Google+ Followers

Pages

Monday, March 26, 2012

கிலிபி 21 அப்ப்ரிக்கா

 வந்து கிட்டத்தட்ட, 3, 4 மாசம் ஆயிடுச்சு. நாளை கிளம்பனும். பெண்ணுக்கும் மாப்பிளைக்கும் என்னை திரும்ப அனுப்பமனமே இல்லே. ஆசை ஆசையா எல்லா இடங்களும் சுற்றிக்காட்டினார்கள். மறு நாள் காலை 10 மணிக்கு மும்பாசாவில் இருந்து நைரோபிக்கு ஃப்ளைட், நைரோபிலேந்து மும்பைக்கு  மாலை 7 மணிக்கு ஃப்ளைட் இருந்தது.  இரவு அக்கம்பக்கம் உள்ளவங்க வழி அனுப்பவந்தாங்க வேலைக்காரி தோட்டக்காரன் வாச்மேன் எல்லாருமே ஏன் மேம் இப்பவே இண்டியா திரும்ப போரீங்க இன்னும் கொஞ்ச நாள் இருங்கன்னு சொல்லிகிட்டே இருந்தாங்க. மறு நா காலை 4- மணிக்கே எழுந்து நானும் மாப்பிளையும் காபி குடிச்சு 5 மணிக்கு காரில் கிளம்பினோம். ஆப்ரிக்க ட்ரைவர் கூடவந்தான். மொம்பாசா போகவே 2 மணி நேரம் ஆகுமே. விடிந்தும் விடியாத காலைப்பொழுது, குளுமை யான காற்று வீச, சில்வண்டுகளின் ரீங்காரமும், பறவைகளின் இன்னிசைக்கச்சேரியும் கூடவர கார் பயணம் சுகம்.
பாதி வழி போகும்போதே டயர் பஞ்சர் ஆச்சு. அது சரிபண்ணிட்டு கிளம்பி மொம்பாசா போய்ச்சேரும்போது 8.30- ஆச்சு. 9 மணிக்கு ஏர்போர்ட் போய்ச்சேர்ந்தோம். வழக்கமான பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிந்து உள்ளேபோய் உக்காந்தோம். கரக்டாக 10 -மணிக்கு ஃப்ளைட் கிளம்பி 11- மணி நைரோபி போய்ச்சேர்ந்தோம்.

Wednesday, March 21, 2012

கிலிபி 20 ஆப்ரிக்கா


இரவு சாப்பாடு முடித்துவிட்டு யாவரிடமும் பேசிவிட்டு நாங்கள் எங்களின் டெண்டுக்கு தூங்குவதற்க்காக போனோம். படுத்து உறங்கியாச்சு. ஒரு அரைமணி நேரம் தான் ஆயிருக்கும். திடீரென்று சிங்கத்தின் கர்ஜனை எங்களை எங்களின் நித்திரையிலிருந்து எழுப்பிவிட்டது. அப்பப்பா, என்ன சத்தம்.  திரும்ப திரும்ப கர்ஜித்துக்கொண்டு இருந்தது.  எங்களுக்கு என்னவோ அது எங்களின் டெண்டுக்கு வெளியே நின்று கொண்டு 

Saturday, March 17, 2012

கில்பி 19 ஆப்ரிக்கா


 நாங்கள் இன்னம் ராட்சஸ பலூனில் பறந்து கொண்டிருந்தோம்.  அன்று என்னுடைய மாப்பிள்ளையின் பிறந்த நாள் ஆகையால் பலூனில் பறந்து கொண்டிருக்கும்போதே எங்கள் உறவினர்களின் போன் கால்கள் வந்து கொண்டிருந்தன. அவ்வளவு உயரத்தில் போன் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.  அங்கு சஃபாரி காம் ( நம் நாட்டின் வோடாபோன்) நல்ல கனெக்டிவிட்டி இருந்தது, நல்ல பவர்ஃபுல்லாக இருந்தது. அதனால் அந்த போன் கால்கள் இவ்வளவு உயரத்திலும் சுலபமாக கிட்டியது.  பலூனிலிருந்து பார்க்கும் பொழுது மிருகங்கள் எப்படி தெரியும் என்று போன முறை போட்ட வீடியோக்களிலிருந்து உங்கள் யாவருக்கும் தெரிந்திருக்கும். 

Wednesday, March 7, 2012

யூ டியூப் கிலிபி 18 ஆப்ரிக்கா


 இந்த தடவை கொஞ்சம் வீடியோ க்ளிப்பிங்க் இணைச்சிருக்கேன்.
 இவ்வளவு நாளா போட்டோதானெ போட்டேன் சில விஷயங்கள்
 வீடியோல பார்க்கும்போது நல்லா ரசிக்கமுடியும் இல்லியா அதான்
இது எல்லாம் நடந்து முடிந்தவுடன். காம்ப் மேனேஜர் எங்களை அடுத்த நாள் காலை 5.30 க்கு ரெடியாக இருக்க சொன்னார்.  அது எதற்க்காக இருக்கும்.  சர்ப்பிரைஸ்………..

அடுத்த நாள் காலை 5.30 க்கு ரெடியாகி விட்டோம்.  காம்பிற்க்கு பின்னால் ஒரு பெரிய இடத்தில் பரக்கும் ராட்சச பாலூனை ஆகாயத்தில் விட தயார் செய்து கொண்டிருந்தார்கள். அதில் நாங்களும் சேர்ந்து பரக்கப்போகிரோம். இது என் மாப்பிள்ளையின் குரூப் கம்பெனி சேர்மன் எங்களுக்கு கிஃப்டாக குடுக்கசொல்லியிருந்தார். அந்த பலூனில் 16 பயணிகளும் ஒரு பைலட்டும் பயணம் செய்யமுடியும். 
அது கரெக்டாக 6 மணிக்கு மெதுவாக மேலே கிளம்பியது. மெல்ல மெல்ல மேலே சென்றது.  1000 மீட்டர் உயரம் வரை சென்றது. அப்படியே ஆகாயத்தில் மிதந்து சென்றது. இதைப்போல் தூரத்தில் 5 பலூன்கள் தென்பட்டன.  எல்லாம் வேறுவேறு காம்பிற்க்கு சொந்தமானது.  இதில் பறக்க ஒருவருக்கு US$.450/- சார்ஜ் உண்டு.  ஆனால் எங்குளுக்கு ஃப்ரீ ரைட் கிடைத்தது.  மேலிருந்து பார்க்க மிகவும் நன்றாக இருந்தது எல்லா மிருகங்களும் மிகவும் சிரிதாக தெரிந்தன.  

Monday, March 5, 2012

கிலிபி 17 ஆப்ரிக்கா


மசைமாரா 2
நக்குருவை விட்டு 7 மணிக்கு கிளம்பினோம் அல்லவா? ஏற்கனவே எழுதிய படி மசைமாரா 250 கிமீ தொலைவில் உள்ளது. ஒரு 100 கிமீ வந்த வழியே திரும்பி போய் வேரு ஒரு ரூட் எடுக்கவேண்டும்.  ஃபுல் ஏசி போட்டு டிரைவர் ஹிந்தி பாட்டு பாட விட்டான்.  அந்த வண்டியின் வோணர் ஒரு குஜராத்தி யாதலால் சவாரிக்கு ஏற்ற பாடல் சிடி க்களை வண்டியில் லோடு பண்ணியிருப்பான்.  அந்த 100 கிமீ கழிந்த வுடன் திரும்பவும் எல்லாரும் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டோம்.

என்னை ஆதரிப்பவர்கள் . .