Google+ Followers

Pages

Saturday, March 17, 2012

கில்பி 19 ஆப்ரிக்கா


 நாங்கள் இன்னம் ராட்சஸ பலூனில் பறந்து கொண்டிருந்தோம்.  அன்று என்னுடைய மாப்பிள்ளையின் பிறந்த நாள் ஆகையால் பலூனில் பறந்து கொண்டிருக்கும்போதே எங்கள் உறவினர்களின் போன் கால்கள் வந்து கொண்டிருந்தன. அவ்வளவு உயரத்தில் போன் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.  அங்கு சஃபாரி காம் ( நம் நாட்டின் வோடாபோன்) நல்ல கனெக்டிவிட்டி இருந்தது, நல்ல பவர்ஃபுல்லாக இருந்தது. அதனால் அந்த போன் கால்கள் இவ்வளவு உயரத்திலும் சுலபமாக கிட்டியது.  பலூனிலிருந்து பார்க்கும் பொழுது மிருகங்கள் எப்படி தெரியும் என்று போன முறை போட்ட வீடியோக்களிலிருந்து உங்கள் யாவருக்கும் தெரிந்திருக்கும். 


3 மணி நேரம் கழித்து வெகு தூரம் நடுக்காட்டில் ஒரு இடத்தில் பலூனை பைலட் இறக்கினார்.  இப்பொழுது பைலட் பற்றியும் சொல்ல விரும்பு கிரேன்.  நாங்கள் தங்கின ‘காம்பி’ ல் 3 பலூன்கள் இருந்தன. சீசன் சமயத்தில் இந்த 3 பலூன் களும் ஒன்றன் பின் ஒன்றாக ஆகாயத்தில் கிளம்பும்.  நாங்கள் போன சமயத்தில் சாதரண சமயம் ஆனதால் ஒரு 


பாலூன் மட்டும் பரக்கவிட்டார்கள்.  இது ஒரு ஃபான்சி ஐட்டம். அங்கு வரும் வெள்ளையர் கள் தவராமல் இந்த பலூனில் சவாரி செய்கிரார்கள். அவர்களுக்கு இதனுடைய சார்ஜ் ஒரு பொருட்டல்ல. அங்கு இருக்கும் பைலட் களில் ஒருவை அமெரிக்கன், இன்னொருவன் பிரிட்டிஷ், 3வது ஆள் கொரியன்.  சீசன் இல்லாத சமயம் இவர்கள் ரொட்டேஷனில் விடுமுறையில் செல்வார்கள்.  ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் இந்த மூன்று மாதங்கள் தான் இங்கு சீசன்.  அப்பொழுது தான் எல்லா மிருகங்களும் மைகிரேட் ஆகும். அது காண கண்கொள்ளா காட்சி என்றான். மற்ற மாதங்களிலும் நிறைய மிருகங்களை பார்க்க முடியும்.  ஆனால் அந்த 3 மாதங்களிலும் காணப்படும் மிருகங்கள் எக்கசக்கம் என்றான். எங்களை ஏற்றி சென்ற பைலட் அமெரிக்கன்.  அவன் தான் அங்கு கிட்டதட்ட 10 வருஷமாக வேலையில் இருக்கிரான்.  பறக்கும் பொழுது கைடு மாதிரி எங்கு என்ன மிருகம் தெரியும் என்று சொல்லி க் கொண்டு வந்தான்.  னல்ல கலகலப்பாக பேசிக்கொண்டு வந்தான். 


நாங்கள் இறங்கிய உடன் காம்பிலிருந்து வாகனங்கள் வழியாக தரை மார்க்கமாக வந்திருந்த வர்கள் எங்களை வரவேற்றார்கள்.  அங்கு எங்களுக்கு புஷ் பிரேக்பாஸ்ட் வழங்குவதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள். சேர்கள், டேபிள்கள் எல்லாம் வரிசையாக போட்டு 


வைத்திருந்தார்கள். காம்பில் எப்படி பிரேக்ஃபாஸ்ட் வைத்திருப்பார்களோ அதே மாதிரி அந்த நடுக்காட்டிலும் வைத்திருந்தார்கள்.  நாங்கள் பலூனில் ஏறும் முன்பு காஃபி குடித்தது, அதன் பிரகு பறந்து கொண்டே இருந்ததினால், இறங்கியதும் ஒரே பசி. நல்ல சாப்பிட்டோம்.  

இறங்கியதும் முதலில் கொடுத்தது ’ஷாம்பெயின்’. அது பெயரை கேட்கும்பொழுது ரொம்ப நன்றாக இருந்தது, ஆனால் ஒரு சிப் குடித்ததும் கீழே வைக்க வேண்டி வந்தவிட்டது.  ஒரே கசப்பு. இது கொடுப்பது அவர்கள் வழக்கம்.  வெற்றிகரமாக அந்த பயணத்தை முடித்ததினால் கொடுப்பார்களாம். 
அந்த பலூனை காற்று இரக்கி அழகாக சுருட்டி மடக்கி நாங்கள் பறந்து கொண்டிருந்த பாஸ்கெட்டில் போட்டு அதை ஒரு டிரக்கில் ஏற்றி 

கேம்புக்கு கொண்டு சென்றார்கள்.  எங்களை ஒரு மினி பஸ்ஸில் காம்பிற்க்கு கொண்டு போனார்கள். நல்ல ஏற்பாடு. திரும்பி போகிர வழியிலும் நிறைய மிருகங்களை பார்த்துக்கொண்டே போனோம்.  காம்பிற்க்கும் வந்த பிறகு ரெஸ்ட் எடுத்து கொண்டோம்.  வேரு ஒங்கும் அன்று போகவில்லை. 
                  
               

 டின்னர் சமயத்தில் மாப்பிள்ளைக்காக ஒரு கேக் ஸ்பெஷலாக அங்கு உள்ள தலைமை செஃப் (Chief Chef) தயார் செய்து அங்கு உள்ள சர்வர்கள் எல்லாரும் அதை பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் எங்கள் டேபிளில் கொண்டு வைத்தார்கள். பிறகு மெழுகுவர்த்தியை வூதி அணைத்து 

எல்லாருக்கும் பிரித்து கொடுத்தோம்.  பொதுவாக சாப்பிடும்பொழுது நைரோபியிலிருந்து வந்திருந்த தமிழர்களும் எங்களுடன் சேர்ந்துதான் உட்காருவார்கள். நாங்கள் அன்றைய சுற்றுலாபற்றி பேசி எங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வோம்.  தவிர எங்கள் டேபிளில் உள்ள வெஜிடேரியன் சாப்பாடு எப்பொழுதுமே ஸ்பெஷலாக செய்யப்பட்டதாக இருக்கும்.  அதை மாப்பிள்ளை நிறையவே செய்ய சொல்லி நாங்கள் யாவரும் நல்லபடியாக சாப்பிட ஏற்பாடு செய்திருந்தார். 
               அன்று இரவு நாங்கள் ஒருவருமே தூங்கமுடியவில்லை.  ஏன், ஏன், ஏன்?
(தொடரும்.)

27 comments:

இராஜராஜேஸ்வரி said...

அந்த பலூனை காற்று இரக்கி அழகாக சுருட்டி மடக்கி நாங்கள் பறந்து கொண்டிருந்த பாஸ்கெட்டில் போட்டு அதை ஒரு டிரக்கில் ஏற்றி கேம்புக்கு கொண்டு சென்றார்கள். எங்களை ஒரு மினி பஸ்ஸில் காம்பிற்க்கு கொண்டு போனார்கள். நல்ல ஏற்பாடு. /

சிறப்பான ஏற்பாடுகள்..
அருமையான பயணம்..
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

பாச மலர் / Paasa Malar said...

நல்ல பயண விவரிப்பு....நல்ல நினைவு மீட்டலும் கூட..

பாச மலர் / Paasa Malar said...

நல்ல பயண விவரிப்பு....நல்ல நினைவு மீட்டலும் கூட..

Jaleela Kamal said...

அப்ப்ப்பா லஷ்மி அக்கா உங்களுக்கு என்ன ஞாபக சக்தி, இத்தனை தொடரா?
தொடருஙக்ள் நான் நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கீறேன்

அபப்டியே என் பக்கம் வாஙக் சூப்பர் காஃபி உஙக்ளுக்காக,

கோமதி அரசு said...

அருமையாக சொன்னீர்கள் உங்கள் பயண அனுபவங்களை.

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யமான அனுபவங்கள். சஸ்பென்ஸில் நிறுத்தி விட்டுள்ளீர்கள். தொடருங்கள்.

அமைதிச்சாரல் said...

மிருகக் காட்சிச்சாலையில் கம்பிக்குப் பின்னாடி மிருகங்களைப் பார்க்கறதுக்கும் நேர்ல இயற்கைச் சூழல்ல பார்க்கறதுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருந்துருக்கும் இல்லையா.. நல்ல அனுபவம்தான் :-)

கோவை2தில்லி said...

அருமையாக இருந்தது. பலூனில் பயணம் செய்த அனுபவம்...

பறந்ததால் தூக்கம் வரவில்லையா.....

athira said...

ஆ.. லக்ஸ்மி அக்கா... தொடர் வந்துவிட்டதோ? நீண்ட நாள் ஆகிட்டே என நினைத்தேன், ஆனா இன்று நீங்க போட்டபோது உடனே வரமுடியவில்லை..

அப்பாடா.. எனக்கு இப்பத்தான் நிம்மதி.. பலூனில் பத்திரமாகத் தரையிறங்கி விட்டீங்க:)... தொடருங்கோ..

athira said...

//அங்கு எங்களுக்கு புஷ் பிரேக்பாஸ்ட் வழங்குவதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள். //

என்னாது பூஷ் பிரேக் பாஸ்ட்டா?:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) என்ன நாடு சாமி:))இது:))).. மீ எஸ்ஸ்ஸ்ஸ்:))).

ஸாதிகா said...

அருமையான பகிர்வு.அற்புதமான பயணம்.

Lakshmi said...

ராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

Lakshmi said...

பாசமலர் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஜலீலா வருகைக்கு நன்றி இதோ உங்க பக்கம் வரேன் காபி சூடா வச்சிருங்க.

Lakshmi said...

கோமதி அரசு வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராமலஷ்மி வரூகைக்கு நன்றி

Lakshmi said...

சாந்தி உண்மைதான் மிருகங்கள் நேரில் பாக்க ரொம்ப திரில்லிங்கா இருந்துச்சு.

Lakshmi said...

கோவை 2தில்லி வருகைக்கு நன்றி

Lakshmi said...

அதிரா வருகைக்கு நன்றி பூஸார் நலமா அவரைக்கூட்டிவரலியா?

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

Lakshmi said...

அதீஸ் புஷ் ப்ரேக் ஃபாஸ்ட் என்றால் நடுக்காட்டில் கொடுக்கும்ப்ரேக் ஃபாஸ்ட் என்று அர்த்தம் அது ஆப்ரிக்காவில் சகஜம் அது மட்டுமில்லே இது ஒரு த்ரில்லிங்க் அனுபவமும் கூட.

மாதேவி said...

"அன்று இரவு நாங்கள் ஒருவருமே தூங்கமுடியவில்லை. ஏன், ஏன், ஏன்?"

விரைவில் சொல்லுங்க....

Lakshmi said...

மாதேவி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஹேமா said...

’ஷாம்பெயின்’எப்ப கசப்பாச்சு !

Lakshmi said...

ஹேமா என்ன நக்கலா?

Lakshmi said...

ஹேமா என்ன நக்கலா?

ஹேமா said...

அம்மா...சும்மா விளையாட்டுக்குத்தன்.ஆனாலும் ஷாம்பெயின் சும்மா சுர்ர்ர்ர்ன்னு இருக்கும்.கசக்காது !

என்னை ஆதரிப்பவர்கள் . .