Google+ Followers

Pages

Friday, June 29, 2012

பூஜா கல்யாணம்

  நாசிக் கிருஹப்பிரவேசம் முடிந்து ஒரு கல்யாணத்தில் கலந்துகொள்ளவேண்டி இருந்தது. இந்தமாசம் முழுவதும் ஒரே சுற்றல்தன். என் அத்தை அமெரிக்காவிலேந்து என் பேரன் பூணூல் கல்யாணத்தில் கலந்துகொள்ள பறந்துவந்தா. நான் அம்பர் நாத்திலிருந்து அத்தையின் பேத்திகல்யாணத்தில் கலந்துகொண்டேன். ஹா ஹா.              

           அத்தை அவ பெண் பிள்ளை பேரன் பேத்திகள் எல்லாருமே அமெரிக்கா வாசிகள் அதுவும் க்ரீன் கார்ட் ஹோல்டர்ஸ். அத்தைக்கு பேத்தியின் கல்யாணம் இண்டியாவில்தான் நடத்தனும்னு ஆசை. எல்லா சொந்தக்காரங்களும் இண்டியாவில் தானே இருக்காங்க. எல்லாராலயும் அமெரிக்கா போகமுடியுமா. ஸோ அவங்க ஒரு 20- பேர் இண்டியாவந்து கல்யாணத்தை க்ராண்டாக செய்தார்கள்.                                        
                          
 இவங்கதான் பெண்ணின் அம்மா அப்பா, பெண்ணும் மாப்பிள்ளையும் கூட அமெரிக்காவில் வேலை பாக்குராங்க.
                             
 இந்தக்கால வழக்கப்படி முதல் நாள் ரிசப்ஷன் வச்சிருந்தாங்க. மறு நா தான் கல்யாணம் நடந்தது. இண்டியாவில் மும்பையிலேயும் நிறையா சொந்தக்காரங்க இருந்தோம். எல்லாரும் போய் கலந்து கொண்டோம். தமிழ் நாட்டிலிருந்தும் சொந்தக்காரங்க நிறையா பேரு வந்து கலந்து கொண்டார்கள். தோஹா, சிங்க்ப்பூரிலிருந்தும் சொந்தக்காரங்க வந்து கலந்து கொண்டார்கள்.எல்லா சொந்தக்கரர்களுமே ரொம்ப வருடங்களுக்குப்பிறகு சந்திப்பதால் எல்லார் முகங்களிலும் சந்தோஷம் மகிழ்ச்சி.
 எங்கபோனாலும் நானும் அத்தையும் சேர்ந்தே தான் இருப்போம். சின்ன வயதில் எங்க இருவரையும் பஞ்சபாத்திர உத்தரணின்னுதான் சொல்லுவாங்க.இப்பவும் அதேதான்.                              
         
                     
 அக்கா உங்கள ரொம்ப நாள் கழிச்சு பாக்குரோம் எங்க கூட ஒரு போட்டோ ப்ளீஸ் என்று ஆளாளுக்கு போட்டோ எடுத்துக்கொள்வதில் ஏக உற்சாகம் காட்டினார்கள்.
                                 
      எங்கள் குடும்பம் பெரி.............................சு.

                                                
 கல்யாணம் மும்பையில் செம்பூரில் ஒரு கல்யாண மண்டபத்தில் வைத்து நடந்தது.ஹால் பூராவும் ஏ. சி செய்திருந்தார்கள். தாராள இடவசதியும் இருந்தது.

                   என் கூட பிறந்தவர்கள் என்னையும் சேர்த்து 7 பேர்கள்(7-ஒண்டர்ஸ்)  நாங்க எல்லாரும் ஒன்றாக சேர்ந்து இருக்க வாய்ப்பே கிடைத்ததில்லே.  ஒவ்வொருவர் ஒவ்வொரு இடத்தில் இருப்பதால். இந்தக்கல்யானத்தில் நாங்க 7 பேரும் கலந்து கொண்டோம் விடுவோமா உடனே க்ளிக் பண்ணிகிட்டோம். நாந்தான் முதல் பொண்ணு எங்க வீட்ல. தங்கை தம்பிகளுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். இதுபோல உற்வு ஜனங்களை சந்திக்கத்தான் விசேஷங்களை ஊர் அழைத்து பண்ணுகிரோம் போல இருக்கு இல்லேன்னா யார் வீட்டுக்கு யாரு போயிகிட்டு இருக்கோம் இல்லியா?.              

                             
 வாசல் அலங்காரங்களும் அமர்க்களமாக செய்திருந்தார்கள் எல்லாமே மனசுக்கு சந்தோஷமாக வும் நிறைவாகவும் இருந்தது. ஜூன் 1-ம் தேதி வீட்டை விட்டு கிளம்பிட்டு ஜூன் 22 தேதிக்குத்தான் வீடு வந்தேன். வரிசையாக விசேஷங்களி கலந்து கொள்ளவேண்டி இருந்தது. வந்ததுமே ஒன்னொன்னா உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொண்டேன். கலந்துகொண்டதையும் விட பகிர்ந்து கொள்வதில் அதிக சந்தோஷமா இருக்கு.                            
                                         
சாப்பாட்டு பந்தியில் ஒரு பொண்ணு ( வயசு25) தமிழ் கொஞ்சமாதான் வரும். ஏன் ஆண்டி  சாப்பாடு பரிமாறும்போது ரொம்ப கொஞ்சமா போடுங்கன்னு ஏன் சொல்ராங்க? ரொம்பன்னாலே அதிகம்னுதானே அர்த்தம் அதென்ன ”ரொம்ப கொஞ்சம்” என்று சந்தேகம் கேக்கரா. இந்தக்கால குழந்தைகளுக்கு எப்படில்லாம் சந்தேகம் வருது?

                           

Monday, June 25, 2012

கிருஹ பிரவேசம்


பூணூல் கல்யாணம் முடிந்ததும் சின்னபெண் வீட்டு கிருஹப்பிரவேச நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.மும்பையில் இருந்து 180- கிலோ மீட்டரில் நாசிக் என்னும் ஊர் இருக்கு.  ( அதாங்க நம்ம கரன்சி அச்சடிக்கும் இடம் இருக்கே அந்தஊருதான்). மும்பையிலிருந்து ரோட் ஸைட் 4மணி நேரம் ஆகுது. முதல் நாள் இரவே நாங்க கிளம்பிபோனோம்.

 புது இடம் வாத்யார் எல்லாம் தேடிகண்டு பிடிக்கமுடியாதுன்னு மும்பையிலேந்தே ரெண்டு வாத்யார்களையும் கூடவே அழைச்சுண்டு போனோம். இரவு வீட்டை அலம்பி சுத்தம் செய்து( வீடுன்னு சொல்லமுடியாது தனி பங்களாதான்.மூனுமாடியுடன் அம்சமா இருக்கு. இப்பதான் டெவலப் ஆகிவரும் புது ஏரியா. அங்கொன்றும் இங்கொன்றுமாக சுமார் 10 -வீடுகள்தான் இருந்தன.இவர்கள் பாலக்காட்டுகாரா. வீட்டின் வாசல்கதவு கேரளாவில் ஆர்டர் கொடுத்து கோவில் கதவு போல டிசைன் செய்து வரவழைத்திருந்தர்கள். மணி, கடவுள் உருவங்கள் எல்லாம் கையால் செதுக்கி செதுக்கி வெகு அழகாக இருந்தது.


 நம்பூதிரி பிராம்மணர்கள் பூஜைக்குதேவையானவற்றை சிறப்பாக ஏற்பாடு செய்தார்கள். காலை கணபதி ஹோமம் தொடங்கி, நவக்கிருஹ ஹோமம், சுதர்சனஹோமம், வாஸ்து ஹோமம் என்று மதியம் மூணுமணிவரை ஹோமங்கள் சிறப்பாக செய்தார்கள். காலை டிபன் மதிய, இரவு உணவுக்கு வெளியில் ஆர்டர் செய்திருந்தோம். கரெக்டான டயத்துக்கு எல்லாம் கொண்டு தந்தார்கள். அக்கம்பக்கம் உள்ளவர்களை பூஜைக்கு அழைத்திருந்தோம். சந்தோஷமாக வந்து கலந்து கொண்டார்கள்.எல்லாருக்கும் மூணு வேளையும் உணவு உபசாரம் செய்தோம்.

 வாசலில் பளிங்கினால் சின்ன ஒரு துளசிமாடம் ரொம்ப க்யூட்டாக இருந்தது.சுற்றிவர பூசெடிகள்வைக்க நிறைய இடம் இருந்தது, வீட்டின் பின்புரமும் பழவகைமரங்கள் வைக்க நிறைய இடம் இருந்தது. மண்ணும்சத்துள்ளதாக இருக்கு. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்வீட்டில் பூக்களும் பழமரங்களும் பூத்து காய்த்து கண்களுக்கு விருந்தாக இருந்தது. நல்ல காற்று வெளிச்சமுடன் வீடு ரொம்ப நன்றாக இருக்கு.

சுவரில் ஆணி அடிக்கவேனாம் என்று ஒரே ஒரு சாமி படம் மட்டும் மாட்டினோம்.
 சாயங்காலமும் பகவதி சேவைன்னு ஒரு பூஜை செய்தார்கள். 6 டு 9 வரைஅந்த பூஜை நடந்தது. அதற்கு தேவையான நெய்ப்பாயசம் நம்பூதிரிகள்தான் செய்தார்கள். கரண்ட் லைட் எல்லாம் போடவேண்டாம்னு சொல்லிட்டா எண்ணை திரி போட்ட விளக்குகளின் வெளிச்சத்தில் பூஜைகள் பார்க்க கொள்ளை அழகு.

அதுமட்டுமில்லே கலர்பொடியில் கோலம் போடுவதும் நம்பூதிரிகள்தான் கோலம்போட்டு விளக்குகளை ஏற்றினதுமே அந்த இடத்துக்கு அப்படி ஒரு வைப்ரேஷன்கிடைக்குது.

பூக்களும் நிறையா மும்பையிலிருந்தே வாங்கிண்டு போயிருந்தோம்.னல்லபடியா கிருஹப்பிரவேச வைபவமும் நடந்தது.

                    
Friday, June 22, 2012

பூணூல்

          ஒவ்வொருவருக்கும் அவர்கள் குடும்ப கோத்திரம் என்று ஒன்று உண்டு. கோத்திரம் என்பது இவர்கள் எந்த முனிவருடைய வழியில் வந்தவர்கள் என்பதைக்குறிக்கும். இந்துக்கள் எல்லோருமெ ரிஷி பரம்பரையினர் என்று கூறப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கோத்திரம் உண்டு தினசரி காலை பூஜையின் போது தங்கள் கோத்திர முனிவருடைய வணக்கத்தையும் செய்வது நல்லது. இதனால் கோத்திரம் தொடர்பு விட்டுப்போகாமல் இருக்கும்..                                 
 முதல் நாள் இரவு தாம்பூல பையில் முறுக்கு, லட்டு தேங்காய், வெற்றிலை பாக்கு பழம் மஞ்சள் குங்குமம் எல்லாம் போட்டு ரெடிபண்ணவே இரவு 12 மணி ஆனது. ரொம்ப நாட்கள் கழித்து ரொம்ப நாட்கள் கழித்து குழந்தைகள் எல்லோரும் சந்திப்பதால் பேசி பேசி தூங்கவே இல்லே. காலை 3- மணிக்கே எழுந்து ஒவ்வொருவராக குளித்து ரெடி ஆகி ஹால் போகும்போது 5- மணி ஆச்சு. நாங்க போய்ச்சேரும் முன்பே வாத்யார்கள் வந்து பூஜைக்கு தேவையான வற்றை ரெடி செய்து வைத்திருந்தார்கள். 7.30- க்கு முஹூர்த்த நேரம் அனதால் அதற்கு மு7ன்பு செய்ய வேண்டிய சில அனுஷ்டானங்கள் செய்தார்கள்.
முன்னெல்லாம் குடுமி வைப்பது வழக்கமாக இருந்தது. இப்ப கால்த்துக்கு தகுந்தாப்போல முன் உச்சியில் லேசாக முடி வெட்டினார்கள்.ஒவ்வொரு சம்பிரதாயத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் காரணம் எல்லாம் இருக்குதான் சொல்லவும் கேக்கவும்தான் யாருக்கும் பொறுமை இருக்கறதில்லே.வைதீக சம்பிரதாயங்கள் எதிலும் குறையிருக்க கூடாதுன்னு எல்லாம் முறைப்படி பண்ணினோம்.குழந்தைகளை பால பருவத்துலேந்து பிரம்மச்சாரி பருவத்துக்கு மாற்றுவதுதான் இந்த பூணூல் சடங்கின் முக்கியத்துவம்.

 வாத்யார் ஒன்னொன்னா சொல்லிக்கொடுக்க குழந்தையும் பொறுமையாக எல்லாம் செய்துவந்தான்.சின்ன வயசுதானே பாக்கவே நல்லா இருந்தது.

 காலை 6 மணிக்கே இன்னொரு பிரும்மச்சாரி பையனுடன் பூணூல் குழந்தைக்கும் குமார போஜனம் என்று விருந்து வைப்பார்கள். அவ்வளவு அதிகாலையில் சாப்பிட்டு பழக்கமில்லாததால ரொம்ப திணறி போயிட்டான் குழந்தை.வாழை இலை முழுக்க சாப்பாடு பார்த்ததுமே அவனுக்கு வயிறு ஃபுல் ஆயிடுத்து என்கிரான். ஹா ஹா.

 அதன் பிறகு முறையாக மந்திர உபதேசங்கள் சொல்லி பூணூல் போட்டார்கள்.

குழந்தையின் தாய் மாமா தோள்தூக்கிண்டு வரணுமாம். பட்டு வேஷ்ட்டி வழுக்கி விழவெக்கத்துடன் தோளில் சவாரி செய்து  மண்டபத்துக்கு  கூட்டி வந்தார்கள்.


பிறகு பிரும்மோபதேசம் நடந்தது. காயத்ரி மந்திரம் சொல்லிக்கொடுக்கப்பட்டது.

 பிரும்மச்சாரி குழந்தைகளுக்கு தினசரி கடைப்பிடிக்கவேண்டிய பழக்கவழக்கங்கள் சொல்லப்பட்டது. மூன்று வேளையும் காயத்ரி மந்திரம் ஜபிக்கவும், மூன்று வேளை உணவு உண்ணும் முன்பு, சந்தியாவந்தனம், மாத்யானியம் என்று எப்படி செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கப்பட்டது.
அதுபோல தினசரி உணவு பிட்ஷை எடுத்துதான் சாப்பிடவேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக பவதி பிக்‌ஷாந்தேஹி என்று சொல்லி எல்லாரிடமும் பிட்க்‌ஷரிசி தானம் வாங்கி அவர்களை நமஸ்கரித்து ஆசி வாங்க வேண்டும்.

 எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தது. காலை பிரேக் ஃபாஸ்ட், மதிய விருந்து எல்லாருக்கும் அளித்து தாபூல பையும் கொடுத்து மறியாதை செய்தோம். நிகழ்ச்சி நிறைவாக நடந்தேறியது. நம் பதி உலக சினேகிதிகள் அமைதிச்சாரலும், ஜெயஸ்ரீ அவர்களும் வந்திருந்தார்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

Tuesday, June 19, 2012

நாந்தி

 பூணூல் கல்யாணத்துக்கு முதல் நாள் நாந்தி என்று ஒரு விசேஷம் பண்ணுவோம். அதாவது குடும்பதில் வாழ்ந்திருந்த முன்னோர்களின் நினைவாக செய்யும் சடங்கு.  முதலில் பிதுர்களின் ஆசிகள் வாங்கிய பிறகுதான் மற்ற விசேஷங்கள் நடத்தணும் என்பது சம்பிரதாயம். 4- வேதங்கள் உண்டு இல்லியா ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்று. ஒவ்வொருவர் ஒவ்வொரு பிரிவைச்சேர்ந்தவர்களாக இருப்பார்கள். எந்தப்பிரிவை சேரிந்திருக்கோமோ அந்த வழி முறை களை பின்பற்றி முறையாக செய்யனும்.

                                               
    பண்டிதர்கள் ஜபித்து வைத்திருக்கும் மந்திர தண்ணீரால் பூணூல் குழந்தைக்கு அபிஷேகம் செய்யணும்.தலை துவட்டி புது ஆடை உடுத்தி உள்ளே கூட்டிப்போய்  அம்மா கையால் ஒரு டம்ளர் பசும்பால் கொடுக்கணும்.                       
                                                
பூணூல் குழந்தை அப்பா, அம்மாவுடன் சபை நடுவில் அமர்ந்து வாத்யார்கள் சொல்லும் மந்திரங்களை கவனமாகக் கேட்டு திரும்ப சொல்லணும்.குழந்தையின் அப்பா வாத்யார் சொல்லும் மந்திரங்களை உள் வாங்கி தெளிவாக உச்சரிக்கணும்.

 மந்திர அட்சதை பெரியவர்கள் தூவிஆசிர்வதிப்பார்கள் குழந்தை , அவனின் பெற்றோர் அனைத்து பெரியவர்களுக்கும் நமஸ்கரித்து ஆசிர்வாதங்கள் வாங்கணும்                                                 

 10 வாத்யார் களுக்கு புது கோடி வேஷ்டி துண்டு, பஞ்ச பாத்திரம், பாய், விசிரி, குடை கம்பு இதுபோன்ற பொருட்களைத்தானம் செய்து அவர்களை திருப்தி படுத்தனும்.                                                

                                                       
மறு படியும் பெரியவர்களை நமஸ்கரித்து ஆசிகள் வாங்கனும்.
  
                                    
 வாத்யார் எல்லாருக்கும் கால் அலம்பி, அதாவது பாதபூஜைகள் செய்யணும். மதிய உணவும் வடை பாயசம் 4 வித பொரியல் கூட்டு வகைகளுடன் விருந்து உபசாரம் செய்யனும். அவர்கள் நன்கு திருப்தி அடைந்து குழந்தைகளை ஆசிர்வதிப்பார்கள். பிறகு தட்சிணை தாம்பூலம் கொடுத்து மறியாதை செய்யணும். அவர்கள் கிளம்பி போன பிறகு வீட்டில் உள்ளவர்கள் மதிய விருந்து சாப்பிடணு.ம் எல்லாம் முடியவே மதியம் 3 மணி ஆனது. நாங்க யஜுர் வேதம் பிரிவைச்சேர்ந்தவர்கள் எங்க பிரிவினருக்கு மந்திரங்கள் கொஞ்சம் அதிகமாக வே இருக்கும். அன்று எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தது.                                      

Friday, June 1, 2012

இலுப்ப சட்டி தோசை.

தேவையான  பொருட்கள்.
 தோசை மாவு ----------------  ஒரு பாத்திரம் நிறைய.( 4 பேருக்கு)
 வெங்காயம்------------------  2 சின்னதாக கட் செய்து கொள்ளவும்.
 தக்காளி ---------------------  2  சின்னதாக கட் செய்து கொள்ளவும்.
கேரட்------------------------- 2  துருவிக்கொள்ளவும்.
பச்சை மிளகா-------------   2 சின்னதாக கட் செய்து கொள்ளவும்
இஞ்சி----------------------- ஒரு சிறிய துண்டு சின்னதாக கட் செய்யவும்
கருவேப்பிலை------------- ஒரு ஆர்க்
 கொத்துமல்லி------------ ஒரு கைப்பிடி
 நல்லெண்ணை----------- ஒரு கிண்ணம்.
         

என்னை ஆதரிப்பவர்கள் . .