காபில்லாம் குடிச்சு இன்னும் சில ஃப்ரெண்ட்ஸ்களை மீட் பண்ணினோம். அதில் ஒருவர் என்னிடம் ஆண்டி ஆப்ரிக்கா ல நீங்க இறங்கினதுமே என்ஃப்ரெண்ட் வந்து உங்களை எந்தபிரச்சனையும் இல்லாம வெளில கூட்டிண்டுபோவான் நான் போன்பண்ணி அவனுக்கு விவரம் சொல்லிட்டேன். வேர யாரு கூப்பிட்டாலும் அவங்க கூட போகாதீங்கன்னு சொன்னான்.அவன் பேரு ராஜேஷ். ட்ராவல் எஞ்சாய் பண்ணுங்க ஹேப்பி ஜர்னி சொன்னான்.
அவன் கேபின் உள்ளே கூட்டிண்டு போய் எல்லாம் சுற்றிக்காட்டினான். என் பெண் அம்மா டயம் ஆச்சு செக்யூரிட்டி செக்கின்னுக்கு போலாம் வான்னு. உள்ளே கூட்டிப்போனா. நம்மை நம் ஹேன்ட் பேக்கை எல்லாம் செக் பண்ணி உள்ளே அனுப்பினா. பெண்ணும் கூடவே இருந்ததால நான் எந்தவித டென்ஷனும் இல்லாம ஏர் போர்ட்டை ரசனை யுடன் சுத்திப்பார்த்தேன்.அண்டர் க்ரௌண்ட் ஃப்ளோரில் 11-ம் நம்பர்கேட்டில் ஏர் இண்டியா ஃப்ளைட் ரெடியாக இருந்தது. என் பெண் அதுவரையும் கூடவே இருந்தா. நான்ஃப்ளைட்டுக்குள் போனதும் அவள் கிளம்பி போனா.
என் நம்பர் 18- A. ஏர்ஹோஸ்டஸ் என் சீட்டைக்காட்டினா.உள்ளே பர்த்ததும் எனக்கு ரொம்ப சங்கடமா இருந்தது. டொமஸ்டிக் ஃப்ளைட்லலாம் ரெண்டு விண்டோபக்கமும் 3, 3, சீட் இருக்கும் நடுவில் நாம நடக்க ஏர்ஹோஸ்டஸ் ட்ராலி தள்ளிண்டு வர தாராளமா இடம் இருக்கும். இண்டெர்னேஷனல் ப்ளைட்டான இதில் ரெண்டு விண்டோ பக்கமும் ரெண்டு, ரெண்டு சீட் நடுவால நாலு சீட்கள் என்று ஒரே நெருக்கடியாக சீட்கள். ஒரு சீட்டுக்கும் அடுத்த சீட்டுக்கும் இடைவெளி ரொம்பவேகம்மி காலை நீட்டவே முடியாம ஐயப்பா சாமி மாதிரி முட்டி மடக்கிண்டு உக்கார வேண்டி இருந்தது.எனக்கு ஆர்த்தரட்டீஸ் ப்ராப்லம் உண்டு. சேந்தாப்போல அரைமணி நேரம் காலை தொங்கப்போட்டுண்டு உக்காந்திருக்கவே முடியாது இடைக்கு இடை காலை நீட்டி மடக்கி ஏதானும் பண்ணினாதான் சரியா இருக்கும்.இங்க அதுக்கு வழியே இல்லியே. தவிர ஒத்தையடிப்பாதை போல ரெண்டுபுறமும் கொஞ்சூண்டு நடைபாதைதானிருந்தது.எதிராப்ல ஆள் வந்தா நடக்க ரொம்ப சிரமம்தான். ஏது இப்படி பண்ணறான்னு கோவமா வந்தது.இப்படியே 7- மணி நேரம் எப்படி ட்ராவல் பண்ணமுடியும்னு ரொம்ப கஷ்டமாஃபீல் ஆச்சு என்ன பண்ணமுடியும்? போறவா எல்லாரும் இப்படித்தானே போரா. நமக்கென்ன ஸ்பெஷலென்று சீட்டில் உக்காந்து வெளியே பார்த்தேன்.
என்விண்டோ சீட்டுக்குகீழேதான் விங்க், அதாவது விமா
னத்தின் இறக்கை நீளமா நீட்டிண்டுஇருந்து வெளியில் எதையுமே பாக்கமுடியாம சதி செய்தது 17, 18, 19, இந்த 3 சீட்கீழேயும் விங்க் எல்லாகாட்சிகளையும் மறைக்குது. முதல்லயே இது தெரிஞ்சிருந்தா வேர நம்பராவது கேட்டிருக்கலாமேன்னு நினைச்சேன். சரி வெளியேயும் ஒன்னும் பாக்க முடியாது உள்ளயும் ஒரே
நெறிபடி. இந்த அவஸ்தைல எப்படி 7- மணி நேரம் ட்ராவல் பண்ணப்போரோம்னுஆச்சு. ஆப்ரிக்கா பயணம் சரியான பனிஷ்மெண்டா இருக்கும்போல இருக்கேன்னுமனசுபூரா என்ன பண்ணலாம்னு யோசனை. அந்த ஃப்ளைட்ல நாமட்டும் தான் த்மிழ். பாக்கி எல்லாருமே வேறு, வேறு பாஷைக்காரா. நிறைய ஆப்ரிக்கன்ஸ் இருந்தா. என் பக்கது சீட்லயும் ஒரு ஆப்ரிக்கா பொண்ணுதான் உக்காந்தா.ஆரம்பகட்ட பார்மாலிட்டிஎல்லாம் முடிந்து சீட்பெல்ட் போட்டுண்டதும் மெதுவாக ப்ளேன் கிளம்பியது வெளில எதையுமே பாக்கமுடியல்லே.எதிர் சீட் முதுகுபக்கம் குட்டியூண்டா ஒரு டி. வி இருந்தது. ஹெட்போன் எல்லாமும் இருந்தது. அவ்வளவுகிட்ட எப்படி பாக்க்க? கண் வலி எடுக்கும்.ரன்வேயில் வேகம் எடுத்து மேலே கிளம்ப ஆரம்பித்தது.
முதலில் எல்லாருக்கும் ஒரு குட்டி டர்கிஷ் நாப்கின் கொடுத்தா. அதை வன்னீரில் யூடிகோலான் போட்டு பிழிஞ்சு ஒரு ட்ரேயில் வரிசையா அடுக்கி கொண்டு தந்தா, அதை முகம், கழுத்து கைகளில் ஒத்தடம் கொடுப்பதுபோல ஒத்தி எடுக்க சொன்னா. அந்த ஏ, சி குளிருக்கு அந்த வென்னீர் ஒத்தடம் இதம்மா இருந்தது. கண்ணெல்லாம் நல்லா ஃப்ரெஷா ஆச்சு. அப்புரமா
எல்லாருக்கும் ஜூஸ் கொடுத்தா. ஆப்பிள் ஜூஸ் எனக்கு பிடிக்கலை டிஞ்சர் வாடை வந்ததுபோல இருந்தது. ஃப்ரெஷ் லெமன் ஜூஸ் இருந்தா
கொடுங்கன்னு கேட்டேன். இதோ வரேன்னு போனா பொய்யே போயிட்டா திருமப வரவே இல்லே. கொஞ்ச நேரம் ஆனதும் ஒரு ஸ்டூவர்ட் என்னிடம் வந்து மேடம் ப்ளீஸ் கம் வித்மீ. என்றான் இன்னம் என்ன புதுசா பிரச்சனையோ எல்லாம் கரெக்டாதானே செக் எல்லாம் பண்ணிட்டு வந்தோம் . என்று அவன் பின்னாடி போனேன். மன்செல்லாம் திக் திக் தான். பாதி வழில இறக்கி விடப்போரானோன்னு அசட்டு நினைப்புவேர( ஹா, ஹா, ஹா)
தெரியாத்தனமா இப்படிதனியா வந்து மாட்டிண்டோமே என்று கோவமா வந்தது. சரி என்னதான் நடக்கும் நடக்கட்டுமேன்னு அவன் பின்னால பலி ஆடு மாதிரி போனேன். வேர வழி. நான் பேசும் இங்க்லீஷ் தமிழ் மாதிரியே இருக்கும் அவாள்ளாம் பேசுர இங்க்லீஷ் நான் புரிஞ்சுக்கவே கொஞ்சம் டைம் எடுக்கும். யாருகூடயு ம் இங்க்லீஷில் பெசாததால எனக்கு பட்லர் இங்க்லீஷ் தான்வரும். ஐயோ இவன் தனியாகூட்டிண்டுபோய் என்ன விசாரிக்கப்போரானோ தெரியல்லியே.என்று ஒரு பதை பதைப்புடனேதான் போனேன்.எல்லாரும் என்னையே முறைச்சுப்பாக்கராப்போலவே தோணித்து. உனக்கெல்லாம் எதுக்கு வெளி நாடு போகும் ஆசை என்று என்மேலயே கோவம் கண்ணை மூடிண்டு வந்தது.ஏர்போர்ட்டெல்லாம் சுத்திப்பாத்த குஷில்லாம் எங்கியோ காணாமலே போச்சு.
( நன்றி கூள் இமேஜ்) (தொடரும்)

Tweet | |||||
34 comments:
பயணம் அனுபவம் நல்லாவே போயிட்டு இருந்தது..திடீர்ன்னு வந்து ஒருத்தன் கூட்டிட்டு போனான்னு சொல்றீங்க..அப்புறம் தொடரும் போட்டுட்டீங்க..என்னாச்சு அடுத்த பதிவுல தான் தெரிஞ்சிக்கணுமா..த்ரில்லா இருக்கு..
ஈரோட்டு சூரியன்
சஸ்பென்ஸில் நிறுத்தியுள்ளீர்கள். தொடருங்கள்.
சரியான இடத்துல தொடரும் போட்டிருக்கீங்களே.... அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்
தொடர் வாசிக்கும் ஆவலை தூண்டுகிறது.
இப்படி சஸ்பென்ஸ்ல நிறுத்திட்டீங்களே!!! அப்பறமா என்ன ஆச்சு??
என்னம்மா இது, மெல்லவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல், கைக்கெட்டிய
அருமையான விமானபயணத்தை அநுபவிக்க முடியாமல் படுத்துகிறதே.
லெமன் ஜூஸ் கொடுக்க உங்களைக்
கூட்டிச் சென்றிருப்பான்.
ஒரு சாம்பிள் அநுபவத்திற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு ஒருமுறை பையனுடன் சென்றோம்
ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை
பார்ப்பது மிக இனிய அநுபவம்தான்.
பெண் ஏர்இண்டியாவில் வேலை என்றால்பாஸ் இருக்குமே.அதுதான்
நிறைய விமானப் பயணம் செயதிருக்கிறீர்கள்.சரி
சீக்கிரம் எங்களை ஆப்பிரிக்கா கூட்டிச் செல்லுங்கள்.என்னென்ன அநுபவங்கள்
இருக்கிறதோ? பார்ப்போம்.
பகிர்வுக்கு நன்றி அம்மா.
சகோ.லக்ஷ்மி,
மிக அருமையான பயண அனுபவம். நன்றாக நியாபகம் வைத்து எழுதியுள்ளீர்கள். பல அரிய புதிய தகவல்களை இப்பயணத்தொடர் அறிய பதிய வைக்கும் என நம்புகிறேன்.
போன "கிலிபி" பதிவை இப்போதுதான் படித்தேன்...
இது "கில்பி"..!
ஓகே. பெயர் நாம் வைக்கிறதுதானே..!
//இண்டெர்னேஷனல் ப்ளைட்டான இதில் ரெண்டு விண்டோ பக்கமும் ரெண்டு, ரெண்டு சீட் நடுவால நாலு சீட்கள்//---ஆனால், நீங்கள் போட்டிருக்கும் படத்தில் 3X3X3 சீட் அமைப்பு..!
ஆனாலும், படுவிருவிருப்பான இடத்தில் தொடரும்... போட்டு கலக்குறீங்க சகோ.
திரில்லர் நாவல்ல கடைசிப்பக்கம் கிழிந்து காணாமல் போனதுபோல,அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்போடு முடிச்சிருகிங்க சகோ.....உங்களுக்கு ஒவ்வொன்றையும் விரிவாக,நேர்த்தியான ரசனையுடன் எழுதவருகிறது....என்னை கேட்டல் உங்களுக்கு தென்னிந்தியாவின் J.K ROWLING (அதாங்க HARRY POTTER நாவலை எழுதிய நாவலாசிரியை) என்ற பட்டத்தை கொடுக்கலாம்....
இப்படி சஸ்பென்ஸ் ‘மன்னி’யாகிட்டிங்களேம்மா... பிரயாண அனுபவம் படிக்க சுவாரஸ்யம். தொடருங்கள்... தொடர்கிறேன்...
இப்படி சஸ்பென்ஸ் ‘மன்னி’யாகிட்டிங்களேம்மா... தொடரும் எங்க போடறதுன்னு உங்கட்டதான் கத்துக்கணும். பயண அனுபவம் படிக்க சுவாரஸ்யம். தொடர்கிறேன்.
ஆஹா!!.. சஸ்பென்ஸ்ல நிறுத்திட்டீங்களே.
ஒரு வேளை உங்களுக்கு மட்டும் தனியா லெமன் ஜூஸ் கொடுக்கத்தான் கூட்டிட்டு போயிருப்பார். குடிச்சுட்டு வாங்க :-))
சஸ்பென்ஸில் ஒரு பிரேக் கொடுத்திருக்கீங்க. னல்லாகவே போய்க்கொண்டிருக்கிரது. என் மனைவிக்கு நல்ல தமிழில் டைப் பண்ண தெரியும். அவளைக் கொண்டுதான் தமிழில் கமெண்ட் எழுதச் சொன்னேன். சஸ்பென்ஸ் எப்பொழுது விலகும்? ஆவலுடன் நாங்கள் இருவரும் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிரோம்.
அம்மா படபடப்புக்கு குறைவில்லாமல் இருக்கு உங்க பயண்ப்பதிவு..தொடர்கிறேன்!
ஓ.... அப்புறம் என்னாச்சு!
அடுத்த பதிவு வரைக்கும் காத்திருக்கணுமே... :(
வணக்கம் மேடம் நீண்டநாட்களுக்கு பிறகு இரண்டாம் பகுதி வருகின்றது என்று நினைக்கின்றேன் சுவாரஸ்யமாக இருக்கு தொடருங்கள் தொடர்கின்றேன்
லக்ஸ்மி அக்கா... முடிவை இப்பூடி விட்டிட்டீங்களே அவ்வ்வ்வ்வ்:)).
அதெப்பூடி கரெக்ட்டா சீட் நம்பர்கூட பாடமாக்கி வச்சு எழுதியிருக்கிறீங்க....
ஆயிரம் தடவை விமானத்தில் பறந்தாலும், முதல் தடவை பறந்ததை மறக்க முடியாது....
மதுமதி வருகைக்கு நனறி
ராமலஷ்மி வருகைக்கு நன்றி
புதுகைத்தென்றல் வருகைக்கு நன்றி
ஆஸியா ஓமர் வருகைக்கு நன்றி
ரமா வருகைக்கு நன்றி
ராதாகிருஷ்னன் வருகைக்கு நன்றி நீங்க சொல்வதுபோல பெண் ஏரிண்டியாவில் இருப்பதால் பாஸ் கிடைக்கும் தான். ஆனா நான் ஆப்ரிக்கா போய் வர மாப்பிள்ளை போக வர டிக்கட் எடுத்து அனுப்பினர்.ஃப்ரீ பாசில் போகல.
முஹம்மத் ஆஷிக் வருகைக்கு நன்றி நானும் முதல்ல கில்பின்னுதான் போட்டேன் ஆனா அங்கேயே வசிக்கும் மாப்பிள்ளைதான் அது கிலிஃபி என்று சொன்னார். அதனnால கில்பி கிலிபி ஆச்சு.. படத்தை சரியா பாருங்க. விண்டோபக்கம் 2, 2, சீட் தானே இருக்கு.
திருவாளப்புத்தூர் முஸ்லீம் வருகைக்கு நன்றி ஹா ஹா யாருகூட யாரை கம்பேர் பண்ணுரீங்க்? நான்லாம் வெரும் கத்துகுட்டிதான்.
கணேஷ் வருகைக்கு நன்றி நீங்களும் பட்டம் கொடுதீங்களா பரவால்லே நீங்கல்லாம் என் எழுத்தை rரசித்து படிக்கிரீங்களே அதுவே எனக்கு பூஸ்ட் தான்.
சாந்தி வருகைக்கு நன்றி. அவர் லெமன் ஜூஸ் கொடுக்க கூட்டிப்போகலே. நாளை படிச்சுப்பாரு.
அஷோக் வருகைக்கு நன்றி ஓ, இப்ப உங்க மனைவியும் என் பதிவைப்படிக்கிராங்களா. எப்படியோ தமிழில் பின்னூட்டம் கொடுத்திருக்கீங்க சந்தோஷம்.
விக்கி உலகம் வருகைக்கு நன்றி
ராஜ் வருகைக்கு நன்றி. நான் வழமையாக ஒரு நா விட்டு ஒருபதிவு போடுரேனே. பப்லிஷ் தேதி பாருங்க. நீங்கதான் ரொம்ப நா கழிச்சு வரீங்க.
17, 18, 19, இந்த 3 சீட்கீழேயும் விங்க் எல்லாகாட்சிகளையும் மறைக்குது. முதல்லயே இது தெரிஞ்சிருந்தா வேர நம்பராவது கேட்டிருக்கலாமேன்னு நினைச்சேன்.
எனக்கும் விண்டோ சீட் என்று விங்க் சீட்டில் வெறுப்பு வந்தது...
இண்டெர்னேஷனல் ப்ளைட்டான இதில் ரெண்டு விண்டோ பக்கமும் ரெண்டு, ரெண்டு சீட் நடுவால நாலு சீட்கள் என்று ஒரே நெருக்கடியாக சீட்கள். ஒரு சீட்டுக்கும் அடுத்த சீட்டுக்கும் இடைவெளி ரொம்பவேகம்மி காலை நீட்டவே முடியாம ஐயப்பா சாமி மாதிரி முட்டி மடக்கிண்//
ஹாஹா, இது ஒண்ணுமே இல்லையாக்கும். லுப்தான்ஸா, எமிரேட்ஸ், ஜெட் ஏர்லைன்ஸில் எல்லாம் 3+4+3 னு சீட் அரேஞ்ச்மென்டாக்கும். அதுவும் இந்தியாவிலேருந்து போறச்சேயும், திரும்பி இந்தியா வரச்சேயும் கூட்டம் வழியும். அதே மாதிரி ராயல் நேபாள் ஏர்லைன்சிலும். நேபாள் போறச்சே வசதியா இருக்கும். திரும்பி வரச்சே ஸ்டான்டிங் டிக்கெட் கூட உண்டோனு தோணும். :))))))
கீதா சாம்பசிவம் நல்ல காமெடியா சொல்லி இருக்கீங்க. ஸ்டாண்டிங்க் கூட வந்துடும் போலத்தான் இருக்கு. லூப்தான்சாவில் ஒரு முறை போயிருக்கேன் அதிலும் இட நெருக்கடிதான். காசும் வண்டியா செலவு செய்து இப்படி அவஸ்தைப்பட்டுண்டு ட்ராவல் பண்ணனும்னு இருக்கே.
mika arumai. padissitteen..
jaleela thanks
Post a Comment