Google+ Followers

Pages

Saturday, June 25, 2011

சிக்கனம்தீபாவளிக்கு போனஸ் உண்டுதானே?ஏன் இல்லாம, வழக்கம் போல அதெல்லாம் உண்டு.ஏன் கேக்கரே? அதில்லே எல்லா வருஷமும் இங்க உள்ள ஒரே துணிக்கடையில்துனி எடுக்கரோம். அவன் என்ன விலை சொல்ரானோ அதுதான் விலை.எல்லாத்லயும் கூட்டி கூட்டி விலை சொல்லுவான்.இவன் கடையை விட்டாவேரகடையும் இங்க கிடையாது. எல்லாருமே இவன்கடையில் தான் துணிஎடுக்கரா இல்லியா. யூனிபார்ம் போல அனேகமா எல்லாருமே ஒரே டிசைனில்டிரஸ்போடுவோம். இந்த வாட்டி நாம் சிட்டில போயி துனி எடுக்கலாமே.
நிறைய கடை இருக்கும் வெரைட்டியாவும் கிடைக்கும் மலிவா வும் கிடைக்கும்
போலாமா? மாலதி தன் கணவன் விசுவிடம்கேட்டாள்.தீபாவளிக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கேடீ. அதுக்குள்ள துணிக்கு என்ன அவசரம்? இல்லீங்க பணம் கையில் கிடைச்சோடன போலைனா அதுக்கு வேர ஏதானும் செலவு வந்துடும். எப்படியும் கெட்டுப்போற சாமான் இல்லியே.முதல்லயே வாங்கி வந்துடலாமே இந்த சண்டேயே போலாமான்னு விடாமகேக்கவும் விசுவும் சலிப்புடன் எதையானும் நினைச்சா சாதிச்சுடனுமேசரி, சரி, என்ன மாதிரி துணி எடுக்கணும்னு வீட்லேந்தே தீர்மானம் பண்ணிக்கோ. கடைல போயி திரு, திருன்னு முழிக்கக்கூடாது ஓக்கேவா?
அதெல்லாம் நீங்க கவலையே பட்டாதீங்க இங்கயும் விட சிக்கனமா பர்ச்சேஸை முடிச்சுக்கலாம்.என்று மிகவும் சந்தோஷமாகச்சொன்னாள் 
மாலதி. அந்த சண்டே மாலதி 5.30-க்கே எழுந்து சுறு, சுறுப்பாக காஃபி, டிபன்
தயார் செய்து 6.30-க்கு விசுவை எழுப்பினாள்.அவன் சோம்பலுடன் திரும்பி
படுத்து போர்வையை தலை முதல் கால் வரை இழுத்து போர்த்திக்கொண்டு
திரும்பவும் தூங்கத்தொடங்கினான்.இங்க பாருங்க இன்னிக்கு சிட்டி போகனும் இல்லியா 7.30- பஸ் பிடிச்சாதான்சரியா இருக்கும். எழுந்திருங்க.குளிக்கப்போங்க. காபி டிபன்லாம் ரெடி செய்ஞ்சுட்டேன். என்னம்மா இவ்வளவு சீக்கிரமே போகனுமா? 11-மணி பஸ்ல
போலாமே என்றான். என்னது 11-மணி பஸ்லயா. அப்பரம் இரவு 12 மணிக்குத்
தான் வீடு திரும்ப முடியும். சீக்கிரம் போனா சீக்கிரமே வந்துடலாமில்லையா?
சரி அப்போ மத்யானலஞ்ச். என்னங்க நாம ஹோட்டல்ல சாப்பிட்டு எவ்வ்ளவு
மாசமாச்சு. இன்னிக்கு லஞ்சும் வெளில தான்.
மாலதியைச்சொல்லியும் குற்றமில்லை. அவர்கள் இருக்கும் இடம் அப்படிப்
பட்டதுதான்.வேலை பார்க்கும் தொழிற்சாலை, சுற்றிவர குடி இருப்பு கள்
மொத்தமாகவே 100, இல்லைனா 150 குடி இருப்புகள்தான் ஒரே ஒரு பள்ளிக்
கூடம், ஒரேரேஷன் கடை, ஒரு துணிக்கடை என்று எல்லாம் ஒன்னெ ஒன்னு
கண்ணெ, கண்ணுதான். வாராவாரம்சண்டே மார்க்கெட்டில் காய்கள் மற்ற தேவையான பொருட்கள் வாங்கணும். ஆணகள் ஆபீஸ், வீடு, ஆபீஸ் வீடு
என்றும், பெண்கள் வீடு, வீடு என்றுமே இருப்பார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தாராலமாக மரம் செடி கொடி எல்லாமே காடாக வளர்ந்திருக்கும்.
அடுத்த வீட்டில் யாரு இருக்காங்கன்னு கூட தெரிஞ்சுக்க முடியாது. நாள்
பூராவும் வீட்டிலேயே அடைந்து ஒரேபோர்தான்.
இதுபோல தீபாவளி பண்டிகை சமயம் சிட்டி போவது ஏதோ ஊருக்கு போவது
போல அவர்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம். இவர்கள் இருக்கும்
இடத்திலிருந்தி சிட்டி 50- கிலோ மீட்டரில் இருந்தது. காலை 8 மணிக்கு ஒரு
பஸ்., 12மணிக்கு ஒரு பஸ் என்று இரண்டு பஸ் விடுவார்கள். குறைந்தது 2 மணி நேரம் ஆகும் சிட்டிபோக.பஸ் எல்லாம் சரியான டப்பா பஸ்தான்.
இவர்களும் கரெக்டாக 7.30-க்கு பஸ் ஸ்டேண்ட் அடைந்தார்கள். நிறைய
கூட்டம். 8 மணிக்கு பஸ் வந்தது. ஒரே கூட்டம் கண்டக்டரோ படியில் நின்று
கொண்டே டிக்கட் கொடுத்துக்கொண்டிருந்தார். டிக்கட் வாங்கினாலதான் 
உள்ளயே நுழைய முடிந்த்து. ஒரு வழியாக உட்காரவும் இடம்பிடித்து உட்கார்
தார்கள்.
10.30-க்கு சிட்டியை அடைந்தது பஸ்,ஒரு ஆட்டோ பிடித்து துணிக்கடை சென்
றார்கள். மிகவும் தாகமெடுக்கவே வழியிலேயே ஒரு கூல் ட்ரிங்க்ஸ்.
கடையிலும் நல்ல கூட்டம் மாலதி டெர்கோசாவில் ஒரு சாரியும்,டெரி காட்டன் ஒரு சாரியும் எடுத்துக்கொண்டாள். விசுவுக்கு பேண்ட் ஷர்ட்ட் துணி
யும் அவளே செலக்ட் செய்தாள். ஓரளவு விலை மலிவாகவே இருந்தது.
நிறையா வெரைட்டி இருந்தது.ஒரும ணீக்கு பர்ச்சேஸ் முடிந்து ஹோட்டலில்
லஞ்ச் சாப்பிட்டு பக்கத்தி உள்ளதியேட்டரில் நல்ல படம் இருந்ததால் அங்கு
போனார்கள். வெளியே வரும்போது ரோசைடில் வீட்டு உபயோகப்பொருட்
களின் கண்காட்ச்சி இருந்தது. அங்குபோய் சுத்திப்பாத்துட்டு ஒரு கேக் ஓவன்
வாங்கினார்கள்.சாயங்காலம் காபி டிபன் முடிந்து பஸ்பிடித்து வீடு வர 11-
மணி. அப்பாடான்னு பார்சல்களை ஓரமாகப்போட்டுவிட்டு படுக்கையில்
விழுந்ததுதான் தெரியும். காலை முழிப்பு வந்தபோது மணி 10. வாரிச்சுருட்டி
எழுந்தால் மாலதி. குழாயில் தண்ணி வந்து நின்னு போயிருந்த்தது. பால்
காரன் பெல் அடிச்சு யாரும் தொறக்காததால் போய் விட்டிருந்தான்.
விசுவை உலுக்கி எழுப்பினாள். என்னம்மா டயம் என்ன காபி கொடு என்றான்.
ஐயோ மணி 10 ஆச்சுங்க. பால் காரன் வந்துட்டு போயிட்டான். குழாய்ல 
தண்ணீயும் வல்லே. நானே இப்பதான் எழுந்தேன். என்றாள் விசுவுக்கு காலை
காபி இல்லேன்னா பயங்கர கோபம் வரும். என்ன நீ இன்னிக்கு எனக்கு 
ஓவர்டைம் டூட்டி போட்டிருக்கா. அதுக்கு இவ்வளவு லேட்டா எப்படி போறது
அந்த எக்ஸ்ட்ரா பணம் நஷ்ட்டம் பாரு. எனக்கு இப்பொ காப்பி வேனும்
பால் பவுடரில் காப்பி கலந்து இருவரும் குடித்துவிட்டு ஹால் வந்தார்கள்.
பார்சல் பிரித்த மாலதி, பாத்தீங்களா அங்கபோய் துணி எடுத்ததில் எவ்வளவு
பணம் மிச்சமாச்சு. என்று பெருமையாகச்சொல்லவும் விசு இரு, இரு என்ன சிக்கனம் துணீமணில மிச்சம் பிடிச்சு ஹோட்டல் சினிமா கேக் ஓவன்
என்று எக்ஸ்ட்ரா செலவு எவ்வளவு ஆகியிருக்கு தெரியுமா. அதுதவிர காபி
வேர பவுடர்பால்.ஓவர்டைம்பணம் நஷ்ட்டம். இனி இங்கியே துணி எல்லாம்
எடுத்தப்போறும் என்றான். ஓ, நீங்க சொன்ன பிறகுதான் நினைவுக்கு வருது
ஓவன் வாங்கி இருக்கோமே. கேக் பண்ண சாமான்லாம் வாங்கி வாங்க என்று
அடுத்தசெலவுக்கு அடி போட்டாள். இவளைத்திருத்தவே முடியாதுப்பா சிக்க
நத்துக்கும் மாலதிக்கும் ஏணீ வ்ச்சாலும் எட்டாது. சரி என்ன லஞ்ச்? என்றான்
நேத்து மார்க்கெட் போலியே. காய் ஒன்னும் இல்லே. வத்தகுழம்பு சுட்ட அப்பலம் தான்.

45 comments:

♔ம.தி.சுதா♔ said...

அம்மாவின் சுடு சோறு எனக்கில்லியா ?


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃ இரு என்ன சிக்கனம் துணீமணில மிச்சம் பிடிச்சு ஹோட்டல் சினிமா கேக் ஓவன்
என்று எக்ஸ்ட்ரா செலவு எவ்வளவு ஆகியிருக்கு தெரியுமாஃஃஃஃ

அட ஒண்ணு போய் ஒண்ணா.. ஹ..ஹ..

Madhavan Srinivasagopalan said...

ஹா.. ஹா..
கதை அப்படி போகுதா...?

A.R.ராஜகோபாலன் said...

நடுத்தர வர்க்க குடும்பத்தின் சராசரி ஆசைகளை கண்ணாடிபோல் படம் பிடித்து காட்டி பெரிய விஷயத்தை சொன்ன சிறுகதை அருமை,
நன்றி பகிர்ந்ததற்கு

இராஜராஜேஸ்வரி said...

சிக்கநத்துக்கும் மாலதிக்கும் ஏணீ வ்ச்சாலும் எட்டாது........

எல் கே said...

அங்க போய் துணி மட்டும் எடுத்து வந்திருக்கணும். அங்க போய் எல்லா செலவும் பண்ணது விச்சுவின் தப்பும்தானே >>>

Lakshmi said...

சுடு சோறு உனக்கில்லாமலா?

Lakshmi said...

ம.தி. சுதா, வருகைக்கு நன்றி.

Lakshmi said...

மாதவன் நன்றி.

Lakshmi said...

ராஜகோபாலன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ஆமா ராஜேச்வரி. பெரும்பாலான குடும்பங்க ளில் இதுதானே நடக்கிரது.

Lakshmi said...

கார்த்தி, மனைவி ஆசையா கேக்கும் போது எந்தக்கணவனால மறுப்பு சொல்ல
முடியும்?

Lakshmi said...

கார்த்தி, மனைவி ஆசையா கேக்கும் போது எந்தக்கணவனால மறுப்பு சொல்ல
முடியும்?

RAMVI said...

ஒரு இடத்தில் மிச்சம் பிடித்து இன்னொரு இடத்தில் விடுவது எல்லோர் வீட்டிலைய்ம் சாதாரணமாக நடப்பது தான், அதை அழகான கதையாக எழுதியிருக்கிரீர்கள் அம்மா.

கடம்பவன குயில் said...

ஏதோ சிட்டிக்கு போய் துணிமணி எடுத்ததால் வித்தியாசமான டிசைனிலும் எடுக்கமுடிந்தது ஹோட்டல், சினிமா, கேக்ஓவன் என்று வாங்கிக்கவும் முடிந்தது. பாவம் மாலதி வருடத்திற்கு ஒருநாள கொஞ்சம் என்ஜாய் பண்ணிட்டு போகட்டுமே. நடுத்தர மக்களின் வாழ்ககை குடும்ப நிலையை கண்ணாடிபோல் பிரதிபலித்த கதை.வெகு அருமை.

தமிழ்வாசி - Prakash said...

கதை அருமை

மாதேவி said...

கடைசியில் சுட்டஅப்பளம் வத்தல்குழம்புதான் மிஞ்சியது :))

இப்போதைய சிக்கனம் இப்படித்தான்.

Lakshmi said...

ரமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

கடம்பவனக்குயில், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

மாதேவி நன்றி.

Lakshmi said...

பிரகாஷ் நன்றி.

குணசேகரன்... said...

நல்ல பதிவு.நன்றி.

raji said...

மலை போறது தெரியாது கடுகு போறதுதான் தெரியும்பாங்க.அந்த மாதிரி இருக்கு.
குடும்ப வாழ்வுக்கு அவசியமான கதை.சரியான விதத்தில் கொண்டு சென்றுள்ளீர்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

கொஞ்சம் நல்ல எண்ணெயாக ஊற்றிப்பிசைந்து கொண்டால் போதும் வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும் கூட டேஸ்ட்டாகத்தான் இருக்கும். அதே போல இந்த சிக்கனம் பற்றிய பதிவும் டேஸ்ட் தான்.

Lakshmi said...

வத்தக்குழம்புன்னா என்ன குறைச்சல்?
அதுலஉள்ளடேஸ்ட் சாப்பிட்டுப்பாத்தவங்களுக்குத்தானே தெரியும்.

Lakshmi said...

ராஜி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கருணாகார்த்திகேயன் said...

நல்ல இருக்கு அம்மா ..
தொடருங்கள் ...

அன்புடன்
கருணா கார்த்திகேயன்

கோவை2தில்லி said...

யதார்த்தமான கதை. நல்லாயிருக்கும்மா.

Lakshmi said...

கருணா கார்த்திகேயன் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

கோவை2தில்லி நன்றிங்க.

ராமலக்ஷ்மி said...

யதார்த்தம்:)! சொன்ன விதம் அருமை.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதைம்மா!.... எல்லோர் வீட்டிலும் நடப்பதை அழகிய கதையாகச் சொல்லி இருக்கீங்க!

Lakshmi said...

ராமலஷ்மி, வருகைக்கு நன்றி.

கவி அழகன் said...

அருமையான சுவாரசியமான சம்பவங்கள்
இனிமைதரும் உணர்வுகள்
கலக்கல்

Lakshmi said...

கவி அழகன் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

கவி அழகன் வருகைக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிக்கனம் பற்றி ஏதோ சொல்லி சிக்கனமாக முடித்து விட்டீர்கள்.

அந்நியன் 2 said...

உங்கள் வீட்டிற்க்கு வந்ததுமே சாட் ரூம் கண்ணை கட்டியது அருமையான அறை அம்மா.

வாழ்த்துக்கள்.

athira said...

அழகாகச் சொல்லியிருக்கிறீங்க கதை.

Lakshmi said...

அ ந் நிய ன்2நீங்களும சாட் ரூம்ல வந்து
கலக்குங்க.

Lakshmi said...

அதிரா வருகைக்கு நன்றி.

கே. பி. ஜனா... said...

சரளமான நடையில் ஒரு அழகான கதை...

Sriram said...

HI Akka, Nice to see your blog

Sriram

Lakshmi said...

thanks sreeram

Lakshmi said...

k.p. jana thanks

என்னை ஆதரிப்பவர்கள் . .