Pages

Monday, May 16, 2011

மலரும் நி்னைவுகள்(14



ஒருவழியா போர் அமர்க்களம் எல்லாம் ஓய்ந்த பின்னும் கூட அதனால்எற்பட்ட தாக்கம் குறையவே இல்லை. வெளி மார்க்கெட்டில் விலைவாசிகள் குரையவே இல்லை. ரேஷனில் என்ன பொருட்கள் கிடைக்கிரதோ அதில்தான் சமாளிக்க வேண்டி வந்த்து. எங்க குடும்பத்திற்கு ரேஷனில்கிடைக்கும்பொருட்கள் போதும் போதாததாகவே இருந்தது.வளரும் குழந்தைகள் நல்லா சாப்பிடும் வயது, எதைக்குறைப்பது? பார்க்கப்போனால்

அனாவசியச்செலவுஎன்றுசொல்லும்படிஎதுவுமேகிடையாது.அத்தியாவசியச்செலவுகளையே சமாளிக்க முழி பிதுங்கும். குழந்தைகளின் ஸ்கூல் ஃபீஸ் யூனிஃபார்ம், பாடபுத்தகங்கள், நோட்புக்ஸ், சாப்பாடு என்று எல்லாமே தேவையான செலவுகள்தான்.




செகண்ட் ஹேண்டில் ஒரு தையல் மிஷின் வாங்கி ஆண்குழந்தைகள், பெண்குழந்தைகளின்யூனிஃபார்ம்களை நானே தைக்க கத்துண்டு, தையல் கூலியை மிச்சம் பிடித்தேன்.டெய்லரிங்க் புக்ஸ் (ஹிந்தியில்தான் கிடைத்தது.)அதைப்படித்து முதலில் பேப்பர்கட்டிங்க் செய்து, பிறகு பழைய வேட்டித்துணி, புடவைத்துணிகளில்தான் தைத்துபழகினேன். அது அளவு சரியாக வந்தால் புது துனிகளில் வெட்டி தைத்து விடுவேன்.



நாளாக, நாளாக கை பழகி விட்டது. கச்சிதமாக தைக்க வந்தது.இதுக்குன்னு தையல் க்ளாஸ்எல்லாம் போகலை. அதுக்குவேர யாரு ஃபீஸ் காட்டமுடியும்??அப்படியே என்னோடப்ளௌஸ், பெட்டிக்கோட் எல்லாம் வீட்டிலேயே தைக்கப்பழகினேன். நான் தைப்பதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவங்க குழந்தைகளின் யூனிஃபார்ம்களையும் தைக்கத்தந்தனர்.நானும் தைத்துக்கொடுத்து சிரு தொகை கேட்டேன் யாருமே கூலிதர ரெடியாக இல்லை.நம்ம ஃப்ரெண்ட் ஷிப்புக்கு நீங்க சும்மவே தைத்துக்கொடுப்பீங்க்ன்னு நுனைச்சொம்ன்னுகூலா சொன்னாங்க. பிறகு வெளியில் தைத்துக்கொடுப்பதை நிறுத்திவிட்டேன். அதில்அக்கம் பக்கத்தினருக்கு என் மேல் சிறிது மன வ்ற்த்தம்தான். நானும் கண்டுக்கலை.




இந்த சமயங்களில் எங்க எல்லா குழந்தைகளையும் வீட்டில் எல்லா வேலைகளுக்கும்கொஞ்சம் கொஞ்சமாக பழக்கினோம். ஆண், பெண் என்ற வித்யாசமில்லாமல் எல்லாகுழந்தைகளும் எல்லா வேலைகளையும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார்கள்.பெரியவள்காலையில் வாசல் தெளித்து கோலம் போட்டு, வீட்டைபெருக்கி மொழுகி விடுவாள்.( என்ன பெரிய வீடு ரெண்டே ரூம்தானே?) பெர்யவன் சைக்கிலில் போய் பால் காய் கறிகள்வாங்கி வருவான். அடுத்தவன்சமையலுக்கானகாய்களைஅழகாகநறுக்கித்தந்துடுவன்.

அடுத்தபையன் ஆட்டுக்கல் அம்மிக்கல்லில் அரைக்க வேண்டியதை அரைத்துத்தந்துவிடுவன்எல்லாக்குழந்தைகளுமே சமையலும் கற்றுக்கொண்டார்கள். பாத்திரம் தேய்க்கவும்குழந்தைகளே முன் வருவார்கள். அவரவர் துணிகளை அவரவர்தான் துவைக்கனும்என்றும் ஆரம்பத்திலிருந்தே பழக்கினேன்.காலைல எழுந்து அவாவா படுக்கை சுற்றி வைப்பது தொடங்கி எல்லாரும் எல்லா வேலைகளும் சிறப்பாகவே கற்றுக்கொண்டார்கள்.




நான் உடம்பு சரியில்லாம போனாகூட குழந்தைகளே எல்லா வீட்டு வேலைகளையும்சமாளித்துக்கொள்வார்கள்.அதேசமயம் படிப்பிலும் நல்லா ஸ்கோர் பண்ணினார்கள். இப்பவும் என் குழந்தைகளை நினைச்சு நான் பெருமையும் சந்தோஷமும்பட்டுக்கரேன் உன்மையிலேயே ஆண்டவன் அருமையான புருஷனையும் தங்கமானகுழந்தைகளையும் எனக்கு ஆசிர்வத்திருக்கிரார். எல்லாரும் ஹெல்ப் பண்ணினதால் என்வேலை நேரம். குறைந்து எக்ஸ்ட்ரா கை வேலைகளில் கவனம் செலுத்த முடிந்தது.இவருக்குழந்தைகளை நினைத்து ரொம்பவே பெருமைதான்.இவரும் நிம்மதியாக ஆபீஸ்போய் வரமுடிந்தது. ஆபீசில் அடிக்கடி விபத்து ஏற்படும் ஹெல்பண்ண முதல் ஆளாகப்போய் இவர்தான்நிற்பார்.எல்லாரிடமும் அவருக்கும் நல்ல பெயர் தான். இப்படி ஓரளவுக்கு அமைதியாகவேபோய்க்கொண்டு இருந்த்தது. ஒரு ஜூன் மாதம் இவருக்கு ஜபல்பூருக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர்வந்தது. கவெர்மெண்ட் ஆர்டர் தட்டமுடியாது.போய்த்தான் ஆகனும்.

35 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

செகண்ட் ஹேண்டில் ஒரு தையல் மிஷின் வாங்கி ஆண்குழந்தைகள், பெண்குழந்தைகளின்யூனிஃபார்ம்களை நானே தைக்க கத்துண்டு, தையல் கூலியை மிச்சம் பிடித்தேன்.டெய்லரிங்க் புக்ஸ் (ஹிந்தியில்தான் கிடைத்தது.)அதைப்படித்து முதலில் பேப்பர்கட்டிங்க் செய்து, பிறகு பழைய வேட்டித்துணி, புடவைத்துணிகளில்தான் தைத்துபழகினேன். அது அளவு சரியாக வந்தால் புது துனிகளில் வெட்டி தைத்து விடுவேன்.///

அழகான நினைவலைகள் மேடம்!!

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை?

சி.பி.செந்தில்குமார் said...

>>நானும் தைத்துக்கொடுத்து சிரு தொகை கேட்டேன் யாருமே கூலிதர ரெடியாக இல்லை

எங்கம்மா ஒரு டெயிலர்தான். பக்கத்து வீடுகள்ல பெரிய கடைகள்ல தைத்துக்கொண்டு ஆல்ட்டரேஷன் மட்டும் இங்கே வருவாங்க.. ஜனங்க என்னைக்குத்தான் திருந்துவாங்களோ?

முனைவர் இரா.குணசீலன் said...

நினைவுகள் மலர்வதால்

மனச்சுமை குறையும்
வாழ்க்கைச் சுவை கூடும்...

அதனால் நினைவுகள் மலரட்டும்.

எல் கே said...

உங்கள் அனுபவம் தொடரட்டும்

சக்தி கல்வி மையம் said...

நினைவுகள் என்றுமே இப்படித்தான்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்கள் குடும்ப வாழ்க்கை, பொருளாதார நெருக்கடிகடிகளை சமாளித்த விதம், குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களைக் கற்பித்தது போன்ற அனைத்துமே அருமை. மற்றவர்களுக்கு இதுவெல்லாம் ஒரு நல்ல அறிவுரை போல உள்ளன. பாராட்டுக்கள்.

Madhavan Srinivasagopalan said...

// நானும் தைத்துக்கொடுத்து சிரு தொகை கேட்டேன் யாருமே கூலிதர ரெடியாக இல்லை.நம்ம ஃப்ரெண்ட் ஷிப்புக்கு நீங்க சும்மவே தைத்துக்கொடுப்பீங்க்ன்னு நுனைச்சொம்ன்னுகூலா சொன்னாங்க. //

இந்த மனப் போக்கு தான் நமது பலவீனம்.
ஒருவரது உழைப்பிற்கு தகுந்த சன்மானம் தருவது ஒருவருடைய கடமையாகும்.

நம்மால் முடிந்தவரை சில வீட்டு வேலைகளை நாமாகச் செய்து கொள்வது பண விரயத்தை கட்டுப் படுத்தும்.

வழக்கம் போல உங்கள் உழைப்பு தெரிகிறது இப்பதிவில்.

சக்தி கல்வி மையம் said...

உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் ..
நேரம் இருந்தால் பார்க்கவும்..


என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2

ADHI VENKAT said...

அவரவர் வேலைகளை அவரவர்களே செய்வது நல்ல பழக்கம் தான் எங்கள் வீட்டிலும் அப்படித்தான். தொடருங்கள் அம்மா.

Sathish Kumar said...

//எங்க எல்லா குழந்தைகளையும் வீட்டில் எல்லா வேலைகளுக்கும்கொஞ்சம் கொஞ்சமாக பழக்கினோம்.//

Very nice..! குழந்தைகள் வளர்ப்பின் சூட்சமமே இதுதான் என்பார் என் அம்மா..! இந்த வார்த்தைகளில் சகோதரர்கள்-எங்கள் கடந்த காலம் தெரிகிறது...!

HVL said...

குழந்தைகளை நல்லா வளர்த்திருக்கீங்க!

Mahi said...

சுவாரஸ்யமா போகுது உங்க மலரும் நினைவுகள் லஷ்மிம்மா!

குறையொன்றுமில்லை. said...

வராதவங்கல்லாம் வந்திருக்கீங்க சந்தூஷமா இருக்கு. ஓ. வ. நாராயன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
அடிக்கடி வாங்க.

குறையொன்றுமில்லை. said...

செந்தில் குமார் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

தையல் என்று இல்லெ எந்தவேலை செய்யுரோமோ அதன் அருமை மத்தவங்களுக்கு தெரிவதே இல்லே.

குறையொன்றுமில்லை. said...

முனைவர் இரா. குணசீலன் வாங்க, வாங்க, உங்களையெல்லாம் இங்க பாக்கவே சந்தோஷமா இருக்கு. கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க.

குறையொன்றுமில்லை. said...

கார்த்தி, வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

கருன் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

கோபால்சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

குறையொன்றுமில்லை. said...

மாதவன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

வேடந்தாங்கல் கருன் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. பார்த்தேன்.

குறையொன்றுமில்லை. said...

கோவை௨தில்லி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

சதீஷ்குமார், வருகைக்கும்கருத்துக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

H.V.L.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

மஹி நன்றிம்மா.

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் அனுபவம் பற்றிய பகிர்வுகள் தொடரட்டும். அடுத்து ஜபல்பூர் நினைவுகள் பற்றியாம்மா! சரி காத்திருக்கிறேன்.

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி. ஜபல்பூர் பதிவுக்கு இன்னும் நாளாகும்.

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...

உங்க மலரும் நினைவுகள்அருமை லஷ்மிம்மா

குறையொன்றுமில்லை. said...

யாழ். நிதர்சன். கருத்துக்கு நன்றி.

Prabu Krishna said...

கடந்த பதிவையும் இப்போதுதான் படித்தேன் அம்மா. உங்கள் கற்றல் எங்களை வியக்க வைக்கிறது, நீங்கள் சொல்ல வரும் கருத்து புரிந்து கொள்ள முடிவதால் எழுத்து வடிவம் ஒரு விஷயமே இல்லை.

எனக்கு சமையல் சாப்பிட மட்டுமே தெரியும். மற்றபடி நன்றாக வெந்நீர் வைப்பேன். ஹி ஹி ஹி

குறையொன்றுமில்லை. said...

பிரபு மெயில் அனுப்புவதாக சொல்லி இருந்தே அனுப்பலே எக்சாம் ஆனதும் பாம்பே வ்ரேன்னு சொன்னே வரலை
என்னாச்சு?

இராஜராஜேஸ்வரி said...

இப்பவும் என் குழந்தைகளை நினைச்சு நான் பெருமையும் சந்தோஷமும்பட்டுக்கரேன் //
God's Gift...

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மாதேவி said...

பிள்ளைகள் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளக் கற்றுக்கொடுத்தது நல்லமுறை.

நல்ல வழிகாட்டியாக இருந்திருக்கிறீர்கள்.

என்னை ஆதரிப்பவர்கள் . .