Google+ Followers

Pages

Thursday, December 16, 2010

நொறுக்ஸ்(1)

நொறுக்ஸ்.

போன பதிவுகொஞ்சம் சீரியுஸ்மேட்டரா ஆச்சு இல்லியா?அதனால இப்பகொஞ்சம்
நொறுக்குத்தீனி.(கொஞ்சம் மொக்கைதான்,பொருக்ஸ்)

முதல் மொக்கை 1
என் பெண் வயிற்றுப்பேரனும், பெண்ணும் அம்பர்னாத்ல என்னப்பாக்க
வந்தாங்க.எல்லாரும் பம்பாயில் வேர, வேர இடத்ல இருக்கோம்.
அப்போ பேரனுக்கு2 வயசு இருக்கும். விளையாட்டு பேச்சு சிரிப்பு
எல்லாம் முடிந்து பால்கனி ஜன்னல்ல அவனைஉக்கார வச்சு பருப்பு
சாதம் ஊட்டிண்டு இருந்தேன். ஃப்ளாட்சிஸ்டம்தான். நாங்க மூணாவ்து
மாடி. வெளில வேடிக்கை பாத்துண்டே சாப்பிட்டு இருhந்தான் பேரன்.
காம்பவுண்ட் சுவருக்கு அந்தப்புரம் ஒரு குப்பம், சேரி இருக்கும். அங்கு
விளையாடும் குழந்தை களைப்பாத்துண்டே இருந்த்வன் சடன்னா அம்மா
இங்க ஓடிவா, ஓடிவான்னு கத்தவும், பயந்துபோன என் பொண்ணு உள்ளேந்து
வேகமா ஓடிவந்தா. என்னடா,என்னாச்சு இப்படி கத்தராய்?என்றா.
அம்மா அங்க பாரேன் 4 எலிபண்ட்.2 வெள்ளை, 2 கருப்பு எலிபண்ட் இருக்கு
பாரு, பாட்டி பாருன்னு சொல்லவும், இங்க ஏதுடா யானை என்று நானும்
என்பெண்ணும் எட்டிப்பாத்தா,எங்களுக்கு அடக்கமாட்டாம சிரிப்பு பொத்துகிட்டு

வந்தது. அங்க 4 பன்னிகுட்டிங்க சாக்கடை பக்கமா விளையாடிண்டு இருந்தது.
ஏய் அது யானையாடா? தும்பிக்கையே இல்லியேன்னு நான்சொல்லவும்
பாட்டி அதுகள் இப்ப குட்டிதானே, பெரிசானோடனே தும்பிக்கை பெரிசா வள்ரும்
என்கிரான். என்பெண் அம்மா நாங்க சிட்டிக்குள்ள இருப்பதால இந்த பன்னி,
கழுதை இதெல்லாம் பார்த்ததேஇல்லை இவன். நாளை அவனோட ஃப்ரெண்ட்ஸ்
கிட்டல்லாம் வெள்ளை யானை பாத்தேனேன்னு கதை விடுவான் பாரு என்றா.

மொக்கை 2

நான் மகன் வீட்டுக்குபோயிருந்தசமயம், நான்,என் மகன், 3 வயசு பேரன்
சாயங்காலம் பெரிய வாக் போயிட்டு காபி டே யில் காபி சாப்பிட போனோம்.
வெரு காபி,ஐஸ்க்ரீம், ஸ்னாக்ஸ் மட்டுமே கிடைக்கும். நான் காபுசீனோ(காபி)
ஆர்டர் பண்ணினேன், அவாஇருவரும் ஐஸ்காபி, வித் சாக்லேட் ஆர்டர் சொன்னா.
சூடு,சூடு எனோட காபி முதல்லரெடி ஆகி வந்தது. நல்ல பெரிய கப்பில் நுரை
பொங்க, மேலாக க்ரீமால் டெகரோஷன்பண்ணி கொண்டு வச்சான். பேரன் காபிக்
குள்ள எட்டிபாத்துட்டு(அதில் க்ரீமால் ஆட்டின்ஷேப்பிலலங்கரித்திருந்தான்)
பாட்டி, பாட்டி இந்தகாபி உன்னைப்பாத்து ஐலவ்யூ சோல்லுதுன்னு ஹிந்தில
சத்தமா சொல்லவும் பக்கத்ல உள்ளவங்களும் சிரிக்க ஆரம்பிச்சாங்க.ஏண்டா
அப்படிசொல்ரேய் என்ரேன். பாட்டி உனக்கு ஒன்னுமேதெரியலை டி. வி ல
நிரைய பாத்திருக்கேன் ஆட்டீன்ஷேப்ல யாருக்கு எது கொடுத்தாலும் அதுக்குப்
பேரு ஐலவ்யூ. என்கிரான்,குழந்தைகள் டி.வியினால் எந்த அளவுக்குபாதிக்கப்படு
கிரார்கள்.

மொக்கை 3

எனக்கு மூன்று மருமகள்கள். அதில் இருவர் தமிழ்குடும்பத்தை சேராதவர்கள்
தமிழ் பேசவும்தெரியாது. ஒரு மருமகளுக்கு தமிழ்கத்துக்க ரொம்ப ஆர்வம் இருந்தது.
எல்லாரும் வேலைக்கு போவதால் இரவு சாப்பாட்டு நேரத்தில்தான் பேசவே நேரம்
கிடைக்கும். ஒரு நாள் இரவு நான் அவளுக்கு தமிழ் சொல்லித்தரேன்னு இதுக்கு
பேரு கால், இதுக்குபேரு கை என்று கால், கைகளுக்கு தமிழில சொல்லிக்கொடுத்தேன்
அவ்ளும் கால், கை, கால் கை என்று மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள்.
அதுபோல அடுத்த நாள் சாப்பாட்டு மேஜையில் வட்டமேஜை கூட்டத்தில்
அடுத்த பாடம்.இன்னிக்கு டைம் பத்தி தமிழ். நைன் ஓ க்ளாக் ஒம்பது மணி,
நை ஃபிப்டீன் ஒம்பதே கால், நைன் தர்ட்டி என்று நான் சொல்லவும் அவள்
நான் சொல்ரேன் என்று நைந்தர்ட்டி ஒம்பதே கை என்றாள். சாப்பாடு
தலையில் புரைஏற் அனைவரும் சத்தம்மா சிரிச்சுட்டோம். அவளூகு கோபம்
நேத்து நீங்கதானே கால்,அப்பரம் கை என்று சொன்னேள் காலுக்கு பிறகு
கைதானே வர்ம்.எதுக்குஎல்லாருமிப்படி கேலி செய்வதுபோல சிரிக்கரேள்
என்றுபுரியாம கேக்க்ரா. அதுவேர, இதுவேர. நீதமிழ் கத்துக்கவே
வேண்டாம்ம்மா பசங்க எல்லாரும் கலாய்க்கவே பேசாம போனா.

மொக்கை 4

இன்னொரு மருமகளுக்கு தமிழே சொல்லிக்கொடுக்க வேண்டாம் என்று
பசங்க ஆர்டரே போட்டா. அவ பூராவும் இங்கிலீஷ்லதான் பேசுவா.
நம்மைப்போல இட்லி தோசை ஸாப்டா பண்ணனும்னு அவளுக்கு
ரொம்ப ஆசை. அவாள்ளாம் ஹோட்டலில் மட்டுமே இட்லி, தோசை
சாப்பிட்டிருக்கா. வீட்ல பண்ணினதேஇல்லையாம். நான் எப்படி பண்ணனும்
என்று ஸ்டெப் பை ஸ்டெப்பா சொல்லிக்கொடுத்தேன் ஒருசண்டே அவ
நாந்தோசை பண்ரே என்றா. நல்லஒரு நான்ஸ்டிக் தவா அடுப்பில் வைத்து
தோசை பண்ணினா. நன்னாவே வந்தது. எனக்கு இங்க்லீஷ்ல அவளை
பாராட்டனும் என்று தோன்றியது. எனக்கு இங்க்லீஷுக்கே ஸ்பெல்லிங்க்
தெரியாது. ரொம்ப பந்தாவா அவகிட்ட ப்ரெண்டா தோசை பண்ணுவதில் நீ
ரொம்ப எக்ஸ்பைர்ட் ஆயிட்டாய் என்ரேன். அவ திகைச்சுப்போயி என்னைப்
பாக்கரா. பின்னடியே என் மகன் வந்துட்டான். என்ன அம்மா இங்க்லீஷ்ல
வெளுத்து வாங்கிரியே. நீசொன்னதுக்கு என்ன அர்த்த்னாவது தெரியுமா?
அவளை பாராட்ட வந்தேடா.என்ரேன்.அதெல்லாம்சரி என்னசொல்லனும்
தெர்யுமா எக்ஸ்பர்ட் ஆயிட்டே ந்னு சொல்லனும் நீஎக்ஸ்பைர்ட் ந்னு
சொன்னாய். செத்துபோயிட்டாய்னுஅர்த்தம் நீ இன்மே இங்க்லீஷ் பக்கமே
திரும்பி பாக்காதேன்னுட்டான்

இந்த மொக்கை போருமா, இன்னும் கொஞ்சம் வேனுமா?!!!!!!!!!!!!!!!!!!

21 comments:

ஸாதிகா said...

ஐயோ மேம்..உங்கள் மொக்கை கண்டு சிரித்து வயிறு வலிக்கின்றது.சூப்பர் மொக்கை.தொடருங்கோ.

Lakshmi said...

முதல் பாராட்டு ஸாதிகாவா? குட்.

Mahi said...

ஹாஹா!!சூப்பர் மொக்கை! நல்லாவே சிரிக்கவைக்கிறீங்க!! :)

Lakshmi said...

மஹி நல்ல சிரிச்சீங்களா.

வெங்கட் நாகராஜ் said...

உங்களது வலைப்பூவில் எனது முதல் வருகை. முதல் வருகையிலேயே சிரித்து சிரித்து ரசித்தேன். தொடருவேன்.

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
www.venkatnagaraj.blogspot.com
www.rasithapaadal.blogspot.com

Lakshmi said...

வருகைக்கு மிகவும் நன்றி.

LK said...

ஹஹஅஹா ... நல்ல சிரிச்சேன் அம்மா..இரண்டாவது மொக்கை அல்ல . குழந்தைகள் டிவியினால் எவ்வளவு பாதிக்கபடுகின்றனர்

Lakshmi said...

ஆஹா நான் எழதும் மொக்கையை கூட ரசிக்க முடிகி
ரதா? சூப்பர்.

பலே பாண்டியா said...

உங்கள் வலைப்பூவிற்கு நான் மிக தாமதமாக வந்து உள்ளேன்.
மீண்டும் மருமகளுக்கு தமிழ் சொல்லி தாருங்கள், நாங்கள் சிரிக்கவாவது.

Lakshmi said...

பலே பாண்டியா, வருகைக்கு மிகவும் நன்றி. லேட்டா வந்தாலும் பின்னூட்டம் கொடுத்து உற்சாகபடுத்துகிரீர்களே. நன்றி.அடிக்கடி வரவும்.

ரஹீம் கஸாலி said...

ஏக்கா, எல்லாமே அருமையா இருக்கு இதைப்போய் மொக்கைன்னுட்டு....

Lakshmi said...

ரஹீம் மொக்கைனு சொன்னதாலதானே வந்தீங்க.அதான்.

ஆமினா said...

ஹாய் லெட்சுமிம்மா!!!!

நான் இந்த ப்ளாக்கை கவனிக்கல. நல்ல மொக்கையா போகுது போங்க. பயங்கர சிரிப்பு. 2 வது ஐ லவ் யூ மேட்டர் ஏற்கவனே கோமு சொல்லிட்டாங்க. அப்பவே பயங்கரமா சிரிச்சேன்!!!

சூப்பர்ம்மா!!!

கலக்குறீங்க!!!!!!

Lakshmi said...

ஆமிவாங்க. இன்னம் இந்தக்கோமு உங்ககிட்ட என்னல்லாம் சொல்லியிருக்காளோ தெரியலியே?

அமைதிச்சாரல் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்..

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_06.html

Lakshmi said...

என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி
அமைதி சாரல் அவர்களே.

asiya omar said...

ல‌ஷ்மிமா எவ்வளவு ரசிக்கும்படியா எழுதறீங்க.நல்லா சிரிச்சேன்.உங்க வீட்டில் மருமகள்கள் கொடுத்து வச்சவங்க.

asiya omar said...

கோமதி கோமு என்பது நீங்க தானா?facebook request வந்தது ஒரு சமயம்.

Lakshmi said...

ஆசியா நானும் மருமகள்களும் ஒரு பெஸ்ட் ஃப்ரெண்ட்போலதான் பழகுவோம். எது விஷயம் பத்தியும் ஃப்ரீயா பேசிப்போம். ரிலேஷன்ஷிப் சூப்பரா இருக்கு. அதுதானே வேனும் இல்லியா.
கோமதி கோமு என் க்ளோஸ் ஃப்ரெண்ட்தான்.

cheena (சீனா) said...

பரவால்லையே - இதெல்லாம் கூட நகைச்சுவையா எழுதறீங்க - தொடருங்க - சீரியஸ் - இது மாதிரி -- கலந்து கட்டுங்க - கூட்டம் அள்ளிக்கிட்டு வரும். என்ன சரியா - வாழ்க வளமுடன்

Lakshmi said...

சீனா சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

என்னை ஆதரிப்பவர்கள் . .