மறு நா காலை 8.30-க்குத்தான் முழிப்பு வந்தது.எனக்குன்னு தனி ரூம் இருந்ததால எந்த சத்தமும்மில்லாம நல்லா தூங்க முடிஞ்சது. காலை எழுந்து பல் தெய்த்ததும் காபி ரெடி. பால்காரன் காலேல வருவானான்னு கேட்டேன்.
இருவரும் சிரிக்கரா.இங்க பால் காரன்லாம் வர மாட்டான். டெட்ராபேக்ல பால் ரெடியா கிடைக்கும் 2,அல்லது 3- மாசத்துக்கு ஸ்டாக் வாங்கி வச்சிடுவோம்னு சொல்றா. அதுவும் இல்லாம பாக்கெட்லேந்து கப்பில் பால் ஊற்றி டிகாஷன் கலந்து மைக்ரோவேவில் சூடு பண்ணி தந்தா. பாலை பொங்க பொங்க காய்ச்சவேணாமான்னேன். நமக்கு பால பொங்க பொங்க காய்ச்சி டிகாஷன் கலந்து நுரைக்க நுரைக்க காபி குடிச்சாதானே திருப்தி. எனக்கு இன்ஸ்டெண்ட் காபில்லாம் கொஞ்சம் கூட பிடிக்காது. ஸோ பில்டரும் காபி பொடியும்மும்பைலேந்து வாங்கிண்டு போனேன்.பால் அல்ரெடி நல்லா காய்ச்சி ஆறவச்சு பக்குவப்படுத்தித்தான் டெட்ராபேக்கில் அடைத்து விக்குராங்க அத திரும்ப காய்ச்ச வேண்டிய அவசியம்லாம் இல்லேன்னு சொல்ராங்க. சரி முத நாளே ஆர்க்யூ பண்ண வேண்டாம்னு குடிச்சேன். ஓரளவுக்கு ஓக்கே வாதான் இருந்தது.ஹாலில் உக்காந்து கொஞ்ச நேரம் பேச்சு
கீழே கொஞ்ச நேரம் வாக் போயிட்டுவரேன்னு கீழ போனேன்.இவங்க இருப்பது 8-வது மாடில. லிப்ட் வசதி இருக்கு. எம்.பி.3 எடுத்துண்டு கீழேபோனேன். முதல் நாள் இல்லியா இடம் தெரியாம எங்கியாவது போயிடக்கூடாதேன்னு பில்டிங்க் சுத்தியே 2, 3 ரவுண்ட் வாக் பண்ணினேன். காதுல பாட்டு கேட்டுண்டே காலை வாக் சுகம். அதுவும் மேக மூட்டமா கூலாக வேர இருந்தது.அரைமணி நேரம் நடந்துட்டு ஒரு சின்ன பார்க்ல போயி உக்காந்தேன். எல்லா பில்டிங்க் க்கீழேயும் குழந்தைகளுக்காக
சின்னதாக பார்க் பண்ணி நல்லா பராமறிக்கராங்க.குழந்தைகள் கீழே விழுந்து அடி பட்டுக்கக்கூடாதுன்னு கீழேஆர்டிபிஷியலா ரப்பரில் புல்தரை போல விரிப்பு போட்டிருக்காங்க. சறுக்குமரம் டிக் டாக் டோன்னு
கொஞ்சம் விளையாட்டுக்களும்
அதுமட்டுமில்லே. பழையகாலத்து கிராமங்களில்(இந்தக்காலத்ல கிராமங்களைப்பார்க்கவே முடியறதில்லே) சின்னகுழந்தைகள் தெருவாசலில் கரிக்கட்டியால் கட்டம்கிழித்து நம்பர்லாம் போட்டு பாண்டின்னு ஒரு விளையாட்டு விளையாடுவார்கள். தலையை கீழேகுனியாம மேலே பார்த்துண்டே சரியா தப்பான்னு கோட்டைமுதிக்காம குதிச்சுகிட்டே போவாங்க. தப்பி தவறி கோட்ட முதிசிட்டா மத்த குழந்தைக தப்பு கோட்ட முதிச்சிட்டே அவுட்டுன்னு கும்மாளம் அடிப்பாங்க. ஏன் இவ்வளவு விஸ்தாரமா சொல்ரேன்னா அதே விளையாட்ட இங்க சைனீஸ்குழந்தைகளும் ஜப்பானீஸ் குழந்தைகளும் ரைட்டா, ராங்கான்னு கேட்டு விளையாடுராங்க. நம்ம பாரம்பரிய விளையாட்டெல்லாம் எங்கியும் தொலைந்து பொகலே. வேர ரூபத்தில் மாடர்ன் விளையாட்டாஇன்னும் யாராவது எங்கியாவது விளையாடிகிட்டேதான் இருக்காங்க.
. கொஞ்ச நேரம் வேடிக்கை பாத்துகிட்டே இருந்தேன்.எல்லா பில்டிங்குமே கழுத்தை வளைச்சு நிமிர்ந்து பாக்கும் உயரத்தில் இருக்கு. நிறயா சைனீஸ், ஜப்பானீஸ் தெரியுராங்க,ஹாய் சொல்லி சிரிச்சுகிட்டே போராங்க.
மறுபடி மேலே வந்தேன் அனேகமா எல்லார் வீட்டு வாசலிலும் நம்ம வீட்ல விளக்குப்பிறை இருக்கும் இல்லியா அதுபோல வச்சு அதில் என்னமோ
சிவப்புக்கலரில் பொருட்கள் வச்சி ஊது பத்தியும் கொளுத்தி வச்சிருக்காங்க. ஒரு வாரம் போல கொஞ்சம் பழகினதும் அதுபத்தி கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு நினச்சேன்.ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு பழக்கவழக்கங்கள் இருக்கு இல்லியா?

| Tweet | |||||