Google+ Followers

Pages

Wednesday, November 28, 2012

சிங்கப்பூர் 2

ப்ளேன் மேலே கிளம்பி மேக மண்டலத்துக்குள்ள பறக்க ஆரம்பித்ததும் ப்ளேனுக்குள்ளே  இருக்கும் பேசஞ்சர்சை வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சேன்.
எனக்கு முன் சீட்டில் இருந்த பெண்ணுக்கு கால் முட்டிவர நீண்ட அடர்த்தியான
தலைமுடி இருந்தது.பாக்க வே நல்லா இருந்தது. இப்பல்லாம் எல்லாரும் கழுத்துகிட்டயே குட்டியா கட்செய்துடராங்களே?ஒரு குட்டி குழந்தை முன்னும் பின்னுமா ஓடிகிட்டே இருந்தது அவன் தாத்தா அவன் பின்னாடியே ஓடிகிட்டு இருந்தார்.எதிர் சீட்ல ஒரு பையன் லாப்டாப் ஆன் பண்ணிட்டு காதில் ஹெட் போனும் மாட்டிகிட்டு வேறு உலகத்தில் சஞ்சரிக்க  ஆரம்பிச்சுட்டான்.
பின்னால ஒரு 12 வயசு பையன் காலை நீட்டி என் சீட்டை தள்ளிகிட்டே இருந்தான்.இப்படி ஒவ்வொருவரையா வேடிக்கை பாத்துகிட்டே ஒருமணி நேரம் டைம் பாஸ் பண்ணிட்டேன்.எம்.பி 3-யில்பாட்டு கேட்டுகிட்டே கொஞ்ச நேரம் எழுதினேன்.ஏர்ஹோஸ்டசிடம் தண்ணிகேட்டு வாங்கிண்டேன். கொஞ்ச நேரம் கண்மூடி மனதை காலியாக அமைதியாக வைத்திருந்தேன். பிறகு கொஞ்ச நேரம் புக் படிச்சேன்.இமிக்ரேஷன் ஃபார்ம் கொடுத்து ஃபில்பண்ணசொன்னா.அதையெல்லாம் முடிசுட்டுசும்ம உக்காந்தேன்.ஒரு வழியா2.30-க்கு சிங்கபூர் சாங்கி ஏர்போர்ட் வந்தது பிரும்மாண்ட அழகில் தக தகன்னு ஜொலிக்குது. ஆனா இப்ப ரசிச்சு பார்க்க நேரம் இல்லேசாங்கி ஏர்போர்ட். அங்க அப்போ டைம் ஈவினிங்க்5 மணி.ப்ளேன் லேண்ட் ஆகும்போதே வெளில வேடிக்கை பாத்துகிட்டே வந்தேன். எதுமே பக்க முடியாம மழை ஜோராக கொட்டிகிட்டு இருந்தது.

இடி மின்னலுடன் நல்ல மழை.வெளில வந்து இமிக்ரேஷன் கிளியரன்ஸ் கௌண்டர் போனேன். நம்ம நேரம் அந்தகௌண்டரில் ஒரு தமிழ் ஆபீசர் தான் இருந்தாங்க.கோமதின்னு பேரு. திருன வேலிக்காரின்னு சொன்னாங்க.பாஸ்போர்ட், இமிக்ரேஷன் ஃபார்மில் ஒரு மாசத்துக்கு விசா ஸ்டாம்படிச்சு கொடுத்தாங்க. என் லக்கேஜ் எந்த இடத்தில் வரும்னும் சொன்னாங்க அங்கபோயி கன்வேயரில் வந்த  லக்கேஜ் கலெக்ட்பண்ண 15 நிமிஷம் வெயிட் பண்ண வேண்டி  இருந்தது. வெளில மழை பெட்டி பை எல்லாம் நனைஞ்சு இருந்தது.தீபாவளி கழிஞ்சு ஒரு வாரத்தில் கிளம்பினதால மகனுக்கு   பட்சணம் எல்லாம் கொண்டு போயிருந்தேன். அந்தப்பை சொட்ட சொட்ட நனைஞ்சுட்டு. வெளில மகனும் மறுமகளும் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. ஒரு ஹாய் சொல்லிட்டு ப்ளைட்ல எதானும் சாப்டியான்னு கேட்டா. இல்லே காலேல 4 மேரி பிஸ்கெட் காபி மட்டும்தான்னு சொன்னேன்.
எதானும் வாங்கி சாப்பிட்டிருக்கலாமில்லென்னு கேட்டா. ஏர்போர்ட்லேயே
ஆனந்தபவன் ரெஸ்டாரெண்ட் இருந்தது. அங்க போயி மசால் தோசை காபி குடிச்சு கீழ வந்து டாக்சி பிடிச்சு அவங்க இருக்கும்செங்காங்க் என்னும் இடம் போனோம்.

வீடு நல்லா பெரிசா இருந்தது. 3பெட்ரூம், ஹால் கிச்சன்வராண்டா என்ரு விச்தாரமாக இருந்தது.பெட்டி பை எல்லாம் காலி பண்ணி எல்லா சாமான்களும் வெளில வச்சு அதனதன் இடத்தி வச்சுட்டு கொஞ்ச நேரம் பேசிண்டு இருந்தோம். என் மூனாவது மகனும் மறுமகளும் சிங்க பூரில் இருக்காங்க. ஏற்கனவே 3 வாட்டி வந்திருக்கேன் ஆனா உங்க எல்லாருடனும் ஷேர் பண்ணிக்கலே. ஸோ இந்தவாட்டி உங்க கூட பகிர்ந்துக்கரேன். சிங்கபூர் பத்தி நான் எதுமே புதுசா சொல்லவேண்டிய அவசியமே இல்லே நிறையா பேரு நிறைய பதிவில் சொல்லி இருக்காங்கதான். நா என்னத்த புதுசா சொல்லிட முடியும் இல்லியா.குளித்து சாப்பிட்டு படுக்க போயிட்டேன் ஜெட்லாக் இருக்கும் இல்லியா.மழை இன்னும் விடாம கொட்டிட்டு இருந்தது. மகன் சொன்னான் சிங்கபூரில் மழைகாலம்னு தனியா எதும் கிடையாது டெய்லியே ஒருமணி நேரமோ ரெண்டு மணி நேரமோ நல்ல மழை கொட்டி ஊரயே பளிச்சுன்னு கழுவி விட்டுடும். அதுவுமில்லாம இங்க மரங்களை வெட்டுரதே இல்லே ஸோ வருஷம் பூராவும் மழை இருக்கும்னு சொன்னான்

Monday, November 26, 2012

ஜாய், ஜாய் சிங்கபூர்

ரொம்ப நாள் ஆச்சு பதிவுலகம் பக்கம் வந்தே யாராவது என்ன காணோமின்னு
தேடினீங்களா?. இப்ப சிங்கபூர்ல இருக்கேன்.இங்கவந்துட்டு உங்க எல்லாருடனும்ஷேர் பண்ணிக்கலேன்னா எப்படி இல்லியா? அதான் வந்துட்டேன். நவம்பர் 23-ம்தேதி காலை8 மணிக்கு மும்பைலேந்து சிங்கப்பூர் ஃப்ளைட் இருந்தது. மும்பை தாணாவில் இருக்கும் மகன் வீட்லேந்து காலை 5-மணிக்கே கிளம்பி  ஏர் போர்ட் வந்தேன்.காலை   நேரம் ஆதலால் டிராபிக்ல மாட்டிக்காம 45- நிமிஷத்துல  வந்துட்டோம்.ஏர்போர்ட்டுக்குள்ள யாரும் வரமுடியாதே இல்லியா மகன் வெளிலேந்தே கிளமிபிட்டான். நான் லக்கேஜ் ட்ராலி எடுதுண்டு உள்ளே போனேன்.போர்டிங்க் பாஸ் வாங்கிண்டு லக்கேஜ் செக் இன் பண்ணிட்டு இமிக்ரேஷன் கௌண்டர்போனேன்.போர்டிங்க் பாஸ் வாங்கும் போதே விண்டோ ஸீட் கேட்டு வாங்கிண்டேன். தனியாவா போரிங்க யாரு அங்க இருக்காங்கன்னு பார்மல் கேள்வி பதில்கள்.

இமிக்ரேஷன் கௌண்டர் எங்கியோ ஒரு மூலேலெ இருந்தது. தேடிதேடி நடந்து போகவே 15- நிமிஷம் ஆச்சு. அங்க கிளியரன்ஸ் முடிசுட்டுசெக்யூரிட்டி
செக்கிங்கு இன்னொரு மூலை போயி அந்த பார்மாலிட்டில்லாம் முடிச்சுட்டு
 கேட் நம்பர் செக் பண்ணிண்டு போனேன். அது அண்டர்க்ரவுண்ட்ல ஒரு மூலேல இருந்தது. எஸ்கலேட்டர் இருந்தாலும் படிகள் வழியாகவே இறங்கிபோய் கேட் பக்கம் போனேன். நிறைய குஷன் சீட்ஸ் இருந்தது. நிறைய
டைம் இருந்தது. சும்ம உக்கார முடியல்லே. ஏர்போர்ட் சுத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அடிக்கடி பார்த்த காட்சிகள்தான். எப்பவும் புதுசாவே தெரியுது நிறையா டியூட்டிஃப்ரீஷாப்ஸிருந்தது. காபிடே ல போயி ஒரு காபி குடிச்சேன்.காபி குடிச்ச பிறகு காசு கொடுத்தேன். மேடம்  ஏற்கனவே காசு கொடுதுட்டீங்க  என்று சொன்னான். நான் எப்ப கொடுத்தேன்.இல்லியேன்னேன். இல்லே மேடம் முதல்ல கூப்பன் கொடுத்திட்டுதான் காபியே சர்வ் பண்ணுவோம். ஸோ நீங்க பணம் கொடுதுடீங்கன்னு சொன்னான்.எனக்காக யாரு பணம் கொடுத்திருப்பாங்கன்னு ஒரே குழப்பம்.

 சரி காபி ஃப்ரீயா குடிச்சுட்டு மறுபடி கேட் பக்கம் போயி வெயிட்டிங்க்.
 7.30 போர்டிங்க். வரிசையா ப்ளேனுக்குள்ள போனோம்.பின்னாடி 22-ம் சீட் விண்டோ. இது இண்டிகோ ஃப்ளைட். அதாவது பட்ஜெட்ஃப்லைட். உள்ள சாப்பிட ஒன்னும் தரமாட்டாங்க. எதானும் வேனும்னா எக்ஸ்ட்ரா பனம் பே பண்ணி வாங்கிக்கனும். நான் வீட்லேந்து மேரி பிஸ்கெட் 4- கொண்டு வந்திருந்தேன். காபி குடிக்கும்போது பிஸ்கெட் எடுதுகிட்டு மெடிசினும் எடுத்துகிட்டேன். உள்ள எதும் வாங்கலே.குடிக்க தண்ணி மட்டும் தராங்க.
பொதுவா இண்டெர் நேஷனல் ஃப்ளைட்ல லாம் நம்ம சீட்டுக்கு முன் சீட் முதுகு பக்கம் சின்னதா ஒரு டி.வி. இருக்கும். படமோ, பாட்டோ, கேம்ஸோ எதுவேனாலும் பாத்துக்கலாம் . டைம் நல்லா போகும். இது பட்ஜெட் ஃப்ளைட்
ஸோ அதெல்லாம் ஏதும் இல்லே. 6 மணி நேரம் பொழுதைப்போக்கனுமே.கையில் எம். பி. 3, பென் நோட்புக், புக்ஸ் எல்லாம் வச்சிருந்தேன்.வழக்கம்போல டேக்  ஆஃப் ரசிக்க ஆரம்பித்தேன். வீட்ல குட்டி குழந்தைகள் தவழ  கத்துக்கும் போது முதலில் பின்னாடிதான் தவழும் யாரானும் கவனிச்சுருக்கீங்களா?அதுபோல ப்ளேன் கிலம்பினதும் முதலில் பின்னாடி 5  நிமிஷம் ஓடிட்டு அப்புரம்தான் முன்னாடி ஓட ஆரம்பிக்குது. எதைத்தான் எதுக்கு தான் உதாரனமா சொல்ரேன் இல்லியா?ரன்வேயில் ஃபுல் ஸ்பீடில் ஓடி டேக் ஆஃப் பாக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். பெரிய பெரிய பில்டிங்கெல்லாம் மெது மெதுவாக மினியேச்சர் சைசுக்கு மாரிகிட்டே போகும் இல்லியா? அதெல்லாம் ஒரு 15  நிமிஷ வேடிக்கைகள். பிறகு ஒரே மேக மண்டலம்தான்,. வேர ஏதுமே பாக்க முடியாது. 

என்னை ஆதரிப்பவர்கள் . .