Google+ Followers

Pages

Monday, October 8, 2012

கோவக்காய் சாதம்

தேவையான பொருட்கள்
 அரிசி-------------  கால் கிலோ
 கோவைக்காய்-----------    15
 மஞ்சபொடி---------------  அரை ஸ்பூன்
வறுத்து பொடித்த எள்ளுபொடி---- 2 ஸ்பூன்
தனியா பொடி------------- ஒருஸ்பூன்
கரம் மசால பொடி---------  ஒரு ஸ்பூன்
 காரப்பொடி-------------   ஒருஸ்பூன்
பெருங்காயப்பொடி-------- சிறிதளவு
 உப்பு------------ தேவையான அளவு
 எண்ணை------- 3 டேபிள் ஸ்பூன்
 நெய்------------   ஒரு ஸ்பூன்
கொத்துமல்லித்தழை----- ஒரு சிறு கட்டி
                   
செய்முறை
அரிசியை நன்கு கழுவி வடியவைக்கவும்.
 பொடிவகைகளை ஒரு ஸ்பூன் எண்ணை
ஊற்றி பேஸ்ட் போல கலந்து கொள்ளவும்.
கோவைக்காயை கழுவி  மேல்புறமும் கீழ்
                       
புறமும் காம்பு நீக்கி மேல்புறம் பாதியாகவும்
 கீழ்புறம் பாதியாகவும் கீறிக்கொள்ளவும்
 அதாவது + போல கீறிக்கள்ளவும். கலந்து
 வத்திருக்கும் பேஸ்ட்டை காய்களுக்குள்
சமமாக அடைக்கவும். பிரஷர் பேனில் எண்ணை
                                                       
 ஊற்றி ஜீரகம் தாளிது அரிசியைப்போட்டு 5 நிமி
டங்களுக்கு வறுக்கவும் .ஈரப்பதம் போனதும்
 ஸ்டப் செய்து வத்திருக்கும் காய்களையும்
                                                             
சேர்த்து கலந்து ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீர்
 ஊற்றி 3 விசில் வரும் வரை வேக விடவும்.ஆறிய
பிறகு மேலாக ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கொத்தமல்லி
 தழைகள் தூவி அலங்கரிக்கவும்.
                                

32 comments:

ராமலக்ஷ்மி said...

புதுமையாக உள்ளது. குறிப்புக்கு நன்றி லஷ்மிம்மா.

RAMVI said...

ரொம்ப நாளாச்சு லக்‌ஷ்மிம்மா, உங்களோட ருசியான பதிவை படித்து.சுலபமாக கத்துக்கொடுத்திருக்கீங்க கோவைக்காய் சாதம்.செய்து பார்த்து விடுகிறேன்..

ஸாதிகா said...

கோவைக்காயில் சாதம் செய்து அசத்திய ஒரே மனுஷி நீங்கள்தாம்மா.

இராஜராஜேஸ்வரி said...

மருத்துவ குணமுள்ள கோவைக்காய் சாதம் .. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

அமைதிச்சாரல் said...

ஹை.. ரொம்ப ஜூப்பரா இருக்கே. இன்னிக்கு டின்னருக்கு இதான்.

Kamatchi said...

நன்ராக எள்ளின் மணத்துடன் கூடவே கோவைக்காயும் சேர்ந்த டேஸ்டியான சாதம்.குக்கரைத் திறந்தவுடனே வாஸனை கமாய்க்கும்.

கோவை2தில்லி said...

வித்தியாசமாக இருக்கேம்மா.செய்து பார்த்து விடுகிறேன்.

Gm Dinesh said...

Hi Madam ,how do make the "Kadappa Sambar"
Explain pls

Seshadri e.s. said...

குறிப்பைப் பார்க்கையில் ருசிக்கத் தோன்றுகிறது! நன்றி!
என்னுடைய வலைப்பூவில்
நம்பிக்கைக்கீற்று! காண வரவேற்கிறேன்!

வெங்கட் நாகராஜ் said...

வித்தியாசமான கலந்த சாதம்....

பகிர்வுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

எனக்கு மிகவும் பிடிக்கும்...

குறிப்பிற்கு நன்றி அம்மா...

Lakshmi said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரமா ரொம்ப நாளாக காணோம்மே வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸாதிகா இதுபோலவே குட்டி பாவக்காயிலும் பண்ணலாம் கசப்பே தெரியாம நல்லா இருக்கும்.வருகைக்கு நன்றி

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

Lakshmi said...

சாந்தி டின்னருக்கு செய்து பாத்தியா வருகைக்கு நன்ரி

Lakshmi said...

காமாட்சி வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி செய்து பாரும்மா.வருகைக்கு நன்ரி

Lakshmi said...

ஜி. எம். தினேஷ் வருகைக்கு நன்றி நீங்க கேட்ட குறிப்பு பின்னால வந்துண்டே இருக்கு

Lakshmi said...

சேஷாத்ரி வருகைக்கு நன்றி

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி இந்தக்கால பசங்க எல்லாத்திலயுமெ வித்யாசம் எதிர் பார்க்குராங்களே

Lakshmi said...

திண்டுக்கல் தனபாலன் உங்களுக்கும் பிர்டிக்குமா நேத்து டின்னருக்கு செய்து பாத்தாச்சா

கோமதி அரசு said...

கோவைக்காய் சாதம் புதுமையாக இருக்கிறது. செய்து பார்க்க தோன்றுகிறது உங்கள் குறிப்புகள் படங்கள் எல்லாம்.

Lakshmi said...

வாங்க கோமதி அரசு செய்து பாருங்க நன்றி

மாதேவி said...

வித்தியாசமாக இருக்கின்றது.

Lakshmi said...

மாதேவி நன்றிம்மா

மஞ்சுபாஷிணி said...

அட லக்‌ஷ்மிம்மா கோவக்காய் உருளைக்கிழங்கு வறுப்பதுண்டு எங்க மாமியார் கிட்ட நான் கத்துக்கிட்டது. எங்க வீட்ல கோவைக்காய் வறுப்போம்.. இது புதுவிதமா இருக்கே... கண்டிப்பா செய்து பார்த்துட வேண்டியது தான்...

கோவக்காய் ரொம்ப ருசியான அதே சமயம் இரும்பு சத்துள்ள காய்....

அன்புநன்றிகள்மா பகிர்வுக்கு.

VijiParthiban said...

மருத்துவ குணமுள்ள கோவைக்காய் சாதம் .. வித்தியாசமாக இருக்கேம்மா.செய்து பார்த்து விடுகிறேன்.

Lakshmi said...

மஞ்சு இப்படி பண்ணி பாரு நல்லா இருக்கும்

Lakshmi said...

விஜி பார்த்திபன் வாங்க நன்றி

Geetha Sambasivam said...

வெங்காயமும் சேர்த்துக் கோவைக்காய் சாதம் பண்ணினது உண்டு. இப்போக் கோவைக்காய் சாப்பிடறதை நிறுத்திட்டோம். :))))

Lakshmi said...

சில நாட்களில் வெங்காயம் சேர்க்காம இருப்போம் இல்லியா அன்று இப்படி செய்யலாமே

என்னை ஆதரிப்பவர்கள் . .