Google+ Followers

Pages

Wednesday, October 10, 2012

வாழக்காய்ப்பொடிமாஸ்

தேவையான பொருட்கள்

நாட்டு வாழைக்காய்கள்.-------------  2
துருவிய தேங்காய்ப்பூ---------------   ஒரு கப்
பச்சை மிளகாய்-----------------------   2
தேங்கா எண்ணை------------------   2 ஸ்பூன்
கடுகு------------------------------------   1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு------------------    1 ஸ்பூன்
பெருங்காயப்பொடி-----------  சிறிதளவு
கரிவேப்பிலை---------------   சிறிதளவு
 உப்பு---------------------- தேவையான அளவுக்கு
 செய்முறை
                         
 வாழைக்காய்களை இரண்டாக வெட்டி வேக விடவும்
தோல் கறுத்து நிறம் மாறியதும் எடுத்துதண்ணீரை
                                     
வடியவிடவும். உள்ளே பதமாக வெந்திருக்கும். தோலை
நீக்கி கேரட் சீவியில் மிருதுவாக துருவிக்கொள்ளவும்
                                       
கடாயில் எண்ணை ஊற்றி கடுகுபோட்டு பொரிந்ததும்
பருப்பு மிளகாய் கருவேப்பிலை பெரிங்காயப்பொடி சேர்ந்து
                                       
சிவந்ததும் துருவி வைத்திருக்கும் வாழைக்காய்களை
சேர்த்து 5 நிமிடங்களுக்கு கிளறிவிடவும்.கீழே இறக்கி
 தேங்காய்த்துருவல் தூவி அலங்கரிக்கவும்.
                               
நீக்கிய தோலைக்கூட தூக்கி எறியாமல் சின்னதாக கட்
சேய்து பொரியல் பண்ணிடலாம்.அதுவும் நல்லா இருக்கும்

52 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு. இதே முறையில் செய்வதுண்டு.

ஸாதிகா said...

அருமையான சைட் டிஷ்!

திண்டுக்கல் தனபாலன் said...

எனக்கு மிகவும் பிடிக்கும்... குறிப்பிற்கு மிக்க நன்றி அம்மா...

கோவை2தில்லி said...

நல்லதொரு குறிப்பும்மா. சென்ற வாரம் தான் செய்திருந்தேன்.

மஞ்சுபாஷிணி said...

எளிமையான அதே சமயத்தில் ஈசியா செய்து ஈசியா டைஜஸ்ட் ஆகக்கூடிய டிஷ் லக்‌ஷ்மிம்மா.. அன்புநன்றிகள் பகிர்வுக்கு.

இளமதி said...

நினைக்கவே வாயூறும் சைட் டிஷ்:)
எங்கம்மா இதே கைப்பக்குவம்தான் செய்வா.
என்ன வீட்டிலே வாழைக்காய் வாய்வுன்னு சொல்றதாலேயும் காரத்துக்கும் ஆச்சுன்னு மிளகு சீரகம் ஒண்ணும் பாதியுமா லேசா தட்டி தாளிதம் பண்ணும்போதே சேர்த்து தாளிப்பா. நல்லா இருக்கும்.

சுலப ரெஸிப்பி. இதே போல வேகவைத்த உருளைக்கிழங்கிலும் செய்வேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றிம்மா!

அமைதிச்சாரல் said...

நல்லாருக்கு. இதை நாங்க வாழைக்காய் புட்டுன்னு சொல்லுவோம். காயை ஆவியில் வேக வெச்சா தோலுரிக்கவும் எளிதா வரும்.

ஸ்ரீராம். said...

இப்படியும் செய்து பார்த்து விட வேண்டியதுதான். பொடிமாஸ் என்றால் வெங்காயம் இல்லாமலா என்று எப்போதும் வெங்காயம் சேர்த்தே செய்வோம். துருவ வருமா தெரியவில்லை. பிசைந்து விட்டு விடுவோம்.
[முன்னரே ஒருமுறை சொன்னேன். நீங்கள் சொன்ன புளிப் பொங்கல் எங்கள் வீட்டில் இப்போது அடிக்கடி செய்கிறோம்!]

Seshadri e.s. said...

பயனுள்ள பகிர்விற்கு நன்றி! விதிவிலக்கு கவிதை படிக்க எனது வலைப்பூவிற்கு வாருங்களேன்!
-காரஞ்சன்(சேஷ்)

வெங்கட் நாகராஜ் said...

சுவையான சமையல் குறிப்பு... நன்றிம்மா..

RAMVI said...

நான் குக்கரில் வாழைக்காயை வைத்து குழைய வைத்துவிடுவேன்.. இப்பொழுது நீங்க சொல்லி இருக்க மாதிரி செய்து பார்க்கிறேன்,குழையாமல் நன்றாக துருவ வரும் என்று நினைக்கிறேன்.நன்றி அம்மா..

Lakshmi said...

ராம லஷ்மி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஆமா ஸாதிகா செய்து பாரு ரொம்ப நல்லா இருக்கும்.

Lakshmi said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

Lakshmi said...

மஞ்சு வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

Lakshmi said...

இளமதி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ஆமா சாந்தி நீ சொல்லி இருப்பதும் சரிதான்.

Lakshmi said...

ஹா ஹா ஸ்ரீ ராம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

சேஷாத்ரி வருகைக்கு நன்றி

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரமா இப்படி செய்துபாரு நல்லா இருக்கும்

குட்டன் said...

எனக்கு மிகவும் பிடித்த பொடிமாஸ் சாப்பிட்ட திருப்தி

athira said...

ஆஹா லக்ஸ்மி அக்கா புது முறையான சுண்டல்... நான் நினைக்கிறேன் அவிக்காமலேயே செய்யலாமோ?..

வாழைத்தொலை அவித்து குட்டியாக வெட்டி சம்பல்(சட்னி) போல செய்யலாம்.

Ayesha Farook said...

வணக்கம் அம்மா.. இது என் முதல் வருகை. நான் அறிந்திராத சமையல் குறிப்பு தந்தமைக்கு நன்றி... இனி தொடர்வேன்

Lakshmi said...

குட்டன் வாங்க உங்களுக்கும் பிடிக்குமா சந்தோஷம்

Lakshmi said...

அதிரா வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஆயேஷாஃபாருக் முதல் வருகையா வாங்க அடிக்கடி வாங்க. நன்றி

Mohan P said...

அருமை சகோ நன்றிகள் பல பல எங்க பக்கமும் வந்து போறது

Lakshmi said...

mohan p உன் பக்கமும் வரேன்மா

dina pathivu said...

மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது
தினபதிவு திரட்டி

மஞ்சுபாஷிணி said...

அட வாழைக்காய் பொடிமாஸ் நறுக்கி தான் செய்திருக்கேன். இப்ப தான் இப்படி செய்யனும்னு தெரிஞ்சுண்டேன். இனி இப்படியே செய்கிறேன்மா... அன்புநன்றிகள்மா பகிர்வுக்கு.

Lakshmi said...

தின பதிவு வருகைக்கு நன்றி நானும் வரென்

Lakshmi said...
This comment has been removed by the author.
Lakshmi said...

மஞ்சு இப்படி செய்து பாரு நல்லா இருக்கும்

Lakshmi said...
This comment has been removed by the author.
மாதேவி said...

துருவிசெய்ததில்லை மசித்துத்தான் செய்வோம்.

தோலில் சட்னி செய்வோம்.
நல்ல குறிப்பு.

angelin said...

லக்ஷ்மி அம்மா !! இன்று இந்த வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன் ..#
இதுநாள் வரை வாழைக்காயை குக்கரில் வேகப்போட்டு குழைத்து பேஸ்ட் போல ஆக்கிருப்பேன் ..நல்லாவே வராது ஆனா இம்முறை
நீங்க சொன்ன மாதிரி தோல் கருப்பானதும் எடுத்தேன் அழகா துருவ முடிந்தது .

Lakshmi said...

mathevi nanri.

Lakshmi said...

angelin thx

Lakshmi said...

angelin thx

enrenrum16 said...

வாவ்...வாழைக்காய் புட்டு அப்படியே எங்க அம்மா செய்வது மாதிரியே இருக்கிறது... எனக்கு ரொம்ப பிடித்தது....ஹ்..ம்... கணவருக்கு பிடிக்காததால் மறந்தே போயிருந்தேன்... இனி செய்து பார்த்திட வேண்டியதுதான்....நன்றி லக்ஷ்மிம்மா.... நினைவு படுத்தியதற்கு.... ;))

Priyaram said...

லக்ஷ்மி அம்மா, வாழைக்காய் பொடிமாஸ் அருமை... எங்க மாமியார் கூட எப்படி தான் செய்வாங்க...

Ramani said...

நான் அதிகம் விரும்பியுண்ணும் சைட் டிஷ் இது
மனைவி செய்து தர உண்பேன்
இனி தங்கள் பதிவின் உதவியால் நானே செய்துவிடுவேன்
பகிர்வுக்கு நன்றி
தொடர வழ்த்துக்கள்

Ramani said...

tha.ma 10

Lakshmi said...

enrenrum 16- வருகைக்கு நன்றி

Lakshmi said...

ப்ரியா ராம் நாங்கல்லம் பழயகாலத்து மனுஷிஙம்மா இப்படித்தான் செய்வோம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கும் ஓட்டுக்கும் ரசனைக்கும் நன்றி

Geetha Sambasivam said...

ரொம்பப் பிடிச்சது இது. அதுவும் தயிர்ப்பச்சடியோடு சேர்த்துச் சாப்பிட ரொம்பவே பிடிக்கும். வேணும்னா எலுமிச்சம்பழமும் பிழிஞ்சுக்கலாம்.

Lakshmi said...

கீதா வருகைக்கு நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

பொடிமாஸ் சூப்பரோ சூப்பர் ! ;)))))
நாக்கில் நீர் வரவழைக்குது.

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .