறப்போ என்ன ஆகியிருக்குமோன்னு கவலையா வருகிறது லக்ஷ்மியம்மா....

Lakshmi said...

ஆமா இளமதி நல்ல படியா வந்துட்டேன்மா

sparkkarthi karthikeyan said...

உங்கள் பயண அனுபவம், மிக த்ரில்லிங்காக உள்ளது, சஸ்பென்ஸ் வேண்டாம் சீக்கிரம் சொல்லுங்கள்

Lakshmi said...

sparkkarthi karthikeyan வாங்க வருகைக்கு நன்றி

கோவை2தில்லி said...

எப்படி திரும்பி வந்தீங்கன்னு தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம். எங்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்....

nagoreismail said...

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப துணிச்சல் தான், 100 ரூபாயா... வீட்டு போன் நம்பரும் தெரியாதா? சரியா போச்சு...

இந்த ஊர்ல அட்ரஸுக்கே அட்ரஸ் கிடையாதே..

பராவியில்லை... நீங்க பத்திரமா வீடு சேர்ந்துட்டீங்க என்ற கிளைமேக்ஸ் தெரிந்து விட்டதே அந்த மட்டும் சந்தோஷம் தான்.

rajalakshmi paramasivam said...

லஷ்மி அம்மா ,
பத்திரமாக திரும்பி விட்டீர்கள் என்று தெரிகிறது.
ஆனால் அந்த நிமிடங்கள் நிஜமாகவே 'பக்பக்' நிமிடங்கள்தான்.
அப்புறம் என்ன ஆயிற்று.? அறிய ஆவல்.

ராஜி

Seshadri e.s. said...

அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்!

Lakshmi Amma said...

கோவை2தில்லி அடுத்தபதிவுல சொல்ரேம்மா.

Lakshmi Amma said...

நாஹூர் இஸ்மாயில் வீட்டுக்கு வாங்கன்னு அன்பா கூப்புடுரீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆனா இப்படி மொட்டையா கூப்பிட்டா எப்படிங்க வரமுடியும் ஒரு காண்டாக்ட் நம்பரோ வீட்டு அட்ரசோ தரலியே

Lakshmi Amma said...

ராஜலஷ்மி பரமசிவம் ஆமா ரொம்பவே பக் பக்குதான் அடுத்தபதிவு வரை வெயிட் பண்ணுங்க.

Lakshmi Amma said...

சேஷாத்ரி, வருகைக்கு நன்றி

Geetha Sambasivam said...

கடவுளே, அப்புறமா எப்படிப் போய்ச் சேர்ந்தீங்க? பிள்ளையே தேடிண்டு வந்துட்டாரா?

Geetha Sambasivam said...

இப்போ சிங்கப்பூரிலே இருக்கீங்களா? அதான் ரொம்ப நாளாக் காணோம். ரொம்ப தூரத்திலே இருக்கீங்க இல்லை! அதான் வர முடியலை. :)))))))

Lakshmi said...

கீதா வாங்க நா எங்க இருந்தாலும் உங்க பக்கம்லாம் அடிக்கடி வந்துண்டுதானே இருக்கேன்.

Lakshmi said...

பிள்ளை ஆபீசுக்கு போயிட்டானே நானேதான் தேடிண்டு வந்தேன்

வல்லிசிம்ஹன் said...

இத்தனை பேரு கேட்டாச்சு. நானும் கேட்டுத் துன்பப் படுத்தலை:)

மாதேவி said...

மாட்டிக்கொண்டு தப்பித்தீர்களா.

தெரிந்து கொள்ள அடுத்த பதிவுக்கு வருகின்றேன்....

Seshadri e.s. said...

தங்களின்இந்தப் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். வாருங்கள் அம்மா!http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_20.html நன்றி!-காரஞ்சன்(சேஷ்)

Lakshmi said...

வல்லிம்மா வருகைக்கு நன்றி

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்ரிம்மா

என்னை ஆதரிப்பவர்கள் . .