Google+ Followers

Pages

Monday, December 10, 2012

சிங்கப்பூர் 7

இப்படி அங்கியும் இங்கியுமா ரெண்டுமணி நேரமா சுத்திக்கிட்டே இருந்தேன்.இத்தனைக்கும் கையில் எப்பவும் போல ஒரு டைரி பேனாவும் வச்சிருந்தேன். புது இடங்கள் போகும்போது பேர் எல்லாம் மறக்க கூடாதுன்னு உடனுக்குடனே டைரியில் குறிச்சு வச்சிடுவேன். இவ்வளவு கவனமா இருந்தும் கூட வழி தப்பிட்டேன்னா அத என்னன்னு சொல்லரது? நாங்க இருந்தது கம்பேஸ்வேல் லேன்  என்னுமிடம். நான் ரிவெர் வேல் லேன்
                                                                     
பக்கமா போயிட்டேன்.   எப்படின்னு எவ்வளவு யோசிச்சும் கூட புரியவே மாட்டேங்குது.கால் முட்டில்லாம் ஜோர், ஜோரா வலிக்குது. எங்கியாவது உக்காருன்னு கெஞ்சுது.பறக்கும் ரயில்ஸ்டேஷன்ல   கீழே உக்கார பெஞ்ச்
               
இருந்தது கொஞ்ச நேரம் உக்காந்துட்டேன். மனசை காலியா வச்சுகிட்டு அமைதியா யோசிச்சேன்.பதட்டப்பட்டா  வேலைக்காகாதுன்னு நிதானமா யோசிச்சேன். எப்படியாவது வீடு போயி சேரனுமே. புது இடத்துல இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே.ஏதாவது செய்தாகனுமேன்னு யோசிச்சுகிட்டே இருந்தேன் அப்ப அங்க மாடிப்படில்லாம் பெருக்கிண்டு ஒரு ஸ்வீப்பர் இருந்தான்.சைனீஸ் காரந்தான். அவன்கிட்ட கேட்டுப்பாக்கலாமான்னு நினச்சேன். அவனுக்கு இங்க்லீஷ் தெரியுமோ என்னமோ அதுவும் நான் பேசுர இங்க்லீஷையே எல்லாரும் கேலி செய்வாங்க. நீ பேசுர இங்க்லீஷ் தமிழ் போலவே இருக்குன்னு. இவன் எப்படி புரிஞ்சுப்பான்னு தோனிச்சு.
\
என்ன ஆனாலும் சரி அவன் கிட்ட கேக்கலாம்னு போயி எக்ஸ்யூஸ்மீ என்ரேன். எஸ் என்று பதிலுக்கு கேட்டான். அப்பாடா அவனுக்கு இங்க்லீஷ் தெரியுதுன்னு நினச்சேன்.எனக்கு வழி தப்பி  போச்சு இந்த பில்டிங்க் நம்பர் 109 , எனக்கு 206-ம் நம்பர் பில்டிங்க் பொகனும். ப்ளீஸ் ஹெல்ப் மீன்னு சொன்னேன். அவன் திரு திருன்னு முழிச்சான். வாட்  வாட்னு மட்டும் கேட்டான். ஓ நான் பேசுர இங்க்லீஷ் அவனுக்கு புரியல்லே போல இருக்குன்னு நினச்சேன் சரி அவனுக்கு எப்படியாவது நம்ம நிலமையை புரிய வச்சுடனும்னு விரலில் அபினயம் பிடிச்சு ஒரு பரத நாட்டியமே ஆட வேண்டி இருந்தது. இந்த பரந்து விரிந்த சிங்கப்பூர் வீதிகளில் என் வயசுக்கு நான் நாட்டியம்லாம் ஆடினா எப்படி இருந்திருக்கும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க.(ஹா ஹா ஹா ஹா) இந்த இக்கட்டான நிலையிலும் என்னால எப்படிஜோக் அடிக்க முடியுது இல்லியா? அதுதான் நான். இடுக்கண் வருங்கால் நகுக இதுதான் போல. விரலில் ரெண்டு ஜீரோ ஆறு எல்லம் காட்டி, இங்க உள்ள பில்டிங்க் நம்பர் போர்ட் காட்டி எப்படில்லாமோ சொல்லி  அவன் ஓரளவுக்கு புரிஞ்சுகிட்டான். ஓ கேனு சொல்லிட்டு வாரியகட்டை, குப்பை அள்ளும் ப்ளாஸ்டிக் சொளகு எல்லாம் ஓரமா பத்திரப்படுத்தினான். தலையில் இருந்து தொப்பியை அவுத்து கைகளில் வச்சுண்டு கம் வித் மீ என்று சொல்லிவேகமாக நடக்க ஆரம்பித்தான்..அவன் நடக்குர வேகத்துக்கு நான் ஓட வேண்டி இருந்தது.

எனக்கு இருக்கும் முட்டி வலிக்கு என்னால மெதுவாதான் நடக்க முடியும் இப்படி வேகமா ஓடல்லாம் முடியாது. ஹெல்ப் பன்ரேன்னு ஒருத்தன் கிடைச்சிருக்கான் அவனைத்தவர விட்டுட்டக்கூடாதுன்னு எப்படியும் வீடு போயி சேர்ந்துடனும்னு ஒரு பதட்டமான தவிப்பில் அவன் பின்னாடி ஓட்டமா ஓடினேன்.ஒவ்வொரு பில்டிங்கும்  A, B, C, D, E, என்று 5 விங்க்   களைக்கொண்டது. ஒவ்வொரு பில்டிங்குள்ளயா நுழைஞ்சு, நுழைஞே அடுத்தடுத்த பில்டிங்குகளுக்கு  போயிடலாம். அப்படி பில்டிங்க் பில்டிங்கா நுழைந்து ஓடினோம். 112-ம் நம்பர் பில்டிங்குக்குள்ள நுழைந்ததுமே ஒரு பெரிய பழ மார்க்கெட் இருந்தது. நம்ம ஊரு பலாப்பழம்போல மேலெல்லாம் முள்ளு, முள்ளாக கொஞ்சம் சின்ன  ஸைசில் இருந்தது. அதை கட் செய்து
                                     
                                 
நிறையா பேரு சாப்பிட்டுகொண்டிருந்தார்கள். நம்மபக்கம் தோரியன் பழம்னோ துரியன் பழம்னோ சொல்வாங்கன்னு நினைக்கிரேன். அப்பப்பா
 செம வாடை மூக்கு பிச்சுகிச்சு. எப்படிதான் சாப்பிடுராங்களோ? அந்தபில்டிங்க்
தாண்டினதும் மெயின் ரோடு வந்தது5 ரோடுகள் க்ராஸ் பண்ணி வேரொரு பில்டிங்குக்குள்ள போயி மருபடி மெயின் ரோடு போயி மருபடி பில்டிங்க் போயின்னு முக்கா மணி நேரம் ஓட்டம்தான் எதை நம்பி இவன் பின்னாடி இப்படி போயிண்டு இருக்கோம்னு சின்ன யோசனை எட்டிப்பார்த்தது.. ஒரு கட்டதுட்துக்குமேல கால நகட்டவே முடியாம செம வலி. ஒரு பில்டிங்குக்குள்ள நுழைந்ததுமே உக்கார பெஞ்ச் இருந்தது உக்காந்துட்டேன். அவனிடம் ப்ளீஸ் 5 மினட் வெயிட் கால் ரொம்ப   பெயின் என்று  சொன்னேன். அவனோ ஸீ பில்டிங்க் நம்பர்னு சொன்னான். அப்பதான் மேல நிமிர்ந்து பில்டிங்க் நம்பர் பார்த்தேன்

208-என்று இருந்தது. அந்த நேரம் மனசுக்குள்ள ஒரு சந்தோஷமும்  நிம்மதியும் வந்திச்சு பாருங்க அதை வார்த்தயில் சொல்லி புரிய வைக்க முடியல்லே.இன்னும் ரெண்டு பில்டிங்க் தாண்டினா 206- வந்திடும்னு நிம்மதியா இருந்துச்சு. உடனே எழுந்து மறுபடி அவன் பின்னாடி ஓடினேன்.208-ல் 5 விங்க் தாண்டி, 207- ல் 5 விங்க் தாண்டி ஒருவழியா 206- வந்துச்சு.அவன் கேட்டான் 206  வாட்? அப்படின்னு நான்  206 -C ன்னு சொன்னேன். கரெக்டா அங்க கொண்டு விட்டான். எங்கவீடு 8-வது மாடில இருந்தது. கொஞ்ச நேரம் கீழ பார்க்ல இருந்த பெஞ்சில் அவனை உக்கார சொன்னேன். ஒரு போட்டோ எடுத்துக்க்வான்னு கேட்டேன் அவன் ஒத்துக்கவே இல்லே அதெல்லாம் ஒன்னும் வேனாம். எனக்கு நிறையா வேலை இருக்கு நான் போகனும்
                                     
என்ரான். நானும் விடாம நீ எனக்கு சமயத்துல ரொம்ப பெரிய உதவி பண்ணி இருக்கே அதுக்கு நான் தாங்க்யூ சொல்லனும். ஒரு ஞாபகத்துக்காக உன் போட்டோ வானும்னு சொன்னேன் அவனுக்கு என்னை இந்த பில்டிங்க் வாசல் வரை கொண்டுவிடனும்னு என்ன அவசியம்? ஆனா சரியான நேரத்தில் மிகப்பெரிய உதவி பண்ணி இருக்கான். எல்லா இடங்களிலும் மனிதாபிமானம் மிக்க மனிதர்கள் உதவும் மனப்பான்மை உள்ள நல்லவர்கள் இருக்கத்தான் செய்யுராங்க. நமக்கு கிடைக்கும் அனுபவதால்தான் நம்மால சரியா புரிஞ்சுக்க முடியுது. இது போல நல்லமனிதர்களை என்னிக்குமே நாம நன்றியோட நினைச்சுக்கனும் இல்லியா.அப்புரம் வரும் வழியில் நிறையா வீடுகளில் அந்த மாடப்பிறை இருந்தது. அவனிடம் கேட்டேன் அது என்னன்னு. நம்ம குடும்பத்தில் இறந்து போனவர்கள் நமக்கு தெய்வமாக இருந்து நமக்கு எந்த கஷ்டமும் வராமல் காப்பாத்துவாங்க.ன்னு ஒரு நம்பிக்கை. சீனா, ஜப்பான்லலாம் ப்ளாக்மேஜிக் அதிகம். நம்மவீடுக்குள்ள எந்தகாத்து கருப்பு கெட்ட சக்திகள் நுழைந்து நமக்கு கெடுதல் செய்யக்கூடாதுன்னு பஞ்சபூதங்களை ஒருமண்பானைக்குள்ள அடைத்து பிதுர்க்களை திருப்தி செய்யும் விதமாக ஒரு பானைக்குள்ள கொஞ்சம் மண் ( நிலம்), தண்ணீர் ( நீர்),ஊதுபத்தி( நெருப்பு), மயில் இறகு (காற்று) வீட்டின் வெளிப்பக்கம் வைப்பதால் ஆகாயத்தின் நிழல் , வெளியில் அடிக்கும் காற்று எல்லாம் இதில் சேரனும் என்று வீட்டுக்கு வெளியே வைப்பாங்க. முன்னோர்களை திருப்தி படுத்தவும் அவர்களுக்கு மறியாதை செய்யும் விதமாக்த்தான் இதை வக்கிராங்கன்னுசொன்னான்,அவன் கிளம்பி போயிட்டான். நான் எங்க போயிட்டேன் இவ்வளவு நேரமாச்சேன்னு மருமகள் வேர கவலைப்பட்டுட்டு இருந்தா.

 போனதும் எதுமே சொல்லலே. நேரா குளிக்கப்போயிட்டேன். அப்பவே ஒருமணி ஆயிடுச்சி. நேரா லஞ்ச் சாப்பிட உக்காந்தோம் சாப்பிட்டு முடிச்சதும் அவகிட்ட எல்லாம் சொன்னேன். பாவம் பயந்தே போயிட்டா. இனிமேல வெளிபக்கம் வாக்கிங்க் போகாதீங்க. பில்டிங்க் உள்ளயே நடந்தா போதும் அப்படி வெளில போகனும்னா கையில் 50- டாலர் பணம் வீட்டு அட்ரஸ் போன் நம்பர் எல்லாம் எடுத்துகிட்டு போங்கன்னு சொன்னா.


55 comments:

மனோ சாமிநாதன் said...

ரொம்பவும் கஷ்டப்படுகிற சமயங்களில் பிரதிபலன் பார்க்காமல் உதவி செய்பவர்களை இந்தக் காலத்தில் காண்பது மிகவும் அபூர்வம்! கடவுளைக்கண்ட மாதிரி அப்போது மனசு எப்படி சிலிர்த்துப்போகும் என்பது எனக்கு மிக நன்றாகப்புரிகிறது லக்ஷ்மிம்மா! வெளி நாட்டில் பாஸ்போர்ட்டைத் திருட்டுக்கொடுத்து பரிதவித்த அனுபவம் எனக்கிருக்கிறது! இருந்தாலும் கால் வலியுடன் மிகவும் கஷ்டப்பட்டு விட்டீர்கள்! உடல் நலத்தையும் க‌வனித்துக்கொள்ளுங்கள்!

Mahi said...

என்ன சொல்ல? உங்க தைரியத்தைப் பாராட்ட வார்த்தைகள் இல்லம்மா! புது இடத்தில், பாஷை தெரியாத ஊரில போயி...அந்நேரம் எவ்ளோ கலவரமா இருந்திருக்கும்?! நினைக்கவே தூக்கிவாரிப் போடுது..நீங்க கலக்கீட்டீங்க!

இதுவும் ஒரு அனுபவம்தான்! இனி ஜாக்கிரதையா இருப்பீங்கள்ல? :)

வல்லிசிம்ஹன் said...

அட லக்ஷ்மணா! இப்படியும் ஒருத்தர் தொலைஞ்சு போவாங்களோ.:(
அந்தச் சீனருக்கு நூறு நமஸ்காரம் செய்யலாம். தெமேன்னு வேலையை விட்டுட்டு ஒரு அம்மாவைக் காப்பாத்தி இருக்காரே.மொபைல் வச்சுக்கோங்க லக்ஷ்மி.படிக்கிற எனக்கே படபடப்பாக இருந்தது.

Asiya Omar said...

அப்பாடி ஒரு வழியாக வந்து சேர்ந்திட்டீங்களே! முட்டி வலியை நினைச்சு தான் மனசு கஷ்டமாயிடுச்சு.நாங்க 5 நாட்கள் தான் லஷ்மீமா அங்கு டூர் வந்தோம்.நீங்க இருக்கிற ஏரியா பக்கம் தான் இருந்தோம்.நல்ல அனுபவம்.உதவிய நபரின் போட்டோ பகிர்வு மனதை தொட்டது.

rajan said...

அம்மா , சிங்கப்பூரில் பார்க்கும் வேலையை வைத்து மரியாதை தருவதில்லை. உதவிய சீனரை அவர், இவர் என விளித்திருந்தால் குறையொன்றும் இல்லையே. மனதை கழுவுங்கள்

இளமதி said...

லக்ஷ்மிம்மா..வாசிச்சுட்டு இருக்கிறப்பவே மனசில் ஐயோ பாவம்ன்னு ரொம்ம்ம்ப கவலயாப் போச்சும்மா.

திக்கற்றவங்களுக்கு தெய்வம் துணைங்கிறது இதுதான்...

ஆபத்பாந்தவரான அந்த சீனாக்காரர் நல்லபடியாக இருக்கணும்..
நீங்களும்தான்மா...

துபாய் ராஜா said...

சில இக்கட்டான நேரங்களில் கடவுள் மனித உருவத்தில் வந்து உதவுவார் என்பதை உணர்த்திய நிகழ்ச்சி.

துபாய் ராஜா said...

சில இக்கட்டான நேரங்களில் கடவுள் மனித உருவத்தில் வந்து உதவுவார் என்பதை உணர்த்திய நிகழ்ச்சி.

கோவை2தில்லி said...

அப்பாடா! இப்பத் தான் நிம்மதியா ஆச்சு. சீனத்துக்காரார் பாராட்டப்ப்டவேண்டியவர். இவ்வளவு தூரம் வந்து உங்களை கொண்டு விடணும்னு வந்தாரே....

அந்த நேரத்தில் உங்க மனது என்ன பாடுபட்டிருக்கும் என புரிந்து கொள்ள முடிகிறதும்மா.

semmalai akash said...

யப்பாடா!இப்பதான் நிம்மதியே வந்தது, நாங்க மூன்று நாளா எவ்ளோ கஷ்ட பட்டுக்கிட்டு இருதோம்ன்னு உங்களுக்கு கொஞ்சம் கூட புரியவே இல்லை, இவ்ளோ லேட்டாவா பதிவு போடுறது, எங்களை கஷ்டப்படுத்தி பார்ப்பதில் அப்படி என்ன உங்களுக்கு சந்தோஷம், நல்லவேளையா நீங்க சிங்கப்பூர்ல இருக்கீங்க, இங்க அமீரகத்தில் இருந்திருந்திங்க அந்த விலாசத்துக்கு நானே வந்து கேட்டிருப்பேன், அவ்ளோ கோபத்துல இருந்தேன்.

எப்படியோ சைனாகாரர் வந்து உதவி செய்துட்டார்.அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றி. ஆமாம் அவர் பெயர் என்ன? போட்டோ எடுத்திருக்கிங்க பெயர் கேக்கவில்லையா???

ராமலக்ஷ்மி said...

எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் மற்றவருக்கு உதவ முன் வரும் பலரைக் காண முடிந்தது அந்த ஊரில். இந்த நல்ல மனிதர் ஒரு படி மேலே கூடவே வந்திருக்கிறார். அவருக்கு நம் நன்றிகள்.

இனிக் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

மாதேவி said...

நல்ல மனம்கொண்ட அவரை என்ன சொல்லி வாழ்த்துவது எனத் தெரியவில்லை.

முன் ஜாக்கிரதையாக இருங்கள்.

Lakshmi said...

மனோ மேடம் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ஆமா மஹி எல்லாத்தையுமே ஒரு அனுபவமாத்தான் எடுத்துக்கரேன்

Lakshmi said...

வல்லிம்மா ஆமாங்க யாருக்கு எப்ப எங்கே என்ன நடக்குனே தெரிய மாட்டேங்குதே. ஆபத்பாந்தவனா யாராவது வந்து காப்பாத்துராங்களே. அவங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் குறைவுதான்.

Lakshmi said...

ஆஸியா இப்படி நம்ம எல்லார்கிட்டயும் ஒரு அனுபவம் இருக்கத்தான் செய்யுது. எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளும் போதுதானே மத்தவங்களுக்கும் தெரியவருது

Lakshmi said...

ராஜன் என்னைப்போயி தப்பா புரிஞ்சிகிட்டீங்களே? சிங்கப்பூரில் மட்டுமில்லே உலகில் எந்த மூலையில் வேலைசெய்பவராக இருந்தாலும் அவங்க பாக்கும் வேலையை வச்சு அவங்களை உயர்வாகவோ தாழ்வாகவோ
நினைக்கரபழக்கம்லாம் எனக்கு தெரியாது அப்படி நினைக்கவும் மாட்டேன்.னா ஏன் அவன் இவன்னு சொன்னேன்னா எனக்கு இப்ப வயசு 65. இதை நான் எல்லா இடத்திலிம் சொல்லி இருக்கேன் அந்த மூத்த வயதுக்காரி என்னும் உரிமையில் என் வயதில் பாதி வயதுக்கும் குறைந்தவர்களை நீ வா போன்னு ஒருமையில் அழைக்கிரேன். சின்னவங்களை வாங்க போங்கன்னு சொல்லும்போது நெருக்கமா தோனலே இடைவெளி வருது அதனாலதான் ஒருமையில் அழைக்கிரேன் இது வரை இதை யாருமே தவறாக நினைக்கலே. அதுவுமில்லாம நான் அந்த சீனாக்காரரைப்பற்றி உய்ர்வாகவும் பெருமையாகவும் பாராட்டாகவும் நல்ல விதமாகத்தானே சொல்லி இருக்கேன் அது உங்க கண்ண்களுக்கு தெரியல்லியா.

Lakshmi said...

இளமதி வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

Lakshmi said...

ஆமா ராஜா

Lakshmi said...

கோவை2தில்லி ஆமாம்மா அதெல்லாம்தான் தெளிவா சொல்லி இருக்கேனே

Lakshmi said...

ஆகாஷ் இடையில் சனி ஞாயிறு லீவு நளாயிடுச்சே அதான் பதிவு போட முடியல்லே. உரிமையோட கோவப்படுவது பாத்து சந்தோஷமா இருக்கு. அவரு பேரு சொல்ல விட்டு போச்சா ஸாம்ன்னு சொன்னாரு

Lakshmi said...

ஆமா ராமலஷ்மி ஒரு தரம் பட்டது போராதா இனி கவனக்குறைவா இருக்கவே முடியாது இது ஒரு படிப்பினைதான்

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றிம்மா

ஸாதிகா said...

சுவாரஸ்யம் குறையாமல் எழுதி இருக்கீங்க.அந்த சீனரின் உதவி நீங்கள் நாங்களுமே மறக்க முடியாதது.//.இத்தனைக்கும் கையில் எப்பவும் போல ஒரு டைரி பேனாவும் வச்சிருந்தேன். புது இடங்கள் போகும்போது பேர் எல்லாம் மறக்க கூடாதுன்னு உடனுக்குடனே டைரியில் குறிச்சு வச்சிடுவேன்//ஆஹா..நல்ல ஐடியாகவாக இருக்கே..!

Lakshmi said...

ஆமா ஸாதிகா எப்படில்லாமோ ஜாக்கிரதையுடன் இருந்தும் கூட பாரேன்.

sury Siva said...

//ஆனா சரியான நேரத்தில் மிகப்பெரிய உதவி பண்ணி இருக்கான். எல்லா இடங்களிலும் மனிதாபிமானம் மிக்க மனிதர்கள் உதவும் மனப்பான்மை உள்ள நல்லவர்கள் இருக்கத்தான் செய்யுராங்க. நமக்கு கிடைக்கும் அனுபவதால்தான் நம்மால சரியா புரிஞ்சுக்க முடியுது. இது போல நல்லமனிதர்களை என்னிக்குமே நாம நன்றியோட நினைச்சுக்கனும் இல்லியா//


நூற்றுக்கு நூறு உண்மை. இல்லை.
206 உண்மை.
நல்ல வேளை.. நம்பராச்சும் நினைவு இருந்துச்சே !!

சுப்பு ரத்தினம்.

இராஜராஜேஸ்வரி said...

மனசுக்குள்ள ஒரு சந்தோஷமும் நிம்மதியும் தந்துபாடமும் தந்தது தங்கள் அனுபவம் ....

Lakshmi said...

ஆமாங்க நல்ல வேளை பில்டிங்க் நம்பராவது நினைவுல இருந்தது. இல்லேன்னா நிலமை இன்னமும் மோசமா போயிருக்கும்.

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றிம்மா.

அமுதா கிருஷ்ணா said...

அப்பாடா வந்து சேர்ந்தாச்சா.Thank you சைனாமேன்.

Lakshmi said...

அமுதா வருகைக்கு நன்றிம்மா

வெங்கட் நாகராஜ் said...

அந்த நல்ல மனிதர் எங்கிருந்தாலும் வாழ்க! உங்களை மீண்டும் அழைத்துக் கொண்டு வந்து வீட்டில் விட்டாரே....

nagoreismail said...

Ma, send me email dul_fiqar786@hotmail.com

rajalakshmi paramasivam said...

லக்ஷ்மி அம்மா ,
உங்கள் பதிவுமிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.வெளி நாட்டில் பயணம் செய்யும் பொழுது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிருக்கிறது.நாடு,மொழி , எல்லாம் தாண்டி தன வேலையையும் விட்டு விட்டு உதவி செய்த சீனர் பாராட்டுக்குரியவர்.அந்த மாடப் பிறை மர்மமும் அவிழ்ந்தது.
பகிர்வுக்கு நன்றி.
ராஜி

Lakshmi said...

நாஹூர் இஸ்மாயில் நன்றி மெயில் பன்ரேன்

Lakshmi said...

அமா வெங்கட்

Lakshmi said...

ராஜலஷ்மி பரம சிவம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

அமைதிச்சாரல் said...

இந்த மும்பை மாநகரத்துக்குள்ள எங்கியாச்சும் முதல் முறை போகறச்சயே ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அடையாளமெல்லாம் பார்த்து வெச்சுக்கணும். இதுல வெளிநாடுன்னா இன்னுமே ஜாக்கிரதையா இருக்கணும்ன்னு உங்க அனுபவம் சொல்லுது :-)

ஆபத்துக்காலத்தில் உதவிய அந்தச் சீனாக்காரர் எங்கிருந்தாலும் மனைவி, புள்ளைகுட்டிகளோடு நல்லாருக்கட்டும்.

| * | அறிவன்#11802717200764379909 | * | said...

மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் வழி தவறிவிடும் தொல்லையால் நிச்சயம் பிரச்னை ஏதும் இல்லை.

முதல் காரணம் 20 நிமிடம் காத்திருந்தால் 20 தமிழர்களைக் காணலாம்.

இரண்டாவது காரணம் தமிழர்களைப் பார்க்க இயலா விட்டாலும் எதிர்ப்படும் எவரிடமும் கைத்தொலைபேசியைக் கடன்வாங்கி வீட்டுக்குப் பேசி விட முடியும். ஒரு கால் செய்தால் வீட்டிலிருப்பவர்கள் உதவிக்கு வரலாம்.

அல்லது கண்ணில் பட்ட எந்த டாக்சியிலும் ஏறிக்கொண்டு இடம் மற்றும் ப்ளாக் எண்ணைச் சொன்னால் போதும் கொண்டு சேர்த்து விடுவார் காரோட்டி; அவரிடமே கைத்தொலைபேசி வாங்கி வீட்டாரிடம் பேசி பணம் எடுத்துக் கொண்டு வீதிக்கு வந்து விடச் சொல்லலாம்.

வயதாவதால் வருகின்ற பதட்டம் மட்டுமே பயத்தைத் தரும்; மற்றபடி நீங்கள் எழுதிய அளவிற்கு சிங்கையில் பயப்படத் தேவையில்ல.

ஆனால் இதே சூழலில் இந்தியாவில்தான் நிச்சயம் பயப்படவேண்டியதிருக்கிறது. !!

பொதுவாகப் புதிய இடத்தில் வயதானவர்கள் அல்லது குழந்தைகள் வெளியே சென்றால் ஒரு அவசரத்தில் அவர்கள் எப்படித் தம்மைத் தொடர்பு கொள்வார்கள் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டிய கடமை வீட்டில் இருப்பவர்களுக்கு இருக்கிறது என்பதே என் கருத்து. இதில் தவறியவர்கள் உங்கள் மகள் அல்லது மருமகளே, நீங்கள் அல்ல!

| * | அறிவன்#11802717200764379909 | * | said...

ஆனால் இன்னொன்று சொல்ல மறந்து விட்டேன்; சிங்கையில் சீனர்களிடம் வழி கேட்டால் 80 சதம் குழப்புபவர்கள்தான் அதிகம்(என் அனுபவத்தில்!)..

உங்களுக்கு வாய்த்தது நற்பேறு. :))

Subhashini said...

Thank God. You came home safely with the help of such a wonderful person.

Lakshmi said...

ஆமா சாந்தி நாம தான் ஜாக்கிரதையா இருந்துக்கனும்.

Lakshmi said...

அறிவன் நீங்க சொல்ரதெல்லாம் சரிதான் முதல் தடவை இப்படி ஆனதும் ஒரு பதட்டம் வேர ஒன்னுமில்லே நல்ல மனிதர்கள் உலகம் பூராவிலும் நிறைந்து தான் இருக்காங்க.

சேக்கனா M. நிஜாம் said...

// நிறையா பேரு சாப்பிட்டுகொண்டிருந்தார்கள். நம்மபக்கம் தோரியன் பழம்னோ துரியன் பழம்னோ சொல்வாங்கன்னு நினைக்கிரேன். அப்பப்பா
செம வாடை மூக்கு பிச்சுகிச்சு. எப்படிதான் சாப்பிடுராங்களோ? //

சீனாவில் அதிகளவு விளைச்சல் உள்ள மருத்துவ குணமுடைய பழம். நான் விரும்பி சாப்பிடும் பழம்களில் இதுவும் ஓன்று.

நல்லதொரு அனுபவம் !

ரசித்து படித்தேன்...

தொடர வாழ்த்துகள்...

Lakshmi said...

சுபா அதிசயமா இங்க வந்திருக்கே. குட் குட்

Lakshmi said...

சேக்கனா நிஜாம்.உங்களுக்கு அந்தப்பழம் பிடிக்குமா சாரிங்க நமக்கு பிடிக்காதுன்னா சாப்பாட்டு விசயததை வாடை அடிக்குதுன்னெல்லாம் சொல்லக்கூடாது இல்லியா

துளசி கோபால் said...

அன்னிக்கு சீனரா வந்தது எம்பெருமாள்தான்.

தெய்வம் மனுஷ்ய ரூபேணே என்பதற்கு சாட்சி!

இனி கவனமா இருங்க.

கோமதி அரசு said...

எல்லா இடங்களிலும் மனிதாபிமானம் மிக்க மனிதர்கள் உதவும் மனப்பான்மை உள்ள நல்லவர்கள் இருக்கத்தான் செய்யுராங்க. நமக்கு கிடைக்கும் அனுபவதால்தான் நம்மால சரியா புரிஞ்சுக்க முடியுது.//

உண்மைதான்.

athira said...

அடடா இதை நான் இப்பத்தான் படிச்சேன்ன்ன்... தப்பிட்டீங்க:))

ராமலக்ஷ்மி said...

/மண் ( நிலம்), தண்ணீர் ( நீர்),ஊதுபத்தி( நெருப்பு), மயில் இறகு (காற்று) வீட்டின் வெளிப்பக்கம் வைப்பதால் ஆகாயத்தின் நிழல் , வெளியில் அடிக்கும் காற்று எல்லாம் இதில் சேரனும் என்று வீட்டுக்கு வெளியே வைப்பாங்க. முன்னோர்களை திருப்தி படுத்தவும் அவர்களுக்கு மறியாதை செய்யும் விதமாக்த்தான் இதை வக்கிராங்க/

தகவல் அறிந்து பகிர்ந்தமைக்கு நன்றி. அன்றைக்கு சொல்ல விட்டுப் போனது:)!

Seshadri e.s. said...

நிம்மதி! அந்த நல்ல மனம் வாழ்க நூறாண்டு!

Seshadri e.s. said...

தங்களின்இந்தப் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். வாருங்கள் அம்மா!http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_20.html நன்றி!-காரஞ்சன்(சேஷ்)

Lakshmi said...

சேஷாத்ரி வலைச்சர அறிமுகத்துக்கு நன்ரி

ராஜி said...

நேரில் சென்றுவந்த உணர்வை ஏற்படுத்திவிட்டது படங்களும் உங்க வர்ணனையும்..,

Lakshmi said...

ராஜி வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .