Pages

Tuesday, December 21, 2010

                   செல்லாத்தா,செல்ல மாரியாத்தா,எங்க சிந்தையில் வந்து
அறையில் நாடி நில்லாத்தா.கண்ணாத்தா,உனை காணாட்டா,இந்த ஜன்மம் எடுத்துஎன்ன பயனென்று சொல்லடி நீ ஆத்தா. (செல்லாத்தா)
ஆசைதீர உன் அழகைக் காட்டு மாரியாத்தா,அந்த பாசத்தோடு
வந்தேனடி தாயே மாரியாத்தா.பொன்னும் பொருளும் தந்தருள்வாய் கருமாரியாத்தா. எனைப்புகழோடு வைத்திடுவாய் அதி சக்தி மாதா.அ.......ம்.......மா, ..அ.....ம்.......மா.
தென்னமரத்தோப்பினிலே தேங்காயப்பரிச்சுக்கிட்டு தென்னமரத்தோப்பினிலே
தேங்காயப்பரிச்சுக்கிட்டுதேடிவந்து உந்தலையில் சின்னாத்தா, நாங்க......
நீ இளனீர எடுத்துக்கிட்டு, எங்க குறை கேட்டுக்கிட்டு, வளமான வாழ்வுகொடு
தாயே மாரியாத்தா. அயிரம் கண் உடையவளே செல்லாத்தா,மக்களை
ஆதரிக்கவேணுமடி செல்லாத்தா, நல்லவழிதனையே காட்டிடு மாரியாத்தா.
உந்தன் பெருமை இந்த ஜகத்துக்கு எடுத்து பாடாட்டா,இந்த ஜன்மம் எடுத்து
என்னப்யனென்று சொல்லடி நீஆத்தா.
திரிசூலமுடன் வீற்றிருக்கும்செல்லாத்தா, பாமாலை உனக்குப்பாடிடுவேன்
செல்லாத்தா.

பசும்பாலைக்கறந்துகிட்டு கறந்தபாலை எடுத்துகிட்டுபக்தியுடன் ஊற்றவந்தோம்மாரியாத்தா, நீ பாம்பாக மாறி................................................
அம்மாதாயே கருமாரி, அருள்புரிவாயே சுகுமாரி, அம்மா தாயே கருமாரி
அருள்புரிவாயேசுகுமாரி, அம்மாதாயே கருமாரி, அருள்புரிவாயே சுகுமாரி.
நீபாம்பாக மாறி அதை பாங்காக குடித்துவிட்டு தானாக ஆடி வாடி
மாரியாத்தா. உந்தன் பெருமை இந்த உலகத்துக்கு எடுத்துசொல்லாட்டா
இந்தஜென்மமெடுத்து என்னபயனென்று சொல்லடி நீ ஆத்தா.
ஆதிசக்தி மாதா, கருமாரி ஆத்தா, ஆதிசக்தி மாதாகருமாரி ஆத்தா. 

10 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிறுபிராயத்தில் பக்கத்தில் இருந்த கோவிலிலிருந்து பெரும்பாலான தினங்களில் காற்றில் மிதந்து வரும் இப்பாடலைக் கேட்டிருக்கிறேன். நல்ல பாடல். பகிர்வுக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி. பழைய பாடல் ஆனாலும் இப்பவும் கூட ரசிக்கமுடியுதே.இல்லியா?

Madhavan Srinivasagopalan said...

அஹா.. மாரியாத்தா கோவிலுள இன்னிக்கு கஞ்சி ஊத்துறாங்க.. வந்திடுங்க..

சூப்பர்.. பழைய ஞாபகங்கள்... வருகிறது

குறையொன்றுமில்லை. said...

மாதவா அப்படியா தெரியாதே.

எல் கே said...

மாரியம்மன் பண்டிகைகளில் புகழ் பெற்ற பாட்டு. பகிர்விற்கு நன்றி

ஆமினா said...

ஆஹா....

எங்கேயே எப்பவோ கேட்ட பாடல்!!!!

சூப்பர் மா

குறையொன்றுமில்லை. said...

கார்த்திக் இந்தபாட்டு யூட்யுபில் சேர்க்கனும்னு நினைச்சேன்.எப்படின்னு தெரிஞ்சுக்கலை.

குறையொன்றுமில்லை. said...

ஆமி குட். இப்படி அடிக்கடிவாங்க.

cheena (சீனா) said...

ஆடிமாத அம்மன் பாட்டா - தூள் கெளப்புறீங்க - வாழ்க வளமுடன்

குறையொன்றுமில்லை. said...

சீனா சார், வருகைக்கு நன்றி.

என்னை ஆதரிப்பவர்கள் . .