Google+ Followers

Pages

Saturday, December 1, 2012

சிங்கப்பூர் 3

மறு நா காலை 8.30-க்குத்தான் முழிப்பு வந்தது.எனக்குன்னு தனி ரூம் இருந்ததால எந்த சத்தமும்மில்லாம நல்லா தூங்க முடிஞ்சது. காலை எழுந்து பல் தெய்த்ததும் காபி ரெடி. பால்காரன் காலேல வருவானான்னு கேட்டேன்.
இருவரும் சிரிக்கரா.இங்க பால் காரன்லாம் வர மாட்டான். டெட்ராபேக்ல பால் ரெடியா கிடைக்கும் 2,அல்லது 3- மாசத்துக்கு ஸ்டாக்  வாங்கி வச்சிடுவோம்னு சொல்றா. அதுவும் இல்லாம பாக்கெட்லேந்து கப்பில் பால் ஊற்றி டிகாஷன் கலந்து மைக்ரோவேவில் சூடு பண்ணி தந்தா. பாலை பொங்க பொங்க காய்ச்சவேணாமான்னேன். நமக்கு பால பொங்க பொங்க காய்ச்சி டிகாஷன் கலந்து நுரைக்க  நுரைக்க காபி குடிச்சாதானே திருப்தி. எனக்கு இன்ஸ்டெண்ட் காபில்லாம் கொஞ்சம் கூட பிடிக்காது. ஸோ பில்டரும் காபி பொடியும்மும்பைலேந்து வாங்கிண்டு போனேன்.பால் அல்ரெடி நல்லா காய்ச்சி ஆறவச்சு பக்குவப்படுத்தித்தான் டெட்ராபேக்கில் அடைத்து விக்குராங்க அத திரும்ப காய்ச்ச வேண்டிய அவசியம்லாம் இல்லேன்னு சொல்ராங்க. சரி முத நாளே ஆர்க்யூ பண்ண வேண்டாம்னு குடிச்சேன். ஓரளவுக்கு ஓக்கே வாதான் இருந்தது.ஹாலில் உக்காந்து கொஞ்ச நேரம் பேச்சு                          
                          கீழே கொஞ்ச நேரம் வாக் போயிட்டுவரேன்னு கீழ போனேன்.இவங்க இருப்பது 8-வது மாடில. லிப்ட் வசதி இருக்கு. எம்.பி.3 எடுத்துண்டு கீழேபோனேன். முதல் நாள் இல்லியா இடம் தெரியாம எங்கியாவது போயிடக்கூடாதேன்னு பில்டிங்க் சுத்தியே 2, 3 ரவுண்ட் வாக் பண்ணினேன். காதுல பாட்டு கேட்டுண்டே காலை வாக் சுகம். அதுவும் மேக மூட்டமா கூலாக வேர இருந்தது.அரைமணி நேரம் நடந்துட்டு ஒரு சின்ன பார்க்ல போயி உக்காந்தேன். எல்லா பில்டிங்க் க்கீழேயும் குழந்தைகளுக்காக

                             


சின்னதாக பார்க் பண்ணி நல்லா பராமறிக்கராங்க.குழந்தைகள் கீழே விழுந்து அடி பட்டுக்கக்கூடாதுன்னு கீழேஆர்டிபிஷியலா ரப்பரில் புல்தரை போல விரிப்பு போட்டிருக்காங்க. சறுக்குமரம் டிக் டாக் டோன்னு
 கொஞ்சம் விளையாட்டுக்களும்
 அதுமட்டுமில்லே. பழையகாலத்து கிராமங்களில்(இந்தக்காலத்ல கிராமங்களைப்பார்க்கவே முடியறதில்லே) சின்னகுழந்தைகள் தெருவாசலில் கரிக்கட்டியால் கட்டம்கிழித்து நம்பர்லாம் போட்டு பாண்டின்னு ஒரு விளையாட்டு விளையாடுவார்கள். தலையை கீழேகுனியாம மேலே பார்த்துண்டே சரியா தப்பான்னு கோட்டைமுதிக்காம குதிச்சுகிட்டே போவாங்க. தப்பி தவறி கோட்ட  முதிசிட்டா மத்த குழந்தைக தப்பு கோட்ட முதிச்சிட்டே அவுட்டுன்னு கும்மாளம் அடிப்பாங்க. ஏன் இவ்வளவு விஸ்தாரமா சொல்ரேன்னா அதே விளையாட்ட இங்க சைனீஸ்குழந்தைகளும் ஜப்பானீஸ் குழந்தைகளும் ரைட்டா, ராங்கான்னு கேட்டு விளையாடுராங்க. நம்ம பாரம்பரிய விளையாட்டெல்லாம் எங்கியும் தொலைந்து பொகலே. வேர ரூபத்தில் மாடர்ன் விளையாட்டாஇன்னும் யாராவது எங்கியாவது விளையாடிகிட்டேதான் இருக்காங்க.
. கொஞ்ச நேரம் வேடிக்கை பாத்துகிட்டே இருந்தேன்.எல்லா பில்டிங்குமே கழுத்தை வளைச்சு நிமிர்ந்து பாக்கும் உயரத்தில் இருக்கு. நிறயா சைனீஸ், ஜப்பானீஸ் தெரியுராங்க,ஹாய் சொல்லி சிரிச்சுகிட்டே போராங்க.

மறுபடி மேலே வந்தேன் அனேகமா எல்லார் வீட்டு வாசலிலும் நம்ம வீட்ல விளக்குப்பிறை இருக்கும் இல்லியா அதுபோல வச்சு அதில் என்னமோ
                         
சிவப்புக்கலரில் பொருட்கள் வச்சி  ஊது பத்தியும் கொளுத்தி வச்சிருக்காங்க. ஒரு வாரம் போல கொஞ்சம் பழகினதும் அதுபத்தி கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு நினச்சேன்.ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு பழக்கவழக்கங்கள் இருக்கு இல்லியா?
37 comments:

வெங்கட் நாகராஜ் said...

சுற்றுலா அனுபவம் சுகமானது தான்.

ஃபில்டர் காபி - அதானே... நமக்கு அது தான் பிடிக்கும்.

பழனி.கந்தசாமி said...

சிங்கப்பூர் எதுக்குப் போனீங்கன்னு தேடித் தேடி இளைத்தேன்.

கோமதி அரசு said...

பாண்டி விளையாட்டு வேறு ரூபத்தில் விளையாடுகிறார்கள், ஆம் உண்மை தான். அழகாய் சொன்னீர்கள்.

ஒவ்வொருவர் பழக்க வழக்கங்களை அறிய ஆவல்.

Ranjani Narayanan said...

உங்கள் சிங்கப்பூரில் காபி அனுபவம் படித்தவுடன் எங்கள் நண்பர் ஒருவரின் நினைவு வந்தது.

அவருக்கு காபி எப்பவும் டபரா டம்ப்ளரில் தான் கொடுக்க வேண்டும். கப்பில் கொடுக்கக் கூடாது.
டபராவில் ஒரு ஆற்று ஆற்றி சாப்பிட்டால்தான் காபிக்கு மரியாதை என்பார்.

நமக்கும் புதிதாக டிகாக்ஷன் இறக்கி பாலைப் பொங்கக் காய்ச்சி காபி சாப்பிட்டால் தான் காபி குடித்த திருப்தி இல்லையா?

வாசலில் வைத்திருக்கும் பொருள் பற்றி அறியக் காத்திருக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

/ஹாய் சொல்லி சிரிச்சுகிட்டே போராங்க./

நல்ல வழக்கம்.

மாடப்பிறை பற்றி அறியக் காத்திருக்கிறோம்.

Lakshmi said...

வெங்கட் முதல் வருகைக்கு நன்றி

Lakshmi said...

பழனி கந்தசாமி சார் 4 குழந்தைக 4 வேர வேர ஊர்களில் இருப்பதால அம்மாகளுக்கு நாலு இடம் சுத்தி பாக்க கிடைக்குது அவ்வளவுதான். வேர என்ன காரணமும் இல்லே

Lakshmi said...

ஆமா கோமதி பழைய விளையாட்டுக்கள் எல்லாமே வேர வேர ரூபத்தில் விளையாடி கிட்டுதான் இருக்காங்க.

Lakshmi said...

ஆமா ரஞ்சனி மேடம் காபி டபரா டம்ளரில் குடிச்சாதான் ருசி. நாக்கும் நாலு முழத்துக்கும் மூக்கை மூனு முழத்துக்கும் வளத்து வச்சிருக்கோமே:)

Lakshmi said...

ஆமா ராம லஷ்மி நிறையா நல்ல பழக்கங்கள் இருக்கு. நல்லது யாருகிட்ட இருந்தாலும் கத்துக்கலாமே இல்லியா

அமைதிச்சாரல் said...

காலைல நல்ல காபி குடிச்சாத்தானே நமக்கெல்லாம் நாளே நல்லபடியா ஆரம்பிக்குது :-))

கோவை2தில்லி said...

காபி -நான் குடித்ததேயில்லை என்பதால் சம்பந்தமில்லாத விஷயம்....:))

பாண்டியாட்டம் அங்கு விளையடுறாங்களா!!!

தொடர்ந்து சொல்லுங்கோம்மா...

rajalakshmi paramasivam said...

அம்மா,
உங்கள் காபி அனுபவம் அருமை.
எனக்கும் சென்னையை விட்டு வேறு எங்கும் காபி குடித்தாலே குடித்தாற் போல் இருக்காது. இங்கே தானே பாலை பொங்க காய்ச்சி டிகாக்‌ஷன் விட்டு ஆற்றி குடிக்க முடியும்.
ஆமாம், அந்த மாடப்பிறையின் மர்மம் என்ன? அறிய ஆவலாய் உள்ளேன்.
ராஜி

Jaleela Kamal said...


நானும் உள்ளே வரலாமா?
இதென்ன கேள்வி , வாங்க லஷ்மி அக்கா

http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html

Jaleela Kamal said...

பதிவுகள் படிக்க நேரம் இல்லை முடிந்த போது கண்டிப்பாக வந்து படிக்கிறேன்

மாதேவி said...

தொடக்கத்தில் இருந்து படித்துவிட்டு வருகின்றேன்....

Lakshmi said...

சாந்தி காருக்கு பெட்ரோல் போட்டாதானே ஓடும் அதுபோல நமக்கும் காபி குடிச்சாதான் ஓடும்

Lakshmi said...

கோவை2தில்லி நீங்கதானே காபி க்டிக்கமாட்டீங்க அவருக்கு போட்டு கொடுப்பீங்க இல்லே. அப்ப சம்பந்தபட்ட விஷயம்தான்

Lakshmi said...

ராஜலஷ்மி காபிக்கு இவ்வளவு ரசிகர்களா நல்லாதான் இருக்கு.

Lakshmi said...

ஜலீலா நீ போட்டிருந்தலிஸ்ட்ல என் பேரு இல்லே அதான் அனுமதி கேட்டேன்.

Lakshmi said...

மாதேவி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Semmalai Akash! said...

ஆஹா! அருமையா எழுதி இருக்கீங்க அம்மா, நம்ம ஊர் விளையாட்டுகள் எங்கும் பறந்து விரிந்து கிடக்கிறது என்றே சொல்லலாம், நான் துபையில் இருக்கிறேன், இங்கும் நான் தங்கியிருக்கும் கட்டிடத்தில் குழந்தைகள் நம்ம ஊர் விளையாட்டுகளை விளையாடும்போது அப்படியே என் மனதை கொல்லைக்கொள்ளும். அருமையான பகிர்வு நன்றி.

Lakshmi said...

செம்மலை ஆகாஷ் முதல் முறையா நம்ம பக்கம் வரீங்களா? வாங்க வாங்க நம்ம சின்னவயசு விலையாட்டெல்லாம் எப்படி மறக்க முடியும் இல்லியா?

கே. பி. ஜனா... said...

பில்டர் காபி சுகமே தனி தான் நீங்க சொல்கிற மாதிரி.

Lakshmi said...

வாங்க கே.பி. ஜனா வருகைக்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய அனுபவம்... தொடர்கிறேன் அம்மா...

இளமதி said...

லக்ஷ்மிம்மா...உங்க சிங்கப்பூர் ட்ரிப்.. இப்பதான் படிக்க எனக்கு நேரம் வந்திச்சு. 3 பதிவையும் ஒண்ணாவே படிச்சிட்டேன்.

அருமையான வர்ணனையோடு அழகாக எழுதறீங்க. படிக்கும் போது நாமும் உங்க கூட நிழலா இருக்கிறாப்போல இருக்கு. அத்தனை ஸ்வாரஸ்யமா ரசிச்சு எழுதறீங்க.

எத்தனை விஷயங்களை அனுபவங்களை பகிர்ந்துக்கறீங்க.
உங்க கிட்ட இருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கு...:)

தொடருங்க மேலும் படிக்க ஆவல்...
பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா.

Lakshmi said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

இளமதி ரொம்ப நாளா ஆளையே காணோமே எங்க போனே. இப்பவாவது வந்தியே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இராஜராஜேஸ்வரி said...

நம்ம பாரம்பரிய விளையாட்டெல்லாம் எங்கியும் தொலைந்து பொகலே. வேர ரூபத்தில் மாடர்ன் விளையாட்டாஇன்னும் யாராவது எங்கியாவது விளையாடிகிட்டேதான் இருக்காங்க.

ரொம்ப சந்தோஷம் ...

Lakshmi said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வல்லிசிம்ஹன் said...

திரும்ப ட்ரைனைப் பிடிச்சிட்டேன். முன்பு வந்தபோதெல்லாம் இந்த டெட்ரா தொல்லை இல்லையா? நான் எந்த ஊருக்குப் போனாலும் பாத்திரத்தில் காய்ச்சிவிட்டுதான் காஃபி சாப்பிசறது. பெரியவ வீட்டில ஃபில்டர் காஃபி. ஸ்விஸ்ல தான் இன்ஸ்டந்ட். ஆனாலும் ச்சூப்பர். அங்கயும் பதிவர் சந்திப்பா:) மாடப் பிறை சமாச்சாரம் ஃபெங்ஷுவே சம்பந்தப் பட்டதா இருக்கும்.வெயிட்டிங்.

Lakshmi said...

வல்லிம்மா மாடப்பிறை விஷயம் 7-ம் பகுதில சொல்லி இருக்கேன் வாங்க.

JAYANTHI RAMANI said...

எங்காத்துக்காரர் யாராவது காபி கலந்து அடுப்பில வெச்சு சுடவெச்சு குடுத்தா கண்டு பிடிச்சுடுவார். டிகாக்‌ஷன்ல சர்க்கரை போட்டு ஆத்தி வெச்சுக்கணும். பாலை நன்னா காச்சி அதோட கலந்து நுரை பொங்க குடுக்கணும். அப்பா என்ன நாக்கு (எனக்கும்தான்).

சரி எல்லா பகுதியும் படிச்சு மாடப்பிறையைப் பத்தி தெரிஞ்சுக்கறேன்.

JAYANTHI RAMANI said...

எங்காத்துக்காரர் யாராவது காபி கலந்து அடுப்பில வெச்சு சுடவெச்சு குடுத்தா கண்டு பிடிச்சுடுவார். டிகாக்‌ஷன்ல சர்க்கரை போட்டு ஆத்தி வெச்சுக்கணும். பாலை நன்னா காச்சி அதோட கலந்து நுரை பொங்க குடுக்கணும். அப்பா என்ன நாக்கு (எனக்கும்தான்).

சரி எல்லா பகுதியும் படிச்சு மாடப்பிறையைப் பத்தி தெரிஞ்சுக்கறேன்.

Lakshmi said...

ஜெயந்தி ரமணி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

ஆமா ஜெயந்தி இந்த காபி மட்டும் சரியான பக்குவத்தில் கலக்கலேன்னா காலை வாரி விட்டுடும்.

என்னை ஆதரிப்பவர்கள் . .