Pages

Saturday, May 28, 2011

அதிர்ஷ்ட்டம் என்பது.


போன வருஷம் ஒரு எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், பிரெஸ்டிஜ் ஸோடது  வாங்கினேன். எனக்கு வேண்டியபடி சின்னதாக அரை லிட்டர் குக்கர்
வாங்கினேன். எந்தப்பொருள் வாங்கினாலும் அடுத்த நாளே உபயோகப்
படுத்திப்பார்ப்பது என் வழக்கம். ஏதானும் ப்ராப்லம் இருந்தா உடனே போயி
சொல்லிடலாம் இல்லியா? அதுபோல அந்தக்குக்கரையும் மறு நாளே யூஸ்
 பண்ணினேன். சின்னதா, அடக்கமா நல்லா இருந்தது. டைம் அட்ஜெஸ் மெண்ட்
எல்லாமே ஆட்டோமேடிக்.அரை டம்ளர் அரிசி அலம்பி அதில் சொன்னபடி
 அரை மணி நேரம் ஊறவச்சு குக்கரில் போட்டு வேண்டியதண்ணீரையும்விட்டு
குக்கரை மூடி ஸ்விட்ஸ் ஆன் பண்ணினேன். அதுவே டைம் செட்பண்ணிக்கும்.
 நமக்கு ஒரு வேலையும் இல்லே. நாம வேர வேலையை பாக்கப்போயிடலாம்.

Thursday, May 19, 2011

மலரும் நினைவுகள்(15)



குழந்தைகளுக்கு ஸ்கூல் திறந்து 10 நாட்களில் டிரான்ஸ்பர் வந்ததால பாதில
போக முடியாதுஎல்லாரும். அவர் மட்டும் முதலில் போயி ட்யூட்டி ஜாயின்
 பண்ணி ஒருவருஷம் அங்க தனியா இருக்கவும், நாங்கல்லாம் ஒரு வருஷம்
கழிச்சுபோலாம்னுநினைச்சோம்.இவர்குடும்பத்தைப்பிரிந்துஇருந்ததேஇல்லை.தவிர என்னை வெலி வேலைகள் எதுக்குமே அனுப்பினதும் இல்லை.வீட்டோடசரி. நான் எப்படி வீட்டு வேலை, வெளி வேலைகள் சமாளிப்பேனு அவருக்குரொம்ப க்கவலை. எப்படி சமாளிப்பேன்னு திரும்பதிரும்பக்கேட்டுண்டே இருன்தார். நான் பாத்துக்கரேன், நீங்கபோயிட்டு வாங்கோன்னு சொல்லி அவருக்குத்தெவையான எல்லா சாமனும் பேக் பண்ணி அனுப்பினேன். அரைமனதாகத்தான் கிளம்பி போனார்.

Monday, May 16, 2011

மலரும் நி்னைவுகள்(14



ஒருவழியா போர் அமர்க்களம் எல்லாம் ஓய்ந்த பின்னும் கூட அதனால்எற்பட்ட தாக்கம் குறையவே இல்லை. வெளி மார்க்கெட்டில் விலைவாசிகள் குரையவே இல்லை. ரேஷனில் என்ன பொருட்கள் கிடைக்கிரதோ அதில்தான் சமாளிக்க வேண்டி வந்த்து. எங்க குடும்பத்திற்கு ரேஷனில்கிடைக்கும்பொருட்கள் போதும் போதாததாகவே இருந்தது.வளரும் குழந்தைகள் நல்லா சாப்பிடும் வயது, எதைக்குறைப்பது? பார்க்கப்போனால்

அனாவசியச்செலவுஎன்றுசொல்லும்படிஎதுவுமேகிடையாது.அத்தியாவசியச்செலவுகளையே சமாளிக்க முழி பிதுங்கும். குழந்தைகளின் ஸ்கூல் ஃபீஸ் யூனிஃபார்ம், பாடபுத்தகங்கள், நோட்புக்ஸ், சாப்பாடு என்று எல்லாமே தேவையான செலவுகள்தான்.

Wednesday, May 11, 2011

மலரும் நினைவுகள்(13



கடன் இல்லாத வாழ்க்கை அமைதியாக நடந்தது. அந்த சமயங்களில்தான், இண்டியா, பாகிஸ்தான் வார் இண்டியா சீனாவார் எல்லாம் வந்தது.ஊர்பூராவும் கர்ஃப்யூ,இரவு ஒரு வீட்டிலும் லைட்எறியக்கூடாது என்று ஏக கெடுபிடிகள். எல்லா சாமான்களுக்கும் ரேஷனும்வந்தது. வெளியில் ஓபன் மார்க்கெட்டில் சாமான்கள் யானை விலை குதிரைவிலை சொல்வார்கள். ரேஷனில் என்னகிடைக்கிரதோ அதைத்தான் வாங்கிவருவோம். கோதுமை சோளம் எல்லாம் தருவார்கள். அரிசி மட்டும் ஐந்துகிலோதான் கிடைக்கும். சோளத்தில்தான் இட்லி, தோசை எல்லாம் பண்ணனும்.

Saturday, May 7, 2011

மலரும் நினைவுகள்(12)



இந்த சமயம் நான் என்ன பண்ணனும், சரியான முடிவு எடுக்கணும்கடன் இல்லாத வாழ்க்கைக்கு என்ன செய்வதுன்னு ரொம்பவேயோசிக்க வேண்டி வந்தது.இவருக்கு வரும் சம்பளம எங்க அன்றாட செலவுகளுக்கே போதும் போதாத நிலைமை.அதில் கடனுக்கு வட்டியும் கட்ட முடியாது,கடனையும் அடைக்முடியாது. பிறகுதான் ஒரு துணிச்சலான முடிவு எடுத்து அவரிடம்
சொன்னேன். அதாவது ஊரில் இருக்கும் நிலம், வீடு வித்துடலாம்
ஊர்ல என் தாத்தா இருக்கும் வரை அவர் மேற்பார்வை பார்த்து
வந்தார். இப்ப கவனிக்க ஆளும் இல்லை அதிலிருந்து எந்த வரும்
படியும் இல்லே. சும்ம அதை வச்சுண்டிருப்பதில் அர்த்தமில்லே அதை
வித்துடலாம் என்ரேன். அவர் ஒத்துக்கவே இல்லை. பெரியவா கஷ்டப்
பட்டு சேத்து வச்ச சொத்து, எப்படி விக்கமுடியும்? என்று ரொம்பவே
தயங்கினார். பெரியவங்க குழந்தைகளுக்கு சொத்து சேர்க்கிரதே ஒரு
கஷ்ட காலங்களில் உதவுவதற்காகத்தான் தவிர நாமும் அனாவசியமா
செலவு செய்துட்டு ஒன்னும் கடன் வாங்கலியே? நீங்க சம்பாதிச்சு இதை
விட அதிகமா சொத்து சேர்க்கமுடியுமே. பணம் எப்ப வேணாலும் சம்பா
திச்சுக்கலாம். இப்பத்திய அவசர தேவைக்கு இதைத்தவிர வேர வழி இல்லை.

என்னை ஆதரிப்பவர்கள் . .