Pages

Saturday, December 11, 2010

கல்யாண கலாட்டா.

                 எங்க பெண்ணின்கல்யாணம் ஒரு 25 வருடங்களுக்கு முன்பு
மும்பையில் நடந்தது. மும்பையில் ஒரு வழக்கம், திருமணம்
தாலிகட்டி முடிந்ததும்,தம்பதிகள், இருவ்ரின் பெற்றோர்களுடன்
மஹாலஷ்மி கோவில்போயி அம்மனின் ஆசிர்வாதம் வாங்கணும்.
அதன் படி, நாங்க 6 பேரும் ஒரு டாக்சி பிடித்து ம்ஹாலஷ்மி
கோவில் போனோம். கோவில் வாசலில் இறங்கினதும் ஒரு கும்பல்
சுற்றிவளைத்ததுஎங்களை. எல்லாரும் அலிகள். இங்கு அவர்களை
(சக்கா) என்கிரார்கள்.



முதல்ல எங்ககிட்ட ஆச்சிர்வாதம் வாங்கிண்டு பிறகு கோவிலுக்கு
போங்க என்று தகறாறு பண்ணினார்கள். மும்பையில் யார் வீட்டில்
என்ன விசேஷங்கள் நடந்தாலும் அவர்களுக்கு எப்படித்தான் தெரியுமோ?
கரெக்டா அங்க ஆஜர் ஆயிடுராங்க. அவ்ங்களுக்கும் ஏதானும் பணம்
கொடுத்து ஆசீர்வாதங்கள் வாங்கிகொள்வார்கள். இதில் என்ன ஒரு ப்ராப்ளம்
என்றால் அவர்கள் கேட்கும் தொகை கொடுத்துவிடணும்.இல்லைனா
ரொம்ப தகறாறு செய்வார்கள். இந்த விஷயங்கள் எல்லாம் எங்களுக்கு
முதலில் தெரிந்திருக்கவில்லை. பிறகு மற்றவர்கள் சொல்லி தெரிய வந்தது.

அதுபோல கோவில் வாசலில் அவர்களைக்கண்டதும்,எங்களுக்கும் என்ன
செய்வதுன்னு புரியலை. என்வீட்டுக்காரர்(பெண்ணின் அப்பா) அவர்களிடம்
முதல்ல எங்களுக்கு வழி விடுங்க, நாங்க அம்மனை தரிசித்துவிட்டு வந்து
பிறகு உங்க ஆசீர்வாதம் வாங்கிக்கரோம் என்றார். அவர்கள் 10, 15 பேர்கள்
கையை,கையை தட்டிண்டு எங்களைச்சுற்றி நின்றுகொண்டு நகரவே விடலை.
முதல்ல எங்ககிட்ட ஆசிர்வாதவாங்கின பின்னால்தான் உங்களை கோவில்
போகவே விடுவோம். எங்களுக்கு 1001 ரூபா கொடுங்க, நாங்க மனசார ஆசீர்
வாதம் பண்ணிட்டு எங்க ஜோலியைப்பார்க்க போயிண்டே இருக்கோம் என்று
தகறாறு செய்தார்கள். அடே அப்பா? 1001 ரூபாயா? என்ன இது பகல் கொள்ளையா
இருக்கே. 101 ரூபா தரோம், மரியாதையா விலகி போங்க என்றோம். ஏங்க
லட்ச, லட்சமா செலவுபண்ணி ஆடம்பரமா கல்யாணம் பண்ரீங்க இல்லே
நாங்க ஐயோ பாவம் இல்லியா எங்களுக்கு கொடுத்த என்ன குறைஞ்ச்சா
போவீங்கன்னு அவங்களும் தகறாறு செய்தவாரே இருந்தாங்க.

இவருக்கு ரொம்ப கோவம்,என்ன இது சாமிகும்பிட வந்த இடத்ல இப்படி
பண்ணராங்களேன்னு. 101 ரூபாக்குமேல ஒருபைசா கூட தரமாட்டேன்
உங்களால என்னபண்ணமுடியுமோ பண்ணிக்கோங்க என்று கோவத்துடன்
சொல்லவும் அவர்களுக்கும் கோபம் வந்து சாபம் இட ஆரம்பித்துவிட்டார்கள்
உங்க பொண்ணு, மாப்பிள்ளை நல்லாவே இருக்க மாட்டாங்க, நீங்கதிரும்ப
போகும்போது உங்க வண்டி கவுந்து ஆக்சிடெண்ட் ஆயிடும் எங்க ஆசீர்வாதம்
பலிக்கும்னு இங்க எல்லாருமே நம்பராங்க.அதுபோல எங்க சாபமும் பலிக்கும்.
நீங்களும் அடைப்பாக்கத்தான் போரீங்க. பின்னாடி வருத்தப்பாடு பிரயோசனமில்லை
அப்படி, இப்படின்னு அவங்க கத்த, இவர்கத்த,என்று ஒரே அமக்களம்தான்.
போலீஸ்காரங்க கூட வேடிக்கை பாக்கராங்களேதவிர ஹெல்ப் பண்ண மாட்டேங்கராங்க.
நம்மகிட்டயே சார் அவங்ககிட்ட வம்பு வச்சுக்காதீங்க கேக்கரதைகொடுத்துட்டு
போங்களேன் என்று நமக்கே அட்வஸ் பண்ரார். இதை எங்க போயி சொல்ல.
மனசங்கடத்துடனே சாமிகும்பிட்டு கீழே வந்தோம்.அப்பவும் அவங்க அங்கியே
தான் இருந்தார்கள்.என்ன சொல்லியும் 101 ரூபா வாங்கவே மாட்டேன்னுட்டாங்க

30 comments:

Unknown said...

nijammave ithu rompa tharma sangkatamthaan.
ithil yaaraikkuRaisolvathu. nalla naalum athuvumaa avangkakitteenthu saapam thevaiya?

குறையொன்றுமில்லை. said...

அமா, யாரை குறை சொல்வது. நல்ல நாளுமதுவுமா
மன சங்கடம் ஆச்சு.

Unknown said...

கல்யாணம் என்பது எவ்வளவு முக்யமான நிகழ்ச்சி, ஒவ்வொருபெண்ணின்
வாழ்விலும். அன்றுபோயி இப்படியா. உங்க பெண்ணின் மனதும் எவ்வ்ளவு
சங்கடப்பட்டிருக்கும்.

குறையொன்றுமில்லை. said...

என்ன சொல்வதுன்னு தெரிலைம்மா.

Unknown said...

எங்க கல்யாணமும் மும்பைல தான் நடந்தது.இது
தவிர்க்கவே முடியாதுதான்.

குறையொன்றுமில்லை. said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

துளசி கோபால் said...

//உங்க பொண்ணு, மாப்பிள்ளை நல்லாவே இருக்க மாட்டாங்க, நீங்கதிரும்ப
போகும்போது உங்க வண்டி கவுந்து ஆக்சிடெண்ட் ஆயிடும் எங்க ஆசீர்வாதம்
பலிக்கும்னு இங்க எல்லாருமே நம்பராங்க.அதுபோல எங்க சாபமும் பலிக்கும்.//

இப்படி ஒன்னும் ஆகலைதானே?

கவலையை விடுங்க. சாமி கொடுக்கும் வரமே பலிக்காத காலம். இதுலே ஆசாமிகல் கொடுக்கும் சாபம் பலிச்சுருமா???????/

குறையொன்றுமில்லை. said...

அவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு இல்லை
ஆனா பாவப்பட்ட ஜன்மங்கதான். மனசு குளிர்ந்தா வாழ்த்தராங்க.இல்லைனா வயறு எரிஞு சாபம் கொடுக்கிராங்க.

தினேஷ்குமார் said...

இப்படியும் நடக்குதாம்மா

குறையொன்றுமில்லை. said...

ஆமாங்க. இப்படிக்கூட நடக்குதுங்க.

ஸாதிகா said...

லக்ஷ்மி அக்கா!இப்ப உங்கள் பிளாக் அழகா மிளிர்கின்றது.பத்தி அழகா பிரித்து இடை வெளி விட்டு பார்க்கவும்,படிக்கவும் நன்றாக உள்ளது.முதலில் என் வாழ்த்துக்களைப்பிடியுங்கள்.

கோவிலுக்கு போன உங்கள் அனுபவத்தை நிரம்ப சுவைபட கூறி உள்ளீர்கள்.இந்த பாவப்பட்ட மனுஷர்களை பார்க்கும் பொழுது இவர்களது இந்த அடாவடி செய்கையால பரிதாபத்தை விட பயம்தான் வருகின்றது.

http://rajavani.blogspot.com/ said...

எதிர்பார்ப்பு ஏமாற்றம் கோபம் தான் என்ன செய்ய? சாபம் தான்.

தினேஷ்குமார் said...

Lakshmi said...
ஆமாங்க. இப்படிக்கூட நடக்குதுங்க.

அம்மா நானும் உங்களுக்கு மகன் போலத்தான் மணமாகாத சிறு வயதுதானம்மா எனக்கு
எங்க வீட்டுக்கும் வாங்களேன் அம்மா

http://marumlogam.blogspot.com

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா நன்றிங்க.உண்மைலயே அவங்க பரிதாபபட்ட
ஜனங்கதான்.என்ன எதிர்காலம் இருக்குஅவங்களுக்கு.
இன்றைய பக்குவம் அன்று இல்லையே.அவஙக உணர்ச்சிகளை,கோபமாவும்,சாபமாவும் வெளிக்காட்டுராங்க.

குறையொன்றுமில்லை. said...

தவறு, உங்க கருத்துக்கும் நன்றி. நாமதான் எல்லாத்தையும் டேக் இட் ஈசியா எடுதுக்க கத்துக்கனும்.

குறையொன்றுமில்லை. said...

தினேஷ் என்னும் புது மகன் வீட்டுக்கு கூப்பிடும்போது அம்மா வராம இருக்கமுடியுமா? கண்டிப்பா வரேன்பா.

Anonymous said...

உயர்திரு லக்ஷ்மி அவர்களுக்கு வணக்கம். இன்றுதான் தங்கள் பக்கங்களை பார்த்தேன். கோவில்களில் இப்படி நடப்பது சரியல்ல! பணம்...பணம்...பணம்...கேவலம்.
தங்கள் பதிவுகளை Follow செய்பவர்கள் பட்டியலில் இணைகிறேன், இன்று முதல்! நேரம் இருப்பின்....நான் குப்பை கொட்டும் இடத்திற்கு வருக.... madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com

Mahi said...

என்ன சொல்வதுன்னு தெரியலை..சமுதாயத்தின் ஒதுக்கப்பட்ட அங்கமா இருக்கிறோம் என்று போர்க்கொடி தூக்குவதும் அவர்களே..இப்படி அடாவடி செய்வதும் அவர்களே!

எல்லாம் சூழ்நிலைகளைப் பொறுத்து மாறிவிடுகிறது..அன்றைக்கு உங்கள் அனைவரின் நிலைதான் பாவம்!நல்ல நாளும் அதுவுமாக வீண் மனக்கஷ்டம்!

pichaikaaran said...

பல அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள்... நன்றி

குறையொன்றுமில்லை. said...

சிவகுமார் வருகைக்கு நன்றி. நானும் உங்கப்ளாக் வந்து பாத்து கருத்துசொல்கிரேன்

குறையொன்றுமில்லை. said...

மஹி என்னம்மா செய்வது,எதுசரி,எது தவரென்றே
சொல்லமுடியலை. சந்தர்ப்பமும் சூழலுமே எல்லாவற்றுக்கும் காரணம் என்றுதான் நினைக்கத்தோனுது.

குறையொன்றுமில்லை. said...

பார்வையாளன் தங்களின் வருகைக்கும் மிகவும் நன்றி. அடிக்கடி வாங்க.

GEETHA ACHAL said...

மிகவும் வருத்தமாக இருக்கின்றது அம்மா...நமக்கு இப்படி எல்லாம் அவங்க செய்வாங்க அது தான் அந்த ஊரின் வழக்கம் என்று தெரிந்து இருந்தால் பராவாயில்லை...தெரியாதவங்களை இப்படி பாடுபடுத்துவது தப்பு..அதுவும் பாவம் உங்க பொன்னுக்கு எப்படி இருக்கும்...கல்யாணம் ஆன முதன் நாளே அதுவும் சில மணி நேரங்களே ஆன பொழுது இப்படி எல்லாம் போச்சு வாங்குவது மிகவும் கஷ்டமாக இருந்து இருக்கும்...என்னத சொல்ல...

குறையொன்றுமில்லை. said...

அன்று எங்க மன நிலைகூட இதுதாம்மா.

Madhavan Srinivasagopalan said...

// Lakshmi said...

அவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு இல்லை
ஆனா பாவப்பட்ட ஜன்மங்கதான். மனசு குளிர்ந்தா வாழ்த்தராங்க.இல்லைனா வயறு எரிஞு சாபம் கொடுக்கிராங்க.
//

அதற்காக அவர்கள் undue advaantejaa எடுத்துக் கொண்டு தகறாரு செய்தால் அது அந்த ஆண்டவனுக்கே பிடிக்காது..

நாம், நேர்மையாக, சரியான வழியில் நடந்தால்.. 'இறைவனைத்' தவிர வேறு எவனுக்கும் அஞ்சவேண்டாம்.

'கெடுவான் கேடு நினைப்பான்' அது 'சக்கிக்கும்' (च्चक्की) பொருந்தும்


--- "குறைஒன்றுமில்லை"

குறையொன்றுமில்லை. said...

அவர்கள் புரியாமல் தகறாறு செய்தால் ஆண்டவன்
பாத்துப்பான்.

சாந்தி மாரியப்பன் said...

கவலையை விடுங்க லஷ்மிம்மா..இதில் நிறையப்பேர் போலியாகக்கூட வந்துடறாங்க தெரியுமோ.அவங்க செய்யுற அடாவடியாலதான் உண்மையிலேயே தேவைப்படுறவங்களுக்கு உதவி செய்ய யாருக்கும் சட்ன்னு மனசு வர்றதில்லை.

குறையொன்றுமில்லை. said...

அமைதிசாரல் வருகைக்கு நன்றிங்க.

cheena (சீனா) said...

புதிய இடங்கலீல் - நமகுத் தெரியாத ப்ழக்க வழக்கங்கள் - நமமித் துயரத்தில் ஆழ்த்தி விடும். இருப்பினும் 10 பேர் 1000 கேட்கும் போது திரும்ணச் செலவாக மகிழ்வுடன் கொடுத்து விடுவது நல்லதென நினைக்கிறேன். வாழ்க வளமுடன்

குறையொன்றுமில்லை. said...

சீனா சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

என்னை ஆதரிப்பவர்கள் . .