Google+ Followers

Pages

Monday, December 12, 2011

காவலன். 1

ரகு விமான நிலையம் விட்டு வெளியே வந்து டாக்சி பிடித்து போகவேண்டிய இடம் சொல்லி அமர்ந்தான்.குறைந்தது ஒருமணினேரமாவது ஆகும் அவன் போய்ச்சேரவேண்டிய இடம் வர. வெளி நாட்டில் வேலை ரகுவுக்கு. வெளி நாடு போகும் போதும் வரும்போதும் இந்த விமானங்கள் நடு இரவில் தான் இருக்கின்றன.அம்மா அப்பாவுக்கு ஒரே பையன் ரகு. அவன் பிறந்தது வளர்ந்தது எல்லாமே ஒரு சிறிய கிராமத்தில்தான்.மேல்படிப்புக்கு பக்கத்தில் உள்ள பெரிய நகரம் போக வேண்டி வந்தது. படித்தபடிப்பு வீணாகாமல் வெளி நாட்டில் வேலைக்கும் முயற்சி செய்து ரெண்டு வருடங்களாக வெளி நாட்டு வேலை. முதலில் அவன் அப்பா அம்மா இதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. உள் நாட்டிலேயே ஏதானும் நல்ல வேலையில் சேர்ந்துக்க சொன்னார்கள். ரகுதான் பிடிவாதமாக வெளி நாடு சென்றான். வருடம் ஒருமுறை வந்து தாய் தந்தை யுடன் ஒருமாசம் இருந்துவிட்டுபோவான்.அவன் ஊர் பஞ்சாயத்துபோர்ட் வந்ததுமே டாக்சி ப்ரேக் டௌன் ஆகி நின்று விட்டது. இந்த இரவு நேரம் வேர வண்டியும் கிடைக்காது. சரி இன்னும் கொஞ்ச தூரம் தானே இருக்கு நடந்தேபோயிடலாம்னு நடக்க ஆரம்பித்தான்.தெருக்கள் எல்லாம்கிராமத்துக்கெ உரிய சோம்பேறிதனத்துடன் அமைதியாக இருட்டாக இருந்தது. அவன் வீடு அக்கிரஹாரத்தில் இருந்தது. கோவில் தாண்டிமெதுவாக நடந்து வரும் போது தான் கவனித்தான் கோவில் வாசல் திண்ணையில் லைட்டு வெளிச்சத்தில் 10-15 பெரியவர்கள் உற்சாகமாக சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள்.  எல்லார்பக்கத்திலும் வெற்றிலைசெல்லமும், சொம்பு நிறைய தண்ணீரும் இருந்தது.அதில் ரகுவின் அப்பாவும் இருந்தார்.எல்லாருமே 70-80 வயது உள்ளவர்கள்தான்.ரகுவுக்கோ தன் அப்பாவை அங்கு பார்த்ததில் மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் விளையாட்டு மும்முறத்தில் ரகுவை கவனிக்கவே இல்லை.ரகுவுக்கோ மூக்கின்மேல் கோபம். என்ன இந்தபெரியவா எல்லாரும் கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாம கோவில் வாசலில் உக்காந்து சீட்டு ஆடிண்டு இருக்கா. அதுவும் இப்ப இரவு 2-மணி ஆறது. இந்த நேரத்திலான்னு
நினைத்துக்கொண்டே வீடு நோக்கி நடந்தான்.


வாசல் கதவைதட்டி அம்மா, அம்மான்னு மெதுவாக அழைத்தான். உடனே வெளியில் லைட்டு போட்டு அவன் அம்மா யாரு இந்த நேரத்ல கதவுதட்டரான்னு திறந்துபார்த்தா. ரகுவைப்பார்த்ததும் அவ்ளுக்கு சந்தோஷமும் அழுகையுமாய் கலந்து வந்தது. என்னடா ராஜா இந்த நேரத்ல வந்தே. நாளைதானே வரதா போன் பண்ணினே. இரவு ரெஸ்ட் எடுத்துண்டு நிதானமா வந்திருக்கலாமே சரி சரி முதல்ல உள்ள வா. கை கால் அலம்பிண்டு வா. ரொம்ப பசியா வந்திருப்பே. ஏதானும் சாப்பிடு. என்றாள். இல்லேம்மா ராத்திரி 2 மணிக்கு என்ன சாப்பிடமுடியும் என்றான். அப்போ சரி ஒரு டம்ளர் பாலாவது குடி என்று பால்காய்ச்சி கொண்டு கொடுத்தாள்.அம்மா அப்பா எங்கேம்மா? நீ தனியே இருக்கே வீட்டில. உன்னத்தனியே விட்டுட்டு அப்பா எங்க போனார்? என்று கேட்டான்.   வருவார்டா. நீ களைச்சுபோய் வந்திருப்பே முதல்ல படுத்து தூங்கு பாக்கி எல்லாம் காலேல பேசிக்கலாம் என்றாள் .அவனுக்கும் ரொம்பவே டயர்டா இருந்ததால மேற்கொண்டு எதுவுமே கேக்காம படுக்கப்போனான்.


45 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அசத்தல்..

இராஜராஜேஸ்வரி said...

ஆரம்பம் அருமை..

RAMVI said...

சுவாரசியமாக ஆரம்பித்திருக்கீங்கம்மா? அப்பா ஏன் கோவில் வாசலில் இருந்தார்? காரணம் ஏதாவது கண்டிப்பாக இருக்கும். அடுத்த பகுதியை விரைவில் எதிப்பார்க்கிறேன் அம்மா

விக்கியுலகம் said...

அம்மா பதிவு நல்ல நடையில் உள்ளது..நன்றி!

கணேஷ் said...

நல்ல துவக்கம். அடுத்த பகுதியை ஆவலாய் எதிர்பார்க்க வைக்கிறது. காத்திருக்கிறேன்...

ராஜி said...

கதை விறு விறுப்பா போகுது. அடுத்த பாகம் எப்போன்னு ஏங்க வைத்திருக்கு.

ராஜி said...

த ம 3

radhakrishnan said...

யாருக்கும் செலவில்லாமல், கோவில்
திண்ணை பொது விளக்கில் சீட்டு
விளையாட்டு.இரவு 2மணி.
70 வயதுக்கு மேல் நல்ல பொழுது
போக்குதான். பரவாயில்லையே
பாட்டிகளுக்கும் ஏதாவது விளையாட்டு
இருந்தால்பரவாயில்லை.விளையாட்டு முடிந்து சேர்ந்தே வீட்டிற்குப் போகலாம்
கதைக்கு நன்றி அம்மா

கே. பி. ஜனா... said...

ஆரம்பம் ஆவலைத் தூண்டுகிறது...

கோவை2தில்லி said...

என்னவென்று தெரிந்து கொள்ள, ஆவலுடன் காத்திருக்கிறோம்.

Madhavan Srinivasagopalan said...

தொடர் கதையா ?
முடிஞ்சா மாதிரி தெரியலையே..

K.s.s.Rajh said...

அருமையான சுவாரஸ்யமான பகிர்வு

ஸாதிகா said...

ஆரம்பமே அசத்தல்.தொடருங்கள் தொடருகிறோம்.

M.R said...

அருமையாக உள்ளது

athira said...

ஆ.. லக்ஸ்மி அக்கா.. முதல் பந்தியை விட 2ம் பந்தி விறுவிறுப்பாகி, பின்பு உச்சமடையும்போது நிறுத்திட்டீங்களே அவ்வ்வ்வ்:)))..

ஹேமா said...

தொடக்கமே அருமையா தொடங்கியிருக்கீங்க அம்மா !

மகேந்திரன் said...

ஆரம்பத்திலேயே கதை டாப் கியர்ல பறக்குது..


//////////ரகுவைப்பார்த்ததும் அவ்ளுக்கு சந்தோஷமும் அழுகையுமாய் கலந்து வந்தது. /////

நெக்குருகி வரும் தாய்ப்பாசம்..

தொடருங்கள் அம்மா..

ஸ்ரீராம். said...

அப்பா அங்கே இருந்ததற்குக் காரணம் justification இன்மேல்தான் வரும் என்று எதிர்பார்க்கிறேன்!! ரகு ஸாரி சொல்லப் போறார்....!! Right?

Lakshmi said...

நண்டு நொரண்டு வருகைக்கு நன்றி

Lakshmi said...

வேடந்தாங்கல் கருன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரமா வருகைக்கு நன்றி

Lakshmi said...

விக்கி உலகம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கணேஷ் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராஜி வருகைக்கு நன்றி.

Lakshmi said...

ராதா கிருஷ்னன் ஹா ஹா, நல்ல ஐடியா சொல்லி இருக்கிங்க.

Lakshmi said...

கே. பி. ஜனா வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

Lakshmi said...

மாதவன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராஜ் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

Lakshmi said...

எம். ஆர். வருகைக்கு நன்றி

Lakshmi said...

அதிரா, வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஹேமா, வருகைக்கு நன்றி

Lakshmi said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

ரசிகன் said...

அடுத்த பகுதி எப்போ வரும்???

Lakshmi said...

ரசிகன் வாங்க அடுத்தபகுதி நாளை.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கதை! அருமை!
பகிர்விற்கு நன்றி அம்மா!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

Lakshmi said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கு நன்றி

சிவகுமாரன் said...

அப்பாவின் விட்டேத்தித் தனம் அதிர்ச்சியைத் தந்தது.
ஆனாலும் இது போல் நிறைய பேர் இருக்கவே செய்கிறார்கள்.

ராமலக்ஷ்மி said...

அருமை. அடுத்த பாகத்துக்கு வருகிறேன்.

Lakshmi said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

மாதேவி said...

நல்ல பகிர்வு. மிகுதி வருகின்றேன்.

என்னை ஆதரிப்பவர்கள் . .