Google+ Followers

Pages

Monday, March 5, 2012

கிலிபி 17 ஆப்ரிக்கா


மசைமாரா 2
நக்குருவை விட்டு 7 மணிக்கு கிளம்பினோம் அல்லவா? ஏற்கனவே எழுதிய படி மசைமாரா 250 கிமீ தொலைவில் உள்ளது. ஒரு 100 கிமீ வந்த வழியே திரும்பி போய் வேரு ஒரு ரூட் எடுக்கவேண்டும்.  ஃபுல் ஏசி போட்டு டிரைவர் ஹிந்தி பாட்டு பாட விட்டான்.  அந்த வண்டியின் வோணர் ஒரு குஜராத்தி யாதலால் சவாரிக்கு ஏற்ற பாடல் சிடி க்களை வண்டியில் லோடு பண்ணியிருப்பான்.  அந்த 100 கிமீ கழிந்த வுடன் திரும்பவும் எல்லாரும் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டோம்.
                                                   
அந்த வழியில் கென்யாவின் மிக பெரிய ராட்சஸ சைஸில் (Gigantic) டிஷ் ஆண்டெனாக்கள் இருந்தன. அது ஒரு அப்சர்வேட்டரி (observatory) என்று டிரைவர் விளக்கி சொன்னான்.  அதை போட்டோ எடுக்கக்கூடாது என்றும் சொன்னான்.  முதல் தடவையாக இந்த சைஸில் இதை பார்த்தோம்.
இப்படியே இன்னொரு 100 கிமீ கழிந்து விட்டது. அந்த சமயத்தில் மசைமாராவின் வெளி கேட் வந்தது. எல்லாரும் வண்டியைவிட்டு இரங்கி ஓரமாக நின்றோம்.  நிறைய சுற்றுலா வண்டிகள் உள்ளே போக காத்துக்கொண்டிருந்தன.  எல்லாருக்கும் டிக்கட் எடுக்கவேண்டும்.  அதற்க்காக டிரைவர் சென்று கியூவில் நின்றான். 
                    மசைமாராவின் மொத்த பரப்பளவு எவ்வளவு இருக்கும் என்று யூகித்து பாருங்கள். மிகவும் பெரியது.  1510 sq. kms. (580 sq. miles).  இதனால் தான் முந்திய பதிப்பில் நான் எழுதியதை நினைவில் கொள்ளவேண்டும். கென்யாவில் இது தான் பெரிய Game Reserve. இங்கு இருக்கும் மிருகங்களின் வகைகளை எழுதிக்கொண்டே போகலாம்……கீழே கொடுக்கிரேன்:
                                 


                     
                 
இந்த மிருகங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.  கார்னிவோர்ஸ் (Carnivores) (மாமிசம் சாப்பிடுபவை), பிரைமேட்ஸ் (Primates)(ஆதி இனத்தவர்கள்), அன்குலேட்ஸ் (Ungulates – hooved animals)
கார்னிவோர்ஸில் அடங்குபவை: சிங்கம், சிறுத்தை(cheetah) ஹயினா, நரி, சிறுத்தை புலி (leopard – cheetah and leopard are called as சிறுத்தை in Tamil), மங்கூஸ், காட்டு நாய்கள் (Wild Dogs).
பிரைமேட்ஸில் அடங்குபவை பஃபூன் & குரங்குகள். இதில் மனிதனும் அடங்குவார்கள். இதற்க்கு உதாரணமாக ‘மசை’ மக்களை சொல்லலாம். அவர்களும் அங்கு வசித்து வருகிரார்கள். கையில் ஒரு ஈட்டியை கொண்டு திரிபவர்கள். அவர்களைக்கண்டு சிங்கங்களும் பயப்படுமாம். அவர்கள் கூட்டம் கூட்டமாக ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு இருப்பார்கள். கென்யாவின் நகரங்களில் நிரைய ஸ்தாபகங்களில் இவர்களைத்தான் காவலாளிகளாக போட்டிருப்பார்கள். இவர்கள் ஒருவருக்கும் அஞ்சுவதில்லை. இவர்களுக்கு உயரம் அதிகம். பொதுவாக சிவப்பு உடைகளையே அணிந்திருப்பார்கள்.
                    
                    
                
               
                
அன்குலேட்ஸில் அடங்குபவை னீர் யானை, வரிக்குதிரை, காட்டெருமை, ஒட்டகச்சிவிங்கி, காண்டாமிருகம், வார்தாக் (warthog), அண்டேலோப் (ஒரு வகையான மான்), இது தவிர மான் வகைகள் bushbuck, dik-dik, duiker, eland, gazelle, hartebeest, impala, klipspringer, kudu, oribi, reedbuck, roan antelope, topi, waterbuck and wildbeast.
இவை எல்லாவற்றையம் தவிர யானைகள்.
பொதுவாக ‘Big Five’ என்று சொல்லப்படும் காட்டெருமை, யானை, லெப்பர்ட், சிங்கம் அண்ட் நீர் யானை இங்கு தாராளமாக காணப்படுகின்றன.
இது தவிர ‘Big Nine’ என்று சொல்லப்படும் மேற்கண்ட 5 வுடன் சேர்த்து சீட்டா (சிறுத்தை), வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி அண்ட் ஹிப்போ (காண்டா மிருகம்) எல்லாம் ஒரே இடத்தில் காணப்படுகின்றன.
ஒரு வழியாக 30 நிமிஷம் கழித்து டிரைவர் டிக்கெட்டுடன் வந்தான்.  நாங்கள் தங்கப்போகும் இடம் பெயர் ஃபிக் டிரீ காம்ப் (Fig Tree Camp). இது என் மாப்பிள்ளை வேலைபார்க்கும் க்ரூப்பை சேர்ந்தது. மெயின் கேட்டிலிருந்து 50 கிமீ தொலைவில் இருக்கிரது.  எங்கள் வண்டி காட்டு வழியாக செல்ல ஆரம்பித்தது.


                                                             
                                      
மசைமாரா முழுதும் கான்க்ரீட் ரோடு கிடையாது. மண் அண்ட் புல் நிரம்பிய ரோடுதான்.  அங்கு அடிக்கடி செல்லும் டிரைவர்களுக்கு ரூட் 
                  
அத்துப்படி. முதல் தடவை போகிரவர்களுக்கு அது ஒரு ‘திக்கு தெரியாத காடு தான்’. போகிர வழியெல்லாம் ஒரே மிருகங்கள் தான்.  மோஸ்டிலி மான்கள், வரிக்குதிரை, குரங்குகள் தான் தென்பட்டன.  எத்தனை கூட்டம். இதையெல்லாம் பார்த்து மகிழ வேண்டும்.  இவையெல்லாம் பார்க்கும் பொழுது கடவுள் எல்லா விலங்குகளையும் மேலிருந்து மசைமார முழுதும் தூவின மாதிரி இருக்கிரது. நிமிஷத்திர்க்கு நிமிஷம், வினாடிக்கி வினாடி கூட்டம் கூட்டமாக அத்தனை விலங்குகள்.  பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்றிருந்தது. ஒரு ஒரு மணி நேரம் கழித்து காம்ப் வந்து சேர்ந்தது. அந்த காம்பின் மேனேஜர் வெளியில் வந்து எங்களை வரவேற்றார்.  அவர் லோக்கல் கென்யன். எங்களுக்கென்று தங்க நல்ல இடங்களை ஒதிக்கியிருந்தார். எல்லாம் இயற்க்கையோடு ஒற்றுப்போகும் டெண்ட்கள் தான்.  உள்ளே எல்லாமே மிக உயர்ந்த வகையான ஏற்பாடுகள்.  பாத் ரூம் மட்டும் கான்க்ரீடில் கட்டப்பட்டிருந்தது. நாங்கள் போய் சேரும்பொழுது மதியம் 3 மணியாகி விட்டது. அதனால் அன்று நாங்கள் வெளியில் செல்லவில்லை. ரிலேக்ஸ் செய்து கொண்டோம்.
4.30 மணி வாக்கில் எங்களை ரெஸ்டாரெண்டிற்க்கு அழைத்தார் கள். இவினிங் டிஃபன் கொடுத்தார்கள். இதுவும் ஒரு 5 நட்சத்திர வகையில் உள்ள கேம்ப் தான்.  நிரைய வெள்ளையர்கள் இருந்தார்கள். அது தவிர நைரோபியிலிருந்து ஒரு 20 பேர்கள் அடங்கிய தமிழர்களும் வந்திருந்தார்கள். கேட்கவேண்டுமா, நாங்கள் எல்லாரும் கலந்து மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தோம்.  அவர்களின் அன்றைய காட்டு சுற்றுலா பற்றி விபரங்கள் கேட்டு தெரிந்து கொண்டோம். 
கடல் கடந்து இருக்கும் இடத்தில் நம் இனத்தவர்களை பார்க்கும் பொழுது வரும் மகிழ்ச்சியே தனி.  எல்லாரும் வெவ்வேறு கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள். நான் தான் வயதில் அதிகம் அந்த கூட்டத்தில், அதனால் என்னிடம் மிகவும் அன்பாக பேசி பழகினார்கள். அந்த கூட்டத்தில் குழந்தைகளும் இருந்ததால் நேரம் நன்றாக கழிந்தது. 
                             
                  இரவு 8 மணி வாக்கில் டின்னரும் ரெடியாகி விட்டது.  அப்பொழுது எங்களை மகிழ்விக்க ’மசை மக்கள்’ நடனமும் பாட்டும் பாடினார்கள். வெள்ளையர்கள் எப்போதும் போல் அவர்களுடன் சேர்ந்து ஆடினார்கள். நல்ல ரசித்தோம்


 நன்றி- (கூகுல் இமேஜ்)                       (தொடரும்)

27 comments:

Lakshmi said...

தமிழ் மணம் இணைக்கவும்

ஸாதிகா said...

டெரர் சுற்றுலாவாக திரில் ஆக இருந்திருக்குமே?

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன் அம்மா!

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

உங்கள் பயண அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது! வெறுமனே இடங்களை மட்டும் பாராது, அவை குறித்த தகவல்களையும் செம்மையாகத் திரட்டித் தந்திருக்கிறீர்கள்!

கென்ய தலைநகர் நைரோபி விமானநிலையத்துக்கு ஒரு முறை சென்றிருக்கிறேன்! வெளியே போனதில்லை!

இனி கென்யாவுக்கும் செல்ல ஆசையாக உள்ளது உங்கள் தொடரைப் படிக்கும் போது!!!

கோவை2தில்லி said...

நல்ல பகிர்வும்மா. மிருகங்களை பார்ப்பதே ஒரு த்ரில்லிங்காக தானே இருக்கும்......

கணேஷ் said...

கடவுள் மிருகங்களை மேலிருந்து மசைமாராவுல தூவின மாதிரி இருந்தது. என்ன அழகா ரசிச்சுச் சொல்லியிருக்கீங்க. இயற்கை சூழ்நிலைல மிருகங்களைப் பாக்கறதே தனி அனுபவம்தான். தொடர்கிறேன்!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல நினைவலைகள்மா....

தொடர்ந்து அசத்தறீங்க!

Asiya Omar said...

ஆஹா ! நல்ல அருமையான ஜங்கில் டூர்.பகிர்ந்த விதம் இன்னும் தொடர்ந்து வாசிக்க துண்டுகிறது.

athira said...

லக்ஸ்மி அக்கா.... என்ன இது வரவர உங்களின் சுற்றுலா பெருத்துக்கொண்டே போகுதே அவ்வ்வ்வ்:))..

கென்யாவை ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டுதான் வந்திருக்கிறீங்க போல:).. சூப்பர் தொடர்.. தொடருங்கோ.

athira said...

லக்ஸ்மி அக்கா..

நீங்க அங்க யானை பார்த்திருக்கிறீங்க...
சிங்கிள் சிங்கம்:) பார்த்திருக்கிறீங்க.....
புலி பார்த்திருக்கிறீங்க....
மான் பார்த்திருக்கிறீங்க.........
மங்கி பார்த்திருக்கிறீங்க.......
ஓநாய் பார்த்திருக்கிறீங்க........
மனிஷர் பார்த்திருக்கிறீங்க.....

ஆனா ஏன் லக்ஸ்மி அக்கா... பூஸ் பார்க்கேல்லை நீங்க?:(((((((

பழனி.கந்தசாமி said...

ஆஹா, அருமை.

Lakshmi said...

ஸாதிகா உண்மைதான் நல்லா எஞ்சாய் பண்ணினோம்

Lakshmi said...

மணி தமிழ்மணத்தில் இணைத்ததற்கு மிகவும் நன்றி நான் எவ்வளவு ட்ரைபண்ணியும் இணைக்கவேமுடியல்லே.

Lakshmi said...

மணி ஒருமுறை கென்யாவும் சென்று பாருங்க. நல்லா இருக்கும்.

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

Lakshmi said...

கணேஷ் வருகைக்கு நன்றி. அதுபோல இடங்கள் பார்க்கும்போது வார்த்தைகளும் சூப்பரா வந்துடுது.

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஆசியா ஓமர் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஆமா அதிரா சுற்றுலான்னா பெருத்துக்கொண்டேதான் போகனும். அங்க உள்ள பெரிய அனிமல்லாம் பாத்து நம்ம பூஸார் பயந்துட்டாங்க அதான் உங்க பின்னாடி ஒளிஞ்சுகிட்டாங்க

Lakshmi said...

பழனி கந்தசாமி வருகைக்கு நன்றி

ஸாதிகா said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

Lakshmi said...

ஸாதிகா வலைச்சர அறிமுகத்துக்கு நன்றி

கே. பி. ஜனா... said...

பலூன் பறக்கிற காட்சி அபாரம்!

Lakshmi said...

கே.பி. ஜனா வருகைக்கு நன்றி

மாதேவி said...

உங்கள் பயணம் அருமையாக இருக்கின்றது.

Geetha Sambasivam said...

மிருகங்களைக் குறித்த ஆய்வு நல்லா இருக்கு. அவற்றைப் பிரித்துச் சொன்னவிதமும், கடுமையான உங்கள் உழைப்பைக் காட்டுகிறது. நல்லா எழுதிக் கொண்டு இருக்கீங்க. மிச்சத்துக்கு அப்புறமா வரேன்.

Lakshmi said...

கீதா பாராட்டுக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .