Google+ Followers

Pages

Saturday, May 7, 2011

மலரும் நினைவுகள்(12)இந்த சமயம் நான் என்ன பண்ணனும், சரியான முடிவு எடுக்கணும்கடன் இல்லாத வாழ்க்கைக்கு என்ன செய்வதுன்னு ரொம்பவேயோசிக்க வேண்டி வந்தது.இவருக்கு வரும் சம்பளம எங்க அன்றாட செலவுகளுக்கே போதும் போதாத நிலைமை.அதில் கடனுக்கு வட்டியும் கட்ட முடியாது,கடனையும் அடைக்முடியாது. பிறகுதான் ஒரு துணிச்சலான முடிவு எடுத்து அவரிடம்
சொன்னேன். அதாவது ஊரில் இருக்கும் நிலம், வீடு வித்துடலாம்
ஊர்ல என் தாத்தா இருக்கும் வரை அவர் மேற்பார்வை பார்த்து
வந்தார். இப்ப கவனிக்க ஆளும் இல்லை அதிலிருந்து எந்த வரும்
படியும் இல்லே. சும்ம அதை வச்சுண்டிருப்பதில் அர்த்தமில்லே அதை
வித்துடலாம் என்ரேன். அவர் ஒத்துக்கவே இல்லை. பெரியவா கஷ்டப்
பட்டு சேத்து வச்ச சொத்து, எப்படி விக்கமுடியும்? என்று ரொம்பவே
தயங்கினார். பெரியவங்க குழந்தைகளுக்கு சொத்து சேர்க்கிரதே ஒரு
கஷ்ட காலங்களில் உதவுவதற்காகத்தான் தவிர நாமும் அனாவசியமா
செலவு செய்துட்டு ஒன்னும் கடன் வாங்கலியே? நீங்க சம்பாதிச்சு இதை
விட அதிகமா சொத்து சேர்க்கமுடியுமே. பணம் எப்ப வேணாலும் சம்பா
திச்சுக்கலாம். இப்பத்திய அவசர தேவைக்கு இதைத்தவிர வேர வழி இல்லை.

இதுவரை நீங்க கொடுத்தவட்டியே அசலுக்கு மேல ஆகியிருக்கும் அயுசு
பூராவும் வட்டியே கட்டிட்டு இருக்கவேண்டியதுதான். யோசிக்காதீங்க.என்று
பலவிதமாகச்சொல்லி சம்மதிக்க வைத்து ஊருக்குப்போய் நிலம் வீடு வித்
தோம். அந்தகாலகட்டத்தில் நிலம் 5000, க்கும் வீடு 5000-க்கும் தான் விலை
கிடைத்தது.மனசுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. பூனா வந்து மறுபடியும்
யோசனை, பாக்கி நாப்பதாயிரத்துக்கு எங்க போக? என் நகைகள் 50 பவுனும்
விக்க சொன்னேன். தாலிக்கொடி தவிர எல்லாம் வித்தோம். வேர வழி?
இப்படி எல்லாம் வித்தபிறகுதான் மார்வாடி கடன் பூராவும் அடைக்க முடிந்தது.
ஒருபக்கம் கடன் எல்லாம் அடைந்ததில் ஒரு திருப்தி இருந்தாலும் பெரியவா
சொத்துக்களை விக்கவேண்டிவந்ததுமனசு பூரா பாரமாகவே இருந்தது.ஊர்ல கடனை வச்சுண்டு கழுத்து நிறைய நகை போட்டுண்டு அலைவதில்
என்ன பிரயோசனம்? துணீச்சலான, தீர்மானமான முடிவுதான்.இப்போ
இவரின் சம்பளம் ஒன்னுதான் எங்க சொத்து. வீடும் வாடகைதான்.
மனசு சங்கடப்பட்டாலும் கடன் இல்லாத்து பெரிய நிம்மதியா
இருந்தது. இவர்தான் ரொம்ப நாளைக்கு புலம்பிண்டே இருந்தார்.
நான் ஒரே பிள்ளை என் அப்பா எனக்கு வீடு நிலம் வாங்கி வச்சார்
நமக்கு 5 குழந்தைங்க, நான் அவர்களுக்கு என்ன சேத்துவைக்கமுடியும்?
என்று ரொம்ப வருத்தப்பட்டார். அப்பவும் நான் தான் தைரியம்
சொல்ல வேண்டி இருந்தது. நம்ம குழந்தைகள்தான் நம்ம
சொத்து. அவர்களை எவ்வளவு படிக்க வைக்க முடியுமோ படிப்பை
கொடுக்கலாம். நல்ல பழக்க, வழக்கங்களை கற்றுக்கொடுக்கலாம்
நல்ல மனிதர்களாக உருவாக்கலாம். அப்பரம் அவர்களே யாரையும்
எதிர்பார்க்காமல் அவர்கள் கால்களில் அவர்களே நிற்பார்கள். நல்லா வருவார்
கள். என்று பலவிதமாகச்சொல்லி சமாதானப்படுத்த வேண்டி இருந்தது.

27 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

மலரும் நினைவுகள்...

! ♥ பனித்துளி சங்கர் ♥ ! said...

பிறரின் அனுபவங்கள் அறிந்துகொள்வதில் எனக்கு அலாதிப் பிரியம் அதிலும் தங்களின் இந்த நேர்த்தியான அனுபவ எழுத்துநடை என்னை வெகுவாக கவர்ந்தது . எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள் பல

asiya omar said...

நீங்கள் எடுத்த முடிவு பாராட்டப்பட வேண்டும்,நானாயிருந்தால் எப்படி சொத்து நகைகளை விற்பதுன்னு யோசித்து இருப்பேன்,சுய தொழில் எதுவும் செய்ய முயற்சித்தீர்களா...

வெங்கட் நாகராஜ் said...

சரியான முடிவுதான் எடுத்து இருக்கீங்கம்மா. கடன் வாங்கி, அதுக்கு வட்டி கட்டிக் கட்டி கஷ்டப்படுவதை விட நீங்கள் செய்தது நல்லது. உங்கள் அனுபவங்கள் எங்கள் போன்றவர்களுக்கு பாடங்கள். தொடருங்கள்.

எல் கே said...

உண்மைதானே. கடனை வெச்சிகிட்டு கஷ்டம்.

பலே பிரபு said...

//நம்ம குழந்தைகள்தான் நம்ம
சொத்து. அவர்களை எவ்வளவு படிக்க வைக்க முடியுமோ படிப்பை
கொடுக்கலாம். நல்ல பழக்க, வழக்கங்களை கற்றுக்கொடுக்கலாம்
நல்ல மனிதர்களாக உருவாக்கலாம். அப்பரம் அவர்களே யாரையும்
எதிர்பார்க்காமல் அவர்கள் கால்களில் அவர்களே நிற்பார்கள். நல்லா வருவார்
கள்.//


அருமை அம்மா!!! எனக்கு வேலை கிடைத்து விட்டது அம்மா. அநேகமாக இந்த வாரத்தில் ஜாயின் செய்து விடுவேன். உங்களுக்கு மெயில் செய்கிறேன்....

Madhavan Srinivasagopalan said...

//நம்ம குழந்தைகள்தான் நம்ம
சொத்து. அவர்களை எவ்வளவு படிக்க வைக்க முடியுமோ படிப்பை
கொடுக்கலாம். நல்ல பழக்க, வழக்கங்களை கற்றுக்கொடுக்கலாம்
நல்ல மனிதர்களாக உருவாக்கலாம். //


பிரமாதமான எண்ணம்..
பலே. பலே..

RAMVI said...

லக்‌ஷ்மி அம்மா ..கடன் இல்லாத வாழ்கை ரொம்ப சரி. உஙகளுடைய வாழ்கையை பார்த்து நாஙகள் நிறைய தெரிந்து கொள்ள இருக்கிற்து. குழைந்தைகளூக்கு படிப்பு என்பது ரொம்ப முக்கியம். நாம் படிப்பு என்கிற சொத்து சேர்த்து வைதால் மட்டுமே போதும். என்பது ரொம்ப சரி...

Lakshmi said...

கவிதைவீதி சௌந்தர் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

பனித்துளிசங்கர், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

ஆஸியா ஓமர் வருகைக்கு நன்றிம்மா.
ஆபீசு வேலைன்னே பழகிட்டதால சுயதொழில்பத்தில்லாம் யோசிக்கவே முடிலம்மா.

Lakshmi said...

வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

கார்த்தி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

பிரபு ரொம்ப சந்தோஷம். ஆல்த பெஸ்ட்

Lakshmi said...

மாதவன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ராம்வி தமிழ்ல நல்லா எழுதவருதே. குட். கருத்துக்கு நன்றி

ChitraKrishna said...

//நம்ம குழந்தைகள்தான் நம்ம
சொத்து. அவர்களை எவ்வளவு படிக்க வைக்க முடியுமோ படிப்பை
கொடுக்கலாம்.// - மிக சரி லக்ஷ்மி-அம்மா. படிப்பை விட சிறப்பான, அழியாத சொத்து வேறெதுவும் இல்லை.
பொறுப்பான அன்னைக்கு அன்னையர் தின வாழ்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

நம்ம குழந்தைகள்தான் நம்ம
சொத்து.//
True words.

Lakshmi said...

சித்ராகிருஷ்னா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கும் கக?ருத்துக்கும் நன்றி.

மாதேவி said...

நல்ல முடிவு எடுத்திருந்தீர்கள் பாராட்டுக்கள்.

"குழந்தைகள்தாம் நம்சொத்து......"

இந்த திடமான முயற்சிதான் உங்களை வாழ்க்கையில் உயர்த்தி இருக்கிறது.

Lakshmi said...

மாதேவி வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

கோவை2தில்லி said...

கடன் இருந்தால் கஷ்டம் தான். நீங்கள் செய்தது தான் சரிம்மா.

Lakshmi said...

கோவை௨தில்லி நன்றிம்மா.

குறை ஒன்றும் இல்லை !!! said...

அம்மா .... நம்ம இருவருக்கும் ஒரு ஒற்றுமை !!!

Lakshmi said...

ஓ, ப்ளாக் தலைப்பிலா சொல்ரீங்க?

தமிழ் பிரியன் said...

பிரசுரிக்க அல்ல....
,.....
அம்மா வணக்கம். நலமா இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். நலத்திற்கு இறைவனிடம் எங்கள் பிரார்த்தனைகளும்..
வலைச்சரத்தில் தங்களை ஆசிரியராக நியமித்து சீனா சார் கடிதம் எழுதி இருந்தார். தவிர்க்க இயலாத காரணங்களால் அவரால் சில நாட்களாக வெளியே உள்ளார். எனவே தங்களது வலைச்சரத்தில் எழுத அனுமதி வழங்க இயலவில்லை.

தங்களது மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்பினால் உங்களுக்கு வலைச்சரத்தில் எழுத அனுமதி அளிக்க இயலும்.

தாமதத்திற்கு மன்னிக்கவும்.

எனது மின்னஞ்சல் முகவரி.
dginnah@gmail.com

அன்புடன்
மகன்
தமிழ் பிரியன்

என்னை ஆதரிப்பவர்கள் . .