Google+ Followers

Pages

Tuesday, June 21, 2011

தனக்கொரு நீதி.

இந்த டீச்சர்கள் எல்லாம் என்னதான் வேலை ப்ண்ராங்களோ. ஒன்னாம் வகுப்பு
குழந்தைகளுக்கு எவ்வளவு ஹோம் ஒர்க் கொடுக்கரா.?குருவி தலெல பனங்காய்
 மாதிரி. வர, வர கேள்வி கேப்பாரே இல்லே.ஆனா அந்தப்பிஞ்சுகளுக்கு பாடம்
சொல்லிக்கொடுப்பதெல்லாம் அம்மாக்கள்தான்.

டீச்சருக்கு கொடுக்கர சம்பளமும் சலுகைகளும் சுத்த வேஸ்ட் தான். ஒரே
 வேளைதான் ஸ்கூலு, கை நிறைய சம்பளம்,சம்பளத்தோட ஒருமாச லீவு
வேர, இவ்வளவு சௌரியம் கிடைக்கரவா குழந்தைகளை கவனிச்சு பாடம்
சொல்லிக்கொடுக்கக்கூடாதோ? வருவா, போர்ட்ல பேருக்கு ஏதானும் கிறுக்கிட்டு பசங்களை காப்பி பண்ண சொல்லிட்டு அவங்க ஹாயா ஒரு
 நாவலோ, இல்லைனா ஏதானும் கை வேலைகளிலோ மூழ்கிடுவாங்க.
நம்ம காலத்திலயும் ஸ்கூல் போயிருக்கோம். இப்படியா? டீச்சர்னாலே
என்ன ஒரு மதிப்பு, மறியாதை பயம் எல்லாம் இருந்தது.அவங்களும் குழந்தை
களை கவனிச்சு பாடம் சொல்லிக்கொடுப்பாங்க.

வீட்ல சொல்லிக்கொடுத்தா பசங்க எங்க படிக்கராங்க?ஸ்கூல் அனுப்பினா நல்ல படிப்பு கிடைக்கும் அவங்க வயசொத்த குழந்தைகள்கூட பழக வாய்ப்பு
கிடைக்கும்,ஒருவரைப்பார்த்து ஒருவர் போட்டி போட்டு நல்ல படிப்பாங்கன்னுதானே ஸ்கூலுக்கே அனுப்பரோம். இதுக்கும் மேல பிரைவேட்
 டியூஷனுக்கு வேர அனுப்பவேண்டி இருக்கு.குழந்தைக எதிர்காலம் முக்கியம் இல்லியா? ஆரம்பத்திலேயே கோச்சிங்க் நல்லா இல்லைனா என்ன பண்ரது?

அன்று மரகதம் வீட்டில் கூடிப்பேசிக்கொண்டிருந்தவர்களின் காரசார உரை
 யாடல்தான் மேலே பார்த்தது.10-பேர்க சேர்ந்து மாதம் ஒரு தொகை சீட்டு
 போடுவாங்க. குலுக்கிப்போட்டு அந்தந்தமாசம் சீட்டு விழுந்தவங்க வீட்டில்
 எல்லாரும் கூடி இதுபோல ஏதானும் பேசிக்கொள்வார்கள். இன்று அவர்களின்
பேச்சில் பாவம் டீச்சர்கள் மாட்டிக்கொண்டார்கள்.அந்தமாதம் மரகத்துக்கு
 சீட்டு விழுந்தது. ஏக குஷியில் எல்லாருக்கும் ஸ்வீட், காரம், காஃபி கொடுத்து
 உபசரித்தாள் மரகதம்.

இப்படி மாதம் ஒரு மெம்பர்வீட்டில் கூடுவார்கள்.  பேசிமுடித்து காஃபி டிபன்
முடிந்து கலைந்து சென்றார்கள். அடுத்தமாதம் கல்யாணிக்கு சீட்டுப்பணம்
 குலுக்கலில் விழுந்தது. மறுபடியும் எல்லாரும் அவர்கள் வீட்டில் கூடி
 அரட்டையில். அன்றும் தொடராக டீச்சர்ஸ் பற்றிய பேச்சே ஆரம்பித்தார்கள்.
 உடனே மரகதம். என்ன நீங்கள்ளாம் ஒரு தலையாக டீச்சர்ஸ் மேலயே பழி
போடரிங்க. அவளும் மனுஷிதானே. ஒரு க்ளாஸ்ல புளிமூட்டை மாதிரி
 40, 50 குழந்தைகளைச்சேர்த்தா, அவதான் என்ன பண்ணுவா? ஒவ்வொருவரையும் தனிதனியா கவனிக்கவா முடியும். நம்மகாலத்ல எல்லாம் ஒருக்ளாஸ்ல மிஞ்சி, மிஞ்சி போனா 15, 20 குழந்தைகளுக்கு மேல
 இருக்கமாட்டா. ஒவ்வொரு குழதைகளையும் தனியா கவனிக்க முடியும்.


அதுதவிரஅன்னன்னிக்குஎன்னபாடம்நடத்தினா,என்னசொல்லிக்கொடுத்தான்னு
பிரின்சிக்கு நோட்ஸ் எழுதி சப்மிட் பண்ணனும். படம் வரைஞ்சு பாடங்களுக்கு
சார்ட் பேப்பர்லாம் ரெடிபண்ணனும், ஒருமாசம் லீவுலயும் அடுத்த வருஷத்தோட புதுஅட்மிஷனுக்கு எல்லாம் ரெடிபண்ணனும்னு அவாளுக்கும்
தலைக்குமேல வேலைகள் கொடுத்துடுவா.பரீட்சை சமயம் அந்த டீச்சர்கள்படும் அவதி சொல்லி முடியாது..பாவம் அவக்களைப்பற்றி வாய்க்கு
 வந்தபடி பேசாதீங்கன்னு பொரிந்து தள்ளி விட்டாள். மற்றவர்களுக்கோ ஒரே
ஆச்சரியம். என்னது இது,  நேத்துவரை டீச்சர்களை மட்டம்தட்டிண்டே இருந்தா
  இன்னிக்கு என்ன ஆச்சு? ஒரே அடியா அவங்களுக்கு சப்போர்ட்டா பேசரா?

இப்படி எல்லாரும் யோசித்துக்கொண்டிருக்கும் போது மரகதத்தின் பெரிய
 பெண் சுஜி ஒரு பெரிய சாக்லெட் டப்பாவுடன் அங்கு வந்து அனைவருக்கும்
 சாக்லெட் கொடுத்துவிட்டு ஆண்டி எனக்கு நம்ம ஸ்கூல்ல டீச்சர் வேலை கிடைச்சிருக்குன்னு சந்தோஷமாகச்சொல்லவும், எல்லார்முகங்களிலும்
 ஓ, அப்படியா விஷயம். அதான் மரகதம் டீச்சகளுக்கு சப்போர்ட்டா பேசராளா?
அப்போ சரிதான். என்று கலைந்து போனார்கள்.

23 comments:

வெங்கட் நாகராஜ் said...

தனக்கென்று வரும்போது தான் விஷயத்தின் “கனம்” புரியும். ஒருவரை குறை சொல்லும் முன் அவரில் நம்மை வைத்து பார்க்கும் போது தான் அவர் பக்கத்தில் இருக்கும் நியாயம் புரியும்...

உங்கள் கதை நன்றாக இருக்கிறது அம்மா..

koodal bala said...

இது போலத்தான் எனது நண்பன் ஒருவன் ஆசிரியர்களுக்கு அளவுக்கதிகமான சம்பளம் என்று பேசிக்கொண்டிருப்பான் .திடீரென் அரசாங்கத்தில் ஆசிரியர் வேலை அவனுக்கு கிடைத்து விட்டது .இப்போது சம்பளம் போதாது என்று நடத்தப்படும் போராட்டங்களில் தவறாது கலந்துகொள்கிறான் ....

RAMVI said...

லக்‌ஷ்மி அம்மா நான் தான் first..teachers பற்றி 2 விதமாக சொல்லுவர்களை பற்றி கதையாக சொல்லிவிட்டீர்கள். என்னதான் இருந்தாலும் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.

புதுகைத் தென்றல் said...

ஒரு முன்னாள் ஆசிரியையாக ரசித்தேன்.

தமிழ்வாசி - Prakash said...

கதை நல்லாயிருக்கே.... பெண்கள் ஒன்று கூடினால் ...... ஏதோ கொண்டாட்டம்னு சொல்வாங்க...

ஸாதிகா said...

லக்‌ஷ்மிம்மா,எங்கள் வீட்டில் யாரும் டீச்சர் இல்லை.ஆனாலும் நான் டீச்சரைத்தான் சப்போர்ட் பண்ணி பேசுவேன்.

A.R.ராஜகோபாலன் said...

ஆஹா
தனக்கொரு நீதி என்ற
நீதிச் சொல்லை
நீதியுடன் சொல்லிய விதம் அருமை
ஆனால் நீங்கள் சொன்ன ரெண்டு தரப்பு வாதமும் சரியானதுதான்
அவரவர் பார்வையில்

அரசன் said...

நல்ல தொரு கதை ...
நிஜத்தில் நடக்கும் நிகழ்வுதான் ..

வை.கோபாலகிருஷ்ணன் said...

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள்.
அதுபோலவே உள்ளது இதுவும்.
பதிவுக்குப் பாராட்டுக்கள்.

Lakshmi said...

வெங்கட், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

கூடல் பாலா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ராம்வி, நீங்க சொல்வது ரொம்ப கரெக்ட். எழுத்தறிவித்தவன் இறைவந்தான்.

Lakshmi said...

புதுகைத்தென்றல் நன்றி.

Lakshmi said...

பிரகாஷ், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ஸாதிகா நன்றி.

Lakshmi said...

ராஜகோபால் நன்றி.

Lakshmi said...

கோபால்சார் நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

தனக்கென்று வரும்போது பார்வையும் பேச்சும் தனிதான்.

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி வலைச்சர பிசியிலும்
இங்கு வந்ததுக்கு நன்றி.

அம்பாளடியாள் said...

எனக்கும்கூட ஆசிரியர்மார் சிலபேர் நடந்துகொள்ளும்விதம் சுத்தமாக பிடிப்பதில்லை.அதற்காக ஒட்டுமொத்தமாக எல்லோரும் அப்படி இருப்பார்களா என்ன?....ஆசிரியர் தொழில் மிகவும் புனிதமான ஒன்று. அதுஅது அவர்கள் நடந்துகொள்ளும்
விதத்தில்தான் இருக்கின்றது. பொதுவாக ஆசிரியர்கள் ஒன்றைமட்டும் முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.முகம்பார்த்து
இல்லாத தகமைக்கு உதவுதல்.இது சிறுவர்களின் மனதைப்
பெரிதும் பாதிக்கும் ஒரு விடயம்......
நன்றி அம்மா தங்களின் ஒவ்வொரு ஆக்கங்களும் வாழ்க்கைக்குகந்த பயனுள்ள நல்ல தகவலைத் தருகின்றது.வாழ்த்துக்கள் சொல்ல
வயது போதாது.மனமுவந்து பாராட்டுகின்றேன்.....

Lakshmi said...

அம்பாளடியாள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் நன்றி.

radhakrishnan said...

ஆசிரியர் பணியை இப்போது பகுதிநேரப்பணிமாதிரிதான் செய்கிறார்கள்-பெரும்பாலும்.முன்பு போல் டெடிகேஷன் இல்லை.இதில்
போராட்டங்கள் வேறு.எழுத்தறிவித்தவன்
இறைவன் என்று இப்போது சொல்ல முடியவில்லை நல்ல கதை.

Lakshmi said...

ராதா கிருஷ்னன் வருகைக்கு நன்ரி

என்னை ஆதரிப்பவர்கள் . .