Google+ Followers

Pages

Sunday, June 5, 2011

சாப்பாடு”ஒரு அவசரம் , அவசியம் என்றால் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டீங்களா?”

”எனக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போடுன்னு சொன்னா அது குத்தமா?”

”இன்னிக்கு எனக்கு சீக்கிரமா கிளம்பணும். அதுதான் சிம்பிளா பண்ணினேன்.”

“அவசரமென்றால் கொஞ்சம் சீக்கிரமா எழுந்து தயார் செய்துக்கணும். எதுக்கு

என்னை வாயைக்கட்டச்சொல்ரே?”

மிருதுளா, ஆபீஸ் கிளம்பும் அவசரத்தில் இருந்தாள் மோகனுடன் தர்க்கம் பண்ணவிரும்பாமல் அவசரமாக வேலைகளை முடித்துக்கொண்டு இருவருக்

கும் மதிய உனவை டப்பாக்கலில் அடைத்து டைனிங்க் டேபில் மேல் வைத்துவிட்டு அவளின் லஞ்ச் பாக்ஸ் எடுத்துக்கொண்டு மோகனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். பஸ்ஸு்ம் உடனே கிடைத்தது. உட்காரவும்

இடமும் கிடைத்தது. அப்பாடான்னு உக்கந்தாள்
மிருதுளாவுக்கும் மோகனுக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிரது.

மனம் ஒத்த தம்பதிகள்தான். மோகன் பேங்க் உத்யோகத்தில் இருந்தான்.

மிருதுளாவை வேலைக்கு அனுப்பவே மனசில்லை அவனுக்கு. அவளின்

விருப்பத்துக்கு மாறாக எதுவும் சொல்ல்முடியாமல் அனுமதித்தான் அவளும்

ஒரு பத்திரிக்கை ஆபீசில் நிருபராக வேலை பார்த்து வந்தாள். வீட்டில் எல்லா

வேலைகளையும் முடித்து விட்டுத்தான் கிளம்புவாள். மோகனும் எந்தவிததி

லும் கட்டுப்படுத்தாமல் முழு சுதந்திரம் கொடுத்திருந்தான். ஒரே வீக் பாயிண்ட்

அவனுக்கு வாய்க்கு ருசியா மூணு வேளையும் விதம், விதமாக சாப்பாடு

வேண்டும்.குறந்த அளவுக்கு சாப்பிட்டாலும் கூட வெரைட்டி வேண்டும்.
மிருதுவும் அவன் விருப்பப்படியே செய்து கொடுப்பாள். இன்று கொஞ்சம்

அவசர வேலை இருந்தது. அதனால் சுருக்கமா சமையல் முடித்துகிளம்பினாள். என்ன மனிதர், ஒரு நாள்கூட அட்ஜஸ்ட் பண்ணீக்க மாட்டேங்கராரேன்னு யோசித்துக்கொண்டே ஆபீஸ்வந்தாள்.மோகனிடம்

கத்திவிட்டு வந்ததில் மனசே சரி இல்லாம இருந்தது. இன்றைய அவளின்

வேலையும் வெளியே 5 குடும்பத்தலைவிகளிடம் பேட்டி எடுப்பதுதான்.

தலைப்பு, தங்கள் கணவர்களிடம் அவர்கள் காணும் நிறை, குறைகளைப்பற்றி

பேட்டி. அவளுக்கே சிரிப்பாக வந்தது. இன்று நானே மோகனிடம் கோபப்ட்டு

வந்தேன்.அதுக்கு ஏத்தபடி இன்றைய வேலையும் இருக்கே என்று நினைத்தாள்.
முதலில் ஒரு வீட்டுக்குள் நுழைந்தாள். நல்ல வசதியுடனே இருந்தது அந்த

வீடு.வீடு முழுவதும் நல்ல செழிப்பு தெரிந்தது. அங்கயே அக்கம் பக்கத்திலிருந்த 4, 5, பெண்களும் உக்காந்து டி, வி பார்த்துக்கொண்டி ருந்தார்

கள்.மிருதுவுக்கு அப்பாடா வீடு வீடா அலைய வேண்டாம் இங்கியே எல்லாரி

டமும் பேட்டியை முடிச்சுக்கலாம்னு நினைத்தாள்.முதலில் தான் வந்திருக்

கும் பத்திரிக்கையின் பெயர் சொல்லி, எதுக்கு வந்திருக்கான்னு அறிமுகம்

செய்து கொண்டாள். பத்திரிக்கைப்பேட்டி என்றதும் எல்லாருமே ஆர்வமானார்கள். முதலில் அந்தவீட்டு அம்மாவிடம் மேடம் உங்க கணவரிடம் நீங்க கானும் குறை, நிறை கள் சொல்லுங்க என்று குறிப்பெடுக்க தயாரானாள்.

அந்த வீட்டுக்கரம்மா பெருமூச்சு விட்டவாறே பாக்கத்தான் வீடு வசதியா தெரியுது,வீடு கட்ட பேங்க்ல லோனு இன்னும் கட்டி முடிக்கலே,ஃப்ரிட்ஜ்

ஏ,சி, ஹோம் தியேட்டர் எல்லாம் தவணை முறைலதான் வாங்கி இருக்கோம்.
கட்ன் கட்டவே வாங்குர சம்பளம் பூரா சரியாகுது.எவ்வள்வு சொன்னாலும்

காதுலயே வாங்கமாட்டாரு.இதுதான் குறை. நிறைஎன்று எதைச்சொல்லனு

தெரியலேன்னா. அடுத்தவளிடம் அதேகேள்வி.எங்க வீட்ல ஆயிரம் நிறை

குறை இருக்கும் அதையெல்லாம் உன் கிட்ட எதுக்கு சொல்லணும் என்று

முகத்தில் அறைந்ததுபோலச்சொன்னாள்.அடுத்தவள் மிகவும் பாந்தமாகப்பேசினாள்.என்வீட்ல வாங்கர சம்பளம் எல்லாம் என் கையிலெ தந்துடுவார். குடும்ப பொறுப்பு பூராவும் என் தலயில் தான்.ஆபீசு போவார் வருவாரr் டி, வி,முன்னாடி இல்லைனா கையில் பேப்பரை வச்சுண்டு

உக்காந்துடுவாங்க.குழந்தைக்கு பாடமாவது சொல்லிக்கொடுங்க என்றாலும் காதுலயே வாங்க மாட்டாரு.பொறுப்பில்லாத மனுஷன் என்றாள்.
அடுத்தவளோ வேறுமாதிரி சொன்னாள்.எங்க வீட்ல ஒருபைசாகூட என் கையில் தர மாட்டாரு. எல்லாமே அவரின் மேர்பார்வையில் தான் நடக்கனும்

சுருக்கமா சொன்னா ஒரு சர்வாதிகாரி ரேஞ்சில்தான் அதிகாரம் கொடி கட்டிப்

பறக்கும்.இதெல்லாம் வெளில சொல்லமுடியுமா, கல்லானாலும் கணவனாச்சே. இப்படி ஆலாளுக்கு குறைகளையே பெரிது படுத்திச் சொன்னார்

கள்.எல்லாருடைய பேட்டிகளையும் ஆபீசில் போயி சேர்த்துவிட்டு வீடு

போனாள். குளித்துவிட்டு இரவு சமையலை ஆரம்பித்தாள். ஏ அப்பா ஒவ்வொருவரையும் பார்க்கும்போது மோகன் எவ்வளொவோ நல்லவர்.

சாப்பாட்டுப்பிரியரா இருக்கார். அவ்வளவுதானே இது ஒன்னும் பெரிய குறை

இல்லியே. என்ரு எண்ணீய வாறே மோகனுக்கு பிடித்த சமையல்செய்தாள்

இரவு சாப்பிட உக்கார்ந்த மோகனுக்கு வித விதமான பிடித்தமான சாப்பாடு

பார்த்ததும் ஆச்சரியம். காலைலெ கோபபட்டு பேசினவ இப்ப அமர்க்களமா

எல்லாம் எப்படி பண்ணி வச்சிருக்கானு நினைத்தான்.

31 comments:

இராஜராஜேஸ்வரி said...

அமர்க்களமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Madhavan Srinivasagopalan said...

சொந்தக் கதைகளை சொன்ன நீங்க, இப்ப
சொந்தமாவே கதை சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களா ?
பலே.. பலே..
தொடர்ந்து சொல்லுங்கள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

சாப்பாடு ரொம்ப நல்லா இருக்குது.
சமைத்துப் பதிவிட்டுப் பரிமாறியுள்ளது மிகவும் அனுபவசாலியாகியாகிய தாங்கள் அல்லவா! அது தான் நல்ல சுவை.

வீட்டுக்கு வீடு வாசல்படி
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
புரிதலே கணவன் மனைவிக்கு அவசியம்
போன்ற நல்ல விஷயங்களைச் சொல்லி உள்ளீர்கள். பாராட்டுக்கள்.

Anonymous said...

Nice Template, Nice Story =))

நிரூபன் said...

சாப்பாடுப் பிரியர் பற்றிய சுவையான ஒரு சிறுகதைப் பகிர்வு...கலக்கல்.

எல் கே said...

பொதுவா கம்பேர் பண்றது தப்புன்னாலும் . இந்த மாதிரி நல்ல முடிவா எடுத்தா தப்பில்லை. இன்னிக்கு நெறைய பேரு உப்பை சப்பில்லாத விஷயத்துக்கு சண்டை போட்டு விவாகரத்து வரைக்கும் போறாங்க

GEETHA ACHAL said...

நல்லா இருக்கு..நிறைய பேர் வீட்டில் நடப்பது..இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்..

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி, வருகைக்கு நன்றி.

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி, வருகைக்கு நன்றி.

Lakshmi said...

மாதவன், நன்றி.

Lakshmi said...

கோபால்சார் நன்றி.

Lakshmi said...

நிரூபன் நன்றி.

Lakshmi said...

கார்த்தி நன்றி

Lakshmi said...

கீதா, நன்றிம்மா.

வெங்கட் நாகராஜ் said...

கதை நல்லா வந்துருக்கும்மா..

நிறைய வீடுகளில் இதுமாதிரிதான் சிறிய விஷயங்களுக்குக் கூட சண்டை வந்து விடுகிறது....

கருத்துள்ள கதை பகிர்வுக்கு நன்றிம்மா...

கோவை2தில்லி said...

அழகான கதைக்கு வாழ்த்துக்கள் அம்மா.

யாதவன் said...

உள் வெட்டு விவகாரம் எல்லாம் பதிவில வருது

Lakshmi said...

வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி,வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

யாதவன் அப்படியா நினைக்கிரீங்க?
இல்லியே.

SRINIVAS GOPALAN said...

மாமி
சமயம் கிடைக்கும் பொழுது எனது ப்ளாக் பக்கம் வரவும்.
http://srinivasgopalan.blogspot.com
சௌந்தர்ய லஹரி முடித்து, தற்பொழுது ஆதித்ய ஹ்ருதயம் பற்றி எழுதிக் கொண்டுள்ளேன். உங்களைப் போன்ற பெரியவா வந்து ஆசீர்வதிக்கணும்.

Mahi said...

சாப்பாடு படுத்தும் பாடு! :))))

மோகனும் ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்தானே? அனுதினம் மூணு வேளையும் விதம் விதமாவே வேணும்னு அடம்பிடிச்சா எப்படி? ;)

Lakshmi said...

மஹி, வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸ்ரீனிவாச கோபாலன், கண்டிப்பாவரென்

Ramani said...

கதையும் சொல்லியுள்ளவிதமும் அருமை
ஆனால் காலை அவசரத்தில்
செய்யமுடியுமா என ஆண் மனம்
வருந்தும்படியாக முடித்திருந்தால் இன்னும்
சிறப்பாக இருக்குமோ ?
கதை உங்களுக்கு
சிறப்பாக வருகிறது
தொடர வாழ்த்துக்கள்

ஹேமா said...

இந்தக்காலத்துப் பெண்களுக்கு மண்டையில் உறைக்கிறமாதிரி நல்ல புத்திமதிக் கதை.நல்லது அம்மா !

Lakshmi said...

ஹேமா, நன்றிம்மா.

மதுரை சரவணன் said...

ellaarum ungala maathiri irunthittaa sandai varumaa? kalakkal pathivu..vaalththukkal

Lakshmi said...

வருகைக்கு நன்ரி மதுரை சரவனன்

radhakrishnan said...

அபலைப்பெண்.மோகனுக்கு காரியம்
ஆகிவிட்டதே.கருத்துள்ள கதை

Lakshmi said...

ராதாகிருஷ்னன் வருகைக்கு நன்ரி

என்னை ஆதரிப்பவர்கள் . .