Pages

Wednesday, December 8, 2010

கற்பூர நாயகியே கனகவல்லி.



கற்பூர நாயகியே கனக வல்லி, காளி மஹமாயி கருமாரியம்மா.

பொற்கோவில் கொண்ட சிவகாமி அம்மா,பூவிருந்hத வல்லி தெய்வ

யானை யம்மா.

விற்கோலவேதவல்லி விசாலாஷி, விழிக்கோல மாமதுரை மீனாஷி

சொற்கோவில நானமைத்தேன் இங்குதாயே.

சுடராக வாழவைப்பாய் என்னை நீயே (அம்மா)

புவனமுழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி,புறமெரித்தோர் புரமெரிக்கும்

பரமேஸ்வரி. நவ நவமாய் வடிவாகும் நாகேஸ்வரி, ந்ம்பியவர் கை விள்க்கே

ஜோதீஸ்வரி. (அம்மா)








கவலைகளை தீர்த்து வைக்கு்ம் காளீஸ் வரி காரி்ருளில் தீச்சுடரே ஜோதீஸ்வரி,உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி,, உன் அடிமை சிறியேனை

நீ ஆதரி.

நெற்றியில் உன் குங்குமமே நிறய வேண்டும். நெஞ்சில் உன் திரு நாமம்

பெருக வேண்டும்.கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்.

பாடும் கவிதையிலே உன் நாமம் வழிய வேண்டும்.

சுற்றமெல்லாம் நீடூழி வாழவேண்டும், ஜோதியிலே நீ இருந்து ஆள வேண்டும்

ம்ற்றதெல்லாம் நான் உனக்கு சொல்லலாமா, உன் மடிமீது பிள்ளை எனை

தள்ளலாமா? (அம்மா)

காற்றாகி கனலாகி கடலாகினாய், கயிராகி, உயிராகி உடலாகினாய்

நேற்றாகி இன்றாகி நாளாகினாய். நிலமாகி பயிராகி , உணவாகினாய்.

தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய் .தொழுதாலும் அழுதாலும்

வடிவாகினாய்.போற்றாத நாளில்லை தாயே உன்னை பொருளோடும்

புகழோடும் வைப்பாய் என்னை.

கும்பிடவோ கை இரண்டும் போதவில்லை கூப்பிடவோ நா ஒன்றால்

முடியவில்லை. நம்பிடவோ மெய் தனிலே சக்தி இல்லை . நடந்திடவோ

காலி ரண்டல் ஆகவில்லை . செம்பவள வாயழகி உனனையல்லோ என்

சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை. அம்பளவு விழியாளே உன்னை

என்றும் அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை

அன்புக்கே நான் அடிமை ஆக வேண்டும். உன் அறிவு்க்கே என் காது கேட்க

வேண்டும். வம்புக்கே போகாமல் இருக்கவேண்டும். வஞ்சத்தை என் நெஞ்சம்

அறுக்கவேண்டும்.பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்.பரிவுக்கே நான்

என்றும் பணியவேண்டும். என்பக்கம் இவை யெல்லாம் இருக்கவேண்டும்
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்.

4 comments:

Unknown said...

//கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்.

பாடும் கவிதையிலே உன் நாமம் வழிய வேண்டும்.//
//காற்றாகி கனலாகி கடலாகினாய், கயிராகி, உயிராகி உடலாகினாய்

நேற்றாகி இன்றாகி நாளாகினாய். நிலமாகி பயிராகி , உணவாகினாய்//

//தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய் .தொழுதாலும் அழுதாலும்

வடிவாகினாய்.போற்றாத நாளில்லை தாயே உன்னை பொருளோடும்

புகழோடும் வைப்பாய் என்னை.//

அவினாசி மணி அவர்களின் பாடலுக்கு, உங்கள் வார்த்தைகள் புது அலங்காரம் செய்திருக்கிறது.

குறையொன்றுமில்லை. said...

பாரத்..பாரதி வருகைக்கு நன்றி.

cheena (சீனா) said...

அருமையான அம்மன் பாடல் - வாழ்க வளமுடன்

குறையொன்றுமில்லை. said...

நன்றி சீனா சார்.

என்னை ஆதரிப்பவர்கள் . .