Pages

Tuesday, August 31, 2010

பக்திப்பாடல்

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா.தேவி




பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நி நிறைந்த உயர் சிங்கார

கோவில் கொண்ட( கற்பகவல்லி)




நீ இந்த வேளை தன்னில் சேயன் எனை மறந்தால் நானிந்த நானிலத்தில்

நாடுதல் யாரிடமோ ஏனிந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள

ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா(கற்பகவல்லி0




எல்லோர்க்கும் இன்பங்கள் எளிதாய் இறங்கி அருள் நல்லாட்சி வைத்திடும்

நாயகியே கல்யாணியே கபாலிகாதல் புரியும் இன்ப உல்லாசியே உமா

உனை நம்பினேன் அம்மா (கற்பகவல்லி)




நாகேஸ் வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய் வாகேஸ்வரி மாயே வாராய்

இது தருணம் பாகேஸ்ஸ்ரீ தாயே பார்வதியே இந்த லோகேஸ்வரி உலகினில்

துணையம்மா(கற்பகவல்லி)




அஞ்சன மையிடும் அம்பிகையே எம்பிரான் கொஞ்சி குலாவிடும் வஞ்சியே உன்னிடம் தஞ்சம் என் அடைந்தேன் தாயே உன் சேய் நான் ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிரேன் அம்மா.(கற்பகவல்லி)

2 comments:

cheena (சீனா) said...

பக்திப் பாடல்களை நினைவில் இருந்து எழுதுகிறீர்களா ? வாழ்க வளமுடன்

அம்பாளடியாள் said...

அருமையான பாடல்த் தேர்வு .ஆனால் என் தாய் போன்றவர் நீங்கள் என்னை உங்கள் பின்தொடர்வோர் பட்டியலில் இணைக்கவில்லையே!...
என் ஆக்கங்களின் குறை நிறைகளை எனக்கு அறிவிக்க உங்களைப் போன்றவர்கள் துணை என் போன்றவர்க்கு மிகவும் அவசியம் அம்மா .சிறுபிள்ளை என் ஆக்கத்தில்
குறைகள் இருந்தால் மன்னிக்கவும் அதைத் திருத்தவும் உங்கள் வரவைக் காண என்றுமே காத்திருப்பேன் .மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு ....

என்னை ஆதரிப்பவர்கள் . .