Google+ Followers

Pages

Monday, January 2, 2012

கிலிபி (ஆப்பிரிக்கா.) 1

சில வருடங்கள் முன்பு ஆப்பிரிக்கா போய்வந்தேன். அப்போ நான் ப்ளாக் எழுதுவேன் என்றோ அந்த அனுபவங்களை எல்லாருடனும் பகிர்ந்து கொள்வேன் என்றோ நினைத்ததே இல்லே.ஈஸ்ட் ஆப்ப்ரிக்காவில் உள்ள கிலிபி என்கிர இடத்தில் என் பெரிய பெண்ணும் மாப்பிள்ளையும் வசித்து வந்தார்கள். நான் பாஸ்போர்ட் வாங்கியதுமே (அது ஒரு பெரிய புராணம்). முதல்ல இங்க வந்துடுன்னு மாப்பிள்ளை டிக்கட்டே எடுத்து அனுப்பிட்டார். பொண் போன் பண்ணீ முதல்ல போயி எல்லோஃபீவர் இஞ்செக்‌ஷன் போட்டுண்டுடுஅதுக்கு அடையாளமா ஒரு மஞ்ச கார்ட் தருவா, நீகொடுத்தபணத்துக்கும் ரசீது தருவா. அதெல்லாம் பத்திரமா பாஸ்போர்ட்கூடவே வச்சுக்கோ. ஆனாதான் ஆப்ப்ரிக்கா உள்ளயே அலவ் பண்ணுவான்னு சொன்னா.மும்பயில் இருக்கும் பையனிடம் விவரம் கேட்டுண்டு  கிளம்பறதுக்கு10- நாட்கள் முன்பே ஏர்போர்ட் வெளியே இருக்கும் அந்த இடத்துக்குபோனேன்.அங்க சின்ன ஒரு ரூம்ல ஒரு ஆம்பிளை டாக்டர்!!!!!!!!! ????  இருந்தான். 7, 8, பேர் ஊசி போட்டுக்க காத்துண்டு இருந்தா.


 நானும் போய் வரிசையில் நின்னேன். என்முறை வந்ததும் மாஜி ப்ளௌவ்ஸ் கழட்டிடுங்க என்றான். இந்த ஊசி கையில் போடறதில்லே ஷோல்டர்ல போடனும் அந்தப்பக்கம் தடுப்புக்கு பின்னால போயி ப்ளௌஸ்  எடுத்துட்டு வாங்க என்றான். அவன் சொன்னபடி ப்ளௌஸ் மாத்தினு புடவையை நன்னா இழுத்துப்போத்திண்டு அவன் முன்னால வந்தேன். தோளில் ஊசி போட்டான் திரும்பவும் ப்ளௌஸை போட்டுண்டு காசு கொடுத்தேன் ரசீது மஞ்சக்கார்டு எல்லாம் உடனே ரெடி பண்ணி தந்துட்டான்.

திரும்ப வரும் வழி பூரா இதே யோசனை எதுக்கு இந்த ஊசி போட்டுக்கனும், ஒருவேளை அந்த நாட்ல ரொம்ப வியாதியோ அது நமக்கு பறவக்கூடாதுன்னு ஜாக்கிரதைக்காவோ, இல்லைனா நம்ம நாட்லேந்து நாம எந்த வியாதியையும் அந்த நாட்டுக்கு கொண்டு போயிடக்கூடாதோன்னு இருக்குமோன்னு பலவிதமா நினைச்சேன். சரி அதை அங்க போயி அவாகிட்ட யே கேட்டுக்கலாம்னு அப்படியே விட்டுட்டேன். பொதுவா நான் ஊசிலாம் போட்டுண்டதே கிடையாது. என்னமோ பண்ணுமோன்னு மனசுவேர அசட்டு நினைவு நினைச்சுண்டே இருந்தது. வீட்டுக்குவந்து சாப்பிட்டு படுத்தேன். ஆப்ரிக்கா கிளம்பவே இவ்வளவு அமர்க்களமா இருக்கேன்னு பேக்கிங்க் எல்லாம் பாத்து பாத்து எடுத்து வச்சுண்டேன்.பொண்ணு கொஞ்சம் சாமான் வேணும்னு கேட்டிருந்தா. அதையெல்லாம் வாங்கி தனிப்பெட்டியில் பேக் பண்ணினேன். அம்பர் நாத்லேந்து ஏர்போர்ட் போக ரொம்ப கஷ்ட்டம். அதனால் தானா என்னும் இடத்தில் இருக்கும் மகன்வீட்டுக்கு 4- நாள் முன்பே போனேன்.முதல் தடவையாக வெளி நாட்டுப்பயணம். அதுவும் தனியாக உள்ளூர ஒரு பதட்டம் இருந்தது. வெளில காட்டிக்கலை. கிளம்பும் நாளுக்கு முதல் நாள் இரவு வேறு, வேறு இடங்களில் இருக்கும் என் தங்கை தம்பி எல்லாரும் எனக்கு டா டா சொல்ல வந்த்தார்கள்.அவாவா பங்குக்கு தனியே போரே கவனமா இரு ஆப்ப்ரிக்காவில் திருட்டுபயம் நிறையா உண்டாம்னு கிலியை கிலப்பிண்டே இருந்தா.

அவாள்ளாம் கிளம்பி போனதும் என் மகன் என்னிடம் அம்மா யாரு என்ன சொன்னாலும் கண்டுக்காதேங்கோ வெளி நாடுன்னா என்ன அங்க இருப்பவாளும் நம்மப்போல மனுஷாதான். பயப்படல்லாம் வேணாம். தைரியமா இருங்கோ பீஸ்புல்லா தூங்கி எழ்ந்து ஃப்ரெஷா கிளம்புங்கோன்னு தைரியம் சொன்னான். நான் இந்தியாக்குள்ள அனேகமா எல்லா ஊர்களுக்கும் ஃப்ளைட்டில் ட்ராவல் பண்ணி யிருக்கேன்.அப்பவும் தனியாதான் போய் வந்திருக்கேன் . வெளி நாடுன்னதும் கொஞ்சம் பதட்டம் இருந்தது. மகன் தைரியம் சொன்னதும் எனக்குள் இருந்தபதட்டமும் காணாமலே போச்சு. இரவு ஊசி போட்டுண்டு இருக்கோமே ஏதானும் ரியாக்ட் பண்ணுமோன்னு நினைச்சுண்டே இருந்தேன். ஒன்னும் ஆகலை. அந்த  ஊசி எபக்ட் நம்ம உடம்புல 10- வருஷம் இருக்குமாம்.  அதிகாலை 4- மணிக்கு மகன் என்னை


                                                    எழுப்பினான். குளித்து ஃப்ரெஷ் ஆகி காபி குடிச்சு 5-மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினோம்.வெளி நாடு போகும்போது 3- மணி நேரம் முன்பே ரிப்போர்ட்டிங்க் டைம் என்று சீக்கிரமே கிளம்பினோம். என் ஃப்ளைட் 8.30-க்கு இருந்தது.தாணாவிலிருந்து முலுண்ட்- என்னும் இடம் போயி என் சின்னப்பொண்ணையும் கூட்டிண்டுபோனோம். அவள் அப்போ ஏர் இண்டியாவில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள்.6.30-க்கு  ஏர்போர்ட் போய்ச்சேர்ந்தோம். மகன் வெளியில் என் லக்கேஜ் எல்லாம் இறக்கி வச்சுட்டு பை, பை சொல்லிட்டு கிளம்பிட்டா. ஏர்போர்ட்க்குள்ளயாருமே வரமுடியாதே. இல்லியா?                                                  

  பொண்ணு ஏர் இண்டியா ஸ்டாஃப். அந்த ஐடி கார்டை கழுத்தில் தொங்க விட்டிருந்தா அதைப்பார்த்ததும் யாரும் அவளைத்தடுக்கலை. என்கூட உள்ளவந்து லக்கேஜ் வெயிட்பார்த்து ஸ்கேன் பண்ணி  அதை கார்கோக்கு அனுப்பிட்டு போர்டிங்க் பாஸ் வாங்கும் கௌண்டர் போனோம் . அந்த காலை நேரத்திலும் அங்கு வேலை செய்பவர்கள்  நல்ல ஃப்ரெஷா சிரிச்ச முகத்துடன் இருந்தா. ஏர் இண்டியா யூனிபார்ம் புடவையில்தான் எல்லாருமே இருந்தா.பாஸ்போர்ட் செக் பண்ணி போர்டிங்க் பாஸ் வாங்கும் போது


                                                


அந்தப்பெண்ணிடம் நான் மேடம் எனக்கு விண்டோ சீட் வேணும்னு ரிக்வெஸ்ட் பண்ணினேன். அவளும் அப்படியே தந்தா. ஹேண்ட்லக்கேஜில் ஒரு சீட்டு வாக்கி கட்டிண்டு அங்கேந்து உள்ள போனோம்.என் பெண் என்னிடம் ஏம்மா விண்டோ சீட் கேட்டே? இது என்ன ரயிலா பஸ்ஸானு கேலி பண்ணினா. இல்லெடி எனக்கு ட்ராவல்ப்ண்ணும்போது வெளில வேடிக்கைபார்க்க ரொம்ப பிடிக்கும்.  சரி ப்ளைட்ல என்ன வேடிக்கை பாக்கமுடியும்?  டேக் ஆப், லாண்டிங்க்போது  பில்டிங்க்லாம் பெரிய சைசிலேந்து, மினியேச்சர் சைசிலும், மினியேச்சர் சைசிலேந்து பெரிய சைசிலும் தெரியும் இல்லியா? அது. அப்புரம்இரவு நேரம்னா கருப்பு வெல்வெட்டில் வைரமும் முத்தும் பத்தித்ததுபோல கீழே எரியும் லைட் எல்லாம் கண்சிமிட்டும் அழகை வார்த்தைகளால் சொல்லமுடியாது. கிளம்பும் முன்பு ரன்வேல ஒரு ஸ்பீட் எடுக்கும்பாரு அது பாக்கப்பிடிக்கும் என்ரேன். சின்னக்குழந்தைபோல இருக்கியேன்னு அவ என்னைக்கேலி பண்ணினா. இயற்கை ரசிக்க எனக்கு ரொம்பவே பிடிக்கும். அது ரயிலோ பஸ்ஸோ காரோ, ஏன் மாட்டுவண்டிலகூட உள்ள உக்காராம முன்னடிலயேதான் உக்காந்து வெளில வேடிக்கை பாத்துண்டே தான் போவேன் அப்பத்தான் பயணம் ரசிக்க முடியும் எதுல ட்ராவல் பண்ணினாலும் கேட்டுவாங்கி விண்டோ சீட்லதான் உக்காருவேன்.அங்கேந்து ஏர்போர்ட் சுத்திப்பாக்க ப்போனோம். என்                                            

 பெண்ணுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் அங்க இருந்தா எல்லாருக்கும் என்னை அறிமுகம் பண்ணினா. எல்லாரும் ஹாப்பி ஜர்னின்னு சொல்லி வாங்க அண்டி ஒரு காபி சாப்பிடலாம்னு கூப்பிட்டாங்க.இல்லேம்மா காலேல வீட்ல குடிச்சுட்டுதான் வந்தென்னேன் ஏஅப்பா அது 5-மணிக்கே குடிச்சிருப்பீங்க. இப்போ இன்னொரு காபி குடிங்க ஒன்னும் ஆகாது இங்க டாய்லெட் எல்லாம் க்ளினா சுத்தமா இருக்கும் கவலைப்படாதீங்க. முதல் முறையா உங்களைப்பாக்குரோம் கண்டிப்பா நீங்க காபி குடிச்சே ஆகனும்னு கம்பெல் பண்ணினாங்க. தட்டமுடியாம காபி சாப்பிட போனோம் . பெ......ரி......ய..... பேப்பர் க்ளாஸ் நிறையாகாபி. ஐயோ இவ்வளவெல்லாம் முடியாதும்மானு நான் பாதி என் பெண்பாத்தின்னு குடிச்சோம். காபி ரொம்ப நல்லாவே இருந்தது. ஏர் இண்டியா ஏரியா நல்லா பெரிசா விசாலமா க்ளீனா கார்பெட்லாம் விரிச்சு அமர்க்களமாக இருந்தது. (நன்றி கூகுள் இமேஜ்)
                                                                                                                             (தொடரும்)                   

80 comments:

மகேந்திரன் said...

ஒரு விமான நிலையத்தை நேரில் பார்த்ததுபோல
இருந்தது அம்மா.
அதிலும் அந்த கடைசி காப்பி படம் .....
காலையிலே காப்பியுடன் வரவேற்கிறது எங்களை.

கோவை2தில்லி said...

புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா.

ஆப்பிரிக்கத் தொடர் அருமையா ஆரம்பமாயிருக்கு... தொடர்ந்து வருகிறோம்.

கவி அழகன் said...

Happy new year

asiya omar said...

தொடருங்கள் லஷ்மிமா.ஆரம்பமே அருமை.

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

இதை படிபவர்களே விமான பயணம் மேற்கொள்வது போல இருந்தது உங்கள் எழுது நடை.....சீக்கிரம் எங்கள கிலிபிக்கு கூட்டிடுபோங்க,ரொம்ப நேரம் ஏர்போர்ட்லயே காபி குடிச்சிட்டு காத்து கிடக்கமுடியாது.....

www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......உங்களின் அதிகப்படியான ஆதரவை கொண்டு வெளிவந்துவிட்டது நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!....இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

radhakrishnan said...

ஆரம்பமே வெகு ஜோராக இருக்கிறதே.
வெளி நாடு சென்றிராத எனக்கு உங்கள்
முதல் வெளிநாட்டுப் பயணம் மிகவும்
த்ரில்லிங்காக இருக்கிறது. நல்ல வேட்டைதான் கொஞ்ச நாடகளுக்கு.
உங்கள் அநுபவங்களை மிக அருமையாகப் பகிர்ந்து கொள்ளும் கலை
உங்களுக்கு கைவந்ததாக இருக்கிறதே.
நாங்களே பயணம் செய்வது போல்
எல்லா டீடெய்ல்களையும் மைன்யூட்டாக
மீண்டும் ஒருமுறை அநுபவித்து (மனதில்)எழுதுகிறீர்களே.வெல் செட்.
அடுத்தது விமானத்தில் ஏறவேண்டியதுதானே. நன்றி அம்மா

இராஜராஜேஸ்வரி said...

அருமையான ஆப்பிரிக்க பயண ஆரம்பத்திற்கு வாழ்த்துகள். பாராட்டுக்கள்..

ஜெய்லானி said...

ஆஹா...ஆரம்பமே களைகட்டுதே..!! தொடருங்கள் :-))

Jaleela Kamal said...

பயன கதை தொடருங்கஓ அருமை
நீங்க ஒரு ஆலினால் லஷ்மி அக்கா

அமைதிச்சாரல் said...

கூடவே வந்துட்டிருக்கேன்..

எனக்கும் காப்பி வாங்கி ரெடியா வெச்சிருக்கீங்களே.. தாங்க்ஸ் லஷ்மிம்மா :-)

அமைதிச்சாரல் said...

கூடவே வந்துட்டிருக்கேன்..

எனக்கும் காப்பி வாங்கி ரெடியா வெச்சிருக்கீங்களே.. தாங்க்ஸ் லஷ்மிம்மா :-)

வெங்கட் நாகராஜ் said...

பயணக் கட்டுரை அமர்க்களமா ஆரம்பம் ஆகி இருக்கும்மா... தொடருங்கள்... ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்....

Rathnavel said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள் அம்மா.

தமிழ் செல்வன் said...

வணக்கம். என்னுடைய முதல் கமெண்ட். உங்களுடைய நிறைய பதிப்புகளை படித்திருக்கிரேன். உங்கள் எழுதும் நடை என்னை மிகவும் கவர்ந்தது. இப்படியே எழுதிக்கொண்டு வாருங்கள். இந்த அஃப்ரிக்க பயணக்கட்டுறையும் நன்றாக ஆரம்பித்திருக்கீறீர்கள். தொடர்ந்து படித்துக்கொண்டு வருவேன்.

அமுதா கிருஷ்ணா said...

அமர்க்களமான ஆரம்பம்..

மனோ சாமிநாதன் said...

வருடத்தில் பல முறை தாயகம் செல்லும் எனக்கு, மறுபடியும் ஒரு விமானப்பயணம் ஆரம்பித்தது போலவே இருந்தது. அதுவும் உங்களுடன் பயணிப்பது ஒரு சுகம். ரொம்பவும் சுவாரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறீர்கள் லக்ஷ்மி!!

அன்பார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!! இந்த வருடம் உங்களுக்கு அமைதியும் மகிழ்வும் மேன்மேலும் கூடட்டும்!!

Mangayar Ulagam said...

wish you a very happy new year -2012

greatB said...

வானைத் தொடுமளவிற்கு காதல்.
எகிறி குதித்தால் இடிக்கும் வானம் .
இப்படி எல்லாம் படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன்

முதன் முதலாய் வானத்திலேயே எழுதிச் சொன்னதை பார்த்தேன். here

Ashok said...

Hello Madame. I can read Tamil, but, I am not in a position to type in Tamil. But, soon I shall start doing it also. Your new posting about your Africa visit has started with a bang. Good. Looking forward to read further postings on this. All the Best and Happy New Year 2012

Lakshmi said...

மகேந்திரன் முதல் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாங்க.

Lakshmi said...

கவி அழகன் வருகைக்கு நன்றீ

Lakshmi said...

ஆஸியா ஓமர் வருகைக்கு நன்றி

Lakshmi said...

திருவாளப்புத்தூர் முஸ்லிம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராதாகிருஷ்னன் வருகைக்கும் ரசனையான பின்னூட்டத்துக்கும் நன்றி

Lakshmi said...

இராஜ ராஜேச்வரி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஜெய்லானி வருகைக்கு நன்றி.

Lakshmi said...

ஜலீலா கமல் வருகைக்கு நன்றி

Lakshmi said...

சாந்தி வருகைக்கு நன்றி காபி நல்லா இருக்கா?

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

Lakshmi said...

தமிழ் செல்வன் முதல் வருகையா அடிக்கடி வாங்க நன்றி

Lakshmi said...

அமுதா வருகைக்கு நன்றி

Lakshmi said...

மனோ மேடம் வருகைக்கு நன்றி.விமானப்பயணம் மேற்கொள்பவர்களுக்குத்தானே புரிந்து கொள்ள முடியும் இல்லியா? இப்பதான் அனேகமா எல்லாருமே பற்க்கிராங்களே.

Lakshmi said...

மங்கையர் உலகம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

GREAT B வருகைக்கும் ரசனைக்கும் நன்றி

Lakshmi said...

அஷோக் முதல் வருகையா வாங்க வாங்க நானும் முதல்ல தமிழ்ல எனக்கு படிக்கமட்டும்தான் தெரியும் எழுத தெரியாதுன்னுதான் சொல்லிகிட்டு இருந்தேன். சீக்கிரமே நீங்களும் தமிழில் எழுத வாழ்த்துகள்.

சிவகுமாரன் said...

உங்கள் பதிவுகள் அனுபவக் கோர்வையாகவும் ரசிக்கும் படியாகவும் சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது அம்மா.
இந்தப் புத்தாண்டில் தங்களுக்காக பிரார்த்திப்பதோடு , என்னை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

Lakshmi said...

சிவகுமாரன் வருகைக்கு நன்றி என் ஆசீர்வாதம் உனக்கு எப்பவுமே உண்டு.

FOOD NELLAI said...

வணக்கம் அம்மா. இன்று முதல் வருகை. பயணங்கள் புத்துண்ர்வு தரும். அதைப்பகிரும்போது சந்தோஷம் இரட்டிப்பாகும். நன்றி.

FOOD NELLAI said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா.கடந்த முறை நெல்லை வந்து சென்றபின் அறிந்துகொண்டேன். நெல்லையில் ஒரு பதிவர் வட்டமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அடுத்தமுறை நெல்லை வரும்போது அவசியம் சொல்லுங்கள். உங்கள் ஆசிகளைப் பெற்றுக்கொள்கிறோம்.

Lakshmi said...

FOOD NELLAI வருகைக்கு நன்றி. போனமுறை நான் நெல்லை வந்தப்போ எனக்கு தெரிந்திருக்கல. திரும்ப வரும்போது நாம பதிவர்கள் எல்லாம் சந்திக்கலாம்.

விக்கியுலகம் said...

"டேக் ஆப், லாண்டிங்க்போது பில்டிங்க்லாம் பெரிய சைசிலேந்து, மினியேச்சர் சைசிலும், மினியேச்சர் சைசிலேந்து பெரிய சைசிலும் தெரியும் இல்லியா? அது. அப்புரம்இரவு நேரம்னா கருப்பு வெல்வெட்டில் வைரமும் முத்தும் பத்தித்ததுபோல கீழே எரியும் லைட் எல்லாம் கண்சிமிட்டும் அழகை வார்த்தைகளால் சொல்லமுடியாது"

>>>

அம்மா உங்க ரசிப்பு தன்மை அட்டகாசம்..அதிலும் உதாரணம் அழகா சொல்லி இருக்கீங்க...தொடர்கிறேன்!

Lakshmi said...

விக்கி உலகம் வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி

athira said...

லக்ஸ்மி அக்கா, சிலவௌடங்கள் முன் போனதை, நேற்றுப்போனதுபோல அப்படியே பசுமரத்தாணிபோல எழுதியிருக்கிறீங்க.... அடிக்கடி தொடர் எனப் போட்டு ஏங்க வைக்கிறீங்க....கர்:).

ஆபிரிக்கர்கள் மிகவும் நல்லவர்கள் என அறிந்திருக்கிறேன்.... தொடருங்கோ பார்ப்போம்.

எந்த “முதல்”..... ஐயும், வாழ்வில் ஆராலயுமே மறக்க முடியாதுதான். அது பயணமாகட்டும், பாடசாலையாகட்டும்.... குழந்தையாகட்டும்....

Lakshmi said...

அதிரா வருகைக்கும் ரசனையான பின்னூட்டத்துக்கும் நன்றி

மதுமதி said...

ஆப்பிரிக்க பயணம் தொடருக்கு வாழ்த்துகள்..நானும் தொடர்கிறேனம்மா..
த.ம 6

மதுமதி said...

உங்கள் தளத்தில் இணைந்து கொண்டேன்..

Lakshmi said...

மதுமதி தளத்தில் இணைந்ததற்கும் வருகைக்கும் நன்றி

KANA VARO said...

நல்ல விபரிப்பு அம்மா!

உங்கள் டெம்லேட் எனது பழைய டெம்லேட் போன்றது. என் ப்ளாக் பார்த்த ஞாபகம் வந்தது.

Ramani said...

இப்போது போய் வந்ததைப் போல மிக அழகான படங்களுடன்
மிக மிக அருமையாக விளக்கிப் போகிறீர்கள்
தொடர் சுவாரஸ்யமாகத் தொடர்கிறது
பகிர்வுக்கு ந்ன்றி
த.ம 7

Lakshmi said...

கானா வரொ வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கு நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதிவு அருமை (சத்தியமா டெம்ப்ளேட் கமெண்ட் இல்லீங்கோ....) நல்ல விவரிப்பு... நேரடியாக பார்ப்பது போல் இருந்தது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மொய் வந்துச்சுங்களா.....?

RAMVI said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அம்மா.

மிக சுவாரசியமாக உங்க ஆப்பிரிக்க அனுபவம் பற்றி கூற ஆரம்பித்துள்ளீர்கள். தொடருங்கள், படிக்க காத்திருக்கிறேன்.

Lakshmi said...

ஹா, ஹா பன்னிக்குட்டி ராமசாமி சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

பன்னிக்குட்டிசார் மொய் வந்துச்சு இதுபோலவே எப்பவும் வந்து மொய் எழுதுங்க நன்றி

Ashok said...

உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. இந்த கிலிஃபி கட்டுரையை பார்த்ததும் எனக்கு ஞாபகம் வந்து விட்டது. நீங்கள் ராம் சாரோட மாமியார் தானே. நான் உங்களை மொம்பாஸாவில் பார்த்திருக்கிரேன். நக்குமெட் சூப்பர் மார்க்கெட்டில் முதலில் உங்களை ராம் சார் அறிமுக படுத்தினார். அதன் பிறகு 3 தடவை பார்த்திருக்கிரேன். நானும் இதை தொடர்ந்து படிக்கபோகிரேன். இத்தனை நாட்கள் உங்களின் மற்ற கட்டுரைகளை படித்து கொண்டுவந்தேன். இன்று தான் உங்களை கரெக்டாக யாரென்று அறிந்து கொண்டேன். தொடரட்டும் உங்கள் பயணம். நன்றி, வணக்கம்.

Lakshmi said...

ரமா ஏது லேட்? வருகைக்கு நன்றி

Lakshmi said...

அஷோக் நல்ல ஞாபக சக்திதான் சந்தோஷம் . நன்றி

துரைடேனியல் said...

Wanakkam Madam. Thodar arambame asaththal. Antha Injection matter arumai. Kalakkunga. Thodarkiren.

துரைடேனியல் said...

Tamilmanam 8.

அம்பாளடியாள் said...

ஒரு சுவாரசிமான அனுபவப் பகிர்வு .வெளிநாட்டுக்கு முதன் முதல் நான் வந்தபோது சில அனுபவங்கள்
அதை இன்னமும் மறக்க முடியாது .உங்கள் பகிர்வைப் பார்த்ததும் நான் என் கடந்த காலத்தை நினைத்து சிரித்தேன் .
வாழ்த்துக்கள் அம்மா மிக்க நன்றி பகிர்வுக்கு .

மகி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் லக்ஷ்மிம்மா! ஆப்ரிக்கா அனுபவத்தை சீக்கிரம் தொடருங்க! :)

Lakshmi said...

அஷோக் தமிழ்ல டைப் பண்ணத்தெரியாதுன்னு சொன்னீங்க இப்ப எப்படி சூப்பரா தமிழ்ல எழுதரீங்க? வாழ்த்துகள்.

Lakshmi said...

துரை டேனியல் முதல் முறையா வரீங்களா. அடிக்கடி வாங்க நன்றி.

Lakshmi said...

அம்பாளடியாள் வருகைக்கு நன்றி ரசனைக்கும்.

Lakshmi said...

மஹி வருகைக்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

அருமையான ஆரம்பம். தொடருங்கள்.

புத்தாண்டு வாழ்த்துகள்!

Lakshmi said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

அன்புடன் மலிக்கா said...

ஒரு விமான நிலையத்தை நேரில் பார்த்ததுபோல
இருந்தது அம்மா.// உண்மைதான் லஷ்மிம்மா.

அருமையான விவரிப்புகள் விருவிருப்பான எழுத்துநடை அருமை. வாழ்த்துகள்.

Lakshmi said...

அன்புடன் மலிக்கா வருகைக்கு நன்றி

மாதேவி said...

பயணம்... தொடர்கிறேன்.

Lakshmi said...

மாதேவி வர்கைக்கு நன்றி

மஞ்சுபாஷிணி said...

அம்மா லேட்கமர் மஞ்சு ப்ரெசெண்ட்... :)

என்ன தான் முதல் முறை நீங்க ட்ராவல் பண்றேள்னாலும் அதுக்குன்னு இப்படியா பயப்படறது? ஊசி போட்டுக்க எல்லாம் பயப்படலாமா? என்னை பாருங்கோ ஊசி போட டாக்டர் கையில எடுக்கறச்சே ஒரு உதையும் விட்டுட்டு வீட்டுக்கு ஓடின ஞாபகம் வறது நேக்கு.. சின்னப்ப தான்... :)

நார்மலா முதல் முறை நாம் எந்த ஒரு காரியம் செய்யும்போதோ அல்லது படிக்கும்போதோ அல்லது போகும்போதோ அல்லது சாப்பிடும்போதோ ஏற்படும் டென்ஷனும் உணர்வுகளும் இருக்கு பாருங்கோ சொல்லமுடியாது.....

நீங்க நார்மலா இருக்கறமாதிரி காட்டிக்கிட்டேன்னு படிச்சப்ப சிரிச்சிட்டேன்.. சோ ஸ்வீட் அம்மா நீங்க....

விமானப்பயணம் என்றாலும் விண்டோ சீட் கேட்ட குழந்தைத்தனம் என்னையும் ரசிக்கவைத்தது....

உங்களுடனே நானும் கிளம்பிட்டேன் ஆப்பிரிக்காவிற்கு...

அடுத்த பாகம் படிக்க போயிண்டிருக்கேன் அம்மா....

Lakshmi said...

மஞ்சு ஏன் இன்னும் காணோமேன்னு தேடினேன். வந்துட்டே. சந்தோஷம். எல்லா பகுதிகளும் படிச்சியா?

வல்லிசிம்ஹன் said...

லக்ஷ்மி,அருமையான பகிர்வு. எத்தனை விவரம்.எனக்க்கும் விண்டோ சீட் தான். உங்களை மாதிரியே கீழே நகரும் விளக்குகள்,படகுகள் எல்லாம் பார்க்கப் பிடிக்கும். மகன் கூட வந்த போது,[பாத்துமா ...ஜன்னல் வழியே வெளில போயிடப் போகிறேன்னு சொல்வான்:)

Lakshmi said...

வல்லி சிம்ஹன் வாங்க எல்லாபதிவும் படிச்சு பார்த்து கருத்து சொல்லுங்க. நன்றி

arul said...

nalla pathivu

Lakshmi said...

அருள் நீண்ட நாட்கள் கழிச்சும் வந்து பதிவு படித்து கருத்து சொன்னதுக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .