Google+ Followers

Pages

Friday, December 2, 2011

காத்திருப்பு 2

 போன்பேச்சை முடித்துக்கொண்டுவந்த டாடி, என்னம்மா சொல்லிக்கொண்டிருந்தேன்? நம்ம அந்தஸ்துக்கு தகுந்தமாப்பிள்ளைபற்றி சொல்லிண்டு இருந்தேன் இல்லியா? எனக்கு பிடிக்காதுன்னு நினைத்தா சேகர் ஏழைன்னு என்கிட்ட சொன்னே? நம்மிடம் இருக்கும் சொத்தே நாலு தலைமுறைக்கு கானும். மேலும் மேலும் சொத்து எதுக்கு? என் பெண்ணை பூப்போல வச்சு காப்பாத்தர ஒரே குணம் மட்டும்தான் நான் மாப்பிள்ளையாவரப்போரவனிடம் எதிர்பார்க்கிரேன்.  ஆனாலும் உத்யோகம் புருஷ லட்சணம் இல்லியா நம்ம கம்பெனியிலேயே பெரிய பதவி கொடுத்துட்டாபோச்சு  எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லேம்மா உன் விருப்பம்தான் என் சந்தோஷம் சேகர் வரட்டும் நானே பேசி அவன் தயக்கத்தை போக்கி கல்யாணப்பேச்சை ஆரம்பிச்சுடரேன். இப்பகுஷியாடா? ஆமா மணி 8- ஆச்சே இன்னும் சேகரைக்காணோமே என்னாச்சும்மா எனக்கு தெரியும் டடி என் விருப்பத்துக்கு மாறா நீங்க ஏதுமே சொல்ல மாட்டீங்கன்னு நான் சேகரிடம் சொல்லிகிட்டே இருந்தேன் ஆனா அவந்தான் நம்பவே இல்லே  சரி டாடி அவன் உங்க கூட பேசத்தயங்கி வீட்லயே இருக்கானோ என்னமோ? நீங்க குளிச்சுட்டுவாங்க டாடி நாம சாப்பிட்டு அவனை  அவன் வீட்லயே போயி பார்த்த்ட்டு வரலாம் ப்ளீஸ்டாடி. என்று கெஞ்சலாக கூறினாள் அவரும் குளித்துவந்து சமையல்காரன் சூடாக பரிமாறிய உணவை முடித்துக்கொண்டு இருவரும் சேகர் வீடு போகும்போது இரவு 10- மணி ஆனது. பெல் அடித்ததும் சேகரின் வயதான மாமாதான் வந்து கதவைத்திறந்தார். அங்கிள் சேகர் இருக்கானா அவரைக்கூப்பிடுங்களேன் இன்று இரவு 7- மணிக்கு என் வீட்டு வரேன்னு சொல்லி இருந்தான் ஆனா வரவே இல்லே. எங்கே உள்ளே இருக்கானா? நான் சுனிதா, இது என் அப்பா என்று அறிமுகப்படுத்திக்கொண்டாள்.  வாம்மா, வாங்கசார். சேகர் சரியா 7- மணிக்கு டீக்கா ட்ரெஸ் எல்லாம் ப்ண்ணிட்டு வேகமா எங்கியோ கிளம்பி போனான் அரைமணியில் திரும்பி வந்துட்டான் முகம் பூர கோவம் தெரிந்தது தன்ரூமில் போயி உக்காந்துண்டு என்னமோ லெட்டர்மாதிரி எழுதினான்  8 மணிக்கு எனக்கு சாப்பாடு போட்டுட்டு ஒரு பெட்டியில் அவன் ட்ரெசெல்லாம் எடுத்துவச்சுண்டு மாமா நான் வேலை தேடி வெளி ஊரு போரேன் எப்பதிரும்ப வருவேன்னு எனக்கே தெரியாது. சுனிதான்னு ஒரு பொண்ணு என்னைத்தேடி வந்தா இந்த லெட்டரை அவகிட்ட கொடுதுடுங்கோன்னு சொல்லிட்டு போயிட்டான்மா.என்றார்மாமா. பாய்ந்து சென்ற சுனிதா லெட்டரை பிரித்து படிக்கத்துவங்கியது அவள் முகமே மாறி விட்டது.சுனி நான் ஏற்கனவே உன்னிடம் சொன்னேன் தானே எல்லாபணக்காரத்தந்தையும் ஒரு ஓட்டாண்டிக்கு தன் பெண்ணைக்கொடுக்கமாட்டார்னு. எந்தந்தை அப்படில்லாம் இல்லேன்னு நீ சொன்னே. ஆனா அன்று நான் உன் வீட்டு வாலில் வந்தப்போ உன் அப்பாவின் பேச்செல்லாம் நானும் கேட்டுட்டேன் அவர் அந்தஸ்துக்கு தகுந்த மாப்பிள்ளைதான் வேனும்னுதானே அவர் சொல்லிட்டு இருந்தார் அப்புரம் என்னை இந்த வேலை வெட்டி இல்லாதவனை எப்படி மாப்பிள்ளையாக ஏத்துக்க சம்மதிப்பார்/ உன் அப்பா பார்க்கும் வசதி உள்ள ஒரு பிள்ளையைப்பார்த்து கல்யாணம் கட்டிக்கிட்டு நீ சந்தோஷமா இரு  நான் வழக்கம்போல வேலை வேட்டையில் இறங்கிட்டேன் என்னை தேட வேண்டாம். என்று முடித்திருந்தான்  சுனிதா தன் அப்பாவிடம் பாருங்க டாடி நீங்க பேசின பேச்சில் பாதியக்கேட்டுட்டு சேகர் தப்பா நினைச்சு ஊரைவிட்டே போயிட்டான் அப்பா. எப்படியும் அவனைத்தேடி கண்டு பிக்கணும் டாடி அவன் இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லேன்னு பரிதாபகமாக அழும் மகளை தேற்றத்தெரியாமல் அந்தபணக்காரத்தந்தையின் கண்களிலும் கண்ணீர்.

44 comments:

ரசிகன் said...

கதையின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன். சேகரின் கண்ணியம் காக்கப் பட்டது.

கணேஷ் said...

ஒரு வாரம் ஊர்ல இல்லததால போன பதிவையும் சேர்த்து இப்பத்தான் படிச்சேன். (ஐய்யா, வெயிட் பண்றதுலருந்து தப்பிச்சுட்டனே...) பிரமாதம்மா... அவசரப்படுறதால ஏற்படுற இழப்பு எத்தனை பெரியது! சேகர் நல்ல துனைவிய மட்டுமில்லாம நல்ல மனிதரான மாமனாரையும் இழந்துட்டான். அருமையான கதை...

K.s.s.Rajh said...

மனதை வருடும் கதை அருமை

Madhavan Srinivasagopalan said...

ஓஹோ.. கதை அப்படிப் போயிடிச்சா..
சுனிதாக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

raji said...

ஆராய்ந்து தெளிதல் வேண்டும்.காதால் கேட்பதும் பொய்.
நல்ல கதை

ராமலக்ஷ்மி said...

அவசரம் விவேகம் அல்ல என்பதை உணர்த்தும் நல்ல கதை.

radhakrishnan said...

ந்ல்ல சஸ்பென்ஸோடு இருக்கிறது
கதை. எதிலும் அவசரம் கூடாது
என்பதைத் தெளிவாக்கஃ காட்டுகின்றது.
நன்றி அம்மா.

அமைதிச்சாரல் said...

கதை நல்லா இருக்கும்மா..

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சொல்லுவாங்க.. அதான் ஞாபகம் வருது.

asiya omar said...

வித்தியாசமான திருப்பம்..

வெங்கட் நாகராஜ் said...

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு!

நல்ல கதைம்மா...

ஸாதிகா said...

முடிவு அருமை.நடை அருமை

ஹேமா said...

எதிலயும் நிதானம் வேணும்ன்னு அழகா சொல்லியிருக்கீங்கம்மா !

ஸ்ரீராம். said...

ஒருவகையில் பார்க்கும்போது இப்படி அவசரப் பட்டு முடிவெடுப்பவனைத் திருமணம் செய்யாமலிருப்பதே நல்லது என்று தோன்றும். இன்னொரு வகையில் பார்க்கும்போது யாரிடம்தான் குறையில்லை, மனதுக்குப் பிடித்தவனோடு சேர வேண்டுமே, சேர்ந்த பிறகு நிலைமைகளை உணர்த்தி அந்தப் பழக்கங்களை மாற்றி விடலாம் என்றும் தோன்றும்!

Lakshmi said...

ரசிகன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கணேஷ் வருகைக்கு நன்ரி

Lakshmi said...

ராஜ் வருகைக்கு நன்ரி

Lakshmi said...

மாதவன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராஜி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராதாகிருஷ்னன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

சாந்தி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஆஸியா ஓமர் வருகைக்கு நன்றி

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஹேமா வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

அம்பாளடியாள் said...

லக்ஸ்மி அம்மா இன்றைய என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம்
பார்க்க வேண்டும் என் அன்போடு அழைக்கின்றேன் .மிக்க நன்றி
அம்மா பகிர்வுக்கும் ஒத்துளைப்புகளிக்கும் .

Lakshmi said...

அம்பாளடியால் வருகைக்கு நன்றி

மதுமதி said...

அருமையான கதையை பகிர்ந்ததற்கு நன்றி அம்மா..

இராஜராஜேஸ்வரி said...

ஆராய்ந்து தெளியாத சேகரோடு எப்படி வாழ்வது??

கதை முடிவு அருமை. பாராட்டுக்கள்..

Lakshmi said...

மதுமதி வருகைக்கு நன்றி

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

RAMVI said...

அதுக்குதான் அவசர படக்கூடாது. சேகரோட அவசர புத்தியால அவன் ஒரு நல்ல வாழ்க்கையை இழந்துட்டான்.

நல்ல கதை அம்மா.அழகாக சொல்லியிருக்கீங்க.

திண்டுக்கல் தனபாலன் said...

கதையின் முடிவு அருமை அம்மா!

Lakshmi said...

ரமா வருகைக்கு நன்றி

Lakshmi said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கு நன்றி

கோவை2தில்லி said...

சேகர் இப்படி அவசரப்பட்டுட்டானே:(((

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான கதை
இன்று

விஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறார்.

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

Lakshmi said...

என் ராஜபாட்டை ராஜா வருகைக்கு நன்றி

மாதேவி said...

சேகரின் அவசரத்தால் வந்த முடிவு.

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி

கீதா சாம்பசிவம் said...

முடிவை அவங்க அவங்க ஊகத்துக்கு விட்டிருப்பதும் நல்லாவே இருக்கு. ஆனால் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். சுனிதா நேரடியாகப் பார்த்துப் பேசினால் சேகர் சரியாகிவிடுவான். :)))

Lakshmi said...

கீதா வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .