Google+ Followers

Pages

Wednesday, January 18, 2012

கிலிபி 8(ஆப்ரிக்கா)

இன்ன்னிக்கு, பதிவும் படங்களும் கொஞ்சம் நிரையா போட்டிருக்கேன். ஒரு பத்து நாட்களுக்கு வெளியூர் பயணம் போரேன். ஸோ ஆப்ரிக்க பயணத்துக்கு 10- நாட்கள் லீவு விடரேன். பிப்ரவரி 2-ம் தேதி மறுபடியும் பயணம் கண்டின்யூ பன்ரேன். மறக்காம எல்லாரும் வந்து ஜாயின் பண்ணிக்குங்க. 5- நிமிஷ ட்ரைவிங்க்லயே ஆபீஸ் வந்தது. மெயின் முந்திரிபருப்பு ஏற்றுமதி   செய்து வருகிரார்கள்.. மாப்பிள்ளை அங்கே ஜெனரல்மேனேஜராக இருந்தார். அவரின் பி.ஏ. ஒருமலையாளிப்பையன். இன்னொருவர் ஒரு சர்தார்ஜி. இவா மூவர்மட்டுமே இண்டியன்ஸ். பாக்கி ஒர்க்கர்ஸ், போர்மென்,சூப்பர்வைசர்ஸ் செக்யூரிட்டி எல்லாம் ஆப்ரிக்கர்கள்தான். முந்திரி விளைச்சல் அமோகமா இருக்கு அதைக்கொண்டுவந்து சுத்தம் செய்து தோல் நீக்கி பெரிய பெரிய பாய்லர்மாதிரி கண்டெய்னர்களில் பொன்கலரில் ஃப்ரை பண்ணி அரைக்கிலோ, ஒருகிலோ பாக்கெட்டுகள் பண்ணி பேக் பண்ணி வெளி நாடுகளுக்கு அனுப்புகிரார்கள். ஒவ்வொருபகுதியாக சுற்றிப்பார்த்தோம். நாம சாப்பிடும் ரோஸ்டெட் கேஷு நட் படிப்படியா எப்படி தயாராகிரதுன்னு படிப்படியாக பார்த்தோம்.                 

                     
                                   

                                             
                             

                              

                         
  ”நாமெக்கெல்லாம் முந்திரி சாப்பிடத்தான் தெரியும்.  அது எப்படி தயார்செய்கிறார்கள் என்று பார்க்க பிரமிப்பாக இருந்தது. எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிரேன்..... முந்திரி கொட்டைக்குள் இருக்கிறது. அதை முதலில் பெரிய ஆள் உயரம் உள்ள குக்கரில் வேகவைக்கிறார்கள். வேகவைத்தபின் அதை ஒரு நாள் முழுதும் காய வைக்கிறார்கள். அடுத்த நாள் அதை கேஷு கட்டிங் மெஷினில் ஒவ்வொன்றாக கட் பண்ணி தோடு வேறு முந்திரி வேறாக பிரிக்கிறார்கள். முந்திரியை பெரிய பெரிய Plastic Container களில் மூடி வைக்கிறர்கள். இப்பொழுது முந்திரி ஒரு brown color தோலுடன் இருக்கும். மூன்றாவது நாள் இந்த முந்திரியை பெரிய ஹீட்டர்களுக்குள் வைத்து சுட வைத்து நீர்பதத்தை எடுக்கிறார்கள். அந்த ஹீட்டர்களுக்கு ‘போர்மா’ என்று பெயர்.

நான்காவது நாள் அந்த சுட வைத்த முந்திரியை தோல் வேறு வெள்ளை பருப்பு வேறாக பிரிக்கிறார்கள். அப்பொழுது 21 தரங்களாக பிரிக்கிறார்கள். முதல் தரத்தின் பெயர் W180. அது வெள்ளை பருப்பு, பெரிய ஸைஸ். 454 கிராமில் 180 பருப்பு இருக்கும். அப்புறம் W210, W240, W320, W450 என்று வருகிறது. நம்பர் கூட கூட சைஸ் குறையும். பிறகு ஸ்பிளிட்ஸ், பட்ஸ், LWP, SWP என்று நிறைய தரங்கள் வருகிறது.

ஐந்தாவது நாள் அதை பெரிய (22.68 KGS.)  பாக்கெட்களில் வாக்குவம்  பேக் செய்கிரார்கள். அதை பிறகு எக்ஸ்போர்ட் பண்ணுகிரார்கள்.


                               
 பிறகு மாப்பிளையின் கேபின் போனோம் கம்ப்யூட்டரிலேந்து சகல வசதிகளுடன் இருந்தது. பக்கத்தில் போர்ட் மீட்டிங்க் நடக்கும் விஸ்தாரமான ஹால். நிறைய குஷன் சேர்கள் நீள டேபிள் என்று அமர்க்கள்மாக இருந்தது. பூராவும் ஏ.சி. குளிரூட்டப்பட்டிருந்தது.  பேக்டரி பகுதி  பகுதியாக சுற்றிப்பார்த்துவிட்டு வெளியே சுற்றி உள்ள பெரிய பரப்பளவில் பரந்து விரிந்திருந்த இடங்களைப்பார்க்கப்போனோம். சுற்றிலும் பெரிய பெரிய மரங்களின் அணிவகுப்பு முந்திரிதோப்புக்கு தனி இடம் அது தவிர, மாமரம், அதுபூராவும் இலைகளே தெரியாத அளவுக்கு மாம்பழங்கள் . நான் போனது ஜனவரி  மாதம்.. அந்த நேரம் பழுத்தமாம்பழங்கள் பார்ப்பது ஆச்சரியமா இருந்தது.பாதி சிகப்பு கலரும், பாதி பச்சைக்கலரிலுமாக இருந்தது ஆப்பிள் மேங்கோன்னு சொல்றாங்க . வருஷம் பூரா மாம்பழங்கள் கிடைக்குமாம். வேப்ப மரம், புளியமரம் பலா மரம் என்று நல்ல செழிப்பு. அதுகூடவே இன்னொருமரம் இருந்தது அதிலும் இலையே தெரியாதபடி காய்கள் காய்ச்சு தொங்கிண்டு இருந்தது. அந்தக்காய்கள் பார்ப்பதற்கு எலியை வாலில் கட்டி தலைகீழாக தொங்க விட்டிருப்பதுபோல இருந்தது. பேரு பௌ, பௌ ந்னு சொல்ரா. வவ்வாலும் இஷ்டத்துக்கு கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தது.

செழிப்பும் இருக்கு வேலை செய்ய ஆப்ரிக்கர்களும் ரெடியா இருக்கா ஓனர் கொஞ்சம் ஊக்குவித்தால் வியாபாரம் நன்கு நடக்கும். அங்கேந்து பாக்கவேண்டியதெல்லாம் பார்த்துட்டு 2- மணி வீடு லஞ்ச் சாப்பிட்டு 4- மணி வரை ரெஸ்ட் எடுத்துட்டு மறுபடியும் எங்காவது வெளில போலாம்னு சொன்னாபக்கத்தில் இருக்கும் பீச் போலாம்னு  கிளம்பினோம்.. இவர்களுக்கு தனி வீடு ஒதுக்கி இருப்பதுபோலவே இங்கு வேலை செய்யும் ஸ்டாஃப் எல்லாருக்குமே தனித்தனி வீடுகள் கட்டிக்கொடுத்திருக்கா. பக்கம் பக்கமாக இல்லாமல் தள்ளித்தள்ளி இருக்கு.  மாப்பிள்ளை ஜெனரல் மேனேஜர் என்பதால வசதிகள் அதிகம் செய்து கொடுத்திருக்கா 4- பெட் ரூம் உள்ள்  வீடாகவும் கொடுத்திருக்கா. ஆன இவா இருவர்மட்டும்தான் வீட்ல. பக்கத்து வீட்டில் இருக்கும் சர்தார்ஜி குடும்பத்துக்காராளையும் பீச் போலம்னு கூப்பிட்டோம். அவர்கள் கணவன் மனைவி ரெண்டு குழந்தைகள் இருந்தா. சந்தோஷமா வரோம்னு சொன்னா. பெரிய ஃப்ளாஸ்கில் காபி ஸ்னேக்ஸ் எல்லாம் எடுத்துண்டு காரில் கிளம்பினோம். பெரிய வண்டி எடுத்துண்டு                                                     

                                   

                          

                                      
கிளம்பினோம். இங்க சுற்றிவர நிறைய பீச் ,  நிறையா இருக்கு. ஃபாரினர்ஸ்  நிறைய பேரு டூரிஸ்டா வரா, இயற்கையான சூழல் அவர்கள் எங்கே இருந்தாலும் தேடிதேடி டூர்போரா. நாங்க போனபீச் பேரு மலிந்தி பீச். 20- நிமிட ட்ரைவ்லயே பீச் வந்தது,  நம்ம ஊரு மணல் கலரில் இல்லாமல் வெள்ளை வெளேர் சுண்ணாம்புக்கலரில் மணல் இருந்தது. அலையும் ரொம்ப கம்மியாதான் இருந்தது கூட்டமே இல்லே. பக்கம் பக்கமா கரையில்  மூங்கிலில்கட்டில் போட்டு வச்சிருக்கா. நாங்கள் முதலில் அரைமணி நேரம் அலையில் கால் நனைத்து விட்டு  கட்டிலில் போய் உக்காந்தோம். குழந்தைகள் இருவரும் என் பெண்ணும் மணலில் பந்து விளையாடி ஓடிப்பிடித்து விளையாடினார்கள்.களைச்சுபோயி அவர்களும் கட்டிலில் வந்து உக்காந்தா. எல்லாரும் ஸ்னாக்ஸ் காபி குடிச்சோம். நல்ல காத்துஅலைகளே இல்லைனு சொல்லும்படி சின்ன சின்ன அலைகள் கரையில் வந்து மோதி திரும்பி போவதை வேடிக்கை பார்த்துண்டே கொஞ்ச நேர  பேச்சுக்கள்.

7- மணிக்கு அங்கேந்து கிளம்பினோம் வழிபூராவும் சின்ன சின்ன ஊர்கள் கடைகள் ஆப்ரிக்கர்கள் நடமாட்டம் ரோடு கப்பி ரோடுதான் தூசிபரக்கரது. குழந்தைகள் ஐஸ்கிரீம் வேணும்னு சொன்னா . ஒரு ஐஸ்க்ரீம்பார்லர் போனோம். ஓலைக்கூரை வேந்த பில்டிங்க். உக்கார சேர் லைட் ஷேட் எல்லாமே மூங்கில்களில் இருந்தது. கூம்பு வடிவ பில்டிங்க். உள்ளே போய் ஆளுக்கொரு கோன் ஐஸ் வாங்கினோம் நம்ம ஊர் சைசில் இல்லாமல் ரொம்ப பெரிய சைசில் இருந்தது ஒரு கோன் வாங்கி இருவர் சாப்பிடலாம் அவ்வளவு நிறையா இருந்தது. அங்கு ஒருமணி நேரம் டைம் பாஸ் 8 மணி வீடு. குளியல் டின்னர். 9- மணிக்கு ஒரு தமிழ்ப்பட சி. டி. போட்டுப்பார்த்தோம். என்னபடம் தெரியுமா ஔவையார்( ஹா ஹா). என் பெண் ஐயோ வாயத்தொறந்தா பாடிண்டே இருப்பா நான் பாக்கலேம்மான்னு கம்ப்யூட்டரில் கேம் விளையாடப்போயிட்டா.  நாங்க இருவரும் பாத்தோம். 11- மணி படுக்கை.

                                                                                               (தொடரும்)                           

53 comments:

Mahi said...

முந்திரி பற்றிய தகவல்கள் அருமை!:) ஹேப்பி ஹாலிடேஸ் லஷ்மிம்மா!

கோமதி அரசு said...

பிப்ரவரி 2-ம் தேதி மறுபடியும் பயணம் கண்டின்யூ பன்ரேன். மறக்காம எல்லாரும் வந்து ஜாயின் பண்ணிக்குங்க.

கண்டிப்பாய் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்.

மாப்பிள்ளையின் ஆபீஸ் முந்திரியை சுத்தம் செய்து பிரித்து எடுப்பது, எல்லாம் தெரிந்து கொண்டோம் உங்க கூடவே வந்து.

abimanju said...

good news

abimanju said...

good news

Asiya Omar said...

நல்ல தகவல்களுடன் கூடிய பகிர்வு,விரைவில் வந்து தொடருங்கள்.

கோவை2தில்லி said...

முந்திரியை தரம் பிரிப்பது முதல் பல விஷ்யங்களை தெரிந்து கொண்டோம்.

பிப்ரவரி 2ந்தேதி வந்து விடுகிறேன்....

பத்துநாள் பயணம் சிறப்பாக அமையட்டும்.

அமைதிச்சாரல் said...

நல்லா சுத்திப் பார்த்தோம்.

மாதேவி said...

முந்திரி பற்றி அறிந்துகொண்டோம். பயணம் இனிதாக அமையட்டும்.

ஸ்ரீராம். said...

முந்திரிப் பழம் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு? சுவாரஸ்யமா இருக்கு...

ஹேமா said...

முந்திரிப்பழமும் நீங்களும் ரொம்ப அழகும்மா !

Lakshmi said...

மஹி வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோமதி அரசு வருகைக்கும் ரசனைக்கும் நன்றி

Lakshmi said...

அபிமஞ்சு

Lakshmi said...

அபிமஞ்சு

Lakshmi said...

அபிமஞ்சு வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஆஸியா ஓமர் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி, வருகைக்கு நன்றி

Lakshmi said...

சாந்தி வருகைக்கு நன்றி

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஹேமா வருகைக்கு நன்றி. முந்திரிப்பழம் அழகு இது ஓக்கே, நானும் அழகுன்னு சொல்ரியே. ஓல்ட் இஸ் கோல்ட்.

athira said...

இப்படியும் ஒரு ஊரா என வியப்பாக இருக்கு. இருந்தால் இப்படியான இடத்திலதான் இருக்கோணும், நீங்க பார்க்கக் குடுத்து வச்சிட்டீங்க.

முந்திரி பற்றிய தகவல் புதுமை, அருமை.

Lakshmi said...

அதிரா வருகைக்கு நன்றி

radhakrishnan said...

ஆகா! முந்திரி பற்றி எல்ல்ல்ல்லா தகவல்களும் தெரிந்துகொண்டோம்.வெளிநாட்டில் வேலை என்றாலும், இவ்வளவு அருமையான சூழ்நிலைகளிலும், வசதிகளுடனும், எந்திரத்தனமான வாழ்க்கைமுறையில்லாமல் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை அமைத்துக் கொண்டது தங்கள் பெண்,மாப்பிள்ளைக்குப் பெரும் பேறுதான்.தற்போதும் அங்குதான் இருக்கிறார்களா?
பதிவும், படங்களும் அருமையாக உள்ளன.மிக்க நன்றி அம்மா.
உங்கள் பயணத் திட்டம் மாறிவிட்டதா?பிப்ரவரி15க்கு மேல்தானே, ஈரோடு வருகிறீர்கள்?

Lakshmi said...

ராதாகிருஷ்னன் வருகைக்கு நன்றி. ஈரோடுக்கு பிரவரி 15-ல் தான் வரேன் அதுக்குள்ள கோவா பயணம் ஒன்னு வந்திருக்கு 10- நாளுக்கு.அதான்.

Abdul Basith said...

முந்திரி சாப்பிட தான் தெரியும். அதை தயாரிக்கும் முறையை இப்போது தான் அறிந்துக் கொண்டேன்.

Lakshmi said...

பாசித் வாங்க வருகைக்கு நன்றி

கீதா சாம்பசிவம் said...

ரொம்ப அழகா இருக்கீங்க. புடைவையும் உங்க நிறத்துக்குப் பொருத்தமா இருக்கு.

//பாதி சிகப்பு கலரும், பாதி பச்சைக்கலரிலுமாக இருந்தது ஆப்பிள் மேங்கோன்னு சொல்றாங்க .//

இங்கே கும்பகோணம், சென்னைப்பக்கமெல்லாம் இப்படி இருக்கும் மாம்பழத்தைச் செந்தூரா என்கிறார்கள். சுவை சுமார் தான் எனக்கு அவ்வளவாப் பிடிக்காது. ஒரு வழியா அப்டேட் பண்ணிட்டேன். பயணம் முடிந்து நீங்க தொடரும்போது கூடவே ஜாயின் பண்ண முடியும்னு நம்பறேன்.

Lakshmi said...

கீதா சாம்பசிவம் லேட்டா வந்தாலும் எல்லா பகுதியும் படிச்சுட்டீங்கன்னு நினைக்கிரேன் நன்றி

Chitra said...

nicely written....

Lakshmi said...

chitra thanks

Advocate P.R.Jayarajan said...

Please add photos which will make your travelogue a special one.. Keep going..

S.Menaga said...

லஷ்மிம்மா முதல்முறையாக உங்க ப்ளாக் வந்து இந்த தொடரை முழுவதும் படித்தேன்....நேரில் பேசுவது போல் இருக்கு உங்க எழுத்து நடை..இன்னும் உங்க ப்ளாக்கில் படிக்க வேண்டியது நிறைய இருக்கு....வாழ்த்துக்கள்!!

Lakshmi said...

அட்வகேட் ஜெய ராஜன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

மேனகா முதல் முறையா வரீங்களா? சந்தோஷமா இருக்கு. இனி அடிக்கடி வாங்க. படிக்க நிறைய விஷயம் கிடைக்கும் இங்கே.

ராமலக்ஷ்மி said...

அறியாத பல தகவல்களை அறியத் தந்துள்ளீர்கள். தொடருங்கள்.

Lakshmi said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

அஸ்மா said...

ஒருநாளைக்கு 2 பேர் ப்ளாகாவது போகணும்னு முயற்சி பண்ணி இன்று உங்க பக்கம் வந்தால் நீங்க முன்பே லீவு விட்டுள்ளீர்கள் லஷ்மிமா :) இருந்தாலும் பரவாயில்லை, முதல்லேயிருந்து நான் எல்லாவற்றையும் படித்து முடிப்பதற்குள் நீங்களும் வந்துடுவீங்க. அப்போ 8 பாகத்தையும் படித்து முடித்துவிட்டு மீண்டும் வருகிறேன் :-) இன்னும் ஒண்ணுகூட படிக்கல, ஸாரிமா :)

Lakshmi said...

அஸ்மா மெதுவா வாங்க எல்லாபகுதியும் படிச்சுட்டு வாங்க. நன்றி

athira said...

லக்ஸ்மி அக்காவைக் காணவில்லை, எங்க போயிட்டா? மீண்டும் ஆபிரிக்கா?:).

Lakshmi said...

அதிரா நாந்தான் 10- நாள் லீவு விட்டுட்டேனே பாக்கலியா

இராஜராஜேஸ்வரி said...

அருமையான சுவையான பகிர்வுகள்..

பாராட்டுக்கள்..

Lakshmi said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

S.Menaga said...

லஷ்மிம்மா என் பெயர் மேனகா,ப்ளாக்கின் பெயர் தான் சஷிகா....அப்புறம் பெரும்பாலும் எனக்கு கமெண்ட் போடுபவர்கள் ஆங்கில ப்ளாக் வைத்திருப்பவர்கள்,அதான் சில கமெண்ட்கள் ஆங்கிலத்தில் இருக்கும்..

Lakshmi said...

ஓக்கேம்மா நான் மேனகான்னே சொல்ரேன்.

Ramani said...

படங்களுடன் நீங்கள் விளக்கிப் போன விதம்
மிக மிக அருமை
முந்திரி தயாரிப்பில் இவ்வளவு விஷயம் இருப்பது
இப்போதுதான் தெரியும்
நான் ஏதோ தோலை மட்டும் உரித்தால் போதும் என
இத்தனை நாள் நினைத்துக் கொண்டிருந்தேன்
பகிர்வுக்கு நன்றி

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கு நன்றி

கணேஷ் said...

சொந்த பிரச்சனைகளால நானும் கொஞ்ச நாள் மத்த ப்ளாக்குகளுக்கு வரலை. இப்ப வந்து பாத்தா... முந்திரியைப் பத்தி தெரிஞ்சுண்டதுல ரொம்ப சந்தோஷப்படறேன். முந்திரிக் கொட்டைத்தனமா வராம லேட்டா நான் வந்ததுலயும் ஒரு ஆறுதல்! நாளைக்கே கிலிபி-9 படிச்சுடுவேனே... படங்கள்லாம் கூட தெளிவா அழகாவே இருக்கே. உங்க கை வண்ணமாம்மா?

Lakshmi said...

கணேஷ் லேட்டா வந்தாலும் வந்தீங்க இல்ல அதுவே சந்தோஷமா இருக்கு. நன்றி

நீச்சல்காரன் said...

தற்போது நிரல்களைப் புதிபித்துள்ளேன் . தமிழ் மணத்தில் இந்தியப் பயனர்கள் ஓடடிட முடியும்
http://ethirneechal.blogspot.com/2012/02/blogger-domain.html

ரசிகன் said...

முந்திரி தயாரிப்பு பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். பயணம் தொடரட்டும்.

இன்னிக்கு தேதி 2 . அடுத்த பகுதி எப்போ?

Lakshmi said...

நீச்சல் காரன் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

ரசிகன் நாளையே அடுத்தபதிவு. வாங்க. வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .