Google+ Followers

Pages

Monday, November 26, 2012

ஜாய், ஜாய் சிங்கபூர்

ரொம்ப நாள் ஆச்சு பதிவுலகம் பக்கம் வந்தே யாராவது என்ன காணோமின்னு
தேடினீங்களா?. இப்ப சிங்கபூர்ல இருக்கேன்.இங்கவந்துட்டு உங்க எல்லாருடனும்ஷேர் பண்ணிக்கலேன்னா எப்படி இல்லியா? அதான் வந்துட்டேன். நவம்பர் 23-ம்தேதி காலை8 மணிக்கு மும்பைலேந்து சிங்கப்பூர் ஃப்ளைட் இருந்தது. மும்பை தாணாவில் இருக்கும் மகன் வீட்லேந்து காலை 5-மணிக்கே கிளம்பி  ஏர் போர்ட் வந்தேன்.காலை   நேரம் ஆதலால் டிராபிக்ல மாட்டிக்காம 45- நிமிஷத்துல  வந்துட்டோம்.ஏர்போர்ட்டுக்குள்ள யாரும் வரமுடியாதே இல்லியா மகன் வெளிலேந்தே கிளமிபிட்டான். நான் லக்கேஜ் ட்ராலி எடுதுண்டு உள்ளே போனேன்.போர்டிங்க் பாஸ் வாங்கிண்டு லக்கேஜ் செக் இன் பண்ணிட்டு இமிக்ரேஷன் கௌண்டர்போனேன்.போர்டிங்க் பாஸ் வாங்கும் போதே விண்டோ ஸீட் கேட்டு வாங்கிண்டேன். தனியாவா போரிங்க யாரு அங்க இருக்காங்கன்னு பார்மல் கேள்வி பதில்கள்.

இமிக்ரேஷன் கௌண்டர் எங்கியோ ஒரு மூலேலெ இருந்தது. தேடிதேடி நடந்து போகவே 15- நிமிஷம் ஆச்சு. அங்க கிளியரன்ஸ் முடிசுட்டுசெக்யூரிட்டி
செக்கிங்கு இன்னொரு மூலை போயி அந்த பார்மாலிட்டில்லாம் முடிச்சுட்டு
 கேட் நம்பர் செக் பண்ணிண்டு போனேன். அது அண்டர்க்ரவுண்ட்ல ஒரு மூலேல இருந்தது. எஸ்கலேட்டர் இருந்தாலும் படிகள் வழியாகவே இறங்கிபோய் கேட் பக்கம் போனேன். நிறைய குஷன் சீட்ஸ் இருந்தது. நிறைய
டைம் இருந்தது. சும்ம உக்கார முடியல்லே. ஏர்போர்ட் சுத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அடிக்கடி பார்த்த காட்சிகள்தான். எப்பவும் புதுசாவே தெரியுது நிறையா டியூட்டிஃப்ரீஷாப்ஸிருந்தது. காபிடே ல போயி ஒரு காபி குடிச்சேன்.காபி குடிச்ச பிறகு காசு கொடுத்தேன். மேடம்  ஏற்கனவே காசு கொடுதுட்டீங்க  என்று சொன்னான். நான் எப்ப கொடுத்தேன்.இல்லியேன்னேன். இல்லே மேடம் முதல்ல கூப்பன் கொடுத்திட்டுதான் காபியே சர்வ் பண்ணுவோம். ஸோ நீங்க பணம் கொடுதுடீங்கன்னு சொன்னான்.எனக்காக யாரு பணம் கொடுத்திருப்பாங்கன்னு ஒரே குழப்பம்.

 சரி காபி ஃப்ரீயா குடிச்சுட்டு மறுபடி கேட் பக்கம் போயி வெயிட்டிங்க்.
 7.30 போர்டிங்க். வரிசையா ப்ளேனுக்குள்ள போனோம்.பின்னாடி 22-ம் சீட் விண்டோ. இது இண்டிகோ ஃப்ளைட். அதாவது பட்ஜெட்ஃப்லைட். உள்ள சாப்பிட ஒன்னும் தரமாட்டாங்க. எதானும் வேனும்னா எக்ஸ்ட்ரா பனம் பே பண்ணி வாங்கிக்கனும். நான் வீட்லேந்து மேரி பிஸ்கெட் 4- கொண்டு வந்திருந்தேன். காபி குடிக்கும்போது பிஸ்கெட் எடுதுகிட்டு மெடிசினும் எடுத்துகிட்டேன். உள்ள எதும் வாங்கலே.குடிக்க தண்ணி மட்டும் தராங்க.
பொதுவா இண்டெர் நேஷனல் ஃப்ளைட்ல லாம் நம்ம சீட்டுக்கு முன் சீட் முதுகு பக்கம் சின்னதா ஒரு டி.வி. இருக்கும். படமோ, பாட்டோ, கேம்ஸோ எதுவேனாலும் பாத்துக்கலாம் . டைம் நல்லா போகும். இது பட்ஜெட் ஃப்ளைட்
ஸோ அதெல்லாம் ஏதும் இல்லே. 6 மணி நேரம் பொழுதைப்போக்கனுமே.கையில் எம். பி. 3, பென் நோட்புக், புக்ஸ் எல்லாம் வச்சிருந்தேன்.வழக்கம்போல டேக்  ஆஃப் ரசிக்க ஆரம்பித்தேன். வீட்ல குட்டி குழந்தைகள் தவழ  கத்துக்கும் போது முதலில் பின்னாடிதான் தவழும் யாரானும் கவனிச்சுருக்கீங்களா?அதுபோல ப்ளேன் கிலம்பினதும் முதலில் பின்னாடி 5  நிமிஷம் ஓடிட்டு அப்புரம்தான் முன்னாடி ஓட ஆரம்பிக்குது. எதைத்தான் எதுக்கு தான் உதாரனமா சொல்ரேன் இல்லியா?ரன்வேயில் ஃபுல் ஸ்பீடில் ஓடி டேக் ஆஃப் பாக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். பெரிய பெரிய பில்டிங்கெல்லாம் மெது மெதுவாக மினியேச்சர் சைசுக்கு மாரிகிட்டே போகும் இல்லியா? அதெல்லாம் ஒரு 15  நிமிஷ வேடிக்கைகள். பிறகு ஒரே மேக மண்டலம்தான்,. வேர ஏதுமே பாக்க முடியாது. 

49 comments:

Avargal Unmaigal said...

உலகம் சுற்றும் லஷ்மி அம்மாவின் பயண அனுபவம் அருமை

மகேந்திரன் said...

நீண்ட நாட்கள் கழித்து
வருகிறீர்கள்
வாங்க வாங்க...
வந்ததும் அழகான ஒரு நகரினைப் பற்றிய
பதிவு....
பயண அனுபவம் அழகு

dina pathivu said...

மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டியில் இன்று அட்ராசக்க -சி.பி. செந்தில்குமார் சிறப்பு பேட்டி
http://www.dinapathivu.com/
தினபதிவு திரட்டி

Mahi said...

தவழும் குழந்தை- டேக் ஆஃப் ஆகும் விமானம்! :) நல்ல உவமை லஷ்மிம்மா! சிங்கப்பூர் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்!

அமுதா கிருஷ்ணா said...

சிங்கப்பூர் பயண கட்டுரையா அருமையா ஆரம்பிக்குது.

அமைதிச்சாரல் said...

விமானம் டேக் ஆஃப் ஆகி மேலெழும்பும் அந்தக்கணங்கள் எனக்கும் ரொம்பப்பிடிக்கும். இறக்கை முளைச்சு ஜிவ்வுன்னு நாமே பறந்து போற மாதிரியான அனுபவம் அது. மேலே போனப்புறம் செம போரிங். வானத்துல கந்தர்வர்கள், இந்திரசபை நாட்டியம்னு ஏதாச்சும் தெரிஞ்சாலாவது நல்லாருக்கும். கொஞ்சம் பொழுது போகும் :-))))))

கோவை2தில்லி said...

சிங்கப்பூர்ல இருக்கீங்களாம்மா..... உங்கள் பயண அனுபவங்கள் இனிமையாகட்டும்.

தொடருங்கள். நாங்களும் வருகிறோம்.

வல்லிசிம்ஹன் said...

அடடா சிங்கப்பூர் பயணமா. யார்வீடு என்றெல்லாம் சொல்லவில்லையே. படா மாடர்ன் அம்மாதான்.
அழகா உவமையா விமானப் பயணத்தை விவரிக்கிறீங்க.
தொடர்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல ஆரம்பம் அம்மா... வாழ்த்துக்கள்...

இனி படங்களுடன் பகிர்வினை எதிர்ப்பார்க்கலாம்...

| * | அறிவன்#11802717200764379909 | * | said...

குழந்தை தவழும் எடுத்துக் காட்டு சிந்திக்க வைத்தது..

உண்மையில் அப்படியா என்று கவனிக்க வேண்டும் ! :))

எழுத்துப் பிழைகளைத் தவிர்த்து எழுதலாமே..

மாரி-மாறி
வேர-வேறு


நன்றி.

பழனி.கந்தசாமி said...

ரசித்தேன்.

வெங்கட் நாகராஜ் said...

அட சிங்கப்பூர் பயணமா.... எங்களுக்கும் சந்தோஷம் தான்...

Lakshmi said...

அவர்கள் உண்மைகள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

தினப்பதிவு திரட்டி வருகைக்கு நன்றி உங்க பக்கம் உள்ள வரவே முடியல்லே என் பேரு லாகின் பண்ணவும் முடியல்லியே

Lakshmi said...

மஹி வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

Lakshmi said...

அமுதா கிருஷ்னா வருகைக்கு நன்றிம்மா

Lakshmi said...

ஆமா சாந்தி. பஞ்சு பொதி மேகங்கள் எல்லாமே ரம்பை ஊர்வசியாகி நாட்டிய கச்சேரி நடத்துமே அடுத்த வாட்டி பாரு. ஹ ஹ ஹ

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

Lakshmi said...

வல்லிம்மா வாங்க வாங்க சின்னமகன் சிங்கபூர்லதான் இருக்கான் ஏற்கனவே மூனு தடவை போயி வந்துட்டேன் ஆனா உங்க எல்லார்கூடவும் பகிர்ந்துக்கலே. இப்பதான் உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்கிறேன்

Lakshmi said...

திண்டுக்கல் தனபாலன் வாங்க இனி படமும் சேர்க்கிரேன் நிறையா பேரு சிங்கப்பூர் பத்தி பதிவு போட்டிருக்காங்க நா என்னத்த புதுசா சொல்லப்போரேன்

Lakshmi said...

அறிவன் வாங்க இந்த எழுத்துப்பிழைதான் என் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் சரி பண்ணிக்கரேன்

Lakshmi said...

பழனி கந்தசாமி சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

நன்றாக ‘என்ஜாய்’ செய்ய என் வாழ்த்துகள் லஷ்மிம்மா:)! தொடருங்கள்.

Lakshmi said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

athira said...

ரொம்ப நாள் ஆச்சு பதிவுலகம் பக்கம் வந்தே யாராவது என்ன காணோமின்னு
தேடினீங்களா?////

ஆமா தேடினோம்...

athira said...

லக்ஸ்மி அக்கா ஃபுரொம் சிங்கப்பூரோ?:) அவ்வ்வ்வ் கலக்குங்கோ.. இப்ப எல்லோரும் சிங்கப்பூர்தான் போகினம்.. ஏனெண்ணுதான் புரியல்ல:))

athira said...

//அதுபோல ப்ளேன் கிலம்பினதும் முதலில் பின்னாடி 5 நிமிஷம் ஓடிட்டு அப்புரம்தான் முன்னாடி ஓட ஆரம்பிக்குது. //

என்ன சொல்றீங்க லக்ஸ்மி அக்கா? புரியல்ல.. பிளேனுக்கு ரிவேர்ஸ் கியர் இல்லை.. அது பார்க் பண்ணி நிற்கும்போது எல்லோரும் ஏறிடுவோம், அதைத் திருப்ப முடியாதல்லவோ? அதனால... ஒரு ரக் வந்து தள்ளிக்கொண்டே போகும், அப்போ பிளேன் பின்னால போகும்.. அப்படியே போய் ரன்வேயில் ஏறியதும்தான்.. முன்னால ஊரத் தொடங்கும்.

Lakshmi said...

அதிரா வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.அடுத்த வாட்டி ப்ளேனில் போகும் போது கவனிச்சு பாரு நான் சொன்னபடில்லாம் நடக்குதான்னு.ரிவர்ஸ்கியர் இருக்குதோ இல்லியோ ஆனா முதல்ல பின்னாடிதான் போகுது.

கோமதி அரசு said...

நானும் இரண்டு மூன்று மாதங்களாய் வலை பக்கம் இல்லை, சிங்கபூர் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

அமர பாரதி said...

சிங்கப்பூர் பயணம் நல்லபடி அமைய வாழ்த்துக்கள் அம்மா.

மாதேவி said...

ஆரம்பமே குழந்தை தவழல் வர்ணனையுடன்.

நாங்களும் தவழ்ந்து கொண்டே வருகின்றோம். :))

Lakshmi said...

அமர பாரதி முதல் முறையா என் பக்கம் வரீங்களா இனி அடிக்கடி வருவீங்க நன்றி

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி

Ramani said...

தங்கள் பயணக் கட்டுரையின் தீவிர ரசிகன் நான்
எளிமையான வார்த்தைகளில் நுணுக்கமான விஷயங்களை
மிக நேர்த்தியாகச் சொல்லிப் போகும் பாணி எனக்கு
ரொம்பப் பிடிக்கும்.
ஆர்வத்துடன் தொடர்ந்து வருகிறோம்
.தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

தங்கள் பயணக் கட்டுரையின் தீவிர ரசிகன் நான்
எளிமையான வார்த்தைகளில் நுணுக்கமான விஷயங்களை
மிக நேர்த்தியாகச் சொல்லிப் போகும் பாணி எனக்கு
ரொம்பப் பிடிக்கும்.
ஆர்வத்துடன் தொடர்ந்து வருகிறோம்
.தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

tha,ma 4

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றிகள்.

Asiya Omar said...

லஷ்மிமா,நீங்க சிங்கப்பூர் பற்றி எழுதுவதை பேஸ்புக் பகிர்வை பார்த்து தெரிந்து வந்தேன்.ஆரம்பமே அசத்தலாக இருக்கு.

Geetha Sambasivam said...

அருமையான பயணக் கட்டுரை. விளக்கங்களும் அருமை.

Lakshmi said...

ஆசியா இங்க நிறையாபேரு பாக்குரதில்லே அதான் ஃபேஸ்புக்லயும் ஷேர் பன்ரேன்

Lakshmi said...

கீதா வாங்க வாங்கஃ.

JAYANTHI RAMANI said...

எனக்கு பயணம் செய்யறது ரொம்ப பிடிக்கும். பயணக்கட்டுரைகளைப் படிப்பதும் ரொம்ப பிடிக்கும். ரொம்ப அருமையா ஆரம்பிச்சிருக்கு உங்க கட்டுரை. ஒண்ணொண்ணா படிக்கறேம்மா.
அப்புறம், கடைசி வரைக்கும் காபிக்கு ரூபா யார் கொடுத்தான்னு தெரியலையா?

Lakshmi said...

ஜெயந்தி வாங்க மெதுவா ஒவ்வொரு பதிவா படிச்சு பாருங்க. காபிக்கு காசு கொடுத்தது யாருன்னே தெரியல்லியே

Agila said...

ரொம்ப நாளா ஆளைக் காணோமே? எப்படி இருக்கீங்க ?

Agila said...

ரொம்ப நாளா ஆளைக் காணோமே? எப்படி இருக்கீங்க ?

Rupan com said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள். சென்று பார்வையிட இதோ.http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_13.html?showComment=1386903488180#c7173699904790276264

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Rupan com said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள். சென்று பார்வையிட இதோ.http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_13.html?showComment=1386903488180#c7173699904790276264

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

என்னை ஆதரிப்பவர்கள் . .