Pages

Wednesday, May 11, 2011

மலரும் நினைவுகள்(13



கடன் இல்லாத வாழ்க்கை அமைதியாக நடந்தது. அந்த சமயங்களில்தான், இண்டியா, பாகிஸ்தான் வார் இண்டியா சீனாவார் எல்லாம் வந்தது.ஊர்பூராவும் கர்ஃப்யூ,இரவு ஒரு வீட்டிலும் லைட்எறியக்கூடாது என்று ஏக கெடுபிடிகள். எல்லா சாமான்களுக்கும் ரேஷனும்வந்தது. வெளியில் ஓபன் மார்க்கெட்டில் சாமான்கள் யானை விலை குதிரைவிலை சொல்வார்கள். ரேஷனில் என்னகிடைக்கிரதோ அதைத்தான் வாங்கிவருவோம். கோதுமை சோளம் எல்லாம் தருவார்கள். அரிசி மட்டும் ஐந்துகிலோதான் கிடைக்கும். சோளத்தில்தான் இட்லி, தோசை எல்லாம் பண்ணனும்.

கோதுமை அரைச்சு சப்பாத்திக்காகும். அதையே ரவையாக உடைத்து லாப்சியாக்கி உப்மா எல்லாம் செய்வோம். கெரசின் கிடைப்பதே அரிது. சமையலும்சாப்பாடுக்கும் ரொம்பவே மெனக்கிட வேண்டி வந்தது. ஏழுபேருக்கு சமையல்பண்ணணும்.ரொம்ப பஞ்சமான தருணங்கள்.

அதுமட்டுமில்லே, குழந்தைகளை ஸ்கூல் கொண்டு விட ப்போகும்போது அபாயசங்கு ஒலிக்கும், உடனே பதுங்கு குழிகளில் பதுங்கி கொள்வோம். பக்கம் பக்கமாகபதுங்கு குழிகள் தோண்டி வைத்திருப்பார்கள். மறுபடியும் க்ளியர் சங்கு ஒலிக்கும்.அப்பதான் வெளியே வர முடியும். இவர் வேலை செய்வதோ வெடிமருந்து தொழிற்சாலையில். வார் சமயம் ஆதலால் வேலை நேரம் மிகவும் அதிகமாக இருக்கும்.சமயத்தில் நைட் டியூட்டியும் இருக்கும் கடுமையான உழைப்பு.ஆபீசிலிருந்து எப்பவீடு திரும்புவார்னே சொல்லமுடியாது.செண்ட்ரல் கவர்மெண்ட் உத்யோகம் தான் ஆனாலும் அதிகப்படி வேலை செய்வதற்கு ஓரளவு ஓவர்டைம் பணம் கிடைக்கும்.இவருக்கு ஆரம்பமுதலே ஒரு குணம் யாருமே பசின்னு சொல்லக்கூடாது. வீட்டில்எப்பவுமே ப்ரொவிஷன் சாமான்களுக்கு கம்மி யே இருக்காது. எப்பவும் எல்லாம்இருக்கணும்.




யாரு வந்தாலும் வயிறு நிரைய சாப்பாடு போட்டுத்தான் அனுப்புவார்.பூனாவில் இருக்கும்போது தனியாக வாடகை வீட்டில்தான் வசித்துவந்தோம். ஆபீஸ் க்வார்ட்டர்ஸபோகலை. இவருக்கு போக வர கொஞ்சம் சிரமம்தான். ஆனால் சிட்டிக்குள்ள இருந்ததாலகுழந்தைகள் தனியார் பள்ளிகளில்தான் படித்து வந்தார்கள். பல விததில் சவிரியங்கள்இருந்தது. கோவிலோ, கடைகளோ பள்ளிக்கூடமோ எல்லாமே பக்கத்தி , பக்கத்திலேயேஇருந்தது. பொழுது போக்குன்னு எதுவுமே கிடையாது. ரேடியோ கூட இருந்ததில்லை.



ஸ்கூல் விட்டு வந்ததும் ஏதானும் ஸ்னாக்ஸ் சாப்பிட்டு அக்கம் பக்கம் குழந்தைகள் எல்லாரும் வந்து சேர்ந்து நொண்டி, பாண்டி,ஏழுகல்லு, தாயக்கட்டம் கேரம்னு பழையகால விளையாட்டுக்களில் சந்தோஷமாக விளையாடி மகிழ்வார்கள். சந்தியாகாலம்ஆனதும் வீட்டில் விளக்கேற்றியதும் எல்லாகுழந்தைகளும் நம் வீட்டில் கூடிவிடு வார்கள். எனக்குத்தெரிந்த, ஸ்லோகங்கள், பக்தி பாடல்கள் என்று ஒருமணி நேரம் சொல்லிககொடுப்பேன். பிறகு வீட்டுப்பாடங்கள். குழந்தைகளுடன் நானும் பாடம் படிப்பேன்.எனக்கு தமிழ் படிக்க வரணும் என்று இவர் கல்கி, விகடன் குமுதம் வாங்கி வருவார்முதலில் எழுத்துக்கூட்டி, ஜோக்கெல்லாம் படிக்க கத்துண்டேன்.ஹிந்தி, மராட்டி, இங்க்லீஷாவது குழந்தைகளிடம் டௌட் கேட்டு தெரிஞ்சுப்பேன்.தமிழில் யாரிடமும் கேக்கமுடியாது. சுமாராக படிக்க கத்துண்டேன்.இப்பக்கூட நான்எழுதும் எழுத்துக்கள் மற்றவர் எழுத்துக்களிலிருந்து வித்யாசமாக ஒரு பாமரத்தனமாகவே இருக்கும்.எனக்கும் அது புரியுது. முறையாக எழுதபடிக்க கத்துக்காததாலஇந்தக்குறை. மாத்திக்கமுடியல்லை.

41 comments:

அமுதா கிருஷ்ணா said...

பாஷை தெரியாத ஊரில் இருந்தால் தான் அந்த பாஷையினை சீக்கிரம் கற்று கொள்ள முடியும் போல.நல்லாயிருக்கு உங்க அனுபவங்கள்.

Asiya Omar said...

உங்க எழுத்து நடை தான் என்னை ஈர்க்கும் ஒன்று.நேரில் பேசுவது போல் எல்லாராலும் எழுத முடியாது.அனுபவத்தை தொடர்ந்து எழுதுங்க,நிறைய உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள இருக்கு.

இராஜராஜேஸ்வரி said...

கடினமான தருணங்கள்.கட்ந்து மீண்டு வந்தது இறையருள்.

Anonymous said...

எங்க ஊர் கதையும் கிட்டத்தட்ட இப்படித் தான். (கொஞ்ச வருசங்களுக்கு முன்). உங்க பதிவுகளைப் படிக்கும் போது ரொம்பவே மனசு கனமாக இருக்கும் பாட்டிம்மா. அப்படியே பின்னூட்டம் போடாமல் போயிடுவேன். இரண்டு மூன்று பதிவுகள் வந்த பின்னர் ஒரேஅடியாக வாசித்து முடிப்பேன்.

எல் கே said...

இந்த போர் பற்றிய செய்திகள் கொஞ்சம் புதுசு. உங்கள் எழுத்து சரியாகத்தான் உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நடை.

கவி அழகன் said...

இலங்கை யுத்த அனுபவம் போல் உள்ளது
இலங்கையில் இந்தியன் இராணுவம் வந்த போது தேநீர் போடுற மா வில் பிட்டு அவித்து சாபிட்ட சந்தர்ப்பம் ஜாபகதுக்கு வருகிறது

சக்தி கல்வி மையம் said...

மலரும் நினைவுகள்..

arasan said...

உங்களின் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு
மிக்க நன்றிங்க அம்மா ...
தொடர்ந்து எழுதுங்க ...
உங்களின் எழுத்து நடை அருமையாகத்தான் இருக்கு ...
இதுதான் சுவாரசியத்தை கூட்டுகிறது ...

ChitraKrishna said...

நீங்களா சொல்ற வரைக்கும் யாரும் உங்களுக்கு தமிழ் சரியா தெரியாதுன்னு சொல்ல முடியாது அம்மா. உங்கள் தமிழ் இயல்பாதான் இருக்கு. இந்த கர்ஃப்யூ டைம் பத்தி என் பாட்டியும் கொஞ்சம் சொல்லிருகாங்க அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

மெதுவாகக் கற்றுக் கொண்டு இந்த அளவுக்கு எழுதறீங்களேம்மா அதுவே பெரிய விஷயம். உங்கள் அனுபவங்களைத் தொடர்ந்து பகிருங்கள். அது எங்கள் எல்லோருக்கும் ஒரு பாடமாய் அமையும்.

Madhavan Srinivasagopalan said...

ஸ்கூலுல படிச்சே பல பேருக்கு தமிழ் சரியா எதுதத் தெரியலை..
உங்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது..

குறையொன்றுமில்லை. said...

அமுதா கிருஷ்ணா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆமா இராஜராஜேஸ்வரி எல்லாமே இறையருள்தான்.

குறையொன்றுமில்லை. said...

ஆஸியா ஓமர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

அனாமிகாதுவாரகன் போர் தருணங்கள்
மிக கொடுமையானவை. அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் வலியும் வேதனையும் உணர முடியும்.

குறையொன்றுமில்லை. said...

கார்த்தி நன்றி. இந்த என் எழுத்துக்கும் எவ்வளவு ரசிகர்களிருக்கீங்க. அதுவே சந்தோஷம்.

குறையொன்றுமில்லை. said...

யாதவன், போர் நிகழ்ச்சிகள் நான் சொன்னது ஓரளவுக்குத்தான் அனுபவித்தவை இன்னும் அதிகம்.

குறையொன்றுமில்லை. said...

வேடந்தாங்கல் கருன் வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

அரசன் நன்றிங்க. மத்தவங்க ப்ளாக் படிக்கும்போது என் எழுத்தைப்பற்றி
எனக்கு ஒரு சிறு குறை உண்டு. ஆனா
நீங்கல்லாம் ரசித்துபடிக்கிரீங்க்ன்னும்போது சந்தோஷமா தான் இருக்கு.

குறையொன்றுமில்லை. said...

மாதவன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

சித்ரா கிருஷ்ணா, உங்க பாட்டியும் பூனால இருந்தாங்களா?

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்களின் மலரும் நினைவுகள் பற்றிய பகிர்வு மிகவும் நன்றாகவே உள்ளது.

1935 to 1945, இது போல பல கஷ்டங்களை அனுபவித்ததாக, என் அப்பா அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். வெள்ளைக்காரன் குண்டு போடுவான். எங்கும் பசி பட்டினி; பொருட்கள் தட்டுப்பாடு; மிகவும் அடக்கு முறை; ரேஷனில் தான் சாமான்கள்; வெளிமார்க்கெட்டில் மிகவும் அதிகவிலை என்றெல்லாம் கேள்விப்பட்டுள்ளேன்.

தங்கள் அழைப்பைப்படித்ததும், தங்களின் இந்த மற்றொரு ப்ளாக்குக்கும் follower ஆகி விட்டேன். இனி தொடர்ந்து படிக்கிறேன். பின்னூட்டாம் அளிக்கிறேன்.

இது போன்ற மிகச்சிறிய பகுதிகளாகவே எழுதவும். அப்போது தான் எழுதும் உங்களுக்கும் சிரமம் இல்லாமல் இருக்கும். படிக்கும் எங்களுக்கும் சுலபமாக இருக்கும்.

பக்கம் பக்கமாக எழுதினால் அதை பொறுமையாக படிக்க யாருக்கும் நேரமே இருக்காது என்பது என் கருத்து.

அன்புடன் vgk

மனோ சாமிநாதன் said...

மலரும் நினைவுகள் மறக்க முடியாத, வலிகள் சுமந்த நினைவுகளாக இருக்கின்றன! இந்த அனுபவங்களூடே இந்த அளவிற்கு, யாருடைய உதவியும் இல்லாமல் தமிழ் கற்ற‌தும் எழுதுவதும் ஒரு வலைப்பூவே தொடங்கி அருமையாய் எழுதுவதும் சாதனையல்லவா? என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

குறையொன்றுமில்லை. said...

அமுதா கிருஷ்னா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆஸியா, வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேஸ்வரி, உண்மையிலேய்டெ
இறையருள்தான்.

குறையொன்றுமில்லை. said...

அனாமிகா, வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி.

குறையொன்றுமில்லை. said...

கார்த்தி ரொம்ப நன்றிப்பா.

குறையொன்றுமில்லை. said...

யாதவன், ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு அனுபவம்.

குறையொன்றுமில்லை. said...

வேடந்தாங்கல் கருன் நன்றி

குறையொன்றுமில்லை. said...

அரசன் என் எழுத்து ரசிக்கும்படி
இருக்கா? ரொம்ப் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

சித்ரா, உங்க பாட்டியும் அந்த சமயம்
பூனாவில் இருந்தாங்களா?

ம.தி.சுதா said...

/////கோதுமை அரைச்சு சப்பாத்திக்காகும். அதையே ரவையாக உடைத்து லாப்சியாக்கி உப்மா எல்லாம் செய்வோம். /////

தேவைகள் தான் புதிய கண்டு பிடிப்பை தோற்றுவிக்கும் அம்மா...

குறையொன்றுமில்லை. said...

. ம.தி. சுதா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ADHI VENKAT said...

போர் செய்திகள் புதுசாக இருக்கும்மா. நீங்கள் எழுதுவது சரியாகத் தான் இருக்கும்மா.

குறையொன்றுமில்லை. said...

கோவை௨தில்லி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அம்பாளடியாள் said...

வணக்கம் அம்மா தங்களது மலரும் நினைவுகள் தொடரைப்
படித்தேன் மனதிற்குக் கொஞ்சம் கஷ்டமாகவும் தங்களுடைய
திறமையைக் காணும்போது வியப்பாகவும் இருந்தது.தாயாக இருந்து
நல்ல அனுபவத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டு வருகின்றீர்கள்
இது பெண்களுக்கு மிகவும் பயனுள்ள தகவலாக அமையும்.மிக்க
நன்றியம்மா இப் பகிர்வுக்கு......

குறையொன்றுமில்லை. said...

அம்பாளடியாள், முதல் முரை வரீங்களா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

மனோ சாமி நாதன், வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் நீங்க சொல்வது
ரொம்ப சரிதான்.

மாதேவி said...

அனுபவங்களை அழகாகப் பகிர்கிறீர்கள்.
மகிழ்வுடன் தொடருங்கள். வாழ்த்துக்கள்.

என்னை ஆதரிப்பவர்கள் . .