Google+ Followers

Pages

Thursday, May 19, 2011

மலரும் நினைவுகள்(15)குழந்தைகளுக்கு ஸ்கூல் திறந்து 10 நாட்களில் டிரான்ஸ்பர் வந்ததால பாதில
போக முடியாதுஎல்லாரும். அவர் மட்டும் முதலில் போயி ட்யூட்டி ஜாயின்
 பண்ணி ஒருவருஷம் அங்க தனியா இருக்கவும், நாங்கல்லாம் ஒரு வருஷம்
கழிச்சுபோலாம்னுநினைச்சோம்.இவர்குடும்பத்தைப்பிரிந்துஇருந்ததேஇல்லை.தவிர என்னை வெலி வேலைகள் எதுக்குமே அனுப்பினதும் இல்லை.வீட்டோடசரி. நான் எப்படி வீட்டு வேலை, வெளி வேலைகள் சமாளிப்பேனு அவருக்குரொம்ப க்கவலை. எப்படி சமாளிப்பேன்னு திரும்பதிரும்பக்கேட்டுண்டே இருன்தார். நான் பாத்துக்கரேன், நீங்கபோயிட்டு வாங்கோன்னு சொல்லி அவருக்குத்தெவையான எல்லா சாமனும் பேக் பண்ணி அனுப்பினேன். அரைமனதாகத்தான் கிளம்பி போனார்.
ஜபல்பூர்லேந்து50 கிலோ மீட்டர் உள்ளதள்ளி கமேரியான்னு ஒரு இடத்தில்
ஆபீஸ் இருந்தது. பொட்டல் காடு. ஆபீஸும் அதில் வேலை செய்பவர்களூக்கான குடி இருப்புகளும் மட்டுமே இருந்தது. வாரம் ஒருமுறை
 அங்குள்ள பெரிய திடலில் சந்தை கூடும். அப்போதான் காய்கள், வேண்டிய
பலசரக்கு சாமான்கள் கிடைக்கும். வாடகைக்கு தனி வீடுகளென்று எதுவுமே
கிடையாது. இவருக்கே சமையல் தெரியும்ங்கரதால பிரச்சனை இல்லே.
ஆனா ரெண்டு குடும்பம், ரெட்டைச்செலவு, சமாளிக்கணும் ஒரு ஆள் தான்
 என்றாலும் தனி வீட்டு வாடகை, சாப்பாட்டு செலவு எல்லாம் தனியா செய்ய
 நும்.எங்களுக்கும் பணம் அனுப்பணம்.தவிச்சு போனார்.
ஒரு ரூம் கிச்சனுடன் இவருக்கு ஆபீஸ்குடி இருப்பு கிடைத்தது. வீட்டுக்குள்ளெயெ டாய்லெட் பாத்ரூம் எல்லாம் இருந்தது மிகவும் சவுரிய
மா இருந்தது.அவர்துணியை அவரே தோய்ச்சுண்டு, சமைச்சு சாப்பிட்டு ஆபீஸ்
போய் வரணும். சைக்கிள்தான்.அதனால பெட்ரோல் செலவெல்லாம் கிடையாது. எங்களுக்கு 300 ரூபா அனுப்புவார் அவர் செலவுக்கு 300 ரூபா
 வச்சுப்பார். அப்போல்லாம் போன் வசதில்லாம் வந்திருக்கலை. லெட்டர்
தான். அவர் எழுதினா எங்கலுக்குக்கிடைக்க ஒரு வாரம் ஆகும் அதுக்கு நாங்க
பதில் போட்டா அவருக்கு ஒருவாரம் கழைச்சு கிடைக்கும். லெட்டர் ஒன்னுதான் ஒரேகாண்டாக்ட். முதல்ல இவர் கிளம்பி போய் ஒருவாரம்
 ஒன்னுமே ஓடலை.கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல ஒன்னுமே
 புரிபடலை.
வெளில சாமான் வாங்கல்லாம் போனதே கிடையாதே. ரேஷன் வாங்க 4 பை
தூக்கிண்டு கிளம்புவேன். தனியா எப்படி அரிசி, கோதுமை, சோளம், ஜீனி
 எல்லாம் சுமக்கமுடியும்? பசங்களைத்தான் கூட்டிண்டு போவேன் கால்
கடுக்க ஒருமணி நேரம் க்யூல நின்னு ரேஷன் சாமான் கள் ஆளுக்கொரு
 பையாக தூக்கிண்டு வருவோம். அடுத்த நாள் எல்லாவற்றையும் கல், மண்
 நீக்கி சுத்தம் செய்து மிஷினில் மாவு திரிக்க மகன் பாஒய் வருவான்.இவர்
 முதல் வாரம் பணம் அனுப்புவார். பேங்க்ல போய் எடுத்துவரணும். அதுவரை
பேங்க வாசல் படிகூட முதித்ததே கிடையாது. எப்படி பணம் எடுக்கணம்
 என்றெல்லாம் தெரிந்திருக்கலை. கேட்டுக்கேட்டு ஒன்னொன்னா தெரிஞ்சுன்
டேன்.வீட்டில் வந்து பசங்கலுக்கும் சொல்லிக்கொடுப்பேன்.
300 ரூபாயில் 6- பேர் உள்ள குடுப்ம்ப செலவை சமாளிக்க சர்க்கஸ் பண்ண
வேண்டி யிருந்தது. இதைத்தூக்கி அதில் போட்டு, அதைத்தூக்கி இதில்போட்ட்ன்னு என்னமோ பண்ணினேன். குழந்தைகள் நல்லா சாப்பிடும்
வயது. ஒரு நாளைக்கு 50 சப்பாத்தியாவது பண்ணனும். அரிசி காணாதே.
ஒரு நாள் அப்படித்தான் குழந்தைகளுக்கு சாப்பாடு போடும்போது வேடிக்கை
யாக சொன்னேன். நாம எப்பவும் வயிறு ஃபுல்லா சாப்பாட்டை மட்டும் அடைக்
ககூடாது. வயத்துல 4 பங்கு இடம் இருக்கணம்.ஒரு பங்கு சாப்பாடு, ஒருபங்கு
 தண்ணி, ஒரு பங்கு காத்து, ஒரு பங்கு நாம் சாப்பிடும் சாப்பாடு சுத்தி வர இடம்
 இருக்கணம். அதனால நீங்கல்லாம் இப்பொ முதல்ல ஒரு சப்பாத்தி சாப்பிட்டதும் ஒரு க்ளாஸ் தண்ணி குடிக்கணும், ரெண்டாவது சப்பாத்தி
 சாப்பிட்டதும் ரெண்டு க்ளாஸ் தண்ணி குடிக்கணும் என்று சொன்னேன்.
 குழந்தைகளும் மறு பேச்சு பேசாம ஒரு சப்பாத்தி ஒரு டம்ளர் தண்ணி, ரெண்டு
 சப்பாத்தி ரெண்டு டம்ளர் தண்ணீ குடிச்சதுமே வயறு ரொம்பிடுத்தும்மான்னு
ரெண்டே சப்பாத்தி சாப்பிட்டு எழுந்து போயிடுவா.
இரவும் அப்படியே பண்ணினார்கள். 50 சப்பாத்தி தினமும் பண்ணின இடத்தில்
20 சப்பாத்தியே பொதுமான அளவாகி விட்டது. ரேஷன் கோதுமையை மாசம்
முழுவது வந்தது. வெளில வாங்க வேண்டிய அவசியம் உண்டாகவேஇல்லை.
இப்ப நினைக்கும்போது மனது வலிக்கிறது. அந்த சந்தர்ப்பத்தில் செலவை
 சமாளிக்கணம் என்கிர ஒரே நினைப்புத்தான் மனதுபூரா நிரம்பி இருந்தது.
 இப்ப நினைச்சுப்பார்க்கும்போது சீ, என்ன அம்மா நான்னு கோவம் வருது.
பண்டிகையெல்லாம் சிம்பிளாவே பண்ணினோம். நிறைஞ்ச வீடு எதையும்’
குறை வைக்கவேண்டாம் என்று சுமாராக பண்ணிடுவேன்.இவரும் அங்க தனியா ரொம்பவே கஷ்ட்டப்பட்டிருக்கார். இப்படியே ஒரு வருஷமும்
 போனது.

24 comments:

Madhavan Srinivasagopalan said...

//அந்த சந்தர்ப்பத்தில் செலவை
சமாளிக்கணம் என்கிர ஒரே நினைப்புத்தான் மனதுபூரா நிரம்பி இருந்தது.//

முடிந்தவரை சிக்கனாமாக இருப்பது நல்லதுதானே..
முக்கியமாக இரவுச் சாப்பாடு குறைவாக உண்ண வேண்டும்..

Mahi said...

லஷ்மிம்மா,இந்தப் பகுதி படிக்கையில் கஷ்டமா இருந்தது. எங்க வீட்டிலும் அந்தக் காலத்தில் ரொம்ப வறுமையா இருந்ததுன்னு அம்மா சொல்லியிருக்கிறாங்க.

வெளியுலகம் தெரியாத நீங்க ஒண்ணொண்ணா கத்துகிட்டது அருமை! :)

எல் கே said...

இரண்டு பதிவும் கிட்டத்தட்ட ஒரே இடத்தில இருக்கோ??? நடுத்தரக் குடும்பம் எந்த காலத்திலும் கஷ்டம்தான் அனுபவிக்குது

பலே பிரபு said...

சப்பாத்தி ஐடியா நல்லா இருந்தது அம்மா. எல்லாம் நன்மைக்கே அதனால் வருந்த தேவை இல்லை.

தமிழ்வாசி - Prakash said...

பகிர்வுக்கு நன்றி...இனி தொடர்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, அருமை.

மிகவும் கஷ்டப்பட்டு யோசித்து யோசித்து குடும்பப் பொருளாதார பட்ஜெட்டில் துண்டு விழாமல் சாமர்த்தியமாக இருந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

சப்பாத்தியில் தினமும் 60% கட் என்பது சும்மாவா! தர்ம சங்கடம் தான், அதுவும் குழந்தைகள் நன்றாக சாப்பிடும் வயதில் போய்.

Lakshmi said...

மாதவன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

மஹி நன்றிம்மா.

Lakshmi said...

கார்த்தி நீசொன்னபிறகுதான் எனக்கும் புரிந்தது. எலா விஷயங்களையும்
டீடெயிலா சொல்லிடனும்ங்கர ஆர்வத்தில் ஒரே இடத்திலேயே நின்னுட்டேன் போல இருக்கு.இனி கவனமா இருக்கேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி. ஆனாலும் பதிவு படிக்க வரவங்களை ஓவரா இம்சை படுத்திடக்கூடாதுன்னும் தோனுது. கூடிய சீக்கிரமே முடிக்கனும்.

Lakshmi said...

பிரபு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

பிரகாஷ், வர்கைக்கு நன்றி.

Lakshmi said...

கோபால் சார்வருகைக்கு நன்றி. வறுமை
அனுபவிச்சவங்களுக்குத்தான் அதோட
வலியும் புரியும்.இவ்வளவு தூரம் விஸ்தாரமா சொல்லவேனாமோன்னு தோனுது.

கோவை2தில்லி said...

படித்து முடித்ததும் மிகவும் கஷ்டமாக இருந்ததும்மா. ரொம்ப சாமர்த்தியமா சமாளித்துள்ளீர்கள். வருந்த வேண்டாம். நானும் சிறுவயதில் கஷ்டம் பட்டுள்ளேன். அதனால் தான் இப்போதும் பணத்தின் அருமை தெரிந்துள்ளது. ஒவ்வொரு செலவையும் யோசித்தே செய்வோம்.

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

சோகமான பகிர்வு. தோல்விகளைக் கண்டு துவளாமல், கஷ்டங்களை எதிர் கொண்டு வெற்றி பெற்ற உங்கள் வாழ்க்கையின் அனுபவங்கள் நிறைய பேர்களுக்கு ஒரு பாடம். தொடருங்கள்.

Lakshmi said...

வெங்கட், வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

நினைக்கும்போது மனது வலிக்கிறது.

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி நன்றி.

ஸாதிகா said...

ஒரு நடுத்தர குடும்பத்தினை அப்படியே கண் முன் கொணர்ந்து விட்டீர்கள் லக்‌ஷ்மிம்மா.

Lakshmi said...

ஸாதிகா நன்றிம்மா.

மாதேவி said...

கனக்கும் நிகழ்வுகள்.

Lakshmi said...

மாதேவி வர்கைக்கும் கருத்துக்கும்
நன்றிம்மா.

ஹேமா said...

300 ரூபாயில் 6 பேரா...அப்பாடி !

கடிதப்போக்குவரத்து அப்பா அம்மாவின் ஞாபகத்தைக் கொண்டு வந்துவிட்டதம்மா.அப்பாவின் கடிதம் வரப்பிந்தினால் எங்களுக்குத்தானே திட்டு விழும் !

Lakshmi said...

ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

என்னை ஆதரிப்பவர்கள் . .