Google+ Followers

Pages

Wednesday, November 28, 2012

சிங்கப்பூர் 2

ப்ளேன் மேலே கிளம்பி மேக மண்டலத்துக்குள்ள பறக்க ஆரம்பித்ததும் ப்ளேனுக்குள்ளே  இருக்கும் பேசஞ்சர்சை வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சேன்.
எனக்கு முன் சீட்டில் இருந்த பெண்ணுக்கு கால் முட்டிவர நீண்ட அடர்த்தியான
தலைமுடி இருந்தது.பாக்க வே நல்லா இருந்தது. இப்பல்லாம் எல்லாரும் கழுத்துகிட்டயே குட்டியா கட்செய்துடராங்களே?ஒரு குட்டி குழந்தை முன்னும் பின்னுமா ஓடிகிட்டே இருந்தது அவன் தாத்தா அவன் பின்னாடியே ஓடிகிட்டு இருந்தார்.எதிர் சீட்ல ஒரு பையன் லாப்டாப் ஆன் பண்ணிட்டு காதில் ஹெட் போனும் மாட்டிகிட்டு வேறு உலகத்தில் சஞ்சரிக்க  ஆரம்பிச்சுட்டான்.
பின்னால ஒரு 12 வயசு பையன் காலை நீட்டி என் சீட்டை தள்ளிகிட்டே இருந்தான்.இப்படி ஒவ்வொருவரையா வேடிக்கை பாத்துகிட்டே ஒருமணி நேரம் டைம் பாஸ் பண்ணிட்டேன்.எம்.பி 3-யில்பாட்டு கேட்டுகிட்டே கொஞ்ச நேரம் எழுதினேன்.ஏர்ஹோஸ்டசிடம் தண்ணிகேட்டு வாங்கிண்டேன். கொஞ்ச நேரம் கண்மூடி மனதை காலியாக அமைதியாக வைத்திருந்தேன். பிறகு கொஞ்ச நேரம் புக் படிச்சேன்.இமிக்ரேஷன் ஃபார்ம் கொடுத்து ஃபில்பண்ணசொன்னா.அதையெல்லாம் முடிசுட்டுசும்ம உக்காந்தேன்.ஒரு வழியா2.30-க்கு சிங்கபூர் சாங்கி ஏர்போர்ட் வந்தது பிரும்மாண்ட அழகில் தக தகன்னு ஜொலிக்குது. ஆனா இப்ப ரசிச்சு பார்க்க நேரம் இல்லேசாங்கி ஏர்போர்ட். அங்க அப்போ டைம் ஈவினிங்க்5 மணி.ப்ளேன் லேண்ட் ஆகும்போதே வெளில வேடிக்கை பாத்துகிட்டே வந்தேன். எதுமே பக்க முடியாம மழை ஜோராக கொட்டிகிட்டு இருந்தது.

இடி மின்னலுடன் நல்ல மழை.வெளில வந்து இமிக்ரேஷன் கிளியரன்ஸ் கௌண்டர் போனேன். நம்ம நேரம் அந்தகௌண்டரில் ஒரு தமிழ் ஆபீசர் தான் இருந்தாங்க.கோமதின்னு பேரு. திருன வேலிக்காரின்னு சொன்னாங்க.பாஸ்போர்ட், இமிக்ரேஷன் ஃபார்மில் ஒரு மாசத்துக்கு விசா ஸ்டாம்படிச்சு கொடுத்தாங்க. என் லக்கேஜ் எந்த இடத்தில் வரும்னும் சொன்னாங்க அங்கபோயி கன்வேயரில் வந்த  லக்கேஜ் கலெக்ட்பண்ண 15 நிமிஷம் வெயிட் பண்ண வேண்டி  இருந்தது. வெளில மழை பெட்டி பை எல்லாம் நனைஞ்சு இருந்தது.தீபாவளி கழிஞ்சு ஒரு வாரத்தில் கிளம்பினதால மகனுக்கு   பட்சணம் எல்லாம் கொண்டு போயிருந்தேன். அந்தப்பை சொட்ட சொட்ட நனைஞ்சுட்டு. வெளில மகனும் மறுமகளும் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. ஒரு ஹாய் சொல்லிட்டு ப்ளைட்ல எதானும் சாப்டியான்னு கேட்டா. இல்லே காலேல 4 மேரி பிஸ்கெட் காபி மட்டும்தான்னு சொன்னேன்.
எதானும் வாங்கி சாப்பிட்டிருக்கலாமில்லென்னு கேட்டா. ஏர்போர்ட்லேயே
ஆனந்தபவன் ரெஸ்டாரெண்ட் இருந்தது. அங்க போயி மசால் தோசை காபி குடிச்சு கீழ வந்து டாக்சி பிடிச்சு அவங்க இருக்கும்செங்காங்க் என்னும் இடம் போனோம்.

வீடு நல்லா பெரிசா இருந்தது. 3பெட்ரூம், ஹால் கிச்சன்வராண்டா என்ரு விச்தாரமாக இருந்தது.பெட்டி பை எல்லாம் காலி பண்ணி எல்லா சாமான்களும் வெளில வச்சு அதனதன் இடத்தி வச்சுட்டு கொஞ்ச நேரம் பேசிண்டு இருந்தோம். என் மூனாவது மகனும் மறுமகளும் சிங்க பூரில் இருக்காங்க. ஏற்கனவே 3 வாட்டி வந்திருக்கேன் ஆனா உங்க எல்லாருடனும் ஷேர் பண்ணிக்கலே. ஸோ இந்தவாட்டி உங்க கூட பகிர்ந்துக்கரேன். சிங்கபூர் பத்தி நான் எதுமே புதுசா சொல்லவேண்டிய அவசியமே இல்லே நிறையா பேரு நிறைய பதிவில் சொல்லி இருக்காங்கதான். நா என்னத்த புதுசா சொல்லிட முடியும் இல்லியா.குளித்து சாப்பிட்டு படுக்க போயிட்டேன் ஜெட்லாக் இருக்கும் இல்லியா.மழை இன்னும் விடாம கொட்டிட்டு இருந்தது. மகன் சொன்னான் சிங்கபூரில் மழைகாலம்னு தனியா எதும் கிடையாது டெய்லியே ஒருமணி நேரமோ ரெண்டு மணி நேரமோ நல்ல மழை கொட்டி ஊரயே பளிச்சுன்னு கழுவி விட்டுடும். அதுவுமில்லாம இங்க மரங்களை வெட்டுரதே இல்லே ஸோ வருஷம் பூராவும் மழை இருக்கும்னு சொன்னான்

52 comments:

வெங்கட் நாகராஜ் said...

//துவுமில்லாம இங்க மரங்களை வெட்டுரதே இல்லே //

நல்ல மனிதர்கள்.

அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன்...

Mahi said...

ஒவ்வொரு ஊரிலும் குழந்தைகள் இருப்பது புது இடங்களை பார்க்க ஒரு வசதி, இல்லையாம்மா? :) என்ஜாய் சிங்கப்பூர்!

புதுகைத் தென்றல் said...

வணக்கம் லட்சுமிம்மா,

சிங்கை போயிருக்கீங்க. சந்தோஷம். தம்பி அங்கதான் இருக்காப்ல. :)

Avargal Unmaigal said...

பயண அனுபவத்தை நீங்கள் சொல்லும் விதம் மிக அருமை

வல்லிசிம்ஹன் said...

சிங்கப்பூர்ல மழைல வீட்டுக்கு வந்தாச்சு.
சாப்பிட்டுத் தூங்கியாச்சு,. சரி இந்ததடவை விட்டுடறேன். நான் சிங்கப்பூர் போனதே இல்லை. நீங்க உங்க பார்வையில் சொல்லுங்க. சரியா.:)

திண்டுக்கல் தனபாலன் said...

மரம் வெட்டுவதே இல்லை... வருடம் முழுவதும் மழை... - இந்த தகவலே போதும் அம்மா... அனைவரும் உணர வேண்டிய தகவல்...

நன்றி... இனிமையை தொடருங்கள் அம்மா...

கோவை2தில்லி said...

சிங்கப்பூர் பதிவு சூப்பரா போகுது.... தினமும் மழையா....ஜில்லுன்னு இருக்குமே...

ராமலக்ஷ்மி said...

அங்கிருந்த மழைக்காட்டு மரங்களை ரசித்து எடுத்தேன் பல படங்கள்.

பகிர்வு இதம்.

மனோ சாமிநாதன் said...

பயண அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது லக்ஷ்மிம்மா! தொடருங்கள்!

அப்பாதுரை said...

முழங்கால் வரைக்கும் அடர்த்தியா தலைமுடி பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கும்.

Ranjani Narayanan said...

எல்லா விஷயங்களையும் ரசித்து ரசித்து எழுதுகிறீர்கள்.
உங்கள் பார்வையில் சிங்கபூர் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

Seshadri e.s. said...

சிங்கபூரில் மழைகாலம்னு தனியா எதும் கிடையாது டெய்லியே ஒருமணி நேரமோ ரெண்டு மணி நேரமோ நல்ல மழை கொட்டி ஊரயே பளிச்சுன்னு கழுவி விட்டுடும். அதுவுமில்லாம இங்க மரங்களை வெட்டுரதே இல்லே ஸோ வருஷம் பூராவும் மழை இருக்கும்னு சொன்னான்//
கேட்கும்போதே மகிழ்வாக உள்ளதே! பகிர்விற்கு நன்றி!

அமைதிச்சாரல் said...

லக்ஷ்மிம்மா,.. எல்லோருடைய பார்வையிலும் சிங்கப்பூரைப் பார்த்தாச்சு. உங்க பார்வையிலும் பார்க்க வேணாமா? எல்லாத்தையும் எழுதணும். ரைட்டா :-))))

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் அம்மா...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

Lakshmi said...

மஹி உண்மைதான் அதனாலதான்
நாலு இடங்கள் சுத்த முடியுது

Lakshmi said...

புதுகைத்தென்றல் வருகைக்கு நன்றி ஆமா என் சின்னமகன் இங்க இருக்கான்

Lakshmi said...

அவர்கள் உண்மைகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

அவர்கள் உண்மைகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

வல்லிம்மா நான் சொல்லும் விதம் நீங்கள்ளாம் ரசிச்சுப்படிப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு

Lakshmi said...

திண்டுக்கல் தனபாலன் ஆமாங்க எங்க பாத்தாலும் கண்ணுக்கு குளுமையா பச்சை பசேல் மரங்கள் இருக்கு.

Lakshmi said...

கோவை2தில்லி மழை நன்னாதான் இருக்கு குடை இல்லாம வெளியே கிளம்பவே முடியல்லே

Lakshmi said...

ஆமா ராமலஷ்மி உங்க பதிவும் படிச்சிருக்கேன். வருகைக்கு நன்றி

Lakshmi said...

மனோ மேடம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

அப்பாதுரை ஏங்க நீண்ட தலைமுடி பாத்து பயம்? வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரஞ்சனி நாராயானன் வாங்க சந்தோஷமா இருக்கு உங்கள என் பக்கம் பாக்க இன்னமும் உங்க பக்கம் என்னால கமெண்ட் போடவே முடியல்லே பலமுறை முயற்சி செய்து பாத்துட்டேன்

Lakshmi said...

சேஷாத்ரி ஆமாங்க மரங்கள் செழிப்பா அடர்த்தியா பச்சை பசேல்னு வளர்ந்து நிக்குது. அதனால மழையும் தாராளமா இருக்கு

Lakshmi said...

சாந்தி பாவம் நீகல்லாம் பொருமையா படிக்க ரெடியா இருக்கீங்க அப்புரமென்ன புகுந்து விளையாட வேண்டியதுதானே

Lakshmi said...

தனபாலன் வலைச்சர தகவலுக்கு நன்றி

துபாய் ராஜா said...

வணக்கம் அம்மா.சிங்கப்பூரில்தான் இருக்கிறேன். போன் நம்பர் கொடுங்கள்.அழைக்கிறேன்.

Lakshmi said...

துபாய் ராஜா சிங்கபூரில் இருகீங்களா? சந்தோஷம் நம்பர் தரேன் இது வேட்டு லேண்ட்லைன் ஓகேவா?

66186733

சத்ரியன் said...

நானும் இங்கதாம்மா இருக்கேன். 96235852

Lakshmi said...

சத்ரியன் நீங்களும் இங்கதான் இருக்கீங்களா துபாய் ராஜாவுக்கு நம்பர் கொடுதிருக்கென் மேலே பின்னூட்டத்ல நீங்கலும் கால் பண்ணுங்க

athira said...

ஆ.. சூப்பர் லக்ஸ்மி அக்கா.. நாங்கள் நேரில போய் இறங்கியதைப்போல எழுதியிருக்கிறீங்க.. சொல்லுங்க..

Lakshmi said...

அதிரா நீயும் என் கூடவே சிங்கபூர் வந்தியா இங்கியும் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துடலாமா?

Sparkarts Sparkarts said...

மிக அருமை தொடருங்கள்

சகோ

கோமதி அரசு said...

உங்கள் பார்வையில் சிங்கபூர் பார்க்க ஆவல் அக்கா. உங்கள் சரளமான நடை அற்புதம்.

rajalakshmi paramasivam said...

வணக்கம் அம்மா.
உங்களின் சிங்கப்பூர் விஜயம் அழகாக இருக்கிறது.பிளேன் அனுபவம் மிகவும் இயல்பாக உள்ளது.

ராஜி

Lakshmi said...

spararts வாஙக வாங்க வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோமதி அரசு வாங்க நன்றி

Lakshmi said...

ராஜி முதல் முறையா வரீங்களா இனிமேல அடிக்கடி வாங்க நன்றி

மாதேவி said...

சிங்கப்பூர் பயணத்துடன் நண்பர்கள் சந்திப்பும் மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி நண்பர்கள் சந்திப்பு இன்னும் பாக்கி இருக்கும்மா

இராஜராஜேஸ்வரி said...

இங்க மரங்களை வெட்டுரதே இல்லே ஸோ வருஷம் பூராவும் மழை இருக்கும்

பெய்யென பெய்யும் மழை !

Ramani said...

சொல்லிச் செல்லும் விதம் உடன் பயணிக்கும்
உணர்வைத் தந்து போகிறது
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

tha.ma 4

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கும் தமிழ் மண ஓட்டுக்கும் நன்றி

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி நன்றி

JAYANTHI RAMANI said...

உங்க பக்கத்துல உக்காந்து கதை கேக்கற மாதிரி இருக்கு உங்க அனுபவத்தைப் படிக்கறது. எத்தனை பேர் சொல்லி இருந்தா என்ன, என்னை மாதிரி புதிதா படிக்கறவங்களுக்க்காக மறுபடியும் சொல்லுங்க.

JAYANTHI RAMANI said...

உங்க பக்கத்துல உக்காந்து கதை கேக்கற மாதிரி இருக்கு உங்க அனுபவத்தைப் படிக்கறது. எத்தனை பேர் சொல்லி இருந்தா என்ன, என்னை மாதிரி புதிதா படிக்கறவங்களுக்க்காக மறுபடியும் சொல்லுங்க.

Lakshmi said...

ஜெயந்தி எனக்கு இப்படித்தான் எழுத வருதும்மா. இலக்கண இலக்கிய சுத்தமால்லாம் எழுதவே தெரியல்லே.

kavithai (kovaikkavi) said...

முதலிரு அங்கங்களும் வாசித்தேன் கோபு சார் குறிப்பிட்டிருந்தார்.
பயணக் கட்டரை பிடிக்கும் என்பதால்.
இனிய வாழ்த்து சகோதரி.

என்னை ஆதரிப்பவர்கள் . .